Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 5, 2009

ஸ்ரீ சக்ர புரி - ஆன்மீகத் தொடர்

ஸ்ரீசக்ர புரி

பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு துகளிலும் பரமனின் ஆற்றல் நிறைந்திருக்கிறது என்கிறது ப்ருஹதாரண்ய உபநிஷத். பிரம்மாண்ட ஆற்றல் அனைத்து இடங்களிலும் பரவி இருந்தாலும் பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் மட்டும் அளவில் கூடுதலாக இருக்கும். நன்றாக சமைக்கப்பட்ட வெண் பொங்கலில் நடு நடுவே இருக்கும் மிளகு எப்படி சுவைக்கூட்டுமோ அது போல இந்த ஆற்றல் வாய்ந்த பிரபஞ்ச இடங்கள் பிரம்மாண்ட இயக்கத்தில் தனிச்சுவையை ஏற்படுத்துகிறது.

பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றல் புள்ளிகள் , பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நம் பூவுலகிலும் உண்டு.
பிரபஞ்சத்தில் அனைத்து மூலைகளிலும் மனித உடலுடன் பயணிக்க முடியாது. ஆனால் உலகின் பலபகுதிகளை மனிதனால் உடலுடன் சென்று காண முடியும். பிரபஞ்சத்தின் ஆற்றல் இடங்கள் எப்படி இருக்கும் என்பதை உணர பூமியில் உள்ள சக்திவாய்ந்த இடங்களுக்கு சென்று உணரலாம்.

உலகில் உள்ள சக்திவாய்ந்த இடங்களில் முதன்மையானது என கூறமுடியாவிட்டாலும் முதலாவது என்ற பெயரை பெறுவது ஸ்ரீ சக்ர புரி.

இறைவனின் தோற்றத்திலும் வழிபாட்டிலும் மூன்று நிலைகள் உண்டு உருவம், அருவம் மற்றும் அருவுருவம். உருவ நிலையில் விக்ரஹங்களாக வழிபடுகிறோம். அருவமாக வழிபடும் வழிபாட்டு முறையை வார்த்தையால் விவரிக்க முடியாது. அருவுருவமாக வழிபடுவது என்பது பல தன்மைகளில் உண்டு அதில் முதன்மையானது யந்திர வழிபாடு.


ஸ்ரீசக்ரம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதிக கோடுகளும் முக்கோணங்களும் நிறைந்த வடிவம். பிரபஞ்ச கட்டமைப்பை எளிமையாக கூறும் வடிவம். ஒரு மனிதனின் உருவை கழுகு பார்வையில் கபாலத்திலிருந்து பார்த்தால் ஸ்ரீசக்ர வடிவில் காட்சி இருக்கும். ஸ்ரீசக்ரம் என்பது சக்தி வாய்ந்தது என்பதை காட்டிலும் சக்தியே அது தான் என சொல்லலாம்.

இரு பரிமாண உருவம்

முப்பரிமாண உருவம்

ஸ்ரீயந்திரங்கள் வழக்கமாக இரு பரிமாணவடிவிலேயே நம்மால் பார்க்க முடியும். முப்பரிமாண நிலையில் ஸ்ரீயந்திரத்தை பார்த்தால் அதன் மைய அமைப்பின் தன்மை ஸ்ரீமேரு என அழைக்கப்படுகிறது.

இந்திய நாட்டில் மட்டுமல்ல அனைத்து மத கோவில்களில் வெளி நிலை தோற்றம் ஸ்ரீமேருவின் தன்மையை
சார்ந்து இருக்கும். இதற்காக ஸ்ரீமேருவை வைத்து கட்டினார்கள் என்பது அர்த்தம் அல்ல. கடற்கரையில் சிறிது மணலை கைகளில் எடுத்து கை விரல்வழியே ஒரே நேர்கோட்டில் விடுங்கள். மணல் மலைபோல குவிகிறதா? மேரு என்ற வார்த்தைக்கு மலை என்றே அர்த்தம். அதனால் மலை இயற்கை சார்ந்து இருப்பது போல ஸ்ரீமேருவின் வடிவமும் இயற்கையானது.

ஸ்ரீமேருவின் தன்மையை உணர்ந்தவர்கள் அதனை வடிவமைத்து சிறிய அளவில் வணங்குவார்கள். பொருளாதார உயர்வு உள்ளவர்கள் ஸ்ரீமேரு வடிவில் கோவிலை கட்டுவார்கள். ஆனால் ஒரு நகரமே ஸ்ரீசக்ர வடிவில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் அந்த நகரம் இயற்கையாக உருவானது. ஒரு நகரம் பறவைப் பார்வையில் ஸ்ரீசக்ர வடிவிலும், நகரத்தில் இருந்து பார்த்தால் ஸ்ரீமேரு வடிவிலும் இருக்கிறது.

நகரம் என்பதன் வடசொல் புரி. நகரம் செயல்பட்டுகொண்டே இருப்பதால் புரி அல்லது புரம் என அழைக்கப்படுகிறது. எனது நினைவில் புரி என இருக்கும் முடியும் நகரங்கள் அதிக செயல் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் ஸ்ரீசக்ர வடிவில் இருக்கும் அந்த ஆற்றல் வாய்ந்த நகரம்....
ஸ்ரீசக்ரம் போன்று எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும் அந்த நகரம் ....

எது தெரியுமா?

திருவண்ணாமலை

கூகுள் மென்பொருளில் திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சல மலையின் படம் கீழே கொடுத்துள்ளேன். அதன் அமைப்பும் ஸ்ரீசக்ரத்தின் மைய (ஸ்ரீமேருவின்) வடிவமும் ஒன்று போலவே காட்சி அளிப்பதை பாருங்கள்.

[படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்]

யந்திரத்தின் எட்டு முனைகளும் ஆற்றல் மையங்கள் என சொல்லுவது போல எட்டு திக்குகளிலும் சிவ லிங்கங்களும் , மையத்தில் ஸ்ரீமேருவை போன்றே இருக்கும் அருணாச்சல மலையும் கொண்ட ஆன்மீக மாநகரை பற்றிய தொடரைத்தான் நீங்கள் படிக்க இருக்கிறீர்கள்....

பூரண சக்தியான இறையவன் குடி இருக்கும் ஸ்ரீ சக்ர புரியை பற்றி பெளர்ணமியான இன்று ஆன்மீக தொடர் துவங்குகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும் ஸ்ரீசக்ர புரியின் இறையாற்றலையும் இனி வரும் காலத்தில் சிறிது சிறிதாக பருகுவோம்...

(தொடரும்)

22 கருத்துக்கள்:

புன்னகை said...

உங்களுடைய பகிர்வு இதமளிக்கிறது

கோவி.கண்ணன் said...

//பூரண சக்தியான இறையவன் குடி இருக்கும் ஸ்ரீ சக்ர புரியை பற்றி பெளர்ணமியான இன்று ஆன்மீக தொடர் துவங்குகிறேன்.//

:)

நல்ல திட்ட மிடல் !

கோவி.கண்ணன் said...

//ஒரு மனிதனின் உருவை கழுகு பார்வையில் கபாலத்திலிருந்து பார்த்தால் ஸ்ரீசக்ர வடிவில் காட்சி இருக்கும். //

என்னை மாதிரி லேசான தொப்பை உடையவர்களுக்கும், கொஞ்சம் பெரிய தொப்பை உள்ளவர்களும் இப்படி தெரியுமா ஸ்வாமி ?
:)))))))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

உங்கள் பிள்ளையார் சுழிக்கு நன்றி.

ஷண்முகப்ரியன் said...

துவக்கமே அற்புதமாக இருக்கிறது.தொடர்வதும் இதே போல் இருக்கும் என்பது உறுதி,ஸ்வாமிஜி.நன்றி.

தியாகராஜன் said...

///கோவி.கண்ணன் said..
என்னை மாதிரி லேசான தொப்பை உடையவர்களுக்கும், கொஞ்சம் பெரிய தொப்பை உள்ளவர்களும் இப்படி தெரியுமா ஸ்வாமி ?///

ஸ்வாமி!
அண்ணன் கண்ணன் அவர்கள் உட்கார்ந்து யோசிப்பாரோ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவிகண்ணன்,

//நல்ல திட்ட மிடல் ! //


திட்டம்மிட்ட பதிவு :)

//என்னை மாதிரி லேசான தொப்பை உடையவர்களுக்கும்,//

லேசான என பொய் சொல்லுவதை வன்மையாக கண்டிக்கிறேன் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,
திரு தியாகராஜன்,

உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

நிகழ்காலத்தில்... said...

ஸ்ரீசக்ர புரி

இது திருவண்ணாமலையைப் பற்றி என யூகிக்கவே முடியவில்லை.

அந்த அளவு கழுகுப்பார்வையான சரியான,முழுமையான பார்வையுட்ன் எழுதுகிறீர்கள்.

மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். என் உணர்வுகளை வார்த்தைகளில் இவ்வளவுதான் வெளிப்படுத்த முடிந்தது.

இறை தன்னைப்பற்றி தானே எழுதுகிறது என இப்போதைக்கு எடுத்துக் கொள்கிறேன்.

[இந்த பாரட்டினை கடைசிவரை தக்கவைத்துக் கொள்வீராக:))]

essusara said...

arputhamana thodar arambam

munbey naan ugitheyn.
sri chakrathai patri niraya padithirukeyn. ungal eluthil athai padika avval athigamagivitathu.

menmelum thodra vazhthukal.

Rajagopal.S.M said...

ஸ்ரீ சக்ரபுரி தொடர் திருவண்ணாமலை பற்றியதா??.எதிர்பாராத ஆச்சர்யம். திருவண்ணாமலை நான் அடிக்கடி சென்று வரும் இடங்களில் ஒன்று.
அதை பற்றி வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் மிகவும் நன்று..

Rajagopal.S.M said...

தொடர், முடிவில் தனி புத்தகமாக வரும் என்று எதிர்பார்கிறேன்...

yrskbalu said...

என்னை மாதிரி லேசான தொப்பை உடையவர்களுக்கும், கொஞ்சம் பெரிய தொப்பை உள்ளவர்களும் இப்படி தெரியுமா ஸ்வாமி ?
:)))))))))

1. thanks kovi.kannan. i am in laughing dyana by you.

2. i expect you will or share your experenices in this story. this is to be awareness story.

3. i watched your commenting specially to parsial? why? eventhough he is not commenting or able to comment others like abdulla, kovikannan, nikalkalam?

Anonymous said...

வெண் பொங்கல் உவமை மிகவும் அருமை! ஸ்ரீ சக்ரம் பற்றி எழுத வேண்டியிருந்தேன், அதை வைத்து ஒரு தொடரே எழுதி திருவன்னமலையின் சிறப்பு ஸ்ரீ சக்ரதுடன் இணைத்து தருவீர்கள் என்று நினைத்து பார்க்க கூட இல்லை. திருவண்ணாமலை செல்லும் ஆர்வம்/ஆசை எனக்கு மிகுதி ஆகி கொண்டே போகிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,
திரு essusara,
திரு ராஜகோபால்,
நீங்கள் நினைப்பது சரியே..
திரு yrskbabu,
ரசிக்க தகுந்த வலைப்பதிவில் பின்னூட்டம் இடுகிறேன். அவர் பின்னூட்டம் போட்டால் மட்டுமே போடவேண்டும் என்ற கட்டாயமா? இல்லை பின்னூட்டம் இடுவது வியாபாரமா?

திரு தினேஷ் பாபு,

உங்கள் வெண்பொங்கள் ரசனை :) தெரிந்தே எழுதினேன்.

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

sakthi said...

உலகில் உள்ள சக்திவாய்ந்த இடங்களில் முதன்மையானது என கூறமுடியாவிட்டாலும் முதலாவது என்ற பெயரை பெறுவது ஸ்ரீ சக்ர புரி.


சுவாமிஜி உங்கள் தொடர் மேலும் மேலும் எங்களை போன்ற சாமான்யருக்கு பயன்படக்கூடும் தொடர்ந்து எழுதுங்கள்

ceylonstar said...

Where can I get your article in subavaram about mangala thosha? I live in USA

thanks..

Unknown said...

thanks 'G', we here waiting for a new experience, wow...

Thirumal said...

ஆத்மார்த்தமான எழுத்துக்கள் ஸ்வாமி.

நல்ல ஆரம்பம்.

ஆன்மீகப் பரவச அனுபவமடையக் காத்திருக்கிறோம்.

Siva Sottallu said...

மிக்க நன்றி ஸ்வாமி. என்னை இந்த வலைத்தளத்துக்கு அறிமுகபடுத்திய நண்பர் தினேஷ் பாபு இக்கும் என் மனமார்த்த நன்றிகள்.

இந்த பதிவில் திருவண்ணாமலை பற்றியும் எழுதிஇருப்பதல் "கிரிவலம்" பற்றியும் எழுத வேண்டிகொள்கின்றேன்.

துளசி கோபால் said...

தொடரைத் தொடர்கின்றேன்.
தொடருங்கள்.

Unknown said...

Respected Swamiji
avergale,

About thiruannamali articles very good. I wish except same like other subject also. like accorikals, gnaikals, etc.,

Thanks