Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, August 15, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி எட்டு


ரமண மகரிஷியை ஒருவர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்ய அழைத்தார்.மகரிஷி சிரித்துகொண்டே ஒன்றும் தெரியாதவர் போல அங்கே அப்படி என்ன விஷேஷம் என்றார். கைலாய மலை சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான் பூதகனங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம் கைலாயம் என்றார். கைலாயம் சிவன் வசிக்கும் ஸ்தலம் ஆனால் திருவண்ணாமலை என்பது சிவனே தான். சிவன் இங்கே இருக்க அவரின் வீட்டை போய் பார்த்துவருவானேன்? என ரமணர் கூறினார்.

தனது பதினாராம் வயதில் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு
வந்தவர் பிறகு எங்கும் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த மலையை தனது குருவாவும், ஞான சுடராகவும் கொண்டார் மகரிஷி. தனக்கும் அருணாச்சல கிரிக்கும் வித்தியாசம் இல்லாமல் அத்துடன் வேறுபாடு இன்றி கலந்தார். இத்தகைய மாமுனிவர்களும், மஹான்களும், ஞானிகளும் வாழ்ந்த இடமாக திருவண்ணாமலையில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. இவர்களின் தன்மையை விமர்சிக்கவோ, இவர்கள் ஞானி என சொல்லவோ எனக்கு தகுதி இல்லை.

கண்களை திறந்து கொண்டு தியானம் செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் காசி படித்துரையில் கங்கையில் ஓட்டத்தை பார்த்தவாறு இருப்பது, திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமர்ந்து மலையை பார்த்தவாறு இருப்பதும் ஒருவகை தியானம் தான். காசியில் அசைந்து தியானத்தை கொடுக்கும் கங்கை, இங்கே மலை அசையாமல் நம்மை ஆழ்த்திவிடும்.

அஷ்ட என்ற வடமொழி வார்த்தை எட்டு என்ற எண்ணை குறிக்கும். ஐரோப்பிய மொழிகளில் ஆக்டா என்பது எட்டு என்பதை குறிக்கும். எட்டு திக்கிலும் இருக்கும் லிங்கம் திசையை சரியாக குறிக்க அமைக்கபட்டுள்ளது. சக்தியை கொடுக்கும் இடமாகவும் இருக்கிறது. கிரிவலம் வரும் சமயம் ஒவ்வொரு லிங்கத்தையும் வணங்கி அவ்விடத்தில் சிறிது நேரம் அமர்ந்து திருவண்ணாமலையை கவனியுங்கள். மலை பேசும்...!

கடந்த ஒன்பது வருடங்களாகத்தான் அஷ்டலிங்க கோவில்கள் புது பொலிவுடன் இருக்கிறது. அதற்கு முன் ஒரு பத்துக்கு பத்து அறையில் ஒரு லிங்கம் இருக்கும். சில நேரங்களில் ஆடு லிங்கத்தின் மேல் இருக்கும் மலர் மாலையை சாப்பிட்டுக்கொண்டிருக்கும். இது தான் நிலை. ஆனால் தற்சமயம் மக்கள் கூட்டம் வருவதால் செப்பனிட்டு விரிவடைந்துள்ளது. மேலும் அஷ்டலிங்கத்தில் குபேர லிங்கம் மட்டும் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும். முக்தி கொடுக்கும் ஸ்தலத்தில் இவர்கள் பணத்தை தேடுகிறார்கள்.
அஷ்ட லிங்க கோவிலின் மேல் கூறையில் வரையப்பட்ட அருணாச்சல கிரிவல படம்

அருணாச்சல கிரி எனும் பொக்கிஷம்
பிரம்மாண்டமாய் முன்னிருக்க இவர்கள் குபேரலிங்கத்திற்கு 'மட்டும்' பூஜை செய்வது வேடிக்கைதான். கிரிவலம் போகிறவர்கள் கையில் சில்லரை நாணயத்துடன் அங்கே இருக்கும் சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் தர்மம் செய்தவாறே செல்லுவார்கள். ஆனால் குபேர லிங்கத்திற்கு வெளியே மட்டும் செய்ய மாட்டார்கள்.இவர்களின் செல்வம் அவர்களிடம் போய்விடுமாம். இந்த புத்தி இருப்பவர்கள் செல்வ நிலையில் சீமானாக இருக்கலாம் ஆனால் ஆன்மீக நிலையில் பிச்சைகாரனாகவே இருக்க முடியும்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒவ்வொரு திக்கிலும் அருணாச்சல கிரி ஒவ்வொரு வடிவமாகவும், வேறு பட்ட நிறத்திலும் தெரியும். நந்தி வடிவம், சிவசக்தி வடிவம் மற்றும் பஞ்ச முக வடிவம் என மலையை நம் பார்வைக்கு ஏற்ப அருணாச்சலம் வெவ்வேறு வடிவில் இருக்கிறது.

அருணாச்சல கிரி வெவ்வேறு வடிவில் இருப்பதை போல இங்கிருக்கும் ஆன்மீகவாதிகளும் வெவ்வேறு வடிவில் இருக்கிறார்கள். சிலர் உணர் வடிவிலும் சிலர் உணர்வுக்கு அப்பாலும் இருக்கிறார்கள்.

மணலை எடுத்து மூக்கு பொடி போல பயன்படுத்தும் மூக்கு பொடி சாமி, உடலில் சணல் துணியையும் வெளிநாட்டுகாரர்கள் பயன்படுத்தி உடைந்த ஓட்டை குளிர்கண்ணாடியும் அணிந்து அழகிப்போட்டிக்கு போவது போல இருக்கும் சாக்கு சாமி, ராணுவ சட்டையும் காவி வேட்டியுடன் இருக்கும் மிலிட்டிரி சாமி, பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பண்ணாட்டு நிறுவனத்தில் உயர்பதவியை விட்டுவிட்டு இங்கே பரதேசியாக இருக்கும் வெள்ளைச்சாமி என அவதூத நிலையில் இருக்கும் ஆன்மீகவாதிகள் அதிகம்.

அவதூத நிலை என்றால் இலக்கில்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்காதவர்கள். நடந்து கொண்டோ அல்லது மரத்தின் அடியில் உற்கார்ந்து கொண்டோ இருப்பார்கள். அவர்கள் பேசுவது புரியாது. திடிரென தெளிவாக பேசுவார்கள். அவர்கள் இது தான் செய்வார்கள் என நாம் கணிக்க முடியாது. உடை மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில் அவர்கள் தங்களின் உலகில் ஆனந்தமாக இருப்பவர்கள். சீரடி சாய்பாபா மற்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் இவர்களின் தன்மை கொண்டவர்கள் என வெளி நிலைப்பாட்டை கொண்டு முடிவு செய்யலாம்.

இப்படிபட்ட அவதூத சாக்கு சாமியிடம் தான் அன்று நான் மாட்டிக்கொண்டேன். சைக்கிளில் நானும் அவரும் பயணிப்பதை அனைவரும் விசித்திர பார்வையோடு பார்த்தார்கள். காரணம் சாக்கு சாமி வாகனத்தில் பயணித்தது இல்லை. மேலும் பார்க்க பைத்தியகார பாவனையில் இருப்பார். அவரை வைத்து நான் சைக்கிள் ஓட்டினால் வேறு எப்படி பார்ப்பார்கள்?

அரைகிலோமீட்டர் மிதித்திருப்பேன். நானும் பேசவில்லை அவரும் பேசவில்லை. நீச்சல் அடிப்பது போல கால்களை ஆட்டிக்கொண்டே வந்தார்.

எங்கோ யாருக்கோ பார்த்து சொல்லுவது போல வானத்தை பார்த்து “பம்பரத்தை சுத்தனும்னா கயிர வலபக்கம் சுத்தனும், உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் சுத்தாத பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும். எல்லாம் கழண்டுக்கும் கழண்டுக்கும்” என்றார்.

“கீறீச்...” என சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினேன். எகிறி குதித்து ஆடியபடியே மலைக்கு மேல் சென்று மறைந்தார். அவர் வந்த வேலை முடிந்தது.

(தொடரும்)

23 கருத்துக்கள்:

ATOMYOGI said...

தஙக்ளது வாழவை அறியத் தரும் இந்த‌ பாங்கு அழகு! திருவண்ணாமலை பற்றி நீங்கள் தரும் தகவல்களும் அது உங்கள் வாழ்க்கையோடு இணைந்து இருக்கும் விதமும் அதிசயிக்க வைக்கிறது.

Raju said...

சந்தோஷ சுதந்திர தின வாழ்த்துக்கள் ஸ்வாமி ஓம்கார்.

Unknown said...

ஓம்கார்

திருவண்ணாமலை பற்றி தாங்கள் மிக நன்றாக சொல்கிறீர்கள். இதை புத்தகமாக வெளியிட போகிறீர்களா


(என் கேள்விக்கு jaisankarj@gmail.com க்கு அனுப்பவும்).

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மாயாவி,
திரு ராஜூ,
திரு ஜெய்சங்கர்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர்,

உங்கள் கேள்விகள் பதிவு சார்ந்து இல்லாத காரணத்தால் பதில் அனுப்ப முடியவில்லை.

பின் ஒரு நாளில் கேள்வி பதில் பகுதியில் வெளியிடுகிறேன்.

நன்றி

ஷங்கரலிங்கம் said...

சாமியார்கள் முக்தியை நம்பியே பொழப்பு நடத்துகிறார்கள் என்ற தோன்ற காரணம் என்ன சாமி?

இருக்கும் வரை நன்றாக, சந்தோசமாக, ஒழுக்கமாக, நான்கு பேருக்கு உதவுவது மாதிரி வாழ்ந்துவிட்டு உடலை விட்டு வெளியேற ஒவ்வொருவரும் நினைக்கவேண்டியது தானே?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பெங்களூர் புதியவன்,

எந்த ஆன்மீகவாதியும் (உங்கள் மொழியில் சாமியார்) காசுக்கு இரண்டு முக்தி என வியாபாரம் செய்யவில்லை. முக்தி, ஞானம் அடைதல், ஜீவன் முக்தி என்ற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் கற்பித்தவர்களை நீங்கள் கண்டதில்லை.

சூடுபால் குடித்தபூனை போல யாரோ ஒருவரிடம் நீங்கள் பட்டதை அனைவரிடமும் இப்படித்தான் எனற எண்ணத்துடன் இருக்கிறீர்கள்.உங்கள் பார்வையில் கோளாரு இருக்கிறது.

உங்களுக்கு தேவை மனத்தெளிவு.
அது இல்லையென்றால் நல்ல ஒழுக்கம், நாலு பேருக்கு உதவுவது என்பது எல்லாம் நடக்காத விஷயம்.

முதலில் நீ யார் என தெரிந்து கொள் பிறகு வேறு விஷயத்தை பற்றி பேசலாம் என்று சொன்ன ரமணர் இருக்கிறாரே? அவ்வழியை முயலுங்கள்.

வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

\\அவதூத நிலை என்றால் இலக்கில்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்காதவர்கள். நடந்து கொண்டோ அல்லது மரத்தின் அடியில் உற்கார்ந்து கொண்டோ இருப்பார்கள். அவர்கள் பேசுவது புரியாது. திடிரென தெளிவாக பேசுவார்கள். அவர்கள் இது தான் செய்வார்கள் என நாம் கணிக்க முடியாது. உடை மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில் அவர்கள் தங்களின் உலகில் ஆனந்தமாக இருப்பவர்கள்.\\

உண்மைதான், உலகியலில் இருந்து விடுதலை அடைந்தவர்களாக தெரிந்தாலும் அவர்கள் நிலை நாம் உணர கடினமே !

இவர்களை சித்த சுவாதீனம் அடைந்தவர்கள், என்றே இவ்வுலகம் நினைக்கிறது. மனக்குழப்ப நிலையில் உள்ளவர்களாக பார்க்கிறது

\\உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் சுத்தாத பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும்.\\

எனக்கு புரியவில்லை, வரும் பகுதியில் விவரமாக விளக்க வேண்டுகிறேன்

புன்னகை said...

வணக்கம் ஸ்வாமி

உங்கள் பதிவு மனதை என்னவோ செய்கிறது , பதில் எழுதக்கூடத் தெரியாமல் விக்கித்து நிற்கிறேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

//எனக்கு புரியவில்லை, வரும் பகுதியில் விவரமாக விளக்க வேண்டுகிறேன்//

இதை விளக்கினால் விளங்கினாப்புலதான் :)

வேண்டுமானால் சாக்கு சாமியின் முகவரி தருகிறேன் :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

உங்கள் வருகைக்கு நன்றி

ஷண்முகப்ரியன் said...

மனதைப் பற்றிய மர்ம நாவல் போல் செல்கிற்து தொடர்.
ரசனையுடன் கூடிய சிந்தனைகள்.
நன்றி ஸ்வாமிஜி.

Siva Sottallu said...

சுவையான தொடர், மிக்க நன்றி ஸ்வாமி.

// ஐரோப்பிய மொழிகளில் ஆக்டா என்பது எட்டு என்பதை குறிக்கும். //

"ஆக்டா" இதை இந்த பதிவில் குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு புரியவில்லை ஸ்வாமி.

seethag said...

ுவாமி நான் யார் எனபது புரியவில்லை. இப்படி நிலையில் பிறருக்கு உதவியாகவாவது இருக்கலாமே?என்னுடைய நண்பர்களில் சிலர் ஜெ.கிருஷ்ணமுர்த்தி வாசகர்கள் .அவர்கள் எல்லாம் சொல்வது ,'பிறருக்கு உதவி என்று செய்ய பூனால் முடிவே கிடையாது என்று ஜெ.கிருஷ்ணமுர்த்தி சொல்வர் என்று..அப்படி என்றால் பிறருக்கு உதவகுடத? புரியவில்லை.

Sabarinathan Arthanari said...

திரு ஓம்கார்,

ஒரு நண்பர் சோதிடத்தை பற்றி எழுப்பிய கேள்விக்கு உங்களுடைய கருத்துக்களை குறிப்பிட்டு இருந்ததால், என் இடுகையிலும் விளக்கமளித்துள்ளேன்.

சரி பார்க்கவும். http://www.tamilscience.co.cc/2009/08/blog-post_15.html

நன்றி!

நிகழ்காலத்தில்... said...

\\வேண்டுமானால் சாக்கு சாமியின் முகவரி தருகிறேன் :)\\

அவருக்கு முகவரி இருக்கிறதா? :))

வாங்க போவோம், ‘வரவு செலவு’ பாக்கி ஏதேனும் உள்ளதா !! :))

Astro ganesan said...

வணக்கம் ஐயா
மிக அருமையான பதிவை போட்டுஇருக்கிறீர்கள் ,இக்கதையை பற்றி இபோழதுதான் மிக நன்றாக புரிந்து கொண்டேன் . ஆன்மிகம் பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கு மட்டும் தங்கள் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் . தாங்களின் மேதாவி தனத்தை காட்டுபவர்களுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிவிடலாம் . தாங்களின் வேலை பளு குறையும் .
தாங்களின் மேன்மையான பனி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
வணக்கங்களுடன்
ganesan

கோவி.கண்ணன் said...

மேலே படத்தில் ரமண மகரிஷி இடுப்பு துண்டை இன்னும் கொஞ்சம் இறக்கி கட்டி இருக்கலாம் !

:)

Rajagopal.S.M said...

//பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும்//

இவர் எதை சொல்கிறார்?. யோக மார்க்கத்தில் இருப்பவர் மலையை இடபக்கமாக சுற்ற சொல்கிறாரா?? பிரதோச வேலையில் நாம் கோயிலை இடபக்கமாக சுற்றுவோமே, அது மாதிரி..... சிறிது விளக்கவும்.....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

திரு சிவா,

சகோதரி சீதா,
ஜே.கே ஒரு தத்துவவாதி.

ஆன்மீகத்தை தத்துவத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளுதல் கூடாது. தத்துவம் தேர்தவனுக்கு மட்டுமே. ஆரம்ப நிலையில் அனைத்தும் சரியே.

திரு சபரிநாதன் அர்த்தனாரி,
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

திரு நிகழ்காலம்,

//அவருக்கு முகவரி இருக்கிறதா? :))

வாங்க போவோம், ‘வரவு செலவு’ பாக்கி ஏதேனும் உள்ளதா !! :))//

அவரிடம் எனக்கு நிறைய கணக்கு இருக்கு.

அவர் முகவரி இதோ.

ஸ்ரீலஸ்ரீ சாக்கு சாமி,
வெட்டவெளி,
அங்கும் இங்கும் தெரு.
திருவண்ணாமலை

:))

திரு சோழி கணேசன்,
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

திரு கோவிகண்ணன்,

//மேலே படத்தில் ரமண மகரிஷி இடுப்பு துண்டை இன்னும் கொஞ்சம் இறக்கி கட்டி இருக்கலாம் !//

இந்த படத்தில் தான் அவர் அதிகமாக உடை அணிந்திருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தால் கோமணம் உடுத்தியவர் :). இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.

யாரும் சொல்லாத கருத்து சொன்னமைக்கு நன்றி.

திரு ராஜகோபால்,

உங்கள் யூகம் ஓரளவு சரிதான்.
வரும் பகுதிகளில் விளக்கம் கிடைக்கும்.

Anonymous said...

போன வாரம் வலையுலகில் தேடும் பொது, அப்பா என்ற அவதூதரை பற்றி படித்தேன். அவர் இடபக்கமாக தான் சுற்றுவாராம். கதை மிகவும் சுவராஸ்யமாக போகிறது. தினமும் ஒரு எபிசொட் ரிலீஸ் செய்யும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை!

Anonymous said...

Vanakam swami ji ,
ore nalil thangalin sri sakra puri - 8 paguthiyaiyum padikum perinai petren , nane sri sakra puri sendru anmiga anubavam petrathu pol ullathu , thiruvanamalai yai patri pesum pothe mei silirkirathu , nalathoru anmega anubavam enaku

எம்.எம்.அப்துல்லா said...

சாமி மெக்காவிலும் இடதுபுறமாகத்தான் சுற்ற வேண்டும். அனைத்து மதங்களிலும் சாரம் என்னவோ ஓன்றாகத்தான் இருக்கின்றது.நாம்தான் ஓன்றாக இருப்பதில்லை.