Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, August 4, 2009

ஜோதிட கவிதைகள் - ரிட்டன்ஸ்..!

ராசிக்கல் ஆராய்ச்சி
--------------------------

ராசிக்கள் கடவுள் படைச்சார்
என்னையும் அவருதான் படைச்சார்.
ராசிக்கல் மூலமா நல்லது நடக்கும்னா ஏன்
என் விரல்ல ராசிக்கல்லோட அவர் படைக்கலை?
என கேட்டேன் என் ஆராய்ச்சியை.

நம்பிக்கை இருந்தா போடுங்க இல்லைனா விடுங்க என்றார்
ஜெம்மாலஜிஸ்ட்.

ஆய்வு முடிவு : அதிபுத்திசாலிகளுக்கு
ராசிக்கல் வேலைசெய்யாது.


நவரத்தின கல்
-------------------
இந்த நவரத்தின கல்லை போடுங்க
கோடீஸ்வரனாகலாம் என்றார் ராசிக்கல்காரர்
விரலில் ஒரு நவரத்தினம் மோதிரம் மின்னியது.

செவ்வாய் தோஷம்
-----------------------------
கடும் செவ்வாய்தோஷத்திற்கு
வாழைமரத்திற்கு
தாலிகட்ட சொன்னார்கள்.

திருமண நாளில் மண்டப முகப்பில்
இருக்கும் வாழைமரங்கள் என்னை
ஏக்கத்துடன் பார்த்தன.

பிரமீடு மகத்துவம்
---------------------------
வீட்டில் இருக்கும் குறைகளை போக்க
பிரமீடு வைக்க சொன்னார்கள்.
பல ஆயிரம் செலவழித்து வைத்தேன்.
நடைபிணமாக வாழ்ந்துவந்த நான்
மம்மியானேன்.

வாஸ்து
------------
வீட்டின் அந்த மூலை சரி இல்லை
இந்த மூலை சரியில்லை
என சொன்னவன்
என் மூளையும் சரியில்லை என்பதை
தெரிந்து வைத்திருந்தான்.

களவு
--------
எனது களவு போன
வாகனத்தை காண்டறிய
ஜோதிடனிடம் சென்றேன்.

பஞ்சாங்கத்தை
பார்த்து இரண்டு நாளில்
கிடைக்கும் என்றார்.

வரும்பொழுது அவரின் நினைவாக
பஞ்சாங்கத்தை
களவாடிவந்தேன்.

அதை எதைவைத்தாவது
கண்டுபிடிக்கட்டும்...!

வாஸ்து தோஷம்
-------------------------
அக்னிமூலையில் அடுப்பு வைத்தாகிவிட்டது.
நிருதி மூலையில் படுக்கையும் தயார்.
ஜலமூலையில்தான் நீர் நிறைந்த வாளியும் இருக்கிறது.
ஆனால் ஈசானம் மட்டுமல்ல எங்கள் வீடே
திறந்த வண்ணம் இருக்கிறது.

பிளாட்பாரத்தில் இருக்கும் எங்களுக்கும்
வாஸ்து தோஷம் உண்டா?

முரண்
-----------
எத்தனை ஆயிரம் ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்த்து
நல்ல பொருத்தம் என சொல்லும் ஜோதிடருக்கு
திருமணமாகவில்லை.

மணமகன் தேவை விளம்பரத்தில்
ஜோதிடராக இருக்கும்
மணமகனை கண்டதுண்டா?

எதிர்கால மதிப்பு
-------------------------
ஜாதகத்துடன் ”ஐயா என் எதிர்காலம் சொல்லுங்க” என்பர்.
தெருவில் ஜோசியன் போறான் என்பர்.
மரியாதை அவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமாம்.

நாடி ஜோதிடம்
----------------------
நான் ஜா எனும் எழுத்தில் துவங்கும்
பெண்ணை திருமணம் செய்வேனாம்,
இரும்பு தொழில் எனக்கு ஏற்புடையதாம்,
போன ஜன்மத்தில் ஒரு பிச்சைக்காரியை
புணர்ந்தேனாம். இத்தனையும் எழுதி வைத்தார்
வேலையற்ற அகஸ்தியர்.


சமர்ப்பணம் : சென்ற ஜோதிட கவிதையில் என்னை ஆதரித்தவர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்ய போவதில்லை...! ஜோதிட கவிதையை படித்துவிட்டு என் பிற பதிவுகளை படிக்காமல் ஜோதிடத்திற்கு எதிரானவன் என்ற பாவனையில் என்னை ‘அர்ச்சனை' செய்து மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு இந்த பதிவை அடங்காத ஆணவத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

34 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

ஒரிஜினல் அக்மார்க் பின்நவீனத்துவம்

:)))

நிகழ்காலத்தில்... said...

\\அதிபுத்திசாலிகளுக்கு
ராசிக்கல் வேலைசெய்யாத\\

நகைச்சுவை தங்களுக்கு அருமையாக வருகிறது

நிகழ்காலத்தில்... said...

\\திருமண நாளில் மண்டப முகப்பில்
இருக்கும் வாழைமரங்கள் என்னை
ஏக்கத்துடன் பார்த்தன.\\

கோவியாரை அழைக்கின்றேன்

நிகழ்காலத்தில்... said...

\\வீட்டின் அந்த மூலை சரி இல்லை
இந்த மூலை சரியில்லை
என சொன்னவன்
என் மூளையும் சரியில்லை என்பதை
தெரிந்து வைத்திருந்தான்.\\

அவ்வ்வ்வ்வ்

அவனுக்கும் தெரிஞ்சிரிச்சா...

நிகழ்காலத்தில்... said...

\\வரும்பொழுது அவரின் நினைவாக
பஞ்சாங்கத்தை
களவாடிவந்தேன்.\\

இன்னும் இத விடுலயா....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்...

//ஒரிஜினல் அக்மார்க் பின்நவீனத்துவம்//

உங்களுக்கும் நகைச்சுவை ஆற்றல் அதிகமோ :) ??

உங்கள் வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//நவரத்தின கல்
-------------------
இந்த நவரத்தின கல்லை போடுங்க
கோடீஸ்வரனாகலாம் என்றார் ராசிக்கல்காரர்
விரலில் ஒரு நவரத்தினம் மோதிரம் மின்னியது.//

ஒரே ஒரு விரலில் தானா ? பத்துவிரலில் மின்னவில்லையா ?

கோவி.கண்ணன் said...

நிகழ்காலத்தில் சிவா ஜோதிடர் ஆகலாம் என்று இருந்தார்...அவரு பொழப்புக்கு வாஸ்து வச்சிட்டிங்களே.

:)

தாரணி பிரியா said...

//ஆய்வு முடிவு : அதிபுத்திசாலிகளுக்கு
ராசிக்கல் வேலைசெய்யாது.//

ஆஹா அப்ப ராசிக்கல் எனக்கு வேலை செய்யாதா சாமி

தாரணி பிரியா said...

//வரும்பொழுது அவரின் நினைவாக
பஞ்சாங்கத்தை
களவாடிவந்தேன்.//

:)

Rajagopal.S.M said...

ஆஹா சுவாமி, அனைத்துமே அருமை ...

Rajagopal.S.M said...

//ஜோதிடத்திற்கு எதிரானவன் என்ற பாவனையில் என்னை ‘அர்ச்சனை' செய்து மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு இந்த பதிவை அடங்காத ஆணவத்துடன் சமர்ப்பிக்கிறேன்///
சாமி இவிங்க எப்பவுமே இப்படிதான்.
நீங்க கண்டுகாதிங்க....என் சார்பா ஒரு வோட்டு குத்திட்டேன்

ஆ.ஞானசேகரன் said...

அத்தனையும் அருமை..
//இந்த நவரத்தின கல்லை போடுங்க
கோடீஸ்வரனாகலாம் என்றார் //

மனிதன் ஆக எந்த கல்லை போடலாம் சொல்லுக நண்பா...

sowri said...

ஸ்வாமிக்கு ரொம்ப அடங்காத ஆணவம்!!!பிரமீடு மகத்துவம் பிரமாத பின்நவீனத்துவம். நீங்க நல்லவர கெட்டவர..... :)

Unknown said...

"G" I like your sarcasms about "raasikal". I wish, atleast people has to think from now on.

Raju said...

அருமையான கவிதைகள்!

இண்போசிஸ் நாராயண மூர்த்தி மகளுக்கு கல்யாணம் ஆகஸ்ட் 30 பெங்களூரில். இந்த மாதிரி பணக்காரர்களுக்கு எப்படி சாமி ராசி கட்டம் இருக்கும், இப்படி மாப்பிள்ளை அமைய?

தருமி said...

ம்ம் .. ம் ..

பரிசல்காரன் said...

டிஸ்கிக்கு ஒரு ராயல் சல்யூட்!

ஷண்முகப்ரியன் said...

நடைபிணமாக வாழ்ந்துவந்த நான்
மம்மியானேன்.//

அருமையான வரி,ஸ்வாமிஜி.

தருமி said...

//பிளாட்பாரத்தில் இருக்கும் எங்களுக்கும்
வாஸ்து தோஷம் உண்டா//

????????
!!!!!!!!

senthil said...

அனைத்துமே அருமை ...நீங்க நல்லவர கெட்டவர.....

அவ்வ்வ்வ்வ்.....!!!!!!
அவ்வ்வ்வ்வ்.........!!!!
அவ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் said...

//தருமி said...
//பிளாட்பாரத்தில் இருக்கும் எங்களுக்கும்
வாஸ்து தோஷம் உண்டா//

????????
!!!!!!!!

August 4, 2009 1:42 PM //

உண்டு உண்டு !

எந்தப்பக்கம் தலைவச்சுப் படுத்தால் தலையில் லாரி ஏறாதுன்னு சொல்லுவாங்க :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
சகோதரி தரணிப்ரியா,
திரு ராஜகோபால்,
திரு ஞான சேகரன்,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,
திரு கணேஷன்,
திரு ராஜூ,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தருமி,

மதுரையில் உங்களை சந்திக்க முடியவில்லை. விரைவில் முயற்சிக்கிறேன்.

திரு பரிசல்,

உங்கள் சல்யூட் எனக்கு உற்சாகத்தை கொடுத்தது.

திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் நேர்மையான விமர்சனமே எனது ஊக்கம்.
ஆடி 18 ஆகியும் படித்துறையில் நீர்வரத்து இல்லையே? ஏன்?

உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செந்தில்,

நான் நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை. :)

உங்கள் வருகைக்கு நன்றி.

chaks said...

//நடைபிணமாக வாழ்ந்துவந்த நான்
மம்மியானேன்//

கொழந்த பொறந்துடுச்சா :-))

கவிதைகள் சூப்பர் சுவாமி!

Damodar said...

SUPER-U......

தமிழ் said...

அருமை

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வரும்பொழுது அவரின் நினைவாக
பஞ்சாங்கத்தை
களவாடிவந்தேன்.

அதை எதைவைத்தாவது
கண்டுபிடிக்கட்டும்...!//

நம்ம ஆளா சாமி நீங்க!!!

Anonymous said...

ஹி ஹி நல்ல கவிதைகள் சுவாமி! ஆனால் ஆணவம் மட்டும் வேண்டாம்!

krish said...

Vaasthu for platform dewellers is a good business idea. Please make sure that you get your royalty.

Mahesh said...

இந்த ராசிக்கல்லு ராசிக்கல்லுன்னு சொல்லி ஊர ஏமாத்தறவங்க கழுத்துல நல்ல பெரிய பாறாங்கல்ல கட்டி....கட்டி.... எதயாவது பண்ணணும்....

சாமி ரிட்டன்ஸ் !!!

*இயற்கை ராஜி* said...

:-))