Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, October 3, 2008

விதியை மதியால் வெல்லலாம்

கேள்வி பதில் - பாகம் 3

விதியை மதியால் வெல்லலாம் எனும் முதுமொழி இருக்கும் பொழுது பரிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவது பொருந்துமா?


விதியை மதியால் வெல்லலாம் என்பதே அபத்தமான ஒரு பழமொழி. பரிகாரம் செய்யும் ஜோதிடர் கூட இதை மேற்கோள்காட்டி , மதி என்பது சந்திரனை குறிக்கும் அதனால் சந்திரனை வைத்து கணித்தால் விதியை மாற்றிவிடலாம் என கூறுவதுண்டு.

தன்னம்பிக்கை பயிலறங்கத்திற்கு சென்றால் , அங்கு ஒருவர் உன்னால் முடியாதது எதுவும் இல்லை - நீ நினைத்தால் அதை செய்ய முடியும் என கத்திக்கொண்டிருப்பார். வாழ்க்கையில் செல்வந்தராகவும் வெற்றி பெறவும் பலவழிகளை கற்றுக்கொடுப்பார். ஆனால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை காணும் பொழுது தான் நம்மால் முடியுமா ? எனும் நிதர்சனம் விளங்கும். தன்னம்பிக்கை பேச்சாளரின் கருத்து நமக்குள் ஓர் மனமாயையை உண்டு செய்ததை புரிந்துகொள்வோம்.

இதை விட வேடிக்கை அந்த நேரத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வந்தராகவோ - வெற்றியாளரோ ஆகாமல் மைக்கை பிடித்து ஏன் கத்திக்கொண்டிருக்கிறார் என நாம் சிந்திக்க தவறிவிடுவோம்.

இதை போன்றது தான், உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறேன் என கூறும் ஜோதிடர் ஏன் ஜோதிடராகவே இருக்கிறார் என நீங்கள் சிந்திப்பதில்லை. அவர் ஏன் தனக்கு பரிகாரம் செய்து தனது வாழ்க்கையை மாற்றி இருக்க கூடாது?

தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.

விதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.

உங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக மதங்கள் தங்கள் ஆன்மீக விஷயங்களில் அற்புதத்தை பற்றி கூறுகிறது. உதாரணமாக மார்கண்டேயன் தனது இறப்பை தடுத்தது, சாவித்திரி தனது கணவனை இறப்பிலிருந்து மீட்டது என கூறிகொண்டே போகலாம்.கிருஸ்தவத்திலும் குருடனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சி உண்டு இவ்வாறு இருக்க விதியை மாற்ற முடியாது என்பது பொய்யா?

மார்கண்டேயன் தனது இளவயதில் இறக்கவேண்டும் என்பது விதி என யார் உங்களிடம் சொன்னது? மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? யாரோ கூறும் கதையை முடிவான உண்மை என எண்ணி விடாதீர்கள்.

சாவித்திரி கற்பில் சிறந்தவள் என்பதால் அதை செய்தால் என கொண்டால், சாவித்திரிக்கு பிறகு கணவனை மீட்டவர் யவரும் இல்லை என்பதை வைத்து பார்க்கும் பொழுது சாவித்திரியே கடைசி கற்புகரசி என ஒத்துகொள்ளமுடியும் அல்லவா? இதனால் அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவது போலக்கிவிடாதா?

தேவமைந்தன் கண்கள் இல்லதவர்கள் எல்லம் வரிசையில் நில்லுங்கள் கண் கொடுக்கிறேன் என தற்கால கடற்கரை கூட்டத்தில் கூறுவது போல கூறாமல் ஒரே ஒருவருக்கு மட்டும் கண் கொடுத்தது ஏன் என சிந்தியுங்கள்.

மார்கண்டேயன் தடுத்தாட்கொள்ளுதல் என்பதும், சாவித்திரி சத்தியவானுடன் மீண்டும் வாழ வேண்டும் என்பதும், கண் இல்லதவர் கிருஸ்து மூலம் கண் பெற வேண்டும் என்பதும் இவர்களின் விதியே.

இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணையிக்கிறார் எனும் பொழுது, அந்த விதியை மாற்ற முயல்வது இறைவனுக்கு எதிராக நாம் செய்யும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்கு எதிராக போராடியவர்கள் வெற்றது உண்டா என உங்கள் புராணத்தில் தேடுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கோளருபதிகம் பாடினால் கிரகதோஷம் விலகும் என்பது உண்மையா?

கோளருபதிகம் பாடி கிரகதோஷத்திலிருந்து விலகியவர் திருஞானசம்பந்தர். இவரை போல நீங்களும் ஞானப்பால் அருந்தி, முழுவாழ்க்கையும் ஆன்மீகத்திற்கு அற்பணித்தவராக இருந்தால் கண்டிப்பாக கிரகதோஷம் விலகும்.

--------------------------

மேற்கண்ட கேள்விகள் போக பரிகாரம் பற்றிய பல கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது.

ஜோதிடர்கள் பரிகாரம் செய்யாமல் விட்டாலும் மக்கள் அவர்களை திருந்த விடமாட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன். பல நூற்றாண்டாக பரிகாரம் செய்து தங்கள் தலைமுறையின் DNA-வில் அதை பதியவைத்துவிட்டனர். மெல்ல தான் புதிய ரத்தம் பாயும் என தோன்றுகிறது.

--------------------------
அடுத்த பதிவு பற்றிய முன்னோட்டம்

நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.

5 கருத்துக்கள்:

Subbiah Veerappan said...

/////தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.
விதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.
உங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.///

நிதர்சனமான உண்மை. அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் சுவாமிஜி. நன்றி

Expatguru said...

இந்த அருமையான வலைத்தளத்தை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். எனக்கு ஒரு ஐயம்.

எல்லாமே இறைவன் செயல் என்று கூறுகிறோம். அப்படி பார்த்தால் நாம் செய்யும் பாவ செயல்களுக்கும் இறைவனே காரனகர்த்தாவகி விடுகிறான் இல்லையா? பிறகு அந்த பாவ செயல்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கிறான் இறைவன்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி.

உங்களை போன்ற ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு சமூகத்தை மேம்படுத்தும் கடமை அதிகம்.

பிறருக்கும் இந்த தகவலை கொண்டு செல்வீர்கள் என நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு Expatguru அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விகள் விரைவில் பதில் அளிக்கப்பட்டு வெளியிடப்படும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

வணக்கம் ஐயா,

இறைமையின் படைப்பில் வந்த நாம்மை, இறைமை பாதுகாக்கும் என்றால் எதற்காக ஜோதிடம் பார்க்கிறோம்? ஜோதிடத்தின் நன்மைகள் என்ன?

ஜோதிடம் எனக்கு பிரியமான ஒன்று. மொல்ல அறிந்துக் கொண்டு வருகிறேன்.. மேலும் அறிய விரும்புகிறேன்...