Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 14, 2008

ப்ராப்தம்

ப்ராப்தம்
- உங்களுக்காக பிறந்தவர்


தற்காலத்தில் சாபக்கேடு என எதை சொல்லலாம்?

1) இளமையில் வறுமை?
2) கொடிய நோய்?
3) ஊனம்?

இல்லை. இல்லை. இதைக்காட்டிலும் அதிக துன்பம் கொடுப்பது எது தெரியுமா?

உங்களுக்கு திருமண வயதில் மகனோ/மகளோ இருந்தால் இதை விட கொடுமை வேறு இல்லை. இவ்வளவு தாழ்த்தி கூற காரணம் என்ன? இக்கால ஜோதிடர்களின் சர்வதிகாரத்திற்கு அடிமைப்பட்டு "ஜாதக பொருத்தம்" என்னும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஒருவர் தன் மகளின் ஜாதகத்தை கையில் எடுத்தால் அவரும் அவரின் குடுப்பத்தாரும் மன அளவில் துன்பப்பட்டு கலங்கும் வரை இவர்கள் விடுவதில்லை.


"தோஷ ஜாதகம்" இதனால் உங்கள் பையனுக்கு ஜாதகம் அமையாது என்று தந்தை அவதிப்படுவதும், மறுபுறம் "சுத்த ஜாதகம்" இதற்கும் ஜாதகம் அமையாது என கூறுவதை கேள்விப்படுகிறோம். ஆக ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்? சுத்தமாகவா - அசுத்தமாகவா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருக்கு இருக்கும் ஜாதகம் மற்றொருவருக்கு இருக்காது என்பது விதி. இதன் அடிப்படியில் பார்த்தால் இரு ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்து இது சுத்தம் - இது தோஷம் என சொல்ல முடியாது. கடவுள் அனைவரையும் ஓர் தனித்தன்மையில் படைக்கிறார். உங்களுக்கு இருக்கும் குடும்பம்-குழந்தைகள்- தொழில் இவை உலகில் வேறு ஏதேனும் பகுதியில் உள்ள ஒருவருக்கும் இதே போன்று இருக்கிறது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இருக்க முடியாது.

உங்கள் மனதை போன்ற மென்மையான மலரை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா மலரும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் , அந்த செடியின் வேறு வேறு பாகத்தில் மலர்கிறது. இதை போன்ற தெய்வீக படைப்பான நீங்கள், பார்ப்பதற்கு ஒரே இனமானாலும் உங்கள் பிறப்பின் நோக்கம் வேறாகும்.

இவ்வாறு இருக்க உங்களை மற்றொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி தோஷமானவர், யோகமானவர் என சொல்ல முடியுமா?

திருமணம் என்று வரன் பார்க்க துவங்கியதுமே, செவ்வாய் தோஷம் , நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் என ஜாதகத்தை இழிவு படுத்துவதும், உங்கள் ஜாதகம் சுத்த ஜாதகம் அவ்வளவு சீக்கிரம் மற்றொரு ஜாதகத்துடன் சேராது என சொல்லுவதும் முட்டாள்தனமானது.

20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தவர்களை நீங்கள் கேட்டுப்பாருங்கள்- அவர்களுக்கு இவை புதுசு. அவர்கள் ஜாதக பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள் என கேட்டால் இல்லை என்றே பதில் வரும்.

ஜோதிட சாஸ்திரத்தில் பத்து பொருத்தம் பார்ப்பது என்பது கிடையாது. நவீன காலத்தில் சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக ஏற்படுத்திய விஷயம் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்க்கலாம் எனும் புத்தகம் வேறு பிளட்பாரம் வரை
விற்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்த்து வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவது நல்லதா?

பின்பு எப்படித்தான் திருமணத்தை முடிவுசெய்வது? ப்ராப்தம் என்பதை பார்த்தால் மட்டுமே இதற்கு தீர்வுண்டு.

ப்ராப்தம் என்றால்?

" ப்ராப்தம் " இந்த வார்த்தையே உங்களுக்கு பல விஷயத்தை சொல்லும். முடிவு செய்யபட்ட ஒன்று அல்லது விதிக்கப்பட ஒன்று என சொல்லலாம். உங்களுக்கு முடிவு செய்யப்பட்ட வாழ்க்கை துணைவர் இவர்தான் என துல்லியமாக சொல்லும் முறையே ப்ராப்தம்.

பெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் ராசி/நட்சத்திரம், லக்னத்தின் ராசி /நட்சத்திரம் மற்றும் ஜாதகர் பிறந்த கிழமையின் அதிபதி , ஆண் ஜாதகத்தில் நடப்பு தசா-புக்தி -அந்திரம் இவற்றுடன் இணைந்தால் ப்ராப்தம் உண்டு.இதில் ஒரு கிரகம் இல்லை என்றாலும் ப்ராப்தம் இல்லை.

இது போன்ற இணைப்பு அனைத்து ஜாதகத்துடனும் இருக்காது. ஜாதகி யாரை திருமணம் செய்ய போகிறார்களோ அவர்களுடன் மட்டுமே இருக்கும்.

திருமணத்திற்கு மட்டும் இல்லாமல், தந்தை-மகன் , சகோதர- சகோதரி மற்றும் வியாபார கூட்டாளி என வாழ்க்கையில் மற்றொருவருடன் இணையும் தருணத்தில் ப்ராப்தம் இருந்தால் மட்டுமே முடியும். கடவுள் உலகில் அனைவரையும் ஓர் சட்டதிட்டத்தில் இணைத்திருக்கிறார்- அவரின் அனுமதி இல்லை என்றால் எதுவும் நடக்காது என ப்ராப்தத்தை அறிந்தவர்களுக்கே தெரியும்.

ரமணமகரிஷியின் அமுத மொழியை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்,

"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"


திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் ப்ராப்தத்தின் விளையாட்டை இவரைவிட வேறு யார் தெளிவுபடுத்த முடியும்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் இதை மனதில் கொண்டு செயல்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமடைய வாழ்த்துகிறேன்.

11 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//ப்ராப்தம் என்றால்?//

ஸ்வாமி, எனக்கு (ஏற்கனவே) திருமணம் ஆகிவிட்டது ! இனிமேல் இதையெல்லாம் படிச்சு ... :)))))))))))))))))))))

Subbiah Veerappan said...

///ரமணமகரிஷியின் அமுத மொழியை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்,

"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"


திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் ப்ராப்தத்தின்
விளையாட்டை இவரைவிட வேறு யார் தெளிவுபடுத்த முடியும்? உங்கள்
ஒவ்வொரு செயலிலும் இதை மனதில் கொண்டு செயல்படுத்தி உங்கள்
வாழ்க்கை வளமடைய வாழ்த்துகிறேன்.//////

அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் சுவாமிஜி. நன்றி!

இதைத்தான் ஒரு ஞானி இரண்டே வரிகளில் இப்படிச் சொன்னார்:

"இறைவனால் உனக்குக் கொடுக்கப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது:
இறைவனால் மறுக்கப்பட்டதை யாராலும் உனக்குத் தரமுடியாது!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி கண்ணன் அவர்களே,

உங்கள் வரவு இனிதாகுக.

முன்பே திருமணம் ஆனாலும்,

இதை படித்து

(பெருமூச்சுடன் ) “எனக்கு ப்ராப்தம் இவ்வளவு தான்” என உங்களை சமாதனப் படுத்திக்கொள்ளலாம்.

அல்லது

“--------அமைவதலாம் இறைவன் கொடுத்த வரம்” என உங்களை ஆனந்தபடுத்தி கொள்ளலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி.

நம் ஊர் கிருஷ்ண ஸ்வீட்டில் எதனையோ இனிப்பு வகை இருந்தாலும்,

தித்திப்பு எனும் சுவை ஒன்று தானே? அது போல எதனையோ ஞானிகள் இருந்தாலும் அவர்கள் சொன்னது எல்லாம் ஒன்றுதான்.

ஞான ஸ்வீட் கொடுத்தமைக்கு நன்றி.

KARMA said...

//இது போன்ற இணைப்பு அனைத்து ஜாதகத்துடனும் இருக்காது. ஜாதகி யாரை திருமணம் செய்ய போகிறார்களோ அவர்களுடன் மட்டுமே இருக்கும்.
//

ஸ்வாமி அவர்களே,

1. இது வரை திருமணம் நடைபெற்ற ஜோடிகளை எடுத்துக்கொண்டு இந்த rule - apply செய்தால் சரியாக வருமா? (கோவியாரை விட்டு விடலாம்).

2. மறு விவாகம் கூட தற்காலங்களில் நடைபெறுகிறது, அதை எப்படி விளக்குவது?

3. கடவுள் 1-1 என்ற விகிதத்தில் படைதானென்றால் அந்த இன்னொருவரை எவ்வளவு காலம் தான் தேடிக்கொண்டிருப்பது? அவர் இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானலும் பிறந்திருக்கலாமல்லவா?

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மா அவர்களே,

உங்கள் வரவால் எங்கள் வலைதளம் அனந்தப்படுகிறது.
காரணம் உங்கள் அறிவுபூர்வமான கேள்விகள்.

அதற்கான விடை கீழே....


1. இது வரை திருமணம் நடைபெற்ற ஜோடிகளை எடுத்துக்கொண்டு இந்த rule - apply செய்தால் சரியாக வருமா? (கோவியாரை விட்டு விடலாம்).

பதில் :
இணைந்து வாழும் அனைத்து தம்பதிகளுக்கும் கண்டிப்பாக இருக்கும். மேலும் தம்பதிகள் விவாகரத்து ஏற்படும் சமயம் ப்ராப்தம் இருக்காது.
ப்ராப்தம் திருமணத்தில் இணைவார்கள் அல்லது மாட்டர்கள் என்பதை மட்டுமே காட்டும். அவர்கள் திருமண வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களின் ஜாதகத்தை பொருத்தது.

2. மறு விவாகம் கூட தற்காலங்களில் நடைபெறுகிறது, அதை எப்படி விளக்குவது?
பதில் :
எத்தனை திருமணம் நடைபெற்றாலும் அதில் இருவருக்கும் ப்ராப்தம் இருக்கும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியுடன் வாழும் தன்மை உண்டு. அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பராப்தம் உண்டு.
ஆனால் ஒரு திருமணம் என அமைந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேல் ப்ராப்தம் இருக்காது.

3. கடவுள் 1-1 என்ற விகிதத்தில் படைதானென்றால் அந்த இன்னொருவரை எவ்வளவு காலம் தான் தேடிக்கொண்டிருப்பது? அவர் இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானலும் பிறந்திருக்கலாமல்லவா?


கடவுள் படைத்தாரா என்றால் அதற்கு தனிவிவாதம் செய்ய வேண்டி இருக்கும். இருந்த போதிலும் இயற்கையின் படைப்பில் 1:1 என யாரும் இல்லை. துறவிகள் 1:0 என்றும் இருக்கிறார்கள் சிலர் 1:N (முடிவிலி) என்றும் இருக்கிறார்கள்.

ப்ராப்தம் என்பது திருமணம் ஆகும் தம்பதிகளுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் தான். தொடர்பு ஏற்படுத்துதல் என்பதே இதன் அடையாளம்.

உதாரணமாக

எனது பிறந்த நேர ஆளும் கிரகங்கள்
ராகு - சனி - சந்திரன் - சுக்கிரன்.

இவை அனைத்தும் உங்கள் நடப்பு தசா - புக்தி மற்றும் அந்திர நாதர்களாக இருக்கும் ( ஏதோ ஒன்று - அனைத்தும் அல்ல).

இது உங்களுக்கு மட்டுமல்ல திரு.கோவி.கன்ணன் மற்றும் திரு.சுப்பையாவுக்கும் பொருந்தும்.

நாம் ஒரு சில நாட்களே தொடர்பு கொள்வதால் ஒன்று அல்லது இரண்டு கிரகம் தொடர்பு கொள்ளும். திருமணம் செய்பவர்களுக்கு அனைத்தும் இணையவேண்டும். காரணம் அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் அல்லவா?

உங்கள் நண்பர்களுக்கும் இதை பயன்படுத்தி பாருங்கள்

நன்றி.

KARMA said...

இன்னொரு கிளைக் கேள்வி. அவ்வாறு பிராப்த‌ம் உள்ள‌ இருவ‌ர் க‌ல்யாண‌ம் செய்து கொள்வார்க‌ளா? அல்ல‌து சில‌ நாட்க‌ள் தொட‌ர்பு கொண்டு பிற‌கு பிரிந்துவிடுவார்க‌ளா? ஒரு உற‌வு திரும‌ண‌த்தில் க‌ண்டிப்பாய் முடியும் என்ப‌து எந்த‌ கிர‌க‌ங்‌ளை பொருத்த‌து? இதை ச‌ற்று விள‌க்க‌மாக‌ கூறினால் மிக‌ப் ப‌ல‌னுள்ள‌தாயிருக்கும்.

த‌ங்க‌ளின் ப‌திலுக்கு மிக்க‌ ந‌ன்றி. தொட‌ர்ந்து இந்த‌ ஜோதிட‌ம் ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு ம‌ற்றும் சேவை அனைவ‌ர்க்கும் கிடைத்திட‌ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மா அவர்களுக்கு,

உங்கள் பதில் எனக்கு உற்சாகத்தை வழங்கியது.

திருமணம் என்பதை கலாச்சார நோக்கத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டிய விஷய்ம்.

ஜோதிடத்தில் திருமணம் செய்யும் தன்மையை ஆராயும் ஏனைய விதிகள் இருந்தாலும் அதை உலக கலாச்சரத்திற்கு முன் நிறுத்தும் பொழுது நமது புத்தியால் ஜோதிட விதிகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

ஐரோப்பாவில் திருமணம் எனும் சடங்கு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நடக்கிறது. சேர்ந்து வாழ்தல் என்பதை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள்/அதனால் அங்கு அனைவருக்கும் ப்ராப்தம் இல்லை என கூறிவிட முடியாது.

இந்தியாவில் கூட பெங்களூரு போன்ற நகரத்தில் இந்த கலாச்சாரம் உண்டு என்பது உங்களுக்கு தெரியும் தானே?


ப்ராப்தம் என்பது திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மட்டும் என நினைத்து விடகூடாது. வாழ்க்கை பயணத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் இருவருக்கும் பரஸ்பரம் இருக்கும். திருமணம் சடங்கு, அரசுதுறை பதிவு என்பது எல்லாம் நாம் கற்பித்தவை தானே?

காதல் கொள்பவர்களுக்கு இயல்பாகவே ப்ராப்தம் இருக்கும்.

எனவே ப்ராப்தம் நீங்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் மணமானவ்ர்களுக்கு இருந்தே தீரும். ப்ராப்தம் இல்லதவர்கள் சில வினாடிகள் கூட சேர்ந்து இருக்க முடியாது.

நன்றி.

பின்குறிப்பு : உங்கள் நடப்பு தசா-புக்தி-அந்திரம் நான் குறிப்பிட்டது போல இருக்கிறதா?

KARMA said...

//பின்குறிப்பு : உங்கள் நடப்பு தசா-புக்தி-அந்திரம் நான் குறிப்பிட்டது போல இருக்கிறதா?//

இதை சரிபார்க்கும் அளவிற்கு கூட எனக்கு ஜோதிஷம் தெரியாது. எனது நண்பருக்கு தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

தாங்களது விரிவான விளக்கத்திற்கும் விடையளித்தற்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்.

aaaaaaa said...

Vanakkam,

Name : Narayanan.S
Date of Birth : 03.03.1977 (11.25 PM)
Star : aayilyam

if possible Please let me intimate for my marriage time whether it happen in this year if not when will i get marriage.

Thanks in Advance

Narayanan.S

shyam sundar said...

திருமண பந்தத்தில் இணையும் ப்ராப்தம் உள்ள ஆணுக்கும்,பெண்ணுக்கும்,பெண்ணின் பிறந்த நேர ஆளும் கிரகமும், ஆணின் தசா,புக்தி,அந்தரம்,
அவர்கள் பிறந்த நேரத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருக்குமா? அல்லது அவர்கள் திருமண பந்தத்தில் இணைய போகின்ற தருணத்தில் தான் தொடர்பு கொண்டிருக்குமா ?