Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, October 18, 2008

சினிமா சினிமா

அறிவிப்பு :
  • ஸ்வாமி என்ன சினிமாவை பற்றி சொல்லிவிட போகிறார் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
  • இதை ஓர் ஆன்மீகவாதியின் பதிவாக படித்தால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.!


முன்குறிப்பு :

ஆன்மீகத்தில் இருக்கும் எனக்கு சினிமா அறிவு தேவையா? இல்லையா என விவாதிப்பதற்கு முன் ஒரு வாழ்வியல் சம்பவம்.

முன்காலத்தில் காசி மாநகரம் உலகதரம் வாய்ந்த கல்விக்கான நகரமாக இருந்ததால் அனைத்து அறிஞர்களும் தங்கள் மேன்மையான கல்வி கற்கவும் - கற்று கொடுக்கும் இடமாகவும் விளங்கியது. அங்கு சர்வயங்ஞ பீடம் எனும் தலைமை இடம் உண்டு. இந்த பீடமானது தற்கால பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு ஒப்பானது எனலாம் -ஆனால் அது உலக பல்கலைகழகம்.அதில் 64 கலைகளையும் கற்று தெளிந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும். 64 கலைகள் என்பதில் அனைத்து கலைகளும் அடங்கும். அப்பீடத்தில் அமருபவர்கள் பல அறிஞர்களால் சோதிக்கப்படுவார்கள்.(இப்பொழுது போல லஞ்சம் கொடுத்து பதவி வாங்க முடியாது...!)

ஆதிசங்கரர் சர்வயங்ஞ பீடம் ஏற வேண்டும் என முயற்சி செய்தார். இதனால் தனது ஆன்மீக கொள்கையை எளிமையாக வெளிபடுத்த முடியும் என்பது அவரின் திட்டம். பல வகையான சோதனை அதிசங்கரருக்கு வழங்கப்பட்டது. அனைத்து சோதனையிலும் பல கலையில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதை அவர் வெளிப்படுத்தினார். கடைசியாக ஓர் அறிஞர் உங்களுக்கு பாதுகை(செருப்பு) தைக்க தெரியுமா என கேட்டார். இந்த கேள்வி, சன்யாசியாக இருந்ததால் தோலால் ஆன பாதுகையை தொடமாட்டார் என்றும் மரத்தால் ஆன பாதுகையை அணிந்திருந்த ஆதி சங்கரருக்கு தோலால் ஆன பாதுகையை தைக்க தெரியாது என்று நினைத்து அவரை தோற்கடிப்பதற்காக கேட்கப்பட்டது.


அறிஞர்கள் சூழ ஓர் செருப்பு தைப்பவனிடம் சென்று அறுந்த செருப்பை வாங்கி, நூலின் ஒரு முனையை வாயில் கவ்வி, மறுமுனையை இடதுகையில் வைத்து, பாதுகையை தனது இருகால்களுக்கும் இடையே வைத்து,வலது கையில் ஊசியை கொண்டு அவர் தைத்த லாவகத்தை பார்த்த செருப்பு தொழிலாளி அவரின் காலகளில் விழுந்து குருவாக ஏற்று கொண்டான்.
பின்பு அவர் சர்வயங்ஞ பீடத்தில் அமர்ந்திருப்பார இல்லையா என்பது உங்களுக்கே தெரியும் தானே?

ஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.

தற்சமயம் எனது நிலையும் இதுவே. கோவி.கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

எனது சினிமா அறிவை சினிமா அறி(ந்தவ)ஞர்கள் விமர்சிக்கட்டும். எனது சொந்த அனுபவத்தையோ வாழ்க்கையையோ இதுவரை வெளியிட்டதில்லை. இதை படித்துவிட்டு எனது வாழ்க்கை வரலாற்றை முடிவு செய்யவேண்டாம். இந்த வலைதளத்தில் எனது சுயகருத்துக்களை எழுதுவதில்லை- சாஸ்திரத்தை பற்றி மட்டுமே எழுதி வருகிறேன். இப்பதிவு அதற்கு விதிவிலக்கானது. ஜனரஞ்சக பதிவாளர் போல நானும் எழுதுகிறேன். உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.

----------இத்துடன் முன்னுரை முடிந்தது-கலாட்டாவுக்குபோகலாம்.--------

இந்த கட்டுரையை கோவிகண்ணன் போன்ற பல மூத்த வலையுலக பதிவர்களுக்கும் (அவர் சொல்ல சொன்னதாக சொல்லவேண்டாம் என்றார்) சமர்ப்பிக்கிறேன்.

எச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.

இனி கேள்விக்கு போகலாம்.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எனது தாயார் நான் வயிற்றில் இருக்கும் பொழுது சினிமா பார்க்க சென்றதாக கேள்வி. அவர்கள் கண் மூலம் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

பல திரையரங்கில் சினிமா போட்டவுடன் தூங்கிவிடுவேன் ( அந்த லக்‌ஷணத்தில் தானே படம் எடுக்கிறார்கள்). சிறிது நேரம் கழித்ததும் நினைவு வரும். இன்னுமா படம் முடியலை என உணர்வேன்? அதை தானே கேட்கறீங்க?

சரி சரி சீரியஸா சொல்றேன்..பாயும் புலி - தான் பார்த்த முதல் சினிமா. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். பின்பு நினைவு தெரிந்து - ”தங்க மகன்”- சிறுவயதில் எனது உறவினர்கள் எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்) இதே படத்துக்கு 25 முறைக்கு மேல் அழைத்து சென்றார்கள். அப்புறம் என்ன உணர? இனிமேல் யாரும் கூட்டிகொண்டு செல்ல கூடாது என வேண்டிக் கொண்டேன்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
எப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)

பாபா எனும் திரை காவியத்தைதான் பார்த்தேன். எனது ஆன்மீக நண்பர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ததால் சென்றேன். அது மட்டுமல்ல பரமஹம்ச யோகானந்தர் எனும் யோகியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கபட்டது என கூட்டி சென்றார்.அந்த புத்தகம் யோகியின் சுயசரிதை என்பதாகும்.

எனது 8 வயதில் இப்புத்தகம் படித்தேன். எனது வாழ்க்கையில் எப்பொழுது கேட்டாலும் அதில் வரும் சம்பவங்களை துல்லியமாக விவரிக்கும் அளவுக்கு என்னுள் பதிந்த புத்தகம் அது. ஆனால் திரையறங்கில் நான் கண்ட படத்தின் கதைக்கும் அந்த புத்தகத்தில் வரும் ஒரு இரு சம்பவத்தை தவிர வேறு சம்பந்தம் இல்லை. அந்த யோகியையும் - ஆன்மீகத்தையும் இதற்கு மேல் கேவலபடுத்த முடியாது. பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பது போல இருந்தது. முதலும் கடைசியுமாக இவரின் படம் அமைந்தது ஓர் அசந்தர்ப்பமே.

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்த கேள்வியை மீண்டும் பகடி செய்ய விரும்பவில்லை நேரடியாக பதிலுக்கு செல்கிறேன்.

பெரியார் - சினிமா படத்தை பார்த்தேன். ஒரு மாமனிதனின் சுயசரிதையை எடுக்க பலர் இருந்தாலும் அவரை போல தோற்றத்தில் மற்றொரு மனிதர் அமைவது சிரமம். பல சுயசரிதை சினிமா கதைநாயகனின் தோற்றத்தினாலயே தோல்வியடைந்திருக்கிறது. உதாரணம் - காமராஜர். இவை அனைத்தும் இருந்தாலும் அரசியல் சாயம் பூசப்பட்டு, பெரியாரின் சுயசரிதை வீணடிக்கப்பட்டது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என தோன்றியது.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இன்னும் எடுக்கப்படவில்லை.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அரசியல் சம்பவம் என்பதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சினிமா ஆர்வம் என்னை தாக்கியது. ஒரு நடிகரின் படம் வெளியிடும் அன்று இதற்காகவே அமெரிக்காவிலிருந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் இந்தியா வந்து பல லட்சத்தை செலவிட்டதாக செய்திகிடைத்தது. ஆனால் அவர்கள் தாய் தந்தை இறந்தால் web cam கொண்டு இறுதி சடங்கு செய்கிறார்கள். இதை நினைத்தால் நாளை சந்திரனுக்கு போனாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள் என எண்ணினேன்.

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
மயா பஜார் எனும் படம். சிக்கலான திரைக்கதை கொண்ட புராண கதையை கையாண்ட விதம். இன்னும் தமிழ் சினிமாவில் புராண கதை எடுக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். ஹாரிபாட்டர் எனும் உலக சினிமாவை மிஞ்சும் புராண கதைகள் நம்மிடம் இருந்தாலும் அதை ஒளிபடுத்த சிறந்த இயக்குனர்கள் இல்லை. அதனால் அடிக்கடி உலக சினிமா தரம் என சொல்லுவதை இவர்கள் நிறுத்தினால் நல்லது.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
தமிழ் சினிமாவில் வாசிக்க ஒன்றும் இல்லை என எண்ணுகிறேன். ஐரோப்பிய , ஈரானிய திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் , இயக்குனருக்கும் ஒர் வலியான அனுபவம் உண்டு. அதை படித்தாலாவது பிரயோஜனம் உண்டு. இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)


7) தமிழ்ச்சினிமா இசை?

பல திறமையான இசையமைப்பளர்களை கொண்டது தமிழ் திரையுலகம். ஆனால் அவர்கள் அனைவரும் சூழ்நிலைகைதியாக இருக்கிறார்கள். என் பால்ய வயதில் இசையை கற்றுக்கொண்டேன். பல வாத்தியங்களை வாசிக்கும் அறிவும் உண்டு. ஆதனால் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஆதனால் அவர்கள் சிக்கி கொண்டதை என்னால் உணர முடிந்தது.

இருந்தாலும் சில இசை அமைப்பாளர்களின் மாஸ்டர் பீஸ் என ஒன்று உண்டு அல்லவா?

விஸ்வநாதன் -ராம மூர்த்தி : தில்லான மோகனாம்பாள் - மறைந்திருந்தே பார்க்கும் -இன்னும் பல

இளையராஜா : செந்தாழம் பூவில் , செந்தூரப்பூவே, ஹேராம்

விஸ்வநாதன் + இளையராஜா இசையில் : குழலு ஊதும் கண்ணனுக்கு...

ஏ.ஆர் ரஹ்மான் : உழவன் மற்றும் உயிரே - இதில் இவரின் அரெஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கும்.

இவரின் ஜெண்டில்மேன் - ஜீன்ஸ் இவரின் மோசமான வேலைக்கு உதாரணம். இதை புரிந்து கொள்ள தற்சமயம் மீண்டும் ”ஒட்டகத்தை கட்டிக்கோ”- ”கொலம்பஸ்” கேட்டுப்பாருங்கள் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியாது.

வேதா (தேவேந்திரன்) - இவர் இசையமைத்த வேதம் புதிது எனும் படம் - அருமையான இசைவடிவம். பலர் இளையராஜ என நினைக்க வைத்தாலும், இசையில் ஓர் நவீனம் இருந்தது. இவர் வேறு படங்களுக்கு இசையமைத்தாரா என தெரியவில்லை.

இள இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் சாஸ்திரிய சங்கிதத்த தவிர்த்து செயல்படுவதால் மனதில் பதிவதில்லை.அதற்காக நான் சாஸ்திரிய சங்கீதத்தை மட்டும் ரசிக்கும் கிழவன் என நினைக்காதீர்கள்.

இமானின் -(கையவச்சுக்கிட்டு) , யுவனின் -(அறியாத வயசு) இசை நன்றாக இருந்தாலும் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் பல உண்டு.

இள இசையமைப்பளர்கலின் திறமை இவர்களை வாழ வைத்தாலும் ரீமிக்ஸ் எனும் விஷம் நின்று கொல்லும்.

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

எனக்கு தமிழ் சினிமாவை விட உலக சினிமா அதிகம் தெரியும் என எண்ணுகிறேன்.

ஐந்தாவது கேள்வியை ”உலக சினிமாவில் உங்களை பாதித்தது” என கேட்டிருந்தால் -இப்படி விவரித்திருப்பேன்

காந்தி. 1982 ஆம் ஆண்டு மூன்று லட்சம் மனிதர்களை ஒன்றிணைத்து எடுத்த யுக்தி - மேலாண்மை பிடித்திருந்தது. இந்த விஷயம் கின்னஸில் இடம் பிடித்தது.மேல் நாட்டுக்காரரான (பென் கிங்ஸ்லி) நடிகருக்கு இந்திய காந்தி வேடம் பொருந்தியது. மேலும் காந்தி திரைப்படத்தை எந்த இந்தியரும் எடுக்க முன்வராதது என சொல்லிக்கொண்டே போகலாம்.

உலக சினிமாவில் வரிசைப்படுத்த நூற்றுக்கும் மேம்பட்ட படங்கள் உண்டு.

இதை விடுத்து ரன் லோலா ரன் எனும் படம் 12பி-யாகவும், பைசைக்கிள் தீப் எனும் படம் பொல்லாதவன் ஆனதையும் பார்த்தவுடன் உலக சினிமாவை தமிழில் ”அப்படியே” பார்க்க முடியும் என்றவுடன் உலக சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
சினிமாவுடன் தொடர்பு இல்லை. ஆனால் சினிமா தொழில் செய்பவர்களுடன் தொடர்பு உண்டு.

என்னிடம் யோக பயிற்சிக்கும், ஜோதிடம் கேட்கவும் வருவார்கள்.
இவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம், என்னிடம் தங்களை அறிமுகப்படுத்தியவுடன் பேசி முடிப்பதற்குள் குறைந்தது ஐந்து முறையாவது தாங்கள் சினிமாவில் இன்னாரக இருக்கிறோம் என மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடிப்பார்கள்.

தங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு இருப்பதாக என்னிடம் சொல்லும் இவர்களிடம் ஒரு சின்ன அளவில் கூட அது இல்லாததை கண்டு அவர்களை கண்டித்திருக்கிறேன். சினிமாவை அவர்களின் தொழிலாக பார்ப்பதால் அவர்களும் என்னுடன் சரியாக பழக முடிகிறது.

மக்களுக்கு சிறந்த தமிழ் படம் கொடுக்க இவர்களிடம் ஆன்மீக மற்றும் ஆன்ம ஆற்றல் இல்லை. என்னிடம் தொடர்பு கொண்ட பிரபல இயக்குனர்கள் பலர் உண்டு. அனைவரும் பெரும் நடிகர்களை வைத்து இயக்கியவர்கள் என்றார்கள். என்னிடம் உள்ள சமூக சிந்தனையை அவர்களிடம் பகிர்ந்து அதை சினிமாவாக எடுக்க சொல்லி இருக்கிறேன். சிலர் அதன் முயற்சியில் இருக்கிறார்கள். என் சினிமா அறிவை கண்டு சிலர் பயந்ததும் உண்டு. என் கருத்தை இயக்குனர்களை கொண்டு இயக்குவதில் பல ஆனந்தமான விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது -என் பெயர் வெளியே வராதல்லவா?


10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதை ஜோதிடம் மூலம் சொல்லலாமா? :-)

என்னை பொருத்த வரை சிலர் மட்டுமே நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். சமூக சிந்தனை கூடிய ஜனரஞ்சகமான சினிமா எடுத்தால் சினிமா மேம்படும். பல இயக்குனர்களுக்கு நல்லவர்கள் பின்புலத்தில் இருக்க நன்றாகவே சினிமா வளரும் என நினைக்கிறேன். ( இந்த கருத்துக்கும் 9ஆம் கேள்விக்கும் சம்பந்தம் கிடையாது :-) )


10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அரசியலில் இருக்கும் சினிமா நடிகரை தமிழர்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பார்கள். அடுத்த வருடம் இன்னும் சில உலக சினிமாக்கள் தமிழில் வரும். (பின்ன ஒருவருடம் உட்கார்ந்து பார்த்த DVDயை என்ன செய்ய? )

எனக்கு நிம்மதியாக இருக்கும் - 365 நாள் சில கழிசடையான படங்கள் வந்து தமிழ் சினிமா தரத்தை கெடுக்காதல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைதளத்திற்கு புதிது என்பதால் என்னால் வேறு யாரையும் அழைக்கத் தெரியவில்லை.
அதனால் இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி ஐந்து கேள்விகளை கேட்டு திரு.கோவி.கண்ணனுக்கே இதை திருப்பி அனுப்புகிறேன். அவர் அதற்கு பதில் சொல்லி , இவரிடம் கேள்வி கேட்டவரிடத்தில் அனுப்பட்டும். அந்த பாதை மீண்டும் “சினிமா சினிமா “ கேள்வி ஆரம்பித்தவரிடமே சென்று சேரும் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கேள்விகள் :

1) உங்களை இயக்குனராக வைத்து திரைப்படம் எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அந்த திரைப்படத்திற்கு என்ன கதைஅம்சம் இருக்கும்?அதற்கான ஒன் லைன் சொல்ல முடியுமா?

2) தமிழ் நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகர் என அவார்ட் கொடுக்க சொன்னால் யாருக்கு கொடுப்பீர்கள். ஏன்?

3) உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்?

4) உலகளவில் பிரபலமானவர்களின் சுயசரிதையை தமிழ் சினிமாவில் இன்னும் எடுக்க வேண்டியது என்றால் யாருடையது?

5) தற்சமயம் உள்ள தமிழ் சினிமா உலகம் ”இதை” தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைப்பது எது?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவுரை : ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் . எனது பல்துறை அறிவு சிலருக்கு எப்பொழுதும் ஆச்சரியப்படுத்தும். இக்கட்டுரை சிலருக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதால் எழுதினேன்- பொழுது போக்காக அல்ல. இதற்கு பிறகு எனது வலையுலக பதிவில் என் வாலை சுருட்டி கொள்கிறேன் மீண்டும் எனது பதிவுகள் ஜோதிடம் சார்ந்து இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன். எனது நீண்....ட பதிவை வாசித்தமைக்கு நன்றி.


17 கருத்துக்கள்:

அமர பாரதி said...

ஆஹா,

//இதற்கான பிரதிவலது- (அதுதாங்க cஒப்ய்ரிக்க்ட்)// இது சூப்பர். பின்றீங்களே ஸ்வாமி.

//எப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)// இப்படி கடிக்கிறீங்களே.

மத்தபடி நல்ல சரளமான நடையுடன் ஒரு பதிவு.

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி ஓம்கார்,

மடை திறந்த வெள்ளமாக எழுதி இருக்கிறீர்கள். ஆதி சங்கரர் செருப்புத் தைத்தக் கதை பதிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது. இசையிலும், இசைக் கருவிகளிலும் தங்களது ஈடுபாடுகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு அனுபவ பதிவாகப் பார்க்க முடிகிறது.

மிக்க நன்றி !

வரிக்கு வரி நகைச்சுவை, அருமையாக எழுதி இருக்கிறீர்கள், பழுத்த ஆன்மிகவாதிகளுக்கு(ம்) நகைச்சுவை உணர்வுகள் இருக்கிறது, அவர்கள் ரொம்பவும் விலகிப் போனதாக நினைத்து விலகிப் போகாதீர்கள் என்று அறியும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள். :)

உங்களின் மாறுபட்ட பதிவாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ரொம்ப அசத்தலாக இருக்கிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமர பாரதி,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

என்னை ஒரு சரளமான நடை கொண்ட பதிவராக அங்கிகரித்தமைக்கு மிக்க நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

பெயருக்கு ஏற்றார்போல
செய்பவனும் நானே -அதை செய்வித்தவனும் நானே- செய்த பின் பாராட்டுபவனும் நானே...

என நீங்கள் செயல்படுவதை காண்கிறேன்.

பாராட்டுக்கள் அனைத்தும் உங்களை சார்ந்தது.

நன்றிகள் பல...

மோகன் said...

இன்றுதான் முதல்முறை உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.அருமையான நடையில் சரளமாக எழுதியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மோகன் அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி.

பாராட்டுதல்களுக்கு நன்றிகள் பல.

கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன்,

பெயருக்கு ஏற்றார்போல
செய்பவனும் நானே -அதை செய்வித்தவனும் நானே- செய்த பின் பாராட்டுபவனும் நானே...

என நீங்கள் செயல்படுவதை காண்கிறேன்.

பாராட்டுக்கள் அனைத்தும் உங்களை சார்ந்தது.

நன்றிகள் பல...
//

சித்தமும் செயல்பாடும் நாமே தீர்மாணிப்பது என்று நம்புகிறீர்களா ?
:)

பரிசல்காரன் said...

உங்களிடமிருந்து இவ்வளவு நகைச்சுவையான எழுத்து... மிக மிக சந்தோஷமளிக்கிறது ஸ்வாமி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்காரரே,

உங்கள் வரவே என்னை போன்ற எளிய பதிவர்களை பெருமை கொள்ள சொய்யும். இதில் பாராட்டுவேறா?

உங்கள் பாரட்டால் உற்சாகம் அடைந்து..இனி என்ன எல்லாம் எழுத போகிறோமோ?

உங்கள் நகரத்தின் அருகில் தான் நான் வசிக்கிறேன். கோவை வரும் பட்சத்தில் என்னை சந்திக்க முயற்சி செய்யவும்.

உங்கள் குழந்தைகளுக்கு எனது ஆசிகள்.

தியாகராஜன் said...

///ஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.///

மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா.
அன்பன்
தியாகராஜன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. தியாகராஜன்,

உங்கள் வருகைக்கு நன்றி. நல்ல வரிகளை சுட்டிகாட்டினீர்கள்.

கிரி said...

//எச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.//

:-)))))))))))))))))))))))))))))))))

//எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்)//

கலக்கல் :-))))

//பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பது போல இருந்தது/

ஹா ஹா ஹா ஹா ஹா எங்க தலைவரை இப்படி வாரிட்டீங்களே :-)))

//இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)//

கலக்கறீங்க போங்க

//உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்?//

ஹா ஹா ஹா ஹா ஹா.. கோவி கண்ணனே சிரித்து இருப்பார்

//ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் //

உஷாரா முன்னாடியே கூறி விட்டீர்கள். உஷார் சுவாமி தான் நீங்கள் :-)

சுவாமி உங்களை என்னவோ என்று நினைத்தேன்..இப்படி பட்டாசா கலக்கிட்டீங்களே ..என் மனதார கூறுகிறேன் பின்னி பெடலெடுத்திட்டீங்க சமீபத்தில் படித்த எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்த ரொம்ப ரசித்த பதிவு உங்களுடையது. பாராட்ட வயதில்லை எனவே அன்பாக ஏற்று கொள்ளுங்கள்.

இதை போல பலதரப்பு பதிவுகளையும் எழுதுங்கள்..உங்களுக்கு நகைச்சுவை அனாயிசமாக வருகிறது

மறுபடியும் ஒரு முறை கூறுகிறேன் கலக்கிட்டீங்க.மனம் விட்டு சிரித்தேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி அவர்களே,

உங்கள் வரவுக்கு நன்றி.

நான் ரசித்து எழுதியதை விட நீங்கள், (ர)ருசித்து படித்திருக்கிறீர்கள்.

விரைவில் உங்களை இதே போல பின்னூட்டம் இட வைக்கிறேன்.

பெருசு said...

//2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
எப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-//
சாமி,கோயம்புத்தூர் குசும்பு கொப்பளிக்க எழுதறீங்க.

//இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.//

பட்டைய கிளப்பிட்டீங்க.முதல் முறையாக உங்கள் பதிவினை தமிழ்மணத்தில் பார்த்தேன்.
யாராவது வெச்சுகறதுக்கு பேரு கிடைக்காம ஸ்வாமி பேருலே எழுதறாங்களான்னு பாக்க உள்ள வந்தா,
மன்னிச்சுக்கங்க சாமி.

நல்லாவே எழுதறீங்க.அடிக்கடி எழுதுங்க.

ராமலக்ஷ்மி said...

மிக வித்தியாசமாக நகைச்சுவை இழையோட எழுதியிருக்கும் விதம் வெகு அருமை.

ஷண்முகப்ரியன் said...

வணக்கம்,ஸ்வாமிஜி!எனக்குத் தொழில் சினிமா.நீங்கள் சொன்ன கருத்துக்களில் சில எனக்கு உடன்படா விட்டாலும் நீங்கள் நகைச்சுவையாக சொன்ன முறை என்னைக் கவர்ந்தது.சினிமாவைப் பற்றி ஒரு ஆன்மீகவாதியிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. A HILARIOUS AND GOOD READING.

Geetha Sambasivam said...

மிக அருமையான அலசல் பதிவு. சினிமா பற்றிய உங்கள் கருத்து அனைத்தும் ஏற்கக் கூடியவையே!