Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 30, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 4


 சிறைச்சாலை அழைப்பை ஏற்று நான் அங்கிருப்பவர்களை பார்க்க சென்றேன்.  இந்திய சிறைச்சாலைகளை கண்ட எனக்கு அர்ஜண்டினா சிறைச்சாலை மிகவும் பிரம்மிப்பை உண்டாக்கியது. அமைச்சர்கள் தங்கும் விருந்தினர் மாளிகைக்கு ஒப்பாக இருந்தது அந்த சிறைச்சாலை.

மேலும் அங்கே அடைபட்டவர்களுக்கு சகல வசதிகளும் உண்டு. சகல வசதிகள் என்றால் டெலிபோன், செல்போன், இன்ட்ரநெட் , உணவு, உடை முதல் அனைத்தும் அவர்கள் முடிவு செய்யலாம்.

சிலர் இண்டர்நெட் மூலம் வியாபாரம் செய்து வருமாணம் பார்க்கும் அளவுக்கு சிறையில் சுகந்திரம் உண்டு. தினமும் ஃபேஸ்புக் மூலம் குடும்பத்தினருடன் பேசிக்கொள்கிறார்கள். 

நானும் சுப்பாண்டியும் குழப்பம் அடைந்தோம். இதுக்கு ஏன் சிறைச்சாலைனு பேரு வச்சாங்க ஹோட்டல்னு பேர்வைக்கலாம் என்றான் சுப்பாண்டி. 

மனித உரிமையை மதித்தல் என்றால் என்ன என தெளிவாக தெரிந்துகொண்டோம். தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவிர இவர்களை அடிமையாகவோ விலங்காகவோ வைத்திருப்பதில்லை என விளக்கினார் சிறை அதிகாரி. இவர்கள் விளையாடுகிறார்கள், சிலர் புகைபிடிக்கிறார்கள் என சிறைச்சாலைக்குள் வந்த உணர்வே எனக்கு ஏற்படவில்லை. ஏதோ ஒரு கிளப்பில் நுழைந்த உணர்வு மட்டுமே இருந்தது.

இங்கே சிறைச்சாலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். கைதிகளுக்கு அல்ல..!

குழுமி இருந்த கைதிகளுடன் உரையாற்றினேன். அவர்களில் ஒருவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி தத்துவங்களை படித்து தன் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் என்றும் சிறையில் இருந்தாலும் அவரின் கருத்துக்களால் விடுதலையாக உணர்கிறேன் என்றும் கூறினார். ஆயுள் தண்டனை கைதியான அவர் ஜே.கிருஷ்ண மூர்த்தியை பற்றி கூறியது மகிழ்வானதாக இருந்தது.

ஆயுள் தண்டனை கைதிகள் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். முதல் கேள்வியே சிறப்பாக கேட்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளராக என் மாணவி இருக்க எங்கள் உரையாடலை கீழே 
தொகுத்துள்ளேன்.

“எங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்”

“என்னுள் ஒருவனாக நினைக்கிறேன். வித்தியாசமாக நினைக்க ஒன்றும் இல்லை”

“ நாங்கள் கொடூரமான பாவம் செய்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் அல்லவா?”

“அனைவரும் சிறையில் தான் இருக்கிறார்கள் நீங்கள் மட்டுமல்ல. சிலர் சுவரால் எழுப்பப்பட்ட சிறையில் கைதிகள். சிலர் உணர்வால் எழுப்பபட்டா ஐந்து புலன் சிறையின் கைதிகள். வித்தியாசம் அவ்வளவுதான். உங்களை போலவே அவர்களும் நன்னடத்தையால் ஒரு நாள் விடுதலை ஆவார்கள்” என்றேன்.உள்ளம் நெகிழ்ந்து கண்ணீருடன் என்னை அணைத்துக் கொண்டனர். 

உணர்ச்சிபெருக்காக ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்தது இந்த சந்திப்பு.

ஆன்மீக வழிகாட்டுதல் செய்துவிட்டு, அவர்களை என்னுடன் இணைந்து இறை பாடல் பாடி ஆடி  மகிழ்ந்து கிளம்பினோம். 

சிறை அதிகாரிகள் இவர்கள் அனைவரும் இத்தனை மகிழ்ச்சியாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை என கூறினார்கள்.

விடை பெற்று கிளம்பும் பொழுது “ஏஞ்சாமி கோவையில் இருக்கும் சிறைச்சாலைக்கு எல்லாம் நீங்க போறதில்லை” என கேட்டான் சுப்பாண்டி.

நான் அவனை ஏற இறங்க பார்க்க...

“இல்ல சாமி பெரிய ஆன்மீகவாதிகள் எல்லாம் சிறைச்சாலை, திவிரவாதிகளுக்கு போயி யோக சொல்லி கொடுத்து திருத்தறாங்களே. அதுபோல நீங்க செய்ய மாட்டீங்களானு கேட்டேன்” என்றான்.

அதில் ஓர் உள்குத்து இருப்பதை உணர்ந்தாலும், “ நமக்கு சிறைச்சாலைக்குள்ள எதுக்குப்பா போயி கத்துதரனும்? வெளிய கத்து தந்து யாரும் உள்ள போகாம பார்த்துக்கிட்டா போதும்” என சீரியஸாக பதில் கூறினேன்.

 இப்படியாக நாங்கள் வந்து ஒரு வாரம் பொதுமக்களுக்கு தியான பயிற்சிகளும், சிறைச்சாலை சந்திப்புமாக சென்றது. அடுத்த வாரங்களில் மத்திய அர்ஜண்டினாவில் உள்ள லா ர்யோகா என்ற இடத்தில் பயிற்சி கொடுக்க செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அந்த நகரம் 1300 கிலோமீட்டர் தூரம் இருந்தது. போக்குவரத்து பஸ் மட்டுமே. இங்கே இரயில் மற்றும் இதர போக்குவரத்துக்கள் இல்லை.

என்னுடன் இருந்த பிற அர்ஜண்டின மாணவிகள், “இந்த இடம் வரை செல்லும் நீங்கள் அருகே உள்ள பிற இடங்களுக்கு எல்லாம் செல்லலாமே” என யோசனை கூறினார்கள். அதை கேட்ட சுப்பாண்டி ,”சாமி சாமி நாம போலாஞ்சாமி” என கேட்க துவங்கினான்.

காரில் சென்றால்தான் இந்த இடங்களுக்கு செல்ல முடியும் என காரில் பயணம் உறுதி செய்யப்பட்டது. இப்படியாக நாங்கள் திட்டமிட்டு செல்ல வேண்டிய நகரங்களை பட்டியலிட்டால் மொத்தம் ஐயாயிரம் கிலோமிட்டர் தூரம் வந்தது.

அதிர்ச்சியுடன்.....என்னாது ஐயாயிரம் கிலோமீட்டர் காரிலா? யாருடா சுப்பாண்டி ட்ரைவ் செய்வா? என கேட்டேன்.

சுப்பாண்டியின் விரல் என்னை நோக்கி சுட்டிக்காட்டியது..

(அன்பு பெருகும்)

7 கருத்துக்கள்:

யோகேஸ்வரன் said...

ஒரு இந்தியாராக நாம் ஆன்மீகத்தில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருபபது பெருமை அளிக்கிறது. தொடரட்டும் சேவை. வாழ்த்துக்கள் ஸ்வாமி.

யோகேஸ்வரன் said...

ஒரு இந்தியாராக நாம் ஆன்மீகத்தில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருபபது பெருமை அளிக்கிறது. தொடரட்டும் சேவை. வாழ்த்துக்கள் ஸ்வாமி.

கிரி said...

சுவாமி நீங்கள் கூற இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது.. ஆனால் கட்டுரையை சுருக்கமாக முடிக்கிறீர்கள்.

நீங்கள் கைதிகளுடன் உரையாடியதை, அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், வேறு என்ன பற்றி கேட்டார்கள், எதில் எல்லாம் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள், நீங்கள் கூறிய விசயங்களில் எது பற்றி விரிவாக கேட்டார்கள் போன்ற விசயங்களை விரிவாக எதிர்பார்த்தேன்.

இது முழுக்க பயணக்கட்டுரை இல்லை என்றாலும் உங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களே கூற இன்னும் நிறைய இருக்கிறது என்பது என் கருத்து.

திவாண்ணா said...

சாமி, டச்சிங்க்ஸ், டச்சிங்க்ஸ்!

நிகழ்காலத்தில்... said...

//தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவிர இவர்களை அடிமையாகவோ விலங்காகவோ வைத்திருப்பதில்லை என விளக்கினார் சிறை அதிகாரி.//

தவறு செய்தவன் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டான்.. அதை உணர்ந்து திருந்த தனிமை வேண்டும்.. உரிய காலம் வேண்டும்.. அதற்குள் சமுதாய மக்கள் அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் இவனுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்ற கருணையோடு அவனை பாதுகாக்க செய்த ஏற்பாடே சிறைச்சாலை...

இது அந்தக்காலம்...

இந்தக்காலத்தில் ..? :)

manjoorraja said...

உங்களை போல சிலருக்குதான் இது போன்ற அருமையான வாய்ப்பு கிடைக்கும். பயனுள்ளவகையில் பயன்படுத்துங்கள்.
வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

இன்னும் விளக்கமாக இந்தப் பதிவை எதிர்பார்த்தேன். ஐயாயிரம் கிலோ மீட்டருக்குக் காரில் பயணமா? கடவுளே! :(