Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, November 28, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 3

எங்கள் காரில் ஏறிக்கொண்டு எங்களுடன் பயணம் செய்ய துவங்கினார் அகஸ்டின்.அவர் தான் எங்கள் பார்வையற்ற மொழிபெயர்ப்பாளர்.

மாலை பொதுக்கூட்டத்திற்கு முன் பரஸ்பரம் அறிமுகமும் பேச்சின் சாரத்தையும் புரிந்துகொள்ள அவரை சந்திக்க எண்ணி இருந்தேன்.

அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து அவரை கூட்டிக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். அறிமுகப்படுத்திவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். வாகனத்தை என் மற்றொரு அர்ஜண்டினா மாணவி ஓட்டிக் கொண்டிருந்தார்.


 என்னை பற்றியும் எனது பணிகளை பற்றியும் அகஸ்டினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பேச்சின் நடுவே சடாரென வாகன ஓட்டியிடம் திரும்பி , “அடுத்த வரும் தெருவில் வலதுபக்கம் திரும்புங்கள்” என சொல்லி என்னிடம் பேச்சை தொடர்ந்தார்.

நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எப்படி உங்களால் முடிகிறது என கேட்கும் முன், “அங்...அப்படியே வலதுபக்கம் மூணாவது வீட்டில், யெஸ் இங்கதான் நிறுத்துங்க..” என சொல்லி காரிலிருந்து இறங்கி தன் வீட்டிக்குள் சென்றார்.

இவர் யார் கைகளையும் பற்றிக்கொள்வதில்லை. பிறப்பிலிருந்தே கண்கள் தெரியாதவர். பல இசைக்கருவிகளை இசைக்கிறார். மேலும் நகரின் முக்கிய இசைக்குழுவில் இருக்கிறார். தான் பார்வையற்றவர் என்பதில் தாழ்ச்சி இல்லாமல், யாரும் அவரின் உடல் குறையை குறிப்பிடாமல் இருக்க எப்பொழுதும் நகைச்சுவையுடன் இருக்கிறார். மாலை நேர பொதுக்கூட்டத்தில் சிறப்பாக மொழிபெயர்த்தார். 

எப்படி கண்களால் பார்ப்பது போல அனைத்தையும் செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், “உங்களுக்கு கண்கள் இருக்கிறது அதனால் அந்த உறுப்பால் மட்டும் பார்க்கிறீர்கள். எனக்கு இல்லாததால் பிற நான்கு புலன்களால்  பார்க்கிறேன். உங்கள் எல்லோரையும் விட எனக்கு பார்வை அதிகம்” என்றார்.

அவரின் வார்த்தைகள் பல விஷயங்களை சுட்டிகாட்டியது.

விடைபெறும் பொழுது, “ஸ்வாமி, ஆங்கிலத்தில் சந்தித்து விட்டு பிரியும் பொழுது சீயூ என சொல்லுவார்கள். நான் சீமீ என சொல்லி பிரிகிறேன்.ஏனென்றால் என்னால் உங்களை பார்க்க முடியாது” நகைச்சுவையுடன் விடைபெற்றார்.

ஓர் உறுப்பில் மட்டும் பார்க்கும் நான் குருடன் அல்லவா? நான்கு புலனால் உணரும் அவர் பார்வையற்றவர் தானே?

எங்கள் பொதுக்கூட்டமும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக சென்றதால் நாளிதழ்களும் தொலைக்காட்சியிலும் செய்திகளாயின. மக்களின் கவனம் அதிகரித்தது. தெருக்களில் நான் நடந்து சென்றாலே “இந்தியன் ஸ்வாமி” என என்னை அரவணைத்து மகிழ்ந்தனர். இதனால் அர்ஜண்டினாவின் பல்வேறு பகுதிலிருந்தும் நிகழ்ச்சிகள் நடத்த அழைப்புகள் வந்தது.

அப்படிப்பட்ட அழைப்புகள் மின்னஞ்சலில் வந்தது. அவற்றை பரிசீலித்து கொண்டிருந்தேன். அவற்றில் ஒரு சுவாரசியமான அழைப்பு இருந்தது.

“அனைவரும் உங்களை பார்க்க விரும்புகிறார்கள். நாங்கள் உங்களை பார்க்க வர இயலாது. நீங்கள் எங்களுடன் உரையாடி மாலை பொழுதை செலவளிக்க வருவீர்களா?”

இப்படிக்கு 
ஆயுள் கைதிகள்
மத்திய சிறைச்சாலை, 
சாண்டா ரோசா நகரம், அர்ஜண்டினா

பல்வேறு அதிகார மையங்களின் அழைப்பை தவிர்த்துவிட்டு இவர்களை சந்திக்க சென்ற எனக்கு பல்வேறு ஆச்சரியம் காத்திருந்தது.

சிறைச்சாலைக்கு செல்ல வாகனத்தில் ஏறியதும் , சுப்பாண்டி வாகனத்தின் கதவை மூடாமல் தலையையும் உடலையும் வெளியே நீட்டியபடி , “ஏய் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயில்லு போறேன்” சப்தமாக கூவியபடி வந்தான்...

(அன்பு பெருகும்)

6 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

ஓர் உறுப்பில் மட்டும் பார்க்கும் நான் குருடன் அல்லவா? நான்கு புலனால் உணரும் அவர் பார்வையற்றவர் தானே?//

எங்களுக்கு பார்வை இருக்கான்னு சோதனை பண்றீங்க போல...பார்வையுள்ளவர்னு வரணுமா?

புதுகை.அப்துல்லா said...

ஏற்கனவே ஜெயிலுக்கு போய்ட்டு வந்த ஒரு சுப்பாண்டியும் உங்க நட்பு வட்டத்தில் இருக்காராமே? :)

ஸ்வாமி ஓம்கார் said...

@நிகழ்காலத்தில் சிவா,

நான் குருடன், அவர் பார்வையற்றவர் என்பதை உணரச்செய்வதற்கே இந்த வரிகள். அவருக்கு பார்வை எப்பொழுதும் இல்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

நம்ம கூட இருக்கிறது எல்லாம் கிரிமனல் ரெக்கார்டோடதான் இருக்கு. யாரை சொல்றீங்க ;)

Unknown said...

ஓம் சிவோஹம்.

geethasmbsvm6 said...

அருமையான மனிதர் அந்த மொழி பெயர்ப்பாளர். அனுபவங்களும் புதுமை.