Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 21, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 2

கேள்வி : பங்கு சந்தை என்பது அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளை சார்ந்தது செயல்படும் ஒன்று. உதாரணமாக நானோ கார் ஒன்று தீப்பிடித்து விபத்து ஆனது என்றால் உடனடியாக டாடா மோட்டார் நிறுவன பங்குகள் விலை குறையும். பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் பங்கு சந்தை தடுமாற்றம் காணும். அப்படி இருக்க இவற்றை எல்லாம் ஜோதிடத்தில் கண்டு பங்கு சந்தையை நிர்ணயம் செய்ய முடியுமா?

பதில் : முடியும். உங்கள் பார்வை மிகவும் உலகியல் சார்ந்ததாக இருப்பதால் அவ்வாறு நினைக்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு லாட்டரி தொழில் செய்யும் தொழில் அதிபர் என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்தார். இன்னும் ஆறு மாதங்களில் உங்களுக்கு தொழில் மாறும் என்றேன். தமிழகத்தில் பிரபல லாட்டரி அதிபரான அவர் என்னை கிண்டலாக பார்த்துவிட்டு சென்றான். பின்னர் அரசு ஆணையால் அவருக்கு தொழில் மாறியது என்பது உண்மை.

அரசு தடை செய்யப்போகிறது என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அரசு, உலக நிகழ்வு மற்றும் இயற்கை சீற்றங்களை கணிக்க ஜோதிடத்தில் வேறு தனி முறைகள் உண்டு. ஆனால் தனிநபர் ஜாதகத்தில் அவர் தொழில் மாறுவார் என சொல்லலாமே தவிர எப்படி என கூற முடியாது. அது போலவே இன்று வங்கி பங்குகள் உயர்வடையும், இன்று ஆட்டோமொபைல் பங்கு உயர்வடையும் என ஜோதிடத்தில் கூற முடியும் ஆனால் எதனால் உயர்கிறது என கூற இயலாது.

என்னிடம் காரணம் கேட்டால் சூரியன், குரு சேர்க்கையால் வங்கி பங்கும், சுக்கிரன் செவ்வாயால் ஆட்டோமொபைல் பங்கும் உயர்ந்தது என்பேன்.


கேள்வி : ஸ்ரீ திருஷ்டி என்பது என்ன? நீங்கள் கணித்து சொல்லுவீர்கள் அதன் படி நாங்கள் முதலீடு செய்ய வேண்டுமா? ஸ்ரீதிருஷ்டியில் மென்பொருட்கள் உண்டா?

பதில் : ஸ்ரீ திருஷ்டி என்பது ஒருவகை ஜோதிட ஆய்வு முறை. இம்முறை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையை கணிக்கலாம். நான் கணிக்கிறேன் என கூறுவதற்காக பங்கு சந்தை ஜோதிடத்தை கற்றுக்கொடுப்பதில்லை. சிந்திக்கும் அறிவு இருக்கும் யாவரும் எங்களிடம் கற்றுக்கொண்டு நீங்களாகவே கணிக்கவும், முதலீடும் செய்யலாம். கற்றுக்கொடுத்த பிறகு எனக்கோ உங்கள் முதலீடுக்கோ தொழிலுக்கோ சம்பந்தம் இல்லை.

ஸ்ரீதிருஷ்டி என்பது ஜோதிட சிந்தாந்தம் என்பதால் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் இருந்தால் நீங்களும் கணிக்கலாம். இது ஜோதிட கணிதம் செய்யும் கால விரயத்தை குறைக்கும். மற்றபடி மென்பொருள் பங்கு சந்தையை கணிக்காது.


கேள்வி : ஸ்வாமி, நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளேன். தங்களின் பங்கு ஜோதிடத்தை இதில் பயன்படுத்த முடியுமா? எத்தனை விழுக்காடு வரை கணித்து லாபம் ஈட்ட முடியும்?

கரன்ஸி டிரேடிங் தாராளமாக பயன்படுத்த முடியும். மேலும் இந்தியாவில் இன்னும் கரன்ஸி டிரேடிங் முழுமையாக திறக்கப்படவில்லை. அவ்வாறு முழுமை பெற்றால் 80% கணிக்க முடியும்.

கேள்வி : என் ஜாதகத்தை தாங்களுக்கு அனுப்பினால் பங்கு சந்தையில் நான் ஈடுபடலாமா? லாபம் கிடைக்குமா என கூறமுடியுமா? இதற்கு கட்டணம் உண்டா?

சமூக சேவை செய்ய முடியுமா? ஆன்மீக வழியில் செல்லுவேனா போன்ற பொது நல கேள்விகளுக்கு கட்டணம் இல்லாமல் வழிகாட்டுவேன். உங்கள் பொருளாதார உயர்வுக்காக கேட்கிறீர்கள் அதற்கு கட்டணம் இருக்கும். சேவை நோக்கமான கேள்விக்கு மட்டுமே இலவசம்.

கேள்வி : அடுத்த வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும் ?

24-05-2010 முதல் 28-05-2010 வரை உள்ள தேசிய சந்தை நிலவரம்(NIFTY) தினவாரியாக கணிக்கப்பட்டது.


இது மேலோட்டமான கணிதம் மட்டுமே. பங்கு சந்தை ஜோதிடம் கற்றால் இது ஆழமாக செயல்படுத்த முடியும். எனது ஜோதிட அறிவை சோதிக்கவே இங்கே கணிதம் செய்துள்ளேன். இதை கொண்டு யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட பலன் 75 முதல் 85% சரியாக இருக்கும்

கேள்வி :சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும்?

ஜூன் மாதத்தில் முதல் வாரம் அதிக தடுமாற்றத்துடன் காணப்படும். புள்ளிகள் 4900 முதல் 5190 வரை இருக்கும். 17 ஜூனுக்கு பிறகு சந்தை ஏற்றம் காணும்.

தேசிய பங்கு சந்தை குறைந்த புள்ளியாக 4780 புள்ளிகளும் அதிகபட்சம் 5380 புள்ளிகளும் பெறும்.
மே மாதத்தை விட வர்த்தகம் செய்ய நல்ல மாதமாக இருக்கும்.


9 கருத்துக்கள்:

தனி காட்டு ராஜா said...

வழக்கமான Technical analysis மாதிரி இந்த Astro Technical analysis கூட சுவாரசியமாய் இருக்கே ....

////கேள்வி : என் ஜாதகத்தை தாங்களுக்கு அனுப்பினால் பங்கு சந்தையில் நான் ஈடுபடலாமா? லாபம் கிடைக்குமா என கூறமுடியுமா? இதற்கு கட்டணம் உண்டா?

சமூக சேவை செய்ய முடியுமா? ஆன்மீக வழியில் செல்லுவேனா போன்ற பொது நல கேள்விகளுக்கு கட்டணம் இல்லாமல் வழிகாட்டுவேன். உங்கள் பொருளாதார உயர்வுக்காக கேட்கிறீர்கள் அதற்கு கட்டணம் இருக்கும். சேவை நோக்கமான கேள்விக்கு மட்டுமே இலவசம்.////

நான் என் பொருளாதாரத்தை உயர்த்தி அதன் முலம் சமூக சேவை செய்யலாம் என்று உள்ளேன் ...என் சேவை நோக்கமான கேள்விக்கு என் ஜாதகத்தை தாங்களுக்கு அனுப்பினால் பங்கு சந்தையில் நான் ஈடுபடலாமா? லாபம் கிடைக்குமா என கூறமுடியுமா? ஹி..ஹி..

Unknown said...

swami, i am in chennai, I have small knowledge in astrology, i want to learn share trading how?

ntarasu said...

சுவாமி
நான் சமுக சேவை செய்ய வாய்ப்பு உள்ளதா

N.Thirunavukkarasu
DOB : 03.12.1983
Star : Anusham
Sin : Viruchigan

கார்மேகராஜா said...

சங்கமே அபராதத்துல போயிட்டு இருக்கு, இதுல எங்க சார் பங்குச்சந்தைல முதலீடு பண்ண முடியுது? :)

நல்ல பதிவு ஐயா!

Mahesh said...

//இன்று ஆட்டோமொபைல் பங்கு உயர்வடையும் என ஜோதிடத்தில் கூற முடியும் ஆனால் எதனால் உயர்கிறது என கூற இயலாது.//

இந்த இடத்தில்தான் எனக்கு கருத்து மாறூபாடு. இதுவும் ஒருவகையில் speculation என்றே தோன்றுகிறது. இது இப்படித்தான் என்று உறுதியாக இருப்பது போல தோன்றவில்லயே.

Mahesh said...

தயவு செய்து குதர்க்கம் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

ஜோதிடம் மூலம் "ஏதோ" ஒரு செயலின் விளைவாக பங்குகளின் விலைகளின் ஏற்ற இறக்கங்களை ஓரளவு கணிக்க முடியும் என்கிறீர்கள். ஒரு "விளைவை"யே ஓரளவுக்கு கணிக்க முடியும் எனும்போது, அதன் "காரணத்"தையும் கணிக்க முடிய வேண்டும்.

அதேபோல், இதுவரை யாரும் ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காகவோ அல்லது பாதுகாப்பு கருதியோ இயற்கை சீற்றங்களைப் பற்றி போதுமான காலம் முன்பே கணித்து பேரழிவுகளைத் தடுக்க முடியவில்லையே என்றா ஆதங்கமும் இருக்கிறது.

மதி said...

பதிவிற்கு நன்றி...தயவு செய்து இன்னும் தொடருங்கள்...

laavanya said...

good. keep going.

Prakaash Duraisamy said...

swami, market is against ur prediction, then how we can believe?