Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 10, 2010

ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்


சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம். சத்- உண்மை, சங்கம் கூடும் இடம். இது ஒரு முரண்பாடான வார்த்தை தான். உண்மை என்பது பன்மையாக இருக்காது.

உண்மைகள் என்னும் சொல் வேடிக்கையானது. பொய் வேண்டுமானால் பன்மையாக இருக்க முடியும். ஒரு உண்மையை மறைக்க பல பொய் என்று தானோ கூறுகிறோம்.

உண்மை என்பது ஒன்றுதான் என்றால் எப்படி சந்திக்க முடியும். இரண்டு விஷயம் இருந்தால் தானே சங்கம் - சந்திப்பு என்பது சாத்தியம் ஆகும் என கேள்வி எழலாம்.

நம்மில் இறைவன் ஆன்ம வடிவில் உறைகிறான் என்பது உண்மை. இந்த உண்மை உங்களிடமும் என்னிடமும் உணர்ந்துகொள்ள இரு ஆன்மாவும் இணையும் இடமே சத்-சங்கம்.

ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தின் பின்வருமாறு கூறுகிறார்.

சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.

ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும்.

ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம்.

கடந்த பத்து வருடங்களாக பல ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை கடந்து வந்துள்ளேன். ஆன்மீக சாதகர்கள், ஆன்மீக தேடல் கொண்டவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது அலாதியானது.

ஆணவம் கொண்ட அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு இறைவன் அருளிய பதிலால் ஆணவத்தை சிதறடித்து அவர்களை முழுமையை நோக்கி பயணிக்கச் செய்வது அலாதியான அனுபவம்.

எனது சத்சங்க கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறோம். இப்புத்தகம் தயாராகி வருகிறது. உங்களுக்கும் கேள்விகள் எழுமானால் கேளுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்களை அளிக்கிறேன்.

இனிவரும் நாட்களில் ‘சத்சங்கம்’ என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதி வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

உங்களுக்காக சத்சங்கத்தில் கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்வியையும் அதன் பதிலையும் கீழே விவரித்துள்ளேன்.

-------------------------

கேள்வி : நீங்கள் துறவியா?

பதில் : என்னை பற்றி நான் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், நான் பொறாமை, குரூரம், பேராசை போன்ற தமோ குணத்தை துறந்தவன்.

துறவு என்பதை நீங்கள் தவறாக நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு ஓடுவது துறவு அல்ல. உலகே என் குடும்பம் என்றும் உலக நிகழ்வுகள் என் பொறுப்பு என்றும் இருப்பவன் துறவி.

கேள்வி : துறவி என்றால் பிச்சை எடுத்து தானே வாழ வேண்டும்.? நீங்கள் அப்படியா?

பதில் : ஆம். தனக்காக எதையும் உருவாக்காமல் பிறருக்காக உருவாக்கி அதில் தான் ஒரு பிச்சைக்காரனாக வாழ வேண்டும். இதுவே துறவு. நான் தொழிலதிபர் என்றோ அல்லது வியாபாரி என்றோ என்னை அடையாளப்படுத்த முடியுமா? நான் என்னை பிச்சைக்காரன் என கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி : நான் உணவுக்காக பிச்சை எடுப்பதை கூறுகிறேன் நான். நீங்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுத்தது உண்டா?

பதில் : உண்டு. என் செயல்பாடுகளும் நான் தினமும் உண்ணும் உணவும் பிறர் அளிக்கும் பிச்சை தான். நான் எதையும் உருவாக்குவதில்லை.

கேள்வி : பிச்சையாக எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களா?

பதில் : பிச்சை எடுக்க மட்டுமே எனக்கு உரிமை உண்டு. பிச்சையாக இதை கொடு என கேட்டால் அது பிச்சையாக இருக்காது அல்லவா?

கேள்வி : ஒரு பெண் தன்னையே பிச்சையாக அளிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் : மாட்டேன்.

கேள்வி : ஏன்?
பதில் : எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...!


33 கருத்துக்கள்:

Paleo God said...

ஸ்வாமி,

மனித இனம் தவிர்த்து, மற்ற இனமெதுக்கும் துறவு தேவைப்படாததின் சூட்சுமம் என்ன?

தனி காட்டு ராஜா said...

//கேள்வி : ஒரு பெண் தன்னையே பிச்சையாக அளிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் : மாட்டேன்.


கேள்வி : ஏன்?
பதில் : எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...! //

பெண் பிச்சையாக கிடைத்தால் அவளை தாயாகவோ or சகோதரியாகவோ or மனைவியாகவோ ஏற்று கொள்ள வேண்டியது தானே ???

Unknown said...

Swami Good question Good Answer.super

Karthikeyan Krishnan said...

அருமையான பதில்கள். என்னிடமும் ஆணவம் மிக்க பல கேள்விகள் உண்டு. ஆனால் சத்சங்கத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை. என் கேள்விகளை மெயிலில் அனுப்பலாமா.. ஏற்றுக்கொள்வீர்களா ?

Mahesh said...

நல்ல ஐடியா !!!

கிரி said...

சுவாமி நீங்கள் அமர்ந்து இருக்கும் ஷோபா மட்டுமே பொருத்தம் இல்லாமல் உள்ளது.. பதிவு நல்லா இருக்கு

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷங்கர்,

குடும்பம் மற்றும் பற்று ஆகியவை விலங்குகளுக்கு இருந்தால் அவையும் துறவை தேடும்.


எளிமையாக சொன்னால் :)

எப்பொழுதும் காமம், பொருள் சேர்க்கை, எதிர்காலத்தின் மீது பயம் போன்றவை விலங்குகளுக்கு இல்லை..

விலங்குகள் துறவு நிலையிலேயே இருப்பதால் அதற்கு பிரத்யோகமாக தேவைப்படுவதில்லை. :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தனிக்காட்டு ராஜா,

ஒரு பெண், துறவியுடன் பழக வேண்டுமானால் அவள் அம்மா,சகோதரி, மனைவியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

இதை தவிர உறவு நிலையே இல்லாமல் ஆன்மாவை மட்டும் பார்த்து ஒரு உயிராக பாவிக்க கூடாதா?

ஒரு உறவில் மட்டும் தான் ஆண்/பெண் பழக முடியும் என்பதை மனிதனின் காம உணர்வே முடிவு செய்கிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சந்தானகிருஷ்ணன்,
திரு மகேஷ்,
திரு கிரி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கரண்,

உங்கள் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பலாம்.

சத்சங்க பகுதியில் அது வெளிவரும்.

நிகழ்காலத்தில்... said...

நல்லதொரு செய்தி..

புத்தகமாக வருவதற்கு வாழ்த்துகள்..

Krubhakaran said...

நீங்கள் துறவியா?

பதில் : ”என்னை” பற்றி ”நான்” வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், ”நான்” பொறாமை, குரூரம், பேராசை போன்ற தமோ குணத்தை துறந்தவன்.

துறவு என்பதை நீங்கள் தவறாக நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு ஓடுவது துறவு அல்ல. உலகே ”என்” குடும்பம் என்றும் உலக நிகழ்வுகள் ”என்” பொறுப்பு என்றும் இருப்பவன் ”துறவி”.


”நான்” எப்படி ”துறவி”, ”ஸ்வாமி”?

Udayakumar JR said...

சத்சங்கம் என்ற இந்தத் தலைப்பைத் தொடர்ந்து படித்துவர கற்றுத்தெளிய ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி.

கோவி.கண்ணன் said...

//ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம்.//

ஜீவன் முக்தி - பேரைக் கேட்டாலே பெங்களூரே அதிருதாம்

கோவி.கண்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...

நல்லதொரு செய்தி..

புத்தகமாக வருவதற்கு வாழ்த்துகள்..
//

நீங்கள் போடுவது துண்டா, தூண்டிலா ?

கோவி.கண்ணன் said...

// கிரி said...

சுவாமி நீங்கள் அமர்ந்து இருக்கும் ஷோபா மட்டுமே பொருத்தம் இல்லாமல் உள்ளது.. பதிவு நல்லா இருக்கு//

அவருக்கு நித்தி மாதிரி ஷோபா கிடைக்கக் கூடாது என்று நானும் விரும்புகிறேன்

shortfilmindia.com said...

லாஸ்ட் கேள்விக்கான பதிலில் உங்கள் புத்திசாலித்தனம் தெரிகிறது சாமி..:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவிகண்ணன்,
திரு. நிகழ்காலத்தில் சிவா,
திரு. உதய்,
திரு கேபிள் சங்கர்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருபா,

//”நான்” எப்படி ”துறவி”, ”ஸ்வாமி”//

’நீங்கள்’ துறவியா என கேட்டதால் ’நான்’ என கூற வேண்டி இருந்தது.

துறவு என்றால் என்ன என கேட்டால் ‘நான்’ வராது.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி திரு கோவி.கண்ணன்,

//நீங்கள் அமர்ந்து இருக்கும் ஷோபா மட்டுமே பொருத்தம் இல்லாமல் உள்ளது.//

//ஜீவன் முக்தி - பேரைக் கேட்டாலே பெங்களூரே அதிருதாம்
//

நீங்கள் இன்னும் சில பாதிப்பிலிருந்து மீளவில்லை என நினைக்கிறேன்.

சிங்கை சொற்பொழிவில் நான் அமர்ந்திருந்த ஆசனம் ஞாபகம் இருக்கிறதா :) ? யோக பயிற்சியில் அமர்ந்த ஆசனம் ஞாபகம் இருக்கிறதா?

மருந்து சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதீர்கள் :)

gvsivam said...

உங்கள் பதிவை விட பின்னூட்டத்திற்கு தாங்கள் இட்டுள்ள பதில்கள் மிக அருமை

gvsivam said...

தங்கள் வலையின் பெயர் சாஸ்திரம் பற்றிய திரட்டு/வேதிக் ஐ
இந்த தலைப்பை இட ஏதேனும் தனிப்பட்ட காரணம் உண்டோ?
வேதக் கருத்துக்களை நீங்கள் ஏற்கிறீர் அப்படித்தானே!

Unknown said...

swamji,

Well and keep it up. What is the first step for attain the enlightenment.

Thanks

Unknown said...

Swamiji,

When this jeeva athma attain the paramathma. There is have any duration or it is continously cycle.

Thanks.

Krubhakaran said...

நல்ல விளக்கம் ”ஸ்வாமி”. நேரம் இருக்கும் போது “ஸ்வாமி”க்கும் விளக்கம் அளிக்கவும். நன்றி.

Anonymous said...

நான் கேட்க நினைத்த கேள்வியை krubha அவர்கள் கேட்டுள்ளார்.

Anonymous said...

நான் கேட்க நினைத்த கேள்வியை krubha அவர்கள் கேட்டுள்ளார்.

மதி said...

"எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...!"

ஹிஹிஹி....

bogan said...

விருப்பு வெறுப்பு இரண்டையும் துறப்பதல்லவா துறவு?பெண்ணை மட்டும் ஏன் வெறுத்து ஓட வேண்டும்?மாமிசம் என்றானபிறகு பன்றி மாமிசத்தை விட நரமாமிசம் மேலல்லவா?

Umashankar (உமாசங்கர்) said...

Vanakkam Swami Ji,

Can we controll the ill effects of the Navagrahas and change it to good effect? If yes, how? If everything happens as per by Navagraha effects only, why you spending your time to teach good things to us? then Why vedas and Jotidam etcc.....?

And What is Karma?!!!How it is applicable to first birth?

Your's Lovingly,
Umashankar:-)A

கல்வெட்டு said...

ஓம்கார்,

//ஒரு பெண், துறவியுடன் பழக வேண்டுமானால் அவள் அம்மா,சகோதரி, மனைவியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

இதை தவிர உறவு நிலையே இல்லாமல் ஆன்மாவை மட்டும் பார்த்து ஒரு உயிராக பாவிக்க கூடாதா?

ஒரு உறவில் மட்டும் தான் ஆண்/பெண் பழக முடியும் என்பதை மனிதனின் காம உணர்வே முடிவு செய்கிறது.//

நான் பல இடங்களில் இதைச் சொல்லி இருப்பேன்.
பதிவுலகில்கூட அக்கா,சகோதரி,தங்கை என்று பாதுகாப்பான உறவுகளைச் சொல்லியே ஆண் பெண் விளித்துக் கொள்கிறார்கள்.

சும்மா சக மனுசியாகப் பார்க்க முடியவில்லை. அதுவே பாதுகாப்பான உறவுகளை முன்மொழிகிறது.

இது சமுதாயம் சார்ந்த ஒன்று. சரஸ்வதியை ஏன் தெய்வமாகப் பார்க்க வேண்டும்? அதுவும் ஒரு காம உணர்வைத் தடை செய்யவே. சவுந்தர்யலகரிக்களும் ஆண்டாள் பாசுரங்களும் அதைத்தாண்டியவை.

காமம் இயல்பானது. ஆண் பெண் ஈர்ப்பும் இயல்பானது. கூடிவாழும் சமூகத்தில் உறவுகள் ஒரு சட்டம்போல. அத்தை பெண் முறைப்பெண். ஆனால் சிலருக்கு சித்தப்பா பெண் முறைபெண். எல்லாச் சட்டங்களும் அந்த அந்த சமூகம் சார்ந்தது. வேறு சமூகத்தில் கேலியாகப் பார்க்கப்படும்.

**

இயல்பாய் இருக்காலம். சாமியாரை இருந்தாலும் பெண் அழகாய் இருந்தால் "நீங்கள் அழகாய் உள்ளீர்கள்" என்று சொல்வதில் தவறு இல்லை. அப்படிச் சொல்வதாலேயே அல்லது சொன்னதாலாயே துறவுக்கு பங்கம் என்றால் அது துறவே அல்ல. அது 'இருள் நீக்கி சுப்பு' மற்றும் 'கதைவைதிற காத்து வரட்டும் நித்தி' வகைத் துறவு. அதாவது வாய்ப்பு வரும் வரை துற‌ந்து இருப்பது. "கதவைத் திறந்து வை , வாய்ப்பு வரட்டும்" வகையறா.

**

Matangi said...

Swamiji, this question is regarding giving/donating money - either small amount or huge amounts. Do we have to think about how the money we give is going to be used before we give? Will we accrue bad karma if the money is going to be used for bad purposes? For example, a small boy begs for money because he is hungry - I feel it is genuine and give him some money for meals and walk away. He uses it say for drugs or hurt someone or any other bad purpose. I'm not interested if we accrue punya - just want to know if we will accrue bad karma. Please reply.

தனி காட்டு ராஜா said...

//இயல்பாய் இருக்காலம். சாமியாரை இருந்தாலும் பெண் அழகாய் இருந்தால் "நீங்கள் அழகாய் உள்ளீர்கள்" என்று சொல்வதில் தவறு இல்லை//

:)