Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, May 13, 2010

அகந்தை செய்யும் விந்தை

ஆணவம் என்பது ஒருவித வித்தியாசமான வஸ்து. இறைவனின் படைப்பில் மிக விசித்திரமானது எது என்றால் ஆணவம் என்பேன்.

வடநாட்டு இனிப்பு கடைகளில் இனிப்பு அனைத்தும் பால்கோவாவின் அடிப்படையாக இருக்கும். ஒன்றில் பாதம் போட்டிருப்பார்கள், மற்றதில் ஜீராவில் போட்டிருப்பார்கள். ஆனால் அடிப்படையில் எல்லாம் பாலல் செய்யப்பட்ட பொருட்கள்தான். அது போல இறைவன்அனைத்து உயிர்களையும் ஒன்றாக படைத்துவிட்டு உயிர்களின் தேவைக்கு ஏற்ப ஆணவம் என்பதை இணைக்கிறார். ஆணவத்தின் அளவை பொருத்து உயிரின் வாழ்க்கை நிலை மாற்றம் அடைகிறது.

பள்ளி காலத்தில் நாம் பயின்ற கணக்கு சமன்பாடுகளை வைத்து இதை எளிமையாக விளக்கலாம்.


உயிர் + ஆணவம் = மனிதன்
உயிர் - ஆணவம் = தெய்வம்
உயிர் X ஆணவம் = அசுரன்
உயிர் / ஆணவம் = தேவர்கள்


மனிதனின் ஆணவத்தை நிர்மூலமாக்கி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துவது ஆன்மீகம் என்ற கருவி மட்டும்தான். ஆன்மீகம் என்பது ஆணவத்தை ஒழித்தால் மட்டுமே உயர்நிலையை அடைய முடியும் என்பது தெளிவு. அனைத்து உயிர்களையும் நாம் நேசிக்க வேண்டுமானால் நம் ஆணவமில்லாத நிலையில் இருக்க வேண்டும். இறைவனின் அனுபூதி என்பது மிகவும் மெல்லிய தென்றல் போன்றது, அத்தகைய அனுபூதியை உணர வேண்டுமானால் ஆணவம் என்ற தடித்த தோல் நம்மை மூடி இருக்க கூடாது.


ஆன்மீகத்தில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒருவன் ஆணவத்தை ஒழிக்க ஆன்மீகத்தை பின்பற்றினால் ஆரம்ப நிலையில் ஆன்மீகமே ஆணவத்தை வளர்த்துவிடும்.
ஆன்மீகம் என்ற மருந்து ஆணவம் என்ற நோயை வளர்த்து முற்றிய பிறகே ஒழிக்கும். ஆன்மீக சாதகர்கள் தங்களை பிறரைவிட மேம்பட்டவர்கள் என ஆரம்பத்தில் நினைக்க வைக்கும். நம்மை விட பிறர் அறியாமையில் இருக்கிறார்களே என புலம்பத்தோன்றும்.

இறைவா இவர்களுக்கு எப்பொழுது நல்வழிகாட்டுவாய் என கேட்கத்தோன்றும். இவையெல்லாம் ஆணவத்தின் அடையாளங்களே. ஆனால் இதே ஆணவம் விரைவில் அடுத்த நிலைக்கு கடந்துவிடும். குரு என்ற ஒருவரின் மூலம் இறைவன் ஆணவம் என்ற பெரும் மலைக்கு வெடி வைத்துவிடுவார்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, அயமத்ம பிரம்மா போன்ற மஹாவாக்கியங்கள் ஒருவன் ஆணவத்தை ஒழித்திவிட்டு கூறினால் இறைவனாக தெரியும். வெறும் வாய்வார்த்தையாக கூறினால் ஆணவத்தின் உச்சமாக தெரியும் அஹம் பிரம்மாஸ்மி என்பதை ஒரு திரைப்படத்தில் ஹீரோ பிறரைவிட உயர்ந்தவன் என காண்பிக்கவே பயன்படுத்தினார்கள்.


ஒரு ஜென் குருவிடம் அவரின் பிரதான சிஷ்யன் கேட்டான், “ குருவே நான் அனைத்தும் கற்றுவிட்டேன். வேறு என்ன நான் செய்ய வேண்டும்?” என்றான்.

ஜென் குரு கூறினார், “முதலில் கழிவறையை சுத்தம் செய். மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்”.


இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகளை இணைந்து செயல்படமாட்டார்கள். [சிலர் விதிவிலக்கு]. காரணம் தங்கள் சித்தாந்தம் தான் சரி, தங்கள் குருவே மேன்மையானவர் என்ற எண்ணம் இதற்கு காரணம். ஆணவத்தை ஒழிக்க சென்ற இடத்தில் அவர்களுக்கு கிடைத்தது என்ன என்று பார்த்தீர்களா?

பத்திரிகை டீவி செய்திகளை பார்த்துவிட்டு பலர் ஒரு செய்தியை பற்றி பலவாறு கூறினார்கள். அந்த நபரின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் காரணம், நடிகை காரணம், மண் ஆசை காரணம், பெண் ஆசை காரணம் என பல்வேறு கருத்துக்கள் கூறினார்கள். உண்மையில் தான் அனைத்தையும் அடைந்துவிட்டேன், எல்லோரும் எனக்கு கீழேதான் என நினைத்த ஆணவமே காரணம் என பலர் மறந்துவிட்டார்கள்.

ஒரு அற்புதமான அனிமேஷன் குறும்படத்தை பாருங்கள். ஜான் என்ற அமெரிக்கர் உருவாக்கிய அருமையான படம். அதன் தொழில்நுட்ப யுக்திகள் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த 'குரு'ம்படத்தின் அடிப்படை கருத்து ஆணவம் அனைத்தையும் அழிக்கும்.



எளிமையாக சொல்லவேண்டுமானால்
ஆங்காரம் இருந்தால் ஓங்காரம் இல்லை
ஆங்காரம் இல்லயேல் ஓங்காரம் மட்டுமே உண்டு....!


20 கருத்துக்கள்:

Sabarinathan Arthanari said...

//இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகளை இணைந்து செயல்படமாட்டார்கள்.//

அப்படி போடுங்க

வடுவூர் குமார் said...

உயிரோடு + - / * போட்டது நன்றாக இருந்தது.
ஆணவத்தை ஏன் அவர் கொடுக்கனும் பிறகு நாம் ஏன் அதை தவிர்க்கனும்?

yrskbalu said...

இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகளை இணைந்து செயல்படமாட்டார்கள்.

yes. sometimes i worried also.

Unknown said...

எல்லாம் பிரம்மம்னா நீங்க ஏன் ஓம்கார் வகுப்பு எடுக்குறீங்க

gvsivam said...

இந்த பதிவு என்னை அவ்வளவாக ஈர்க்காததால் நான் கருத்துசொல்ல வரலிங்கோ

Unknown said...

சுவாமி நேற்று நான் அனுப்பிய கேள்வி சென்சார் செய்யப்பட்டது. பரவாயில்லை ஆனால் அடுத்தவர் சொன்ன வார்த்தையை நாம் ஏன் சொல்ல வேண்டும் என்ற ஆணவம் உங்களிடம் உள்ளது. இதனை என்னவென்று சொல்வது?

அமர பாரதி said...

ஸ்வாமி,

உங்க கிட்டயிருந்து இப்படி ஒரு ஆணவத்தை ஒழிக்கச் சொல்லி ஒரு பதிவா? ஒரே தமாசுதான் போங்க.

C Jeevanantham said...

Good animation...

Siva Sottallu said...

//தங்களை பிறரைவிட மேம்பட்டவர்கள் என ஆரம்பத்தில் நினைக்க வைக்கும். நம்மை விட பிறர் அறியாமையில் இருக்கிறார்களே என புலம்பத்தோன்றும்.

இறைவா இவர்களுக்கு எப்பொழுது நல்வழிகாட்டுவாய் என கேட்கத்தோன்றும். இவையெல்லாம் ஆணவத்தின் அடையாளங்களே.//

முற்றிலும் உண்மை... சில மாதங்களாக நான் உணர்கின்றேன்... உங்கள் பதிவை படித்து வருவதன் பாதிப்பு என்று நினைக்கின்றேன் :-) நண்பர்கள், உறவினர்கள் எந்த சந்திர்பிக்கு சென்றாலும் சுற்றிவளைத்து இறுதியில் ஆன்மிகம் சம்பத்தப்பட்ட பேச்சு வந்துவிடுகின்றது.


//உயிர் + ஆணவம் = மனிதன்
உயிர் - ஆணவம் = தெய்வம்
உயிர் X ஆணவம் = அசுரன்
உயிர் / ஆணவம் = தேவர்கள்//

இந்த சமன்பாட்டில் விலங்குகள் வரவில்லையே ஸ்வாமி?

எம்.எம்.அப்துல்லா said...

/ஆணவத்தை ஏன் அவர் கொடுக்கனும் பிறகு நாம் ஏன் அதை தவிர்க்கனும்? //

நாம் குடுக்குறோம், அவன் தவிர்க்கின்றான்

:))))))

Subbaraman said...

Nandri, Swamiji.

Krubhakaran said...

நல்ல விளக்கம் தான் “ஸ்வாமி”. மனசு தான் அடங்க மறுக்கிறது. நன்றி. வாய்ப்பு கிடைத்தாம் “ராஜாவின் ரமணமாலை” கேட்டு பார்க்கவும், முக்கியமாக “அருணமலை குரு ரமணா” பாடல். மிகச்சாதாரனமாக தத்துவங்கள் சொல்லபட்டிருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

மறுமொழி கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

எனக்கும் என் மாணவருக்கும் ஒரு விவாதம் ஏற்பட்டது.

ஆணவத்தை பற்றி பேசக்கூடாது, பேசினால் ஆணவம் உயருமே தவிர குறையாது என்றேன்.

மாணவர் அப்படி அல்ல ஒன்றை பற்றி கூறாமல் எப்படி அதிலிருந்து விடுபட முடியும் என்றார்

அவருக்கு விளக்கவே இந்த இடுக்கை.
மறு மொழிகளை கண்டு அவர் உணர்ந்து கொண்டார்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குருபா,

//வாய்ப்பு கிடைத்தாம் “ராஜாவின் ரமணமாலை” கேட்டு பார்க்கவும், முக்கியமாக “அருணமலை குரு ரமணா” பாடல். மிகச்சாதாரனமாக தத்துவங்கள் சொல்லபட்டிருக்கும்//

2007 ஆம் ஆண்டு அந்த பாடலை இயற்றி இசை அமைத்தவர் தனியாக பகவான் ரமணர் சன்னிதியில் பாடினார். அதை கேட்கும் பாக்கியம் பெற்றேன்.

இசைத்தட்டுகளில் கேட்ப்பதால் அற்புதமான குரல்களின் உண்மையான சப்தத்தை இழந்துவிடுகிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்..

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

ஆணவம் ஒழிக்கப்பட / தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் - ஆனால் அது நம் இரத்தத்தில் அல்லவா இரண்டறக் கலந்து விட்டது. அதனை நாம் ஆணவம் என்றே தெரியாமல் - நம்மை அறியாமல் செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம் - சிந்திப்போம்

நல்ல சிந்தனை நன்று

அன்றைய தினம் சந்திக்க இயலவில்லை - திரு மூலம் அனுப்ப இயலுமா

நல்வாழ்த்துகள் ஓம்கார்
நட்புடன் சீனா

Mahesh said...

//ஆங்காரம் இல்லயேல் ஓங்காரம் மட்டுமே உண்டு//

புரிஞ்சுடுச்சு.... "காரம்" எப்பவுமே இருக்கும். "அஹம்" தொலைந்தால்தான் "ஓம்" இருக்கும்.

கோவி.கண்ணன் said...

நீங்க எழுதி இருக்கும் ஆணவத்திற்கும் சைவ சித்தாந்ததில் சொல்லப்படும் ஆணவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?

Krubhakaran said...

"2007 ஆம் ஆண்டு அந்த பாடலை இயற்றி இசை அமைத்தவர் தனியாக பகவான் ரமணர் சன்னிதியில் பாடினார். அதை கேட்கும் பாக்கியம் பெற்றேன்.

இசைத்தட்டுகளில் கேட்ப்பதால் அற்புதமான குரல்களின் உண்மையான சப்தத்தை இழந்துவிடுகிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.."

பாக்கியசாலி “ஸ்வாமி” நீங்கள்.

-க்ருபா

G.MUNUSWAMY said...

Swami,
Anavam,Kanmam matrum Mayai enra mummalamum ozhiya thangal sollum karuthgal sirappaga ulladhu. Annal nizha vazhkkaiyil adhodu vazhndhu avadhipattu kondirukkirom. Meela vazhi illai.
Nandri,
G.Munuswamy,
Chennai Thuraimugam.

heaven said...

வணக்கம் குரு நல்ல வீடியோ நல்ல கருத்து என்ன பார்க்கும் அனைவரும்
(ஹதயோகத்தை-யும் அறிந்துகொள்வார்கள்