Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, January 14, 2010

காசி சுவாசி - பகுதி 7

நம் காலாச்சாரத்தில் இருந்த ரிஷிகள் தங்களின் ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலால் நீர் என்ற இயற்கை பொருளின் அளவற்ற ஆற்றலை உணர்ந்து கொண்டார்கள். அதனால் ஆன்மீகத்துடன் நீரின் பயன்பாட்டை ஆழமாக இணைத்தார்கள்.

கிராமத்தில் இருக்கும் மந்திரிக்கும் முதியவர்கள் மந்திரங்களை தண்ணீரில் கூறி நோய் விரட்டுவது உண்டு. அபிஷேகம் மற்றும் ஆராதனைகளில் நீர் ஒரு முக்கியப் பொருளாக பயன்படுகிறது. மேலும் புனித பயணமாக கோவிலுக்கு செல்லும் பொழுது அதை தீர்த்தாடனம் என்ற சொல்லுடன் நாம் வழங்கி வருகிறோம்.

ஆகம விதியின் அடிப்படையில் இருக்கும் கோவில்களில் தீர்த்த குளம் ஒன்று இருக்கும். கருவறை ஒட்டி அதன் கீழே அகழி போல நீர் நிறைத்து வடிவமைக்கபட்ட கோவில்கள் ஏராளம். கோவில் பூஜை செய்யப்படும் பொழுது கருவறையில் மந்திர ஆற்றல் முழுவதும் உள் வாங்கிய நீரைத்தான் தீர்த்தமாக கொடுக்கிறார்கள். அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் நீர் பயன்பாடு ஒரு வித மத சடங்காக பின்பற்றப்படுகிறது.
திருவண்ணாமலை சிங்க தீர்த்தம்

பஞ்சபூதங்கள் ஆற்றலுடன் ஓவ்வொரு தன்மையில் இயங்குகிறது. நீர் வெளியில் இருக்கும் ஆற்றலை கிரகிக்கக்கூடிய ஒரு பொருளாக பஞ்சபூதத்தில் செயல்படுகிறது. நம் உடல் ஒரு விதமான நாதவடிவில் இருக்கிறது. அதாவது நமக்குள் ஒருவித ஓலி ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த ஒலி தன் ஸ்வரத்தை இழந்து வேறு ஒலிவடிவில் இசைத்தால் நமக்கு உடல்,மனம் மற்றும் வாழ்வியல் பிரச்சனைகள் வரும். இது மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கம்.

ஒரு மனிதனின் நாத வடிவம் தடுமாற்றம் அடையும் பொழுது முழுமையான மந்திர சக்தி பெற்ற ஒருவர் தனது ஒலி ஆற்றலை அவருக்குள் செலுத்தி அவரின் ஒலி உடலை சரி செய்ய முடியும். இந்த விஷயத்தை மிகக்குறைந்த அளவு இசை,பாடல்கள் செய்கிறது. இம்முறையை இசை சிகிச்சை (music therapy) என சிலர் கூறுவார்கள்.

நீரில் ஒலி அதிர்வுகளை கடத்தி, அந்த நீரை ஒருவர் பயன்படுத்துவதால் எளிதில் அந்த அதிர்வுகளை உள்வாங்க முடியும். காரணம் மனித உடல் 60 சதவிகிதம் நீர்ம தன்மை கொண்டது.

சில வருடங்களுக்கு முன் நீர் சுத்திகரிப்பு பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பிரஞ்சு விஞ்ஞானியை சந்தித்தேன். அவர் தான் எனக்கு இமோட்டோவை அறிமுகம் செய்தார். அவர் நீரை மின்சாரம் கொண்டு ஆற்றலை கடத்தி அதில் ஏற்படும் வேதிவினையை ஆய்வு செய்பவர்.

டையனமைசேசன் என்ற முறையில் நீரில் மின்சாரம் செலுத்தி அதை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த 'வாழும் நீர்' (Living Water) என்ற நிலைக்கு மேம்படுத்துகிறார். சாதாரண நீரில் மூலக்கூறுகள் ஆற்றலாக இருப்பதில்லை. அதனால் அவை நமக்கு தாகத்தை தீர்க்க மட்டுமே பயன்படும். ஆனால் டையனமஸ்டு நீர் உடலின் இழந்த சக்தியை மீட்டு, உடல் திசுக்களுக்கு புதிய வளர்ச்சியை கொடுக்கிறது. சாதாரண ஒரு நீரை டையனமைஸ்டு நீராக மாற்றம் செய்ய மின்சாரம் மற்றும் பொருட்செலவும் உண்டு. இந்த ஆய்வுகள் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக இமோட்டோவின் சித்தந்தத்தை பின்பற்றி செய்கிறார்கள்.

அவருடன் உரையாடும் பொழுது இறைவனால் அருளப்பட்ட வேத சாஸ்திர யுக்திகளை அவரிடம் விவரித்தேன். யந்திர, மந்திர யுக்திகளை விளக்கினேன். அவரால் நம்ப முடியவில்லை. தனது நாற்பது ஆண்டுகால ஆய்வை ஒருவர் எந்த அறிவியல் பின்புலமும் இல்லாமல் தன் முன்னால் விவரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...!

சாதாரண நீரை சில மந்திர ஜபத்தால் அவர் எதிர்ப்பார்க்கும் லிவிங் வாட்டர் ஆக்கி காண்பித்தேன். சோதனை சாலையில் பரிசோதித்து விட்டு என்னை மந்திரவாதியை பார்ப்பது போல பார்த்தார். நான் கூறினேன் இது அனைவருக்கும் சாத்தியம். நீங்கள் வெளியே இருக்கும் கருவிகளை நம்புகிறீர்கள். நான் உள்ளே இருக்கும் ஒரு ஆற்றலை நம்புகிறேன் என்றேன்.

மின்சாரம் கொண்டு நீரை டைனமஸ்டு செய்வதற்கும், நீர் டைனமஸ்டு ஆகிவிட்டதா என அறியவும் பல மணிநேரம் ஆய்வுகள் செய்கிறார்கள். ருத்திராட்சத்தின் பயன் கொண்டு ஒரு நீர் ஆற்றல் வாய்ந்ததா என கண்டறியும் முறையை கற்றுக்கொடுத்தேன்.

நீர் தூய்மையை ருத்திராட்சம் கொண்டு ஆய்வு செய்கிறார்.
பின்னால் மஞ்சள் நிறத்தில் தெரிவது, இமோட்டோ நீர் படிக மாதிரி வடிவம்.

அனைத்தையும் கற்ற விஞ்ஞானி கூறியது, “விஞ்ஞானமும் மெய்ஞானமும் வட்டமான ஒரு பாதையில்
எதிர் எதிரே பயணிக்கிறது. என்றாவது ஒரு நாள் சந்தித்தே தீரும். அது இன்று நடந்திருக்கிறது” என்றார்.

துருக்கி நாட்டில் ஒரு ஏரி மாசடைந்து பல வருடங்களாக இருந்திருக்கிறது. எங்கிருந்தோ வந்த சூஃபி ஞானிகள் எழு பேர், அந்த ஏரியை சுற்றி உட்கார்ந்து ஒரு வித ஓசை எழுப்பி இருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை செய்திருக்கிறார்கள். ஒருவார காலத்தில் அந்த ஏரி முழுமையான சுத்தமான நீர் நிறைந்துள்ளது. பிறகு அந்த ஞானியர்களை காணவில்லை. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள இந்த 6 கி.மீ சுற்றளவு கொண்ட ஏரியை சுத்தம் செய்ய அரசாங்கம் என்ன செலவு செய்யும் என நினைத்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. சூஃபிகள் ஒலியால் செய்ததை எதற்கும் ஈடாக காண முடியாது.

கங்கை,யமுனை, கோதாவரி, சரஸ்வதி,நர்மதை, சிந்து, காவேரி,என்ற தீர்த்தங்கள் இந்த பாத்திரத்தில் நிறையட்டும் என ஹோமம் செய்யும் பொழுது புரோகிதர் நீர் நிரைந்த கலசத்தை பார்த்து ஒரு மந்திரம் கூறுவார். இப்பொழுது சொல்லுங்கள் இது மூடநம்பிக்கையா?

[...சுவாசிப்பேன்]

28 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா !

Unknown said...

சுவாமிஜி அவர்களுக்கும் இந்தவலைபதிவை சுவாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

மூட நம்பிக்கை அல்ல - நம்பிக்கைதான் வாழ்க்கையே !

கலச குண்டங்களை வைத்து மந்திரங்கள் சொல்லி உள்ளிருக்கும் நீரினை சக்தி வாய்ந்ததாக மாற்றி - கும்பாபிஷேகம் - அறுபதாம் வயதில் அபிஷேகம் - எனச் செய்வது நம்பிக்கையே -

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஓம்கார்

Umashankar (உமாசங்கர்) said...

வனக்கம் சுவாமிஜி,

!

என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள், சுவாமிஜி.

Guru said...

ஸ்வாமி,

எனக்குள் இருக்கும் சுப்பாண்டிக்கு இந்த தண்ணீர் சிறப்பு பதிவு படித்தவுடன் ஒரு கேள்வி : சூஃபி ஞானிகள் செய்ததைப் போல் நம்ம மந்திரத்த பயன்படுத்தி கூவத்த சுத்த படுத்தினா எவ்ளோ நல்லா இருக்கும்?

ஆயிரத்து 500 கோடி வேணுமாம் அத சுத்த படுத்த.. அத மிச்ச படுத்தினா இன்னும் கொஞ்ச கலர் டிவி,டிவிடி பிளேயர் எல்லாம் இலவசமா கொடுக்க வசதியா இருக்கும்.

இல்ல நம்ம சர்வரோக சாமியாரால் முடியுமான்னு ஜூஸ் எழுத்தாளர கேக்க சொல்லலாமா?



அப்புறம் என் செல்போன் பில் கட்டாமல் வேலை செய்யாமல் இருக்கிறது,பொங்கல் வாழ்த்து கூட ( மன்னிக்கவும்; தமிழ் புததாண்டு) சொல்ல முடியவில்லை. இதற்கு தீர்வு காண ஏதாவது சர்வரோக வழியில் விடை இருக்கிறதா?

சம்பந்தமில்லாம் கேள்வி கேட்ட சுப்பாண்டியை மன்னிக்க வேண்டும்.

என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இப்படிக்கு ,
செல்போன் சுப்பாண்டி மற்றும் குரு

sarul said...

அப்படியானால் சென்னையில் உள்ள மனிதர்களின் மந்திர ஜபத்திற்கும் கூவம் நதியின் தூய்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ? :))

( ஸ்வாமி உங்களின் கருத்தை ஆவலுடன் கிரகிக்கிறேன் எனினும் உள்ளிருக்கும் சுப்பாண்டியின் தொல்லை தாங்கமுடியவில்லை )

Siva Sottallu said...

அருமையான பதிவு ஸ்வாமி, மிக்க நன்றி.

// கோவில் பூஜை செய்யப்படும் பொழுது கருவறையில் மந்திர ஆற்றல் முழுவதும் உள் வாங்கிய நீரைத்தான் தீர்த்தமாக கொடுக்கிறார்கள். //

ஸ்வாமி, நீருக்கு மட்டும் தான் இந்த தன்மை உள்ளத அல்லது நீர்மவடிவில் இருக்கும் பால் போன்றவற்றிக்கும் இந்த சக்தி உள்ளத ஸ்வாமி? ஏன் என்றால் இங்குள்ள கோவில்களில், தீர்த்தங்கள் என்று உதிர்ந்த திராட்சை இட்ட பாலை தான் கொடுக்கின்றனர்.

// நீர் தூய்மையை ருத்திராட்சம் கொண்டு ஆய்வு செய்கிறார். //

ஆய்வின் முடிவை வெற்றி தோல்வி என்று எவ்வாறு நிர்ணயம் செய்கின்றனர் ஸ்வாமி.

கார்மேகராஜா said...

ஐயா!

உங்களுக்கு சுப்பாண்டிகள் அதிகமாக பெருகிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

மற்றபடி பதிவுக்கு NO COMMENTS ;-)

Guru said...

கார்மேகராஜா அவர்களுக்கு,
நம் எல்லோருக்குள்ளும் சுப்பாண்டிகள் இருக்கத் தான் செய்கிறார்கள். சில பேர் வெளிப்படுத்துகின்றன்ர். பலர் செய்வதில்லை.எல்லாம் சமூக மரியாதை சார்ந்த பயம் தான் என்று நினைக்கிறேன்.

Itsdifferent said...

I am sure there are numerous such teachings throughout our literature.
How do we create good documentation of these procedures, educate the masses to follow.
One significant difference that I have seen living in the US for this long, here everything is documented, institutionalized to the core. The ultimate goal any development is to reach to the masses.
Lack of documentation and masses adoption definitely denies the credit that is due to our rich culture.
Simple things as everyday use of Turmeric in our cooking had been scientifically proven to cure so many things, including Alzheimer's disease. But how do we gain credit for those, not necessarily for economic reasons, but atleast as credit to some good work.
The other issue is mixing religion with everyone of these findings. This distances so many naysayers. An example of that is Yogasana. West has adopted these big time, just as a way for simple, healthy living. In our country it is still associated with the religion, so untouchable for so many.

I appreciate Swami Omkar documenting these facts, how do we take it to the masses?

I have seen so many folks exchanging Pongal greetings. Not sure if they understand the significance of Pongal day.
It marks the northward trajectory of Sun. Which means, longer days, start of Spring and end of Winter.
Most of our auspicious days mark some significant event around our surroundings and earth, so it is very important to teach such principles to our younger generations.

கோவி.கண்ணன் said...

//கங்கை,யமுனை, கோதாவரி, சரஸ்வதி,நர்மதை, சிந்து, காவேரி,என்ற தீர்த்தங்கள் இந்த பாத்திரத்தில் நிறையட்டும் என ஹோமம் செய்யும் பொழுது புரோகிதர் நீர் நிரைந்த கலசத்தை பார்த்து ஒரு மந்திரம் கூறுவார். இப்பொழுது சொல்லுங்கள் இது மூடநம்பிக்கையா?//

கலசத்தில் ஊற்றும் நீர் எந்த நீராக இருந்தால் என்ன ? கூவம் நீரைக் குடிக்கும் நீராக மாற்ற முடியுமா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
திரு பிரபு,
திரு சீனா,
திரு உமாசங்கர்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குரு மற்றும் கோவி,


மந்திர ஜபத்தால் தாராளமாக கூவத்தை சுத்திகரிக்கலாம். ஒருவர் பெற்ற மந்திர ஆற்றல் மற்றும் கால அளவு வேறுபடலாம்.

அந்த ஏழு சூஃபிக்கள் நம் ஊருக்கு வந்தால் கூவம் இரண்டு நாளில் சுத்தமாகுமே...

அரசியல் காரணங்களால் கூவத்தை எளிமையாக சுத்திகரிக்க அனுமதி அளிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே.எஸ்,
//அப்படியானால் சென்னையில் உள்ள மனிதர்களின் மந்திர ஜபத்திற்கும் கூவம் நதியின் தூய்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ?//

சில பெண்கள் குழாயடியில் சண்டை போடுவார்கள் பார்த்து/கேட்டதுண்டா?
அவர்கள் பிடிக்கும் தண்ணீரின் தன்மையை நினைத்துப்பாருங்கள்...!

சுப்பாண்டி ஆவது அவ்வளவு சுலபம் அல்ல :)


திரு சிவா,

அனைத்துவகை பிரசாதமும் நன்றே. நீர் மட்டும் அல்ல.

//
ஆய்வின் முடிவை வெற்றி தோல்வி என்று எவ்வாறு நிர்ணயம் செய்கின்றனர் ஸ்வாமி.//

ருத்திராட்சத்தை பயன்படுத்தி தக்க ஆய்வுகள் செய்வது மிகவும் நுட்பமான ஒரு விஷயம். குருவழியில் கற்றால் எளிதில் விளங்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்மேகராஜா,
திரு itsdifferent,

உங்கள் வருகைக்கு நன்றி.

Sivakumar said...

சுவாமி,
ருத்திராட்சம் மூலம் டைனமைஸ்டு நீரை எவ்வாறு கண்டுபிடிப்பது....
ஏனெனில் நீர் என்றால் அது பாசிடிவ் தன்மை கொண்டது என்ற வகையில் வலமாகத் தானே சுழலும்...
மேலும், எனது பாட்டி மந்திரப் பிரயோகம் செய்து தனது எச்சிலை ஒரு துணியில் வைத்து நீளமான வெட்டுக்காயம் பட்ட எனது உள்ளங்காலில் கட்டி விட்டார்கள். ஒரே நாளில் குணம். அந்த இடம் மருத்துவ வசதி கிடைக்கக் கூடிய அளவில் இல்லை. ஆகவே அவ்வாறு செய்ததாக பின்பு விளக்கம் கூறினார்கள்.
என் தந்தையாரும் இவ்வகையான மந்திரப் பிரயோகம்
செய்து பலரின் உடல் வலியின் நீக்கியுள்ளார்கள்.

வால்பையன் said...

நீர் முதன் முதலா எப்படி உருவாச்சு!?

*இயற்கை ராஜி* said...

உள்ளேன் ஸ்வாமிஜி.. ஏழு பகுதி வந்திருச்சா? நான் இன்னும் 4 லயே இருக்கேனே..:‍(

*இயற்கை ராஜி* said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Siva Sottallu said...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஸ்வாமி.

//அனைத்துவகை பிரசாதமும் நன்றே. நீர் மட்டும் அல்ல.//

இதை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் ஸ்வாமி.

நான் கேட்கவந்தது, நமது எண்ணங்கள் நீரில் பதிவதுபோல் பால் போன்ற மற்ற திரவங்களிலும் பதியுமா ஸ்வாமி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவக்குமார்,
டைனமஸ்டு வாட்டர் கண்டறியும் முறை சற்றி விரிவானது. அதை இங்கே பகிர முடியாமைக்கு வருந்துகிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு வால்பையன்,
//நீர் முதன் முதலா எப்படி உருவாச்சு!?//

என் பஹுத் அறிவுக்கு உங்கள் கேள்வி புரியவில்லை.

சகோதரி இயற்கை..
இப்பவாவது வந்தீங்களே.. :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,
//நான் கேட்கவந்தது, நமது எண்ணங்கள் நீரில் பதிவதுபோல் பால் போன்ற மற்ற திரவங்களிலும் பதியுமா ஸ்வாமி?//

நீரில் வேறு பொருட்கள் கலந்தால், நீரில் பதிவது போல் பதியாது. தீர்த்தத்தில் கலந்த பொருளின் தன்மையை பொருத்து இது வேறுபடலாம்.

Siva Sottallu said...

புரிந்துகொண்டேன் ஸ்வாமி, மிக்க நன்றி.

sarul said...

எனது மனைவி சமைக்கும் போது திட்டிக்கொண்டே சமைக்கும் பழக்கமுடையவர்(என்னைத்தான்) , அவர்பரிமாறும் உணவில் அந்த வார்த்தைப்பதிவுகள் இருக்குமா,அப்படியானால் அதிலிருந்து எப்படித் தப்பித்துக்கொள்வது ?

பி.கு.. சொந்தமாக சமைக்கவும் தெரியாது

சிவகாசி ராம்குமார் said...

//ருத்திராட்சத்தின் பயன் கொண்டு ஒரு நீர் ஆற்றல் வாய்ந்ததா என கண்டறியும் முறையை கற்றுக்கொடுத்தேன்//

எப்படி எனக்கும் சொல்லி கொடுங்கள்

Anonymous said...

ஆஹா என்ன அருமையான பகுத்தறிவு... அடுத்தமுறை நோபல்பரிசு உங்களுக்குத்தான்...

Anonymous said...

நுட்பமான விளக்கங்கள்.இந்த வால்பையன் தொல்ல தாங்கமுடியலியே!

வால்பையன் said...

// ஆகமக்கடல் said...

நுட்பமான விளக்கங்கள்.இந்த வால்பையன் தொல்ல தாங்கமுடியலியே!//


கேள்வி கேட்பதே தொல்லையா!?
விளங்கும்!