Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 30, 2010

நச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...!

கவிதை எழுதி இலக்கியவாதி ஆகிவிட்டாலே பல எதிர்வினை வரும் என்பது தாமதமாகவே புரிந்தது.நானும் எதிர்வினையாக வந்த கடிதங்களை பதிவேற்றம் செய்து எனக்கு இலக்கிய அடையாளம் கொடுத்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கவிதையை
பதிவேற்றம் செய்து சில மணி நேரத்தில் பல தனி மடல்கள், மைனஸ் ஓட்டுக்கள் மற்றும் பின்னூட்டங்கள். சிலர் மிகவும் கடுமையாக எழுதி இதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடுத்துவிட்டு என கூறினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மைனஸ் ஓட்டு போட்டதில் நானும் ஒருவன் என்பதை சுட்டிகாட்டி எனது பின்னவீனத்துவ பாணியை இங்கே பதிவு செய்கிறேன். :)

மேல் எழுந்த வாரியாக எனது வரிகளை படித்துவிட்டு கூச்சலிடுவதும், நானும் நற்குடி பதிவரும் ஒன்று என்பது போலவும் சிலர் குறிப்பிட்டார்கள்.


முதலில் என் கவிதையின் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். நான் அனைத்து மதத்தையும் சுட்டி காட்டியே எழுதி இருக்கிறேன். ஆனால் படித்து அதற்கு கருத்து சொன்னவர்கள், தங்கள் மத அடையாளத்தை மறைந்துக்கொண்டு பிற மதத்திற்கு பரிந்து பேசியது வேடிக்கை. முதலில் உங்களிடம் இருந்து பரிவுக்காட்ட துவங்குங்கள்..!

மதம் என்பது ஒருவித பள்ளிக்கூடம். கல்வி பெற்று சமூகத்தில் வாழ பழகும் ஒருவருக்கு பள்ளியில் படித்த அடிப்படை கல்வி உதவும். அப்படிபட்ட பள்ளிக்கல்வியே மதம். அதனால் மதம் என்பது தேவை இல்லை என்றோ, தவறு என்றோ கூறமாட்டேன்.

நான் ஒருவன் பள்ளிபடிப்பை படித்துவிட்டேன் என்பதற்காக அனைத்து பள்ளிகளையும் தகர்த்து விடுங்கள் என கூறுவது முட்டாள் தனம்.

பள்ளிக்கல்வியில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையாக மதங்களும் வேறுபட்டு இருக்கிறது. அடிப்படை போதித்தவுடன் அதைவிடுத்து மேலே வரவேண்டுமே தவிர அதிலேயே தங்கே பள்ளி கல்வி மட்டுமே பயிலுவேன் கல்லுரிக்கு செல்ல மாட்டேன் என கூறுவது வளர்ச்சிக்கு அழகு அல்ல.

பிறந்தவுடன் குழந்தையாக சுய சிந்தனை இல்லாத நிலையில் நமக்கு மதம் திணிக்கபட்டது. நமக்கு பள்ளி கல்வி எப்படி திணிக்கபட்டதோ அதுபோலவே. குழந்தையிடம் சென்று மதங்களை கடந்துவா என விளக்க முடியாது, ஆனால் வளர்ந்தபிறகு மதங்களை பிடித்திருக்கும் குழந்தைகளுக்காகவே நான் அவ்வாறு எழுதி அதில் இருக்கும் நிலையை பற்றி மேலே வா என கூறினேன்.


பிரபல பதிவர் எனக்கு எழுதிய மடலின் பகுதி...

////இன்றைய உங்களின் கடைசி கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் என்றாலே ஒரு சராசரியைப் போல சுன்னத் மட்டுமே உங்களுக்கு நினைவுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது. அவன் குல்லா அணிவித்துக் கொண்டிருந்தான் என்பதாக எழுதியிருந்தால் நாகரிகமாக

இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.////

இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டுள்ளேன்- அது தெரியவில்லையா ?.

யாசகம் எடுப்பது ஒரு மனிதனுக்கு உளவியலில் பெரிய மாற்றத்தை உண்டு
செய்யும். ஒரு மனிதன் தன் அடையாளம், அகந்தை மற்றும் சுயகவுரவத்தை விட்டு ஒரு வீட்டின் முன் நின்று பிச்சை எடுத்தால் 90 சதவீதம் அவனுள் ஒரு தூய்மை வந்துவிடும். ஆனால் நடைமுறையில் உபநயணம் செய்யும் பொழுது தங்க வெள்ளி பூணலை போட்டு, மாமா-சித்தப்பாவிடம் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்.அதனால் யாசகம் கேட்பதால் ஏற்படும் தன்மை இல்லாமல் போகிறது. மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சடங்காகி முடிவில் சவமாகிறது. உண்மையாக பிச்சை எடுத்திருந்தால் தேவநாதன் உண்மையாக ’தேவ’நாதனாகி இருக்ககூடும்.

மதங்கள் மனிதனின் உடலில் புற அடையாளங்களை விதைக்கிறது. அதன் பயன்பாடு முடிந்தவுடன் அவன் அதை விடுக்க மறுக்கிறான். அதுவே எனது கவிதையின் கருத்து. அந்த கவிதையில் ’கார்’ என்ற வாகனத்துக்கு பதில் ’ஓம்கார்’ என நிரப்பி ஒரு மனிதனாக பாருங்கள். மதங்கள் சிலவற்றை திணிக்கிறது என கூறி இருக்கிறேன்.சுன்னத் என்பது இஸ்லாமிய அடைப்படை மத கோட்பாட்டில் ஒரு பகுதி, அது அவர்களுக்கு அடையாளமாகவும், புனிதமாகவும், மருத்துவ நோக்கத்துடனும் செய்யப்படுகிறது. அவற்றை நம் கண்ணோட்டத்தில் நாகரீகம் என தரம்தாழ்த்தி பார்க்க கூடாது.

கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் கைக்குட்டையை இணைத்து அனுப்புவார்கள். அதுபோன்றது தான் இந்த புற அடையாளங்கள். ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு கல்லூரி செல்லும் பொழுது உங்கள் மார்ப்பில் கைக்குட்டையும், வலது தாடையில் திருஷ்டி பொட்டும் இருந்தால்? நினைக்கவே நடுக்குகிறதே... :)

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நமக்கு நடைவண்டி கொடுத்து நடக்க பழக்கினார்கள். அதில் பழகிய பிறகு திருமணம் செய்யும் காலம் வந்தபிறகும் மணவரையில் மணப்பெண்ணுக்கு அருகே நடைவண்டி இருந்தால்தான் திருமணம் செய்வேன் என கூறுவது வேடிக்கையானது அல்லவா? அதுபோன்றதே இது. முடிவில் மணமகனின் புத்திசுவாதினத்தில் சந்தேகம் ஏற்படலாம்.

மதங்களை பற்றி கூறும் பொழுது நமக்கு கொதிப்பு வருகிறதே காரணம் அதில் நம் அஹங்காரத்துடன் ஐக்கியமாக்கிக்கொண்டோம். உங்கள் அஹங்காரத்தை விடுக்க மதத்தை கொடுத்தால், மதமே அஹங்காரமாகி நிற்கிறது. மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும்.

கடைசியில் ஒரு கவிதை சின்ன விளக்கத்துடன்....என் மார்க்கம்
------------------

உணர்ந்துகொள்ள ஜெய மார்க்கதை தேர்ந்தெடுத்தேன்
ராஜ மார்க்கத்தால் கவரப்பட்டேன்.
சன்-மார்க்கத்தில் நுழையும் முன் மின்சாரம் தடைபட்டது...!

விளக்கம் : மார்க்கம் என்றால் சானல் என்று அர்த்தம்.

20 கருத்துக்கள்:

சங்கர் said...

மிகப் பெரிய ரவுடியாகி ஜீப்பில் ஏறிய சுவாமி ஓம்கார், வாழ்க வாழ்க :)

அடுத்த சத்சங்கம் எப்போ :))

priyamudanprabu said...

கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் கைக்குட்டையை இணைத்து அனுப்புவார்கள். அதுபோன்றது தான் இந்த புற அடையாளங்கள். ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு கல்லூரி செல்லும் பொழுது உங்கள் மார்ப்பில் கைக்குட்டையும், வலது தாடையில் திருஷ்டி பொட்டும் இருந்தால்? நினைக்கவே நடுக்குகிறதே... :)

///


சரிதான்

priyamudanprabu said...

கோவி.கண்ணன் said...

பல கண்டனங்கள் வரப் போகுது !
:)////////
///////

ஹா ஹா

sowri said...

It will be difficult to understand true spiritual person. People prefer to be religious, which support ego, rather liberation ஸ்வாமி/சாமி என்றலே பிரச்னை தமிழ்நாட்டுலே.
காசிகே போய்டலாம் ஸ்வாமி.

Vidhoosh said...

உங்களுக்கு விஜய மார்க்கம்தான் சிறந்தது என்று தோன்றுகிறது.

மற்றபடி நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்களையும், கவிதைகளையும் படித்தேன்.

இதை எல்லாம் விட்டு விட்டு நீங்கள் ஏன் சந்தோக்ய உபநிஷத்தை தமிழில் எழுதக் கூடாது?

-வித்யா

Unknown said...

சபாஷ். "ஸ்வாமி ஓம்கார் said... உங்கள் அஹங்காரத்தை விடுக்க மதத்தை கொடுத்தால், மதமே அஹங்காரமாகி நிற்கிறது. மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும்."
வேண்டாம் வெளியே வரட்டும்.

எறும்பு said...

Translation..

//உங்களுக்கு விஜய மார்க்கம்தான் சிறந்தது என்று தோன்றுகிறது. //

விஜய் படத்துக்கு விமர்சனம் எழுதுங்க

//மற்றபடி நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்களையும், கவிதைகளையும் படித்தேன்.//

படிக்க மட்டும்தான் செய்தேன்.

//இதை எல்லாம் விட்டு விட்டு நீங்கள் ஏன் சந்தோக்ய உபநிஷத்தை தமிழில் எழுதக் கூடாது? //

எனக்கு சந்தேகமா இருக்கு சாமி. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க..

:))

Paleo God said...

காசிக்கு போனால் எதையாவது விட்டு விட்டு வரவேண்டும் என்று சொல்வார்களே நீங்கள் கவிதையை விட்டு விட்டு வரப்போகிறீர்களா ஸ்வாமி..:))

Athisha said...

//
இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டுள்ளேன்- அது தெரியவில்லையா ?.//

இந்துக்கள் அனைவரும் பூணூல் அணிவதில்லை. அது பொதுவானதும் அல்ல.

sarul said...

ரொம்ப விவகாரமான காராயிருக்கிறது ,கார் உணர்வற்றிருக்கவில்லை ,மற்றவர்களை விழிப்படைய வைக்கிறது.

kindergarten படிக்காத ஒருவன் பல்கலைக்கழகம் செல்லமுடியாதா

Mahesh said...

இந்த விளக்கம் முதலில் இடுகையால வந்திருந்தால் இவ்வளவு தாக்கம் இருந்திருக்காது.... நச்(சு) கவிதைகள் படித்தபோதே நினைத்தேன்... இது ஒரு திரை தூக்கி (curtain raiser) என்று.

நடைவண்டி உவமை அருமை.

ATOMYOGI said...

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.... ஸ்ஸ்ப்ப்பாபா... முடியல...

Subbaraman said...

Its all because of conditioning the mind. Only way is to remove that and acting with conscience. Enna solreenga, Swami?

Siva Sottallu said...

// மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும். //

ஸ்வாமி, உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது என்பார்களே.... ஒருநாள் வெளிவரும் என்று நம்புவோமாக...

Sabarinathan Arthanari said...

ஆத்மாகிய பிரம்மத்திற்கு ஸ்வாமி, ரவுடி, கவிஞர் போன்றவை சட்டைகளே.

பிரம்மமே எஞ்சி நிற்கும்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நாங்களும் ரவுடிதான் எங்க மதத்தப்பத்தியும் எழுதுங்க ,,,,,

எம்.எம்.அப்துல்லா said...

நான் இங்க என்ன சொன்னாலும் பிரச்சனையாயிருமே :))))

ஷண்முகப்ரியன் said...

மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சடங்காகி முடிவில் சவமாகிறது.//

மிகச் சரியே,ஸ்வாமிஜி.இந்த சவ ஊர்வலங்களே தினமும் நாடெங்கும் நடக்கிறது.

கோவி.கண்ணன் said...

கெட்ட பின் சூரியன், பட்ட பின் ஞானம் என்பார்களே அதுவா இந்த பதிவு ?

:)

Sanjai said...

தாமதமாக இடும் பின்னூட்டம் -

ஸ்டார் மார்கத்துக்கு
அல்லது
சங்கர மார்கத்துக்கு
முயற்சி செய்யலாமே :)