Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, September 24, 2009

பழைய பஞ்சாங்கம் 24 - 09 - 2009

நான் தமிழக பிரபலமாக்கும்

பத்திரிகையில் வந்த கற்பனையான துணுக்கு ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்குகாக இதோ..

இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலின் மகன் ஒரு மனநல மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கே மனநலம் பாதிக்கபட்டிருந்த ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தவர், சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த ஒரு நோயாளியை பார்த்தார். நோயாளி இவரிடம் நீ யார் என கேட்க..நான் சர்ச்சிலின் மகன் என்றார். அந்த நோயாளி இவரிடம் நெருங்கி வந்து ரகசியமாக, “விவரம் தெரியாத ஆளா இருக்கியே... நான் தான் சர்ச்சில்னு சொன்னதுக்கு என்னை இங்க அடைச்சு வச்சுருக்காங்க. சத்தமா சொல்லாதே.உன்னையும் அடைச்சு வைச்சுருவானுங்க” என்றார்.

இதற்கும் கீழ்கண்ட துணுக்குக்கும் சம்பந்தம் இல்லை... :)

நான் ரிஷிகேஷில் ஒரு ஆசிரமத்தில் அமர்ந்திருந்தேன். அப்பகுதியில் வசிக்கும் தோட்டவேலை செய்யும் ஒரு முதியவர் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தார். நான் மரத்தடியில் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்தவர், “எங்கிருந்து வரீங்க” என்றார். நான் தமிழ் நாட்டிலிருந்து என்றேன். உடனே அவர் , “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. இங்க வரவங்களுக்கு இதே பொழப்பா போச்சு” என்றார்.

சினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது. எதை சொல்லறேனு தெரிஞ்சுதோ? :)
------------------------------------------------------------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி...

சென்ற வாரத்தில் ஒருநாள் நான் வீர சைவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். ஆமாம் மாட்டிக்கொண்டேன் என்றே சொல்லவேண்டும். என்னை சந்திக்க வந்த அவர். அவரின் சைவ கருத்துக்களை திணிக்க துவங்கினார். அவர் தான் பக்தியின் இலக்கணம் என்றும் சிவன் தென்னகத்து கடவுள் என்றும் வரிசையாக உரிமைகொண்டாடினார். அதனால் தான் தென்னாடுடைய சிவன் என அனைவரும் அழைப்பதாக சொன்னார்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான்.. கைலாயத்தில் சிவன் இருக்கிறார் என்கிறார்கள். கைலாயம் தென்பகுதியில் இல்லை. தென்னாட்டில் பிறந்து வட நாடு சென்று விட்டாரா ? தென்னாடு என்றவுடன் ஏன் ஐயா தமிழகத்தை குறிப்பிடுவதாக கருதுகிறீர்கள்?

ஸ்ரீ லங்காவும் தென்னாடுதான். தமிழகமாவது மாநிலம்.
இலங்கைதான் நாடு. எனவே தென்னாடு என ஏன் இலங்கையை அவர்கள் குறித்திருக்க கூடாது என கேட்டேன்.நீங்க என்கிட்ட விதண்டாவாதம் பேசரீங்க என்றார். (இவர் இன்னும் வலைபதிவு எழுத ஆரம்பிக்கலை போல. அரம்பிச்சா எது விதண்டாவாதம்னு தெரியும் : ) ).

கோபாவேசத்துடன்....... நான் திருமறை பாடினால் சிவனே எழுந்தருளுவார் என்றார். அதுவரை பொறுமையாக இருந்த நான், திருமறை பாடாமலேயே நான் அழைத்தால் சிவன் வருவார் என்றேன்.. எப்படி என்பது போல என்னை பார்த்தார் அவர்..

“டேய் சிவா இங்க வா என்றேன்”... நான் வளர்க்கும் சிவா என்னிடம் வந்து வாலை ஆட்டியவாரே அவரை பார்த்து குலைத்தான்.

சிவனுக்கு தெரிந்திருக்கிறது யாரை பார்த்து குலைக்கவேண்டும் என்று..!
என்னுடன் இருக்கும் சிவாவும் லீலாவும்

---------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை கலைஞர்

ஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு கட்டத்தில் அந்த கலையானது

ஒருவித இறுக்கத்தை தழுவி அழியும். நம்ம ஊர் கர்நாடக சங்கீத மேதைகள் பலர் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிக மிக குறைவு எனலாம். தாங்கள் கலையை காக்க வந்த பிதாமகன்கள் என்ற தோரணையிலேயே இருப்பார்கள்.

விதிவிலக்குகள் எப்பொழுதும் நம்மிடம் உண்டு அல்லவா. அப்படிபட்டவர் திரு.நெய்வேலி சந்தானகோபாலன். தமிழகத்தில் கவனிக்கபடாத கலைஞன் என சொல்லலாம். அருமையான சங்கீத ஞானமும் குரள் வளமும் கொண்டவர். பலருக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து கர்நாடக சங்கீத உலகில் பிராசிக்க செய்பவர். தொலைக்காட்சியில் சங்கீதம் சொல்லித்தரும் இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.திரு செம்மங்குடி மற்றும் திரு.பாலமுரளி கிருஷ்ணாவிற்கு பிறகு சில ராகங்களை நுணுக்கமாக கையாளக்கூடியவர். இவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது.

ஒரு உதாரணம் இதோ... ஒரு பேட்டியில் பேட்டி எடுப்பவரிடம் சந்தானகோபாலன் கேட்டார். பைரவி ராகம் யாரால் உருவாக்கபட்டது தெரியுமா? சிறிது இடைவெளிவிட்டு அவரே சொன்னார்..

By Ravi.

இவரை பற்றி முன்பின் தெரியாதவர்களுக்கு ஒரு டைமிங் பாடல் அவர் குரலில் இங்கே கேட்கவும் “பாடல்”

(உபரி செய்தியாக இந்த பாடலை எழுதியவர் யார் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். ஸ்ரீசக்ர புரிக்கும் பாடலாசிரியருக்கும் ஒரு தொடர்பு உண்டு..!)

திரு.சந்தானகோபாலன் வலைப்பூ எழுதுகிறார். அதன் முகவரி இதோ http://guruneyveli.blogspot.com/
-----------------------------------------------------------------------------------------

நான் நீ என்றால்....


முக்கியமாக ஒரு ஆவணத்தை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் புகைப்படம் ஒட்டுவதற்கு பசை தேவைப்பட்டது. எங்கு தேடியும் ஒட்டுவதற்கு பசை கிடைக்கவில்லை. சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.

முடியல...

24 கருத்துக்கள்:

Unknown said...

உண்மையாகவே முடியலை சாமி !

வடுவூர் குமார் said...

சிவா - மலைய பார்க்கிறார்.
லீலா- தரையை பார்க்கிறார்.இது தான் சிவலீலாவா?

கோவி.கண்ணன் said...

உங்க சிவாவும் சிவப்பு நிறம் தான் !
:)

கோவி.கண்ணன் said...

//வடுவூர் குமார் said...

சிவா - மலைய பார்க்கிறார்.
லீலா- தரையை பார்க்கிறார்.இது தான் சிவலீலாவா?//

:) என்னமோ சொல்ல வாய் வருது. ஸ்வாமி பதிவு, அதுவும் இப்ப மார்கழி மாதமும் இல்லை.

SRI DHARAN said...

ஹா! ஹா! ஹா! தங்கள் மாணவர் சுப்பாண்டி ஆளும் கட்சியை சேர்ந்தவரோ? ஸ்வாமிஜி

குசும்பன் said...

பசை கிடைக்கவில்லை. சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.

முடியல...//


முடியல முடியல முடியல!

குசும்பன் said...

//, “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. //

அவ்வ்வ்வ் அவ்வளோ வயசா ஆயிட்டு உங்களுக்கு:) நீங்க யூத்து:)

yrskbalu said...

சினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது.

timing comment.

i expecting kovikannan may react or comment this line.

எம்.எம்.அப்துல்லா said...

// Sridharan ( A ) Sathishkumar A said...
ஹா! ஹா! ஹா! தங்கள் மாணவர் சுப்பாண்டி ஆளும் கட்சியை சேர்ந்தவரோ? ஸ்வாமிஜி

//

சாமியும் ஆளுங்கட்சிதான்.எப்படி தெரியுமா??

“நகைச்சுவை கலைஞர்

ஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும்” அப்பிடின்னு நம்ப முதல்வரைப் பாராட்டி எழுதி இருக்காரு பாருங்க.

(ஏதோ நம்மளால முடுஞ்சது)

:))

எம்.எம்.அப்துல்லா said...

//நம்ம ஊர் கர்நாடக சங்கீத மேதைகள் பலர் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிக மிக குறைவு எனலாம். தாங்கள் கலையை காக்க வந்த பிதாமகன்கள் என்ற தோரணையிலேயே இருப்பார்கள்.

//

நீங்க இன்னும் அப்துல்லா பாகவதரை மீட்பண்ணலையில :)

snkm said...

நகைச்சுவையோடு விஷயமும் இருந்தது, படித்து சிரித்தோம்!

ஷண்முகப்ரியன் said...

உங்கள் சிபாரிச்ன் பேரில் அந்தக் கர்நாடகப் பாடலைக் கேட்டேன்,ஸ்வாமிஜி.
உங்கள் ரசனை புரிந்தது.உங்களுடைய எத்தனையோ ரகசியங்களில் இதையும் ஒன்றாக வைத்திருக்கலாம்,ஸ்வாமிஜி.!!

புருனோ Bruno said...

//முடியல...//

:) :) :)

Siva Sottallu said...

// சினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது. எதை சொல்லறேனு தெரிஞ்சுதோ? :) //

தெரியல...

// நாம்'னு சொல்லுங்க ஒட்டும்//

முடியல...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வாய்ப்பாடி குமார்,

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு வடுவூர் குமார்,

அவர்கள் எங்கையும் பார்க்கவில்லை. நான் புகைப்படம் எடுப்பதை பார்த்து முகத்தை திருப்பி கொண்டார்கள் :)

திரு கோவிக்கண்ணன்,
//:) என்னமோ சொல்ல வாய் வருது. ஸ்வாமி பதிவு, அதுவும் இப்ப மார்கழி மாதமும் இல்லை.//

நீங்க சொல்லவந்தது என்ன என்றே சொல்லி இருக்கலாம். சென்ற மார்கழிமாதத்தின் விளைவே இவர்கள் இருவர் பிறக்க காரணமாக இருந்தது.

நிகழ்காலத்தில்... said...

எம்.எம்.அப்துல்லா said...

// Sridharan ( A ) Sathishkumar A said...
ஹா! ஹா! ஹா! தங்கள் மாணவர் சுப்பாண்டி ஆளும் கட்சியை சேர்ந்தவரோ? ஸ்வாமிஜி

//

சாமியும் ஆளுங்கட்சிதான்.எப்படி தெரியுமா??

“நகைச்சுவை கலைஞர்

ஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும்” அப்பிடின்னு நம்ப முதல்வரைப் பாராட்டி எழுதி இருக்காரு பாருங்க.

(ஏதோ நம்மளால முடுஞ்சது)\\

\\சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.\\

இதையும் சாட்சியா சேர்த்துக்குங்க :))

Mahesh said...

நீங்களும் பிரபலமாயிடீங்க.... ஜீப்புல ஏறியாச்சு....

"யாரோ இவர் யாரோ" அருணாச்சலக் கவிராயர்....

நெய்வேலியோட இன்னொரு கிண்டல்:
"என்ன கத்துக்கறா?"
"இப்பத்தான் சா பா சா... இனிமேத்தான்"
"ஆமாமா... சா பாசாகணும். அப்பறந்தான் மத்தது.."

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதரன்,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு குசும்பன்,
உங்க பாஸ் இங்கதான் என்கூட இருக்கார் :)

திரு yrskbalu,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

//
(ஏதோ நம்மளால முடுஞ்சது)
//

ரொம்ப நாளா பிளானோ?
:)

//நீங்க இன்னும் அப்துல்லா பாகவதரை மீட்பண்ணலையில :)//

பாகவதர் டேட்ஸ் இன்னும் கொடுக்கலை. கொடுத்தா அவருக்கு இங்கே ஒரு தேங்காமூடி கச்சேரி வெச்சுருக்கேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு snkm,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

திரு ஷண்முகப்ரியன்,
//உங்களுடைய எத்தனையோ ரகசியங்களில் இதையும் ஒன்றாக வைத்திருக்கலாம்,ஸ்வாமிஜி.!!//

ரகசியம் எல்லாம் இல்லை. நான் ரசித்தவற்றை பிறருக்கு அறிமுகப்படுத்தும் ரசிகன்.

யாம் பெற்ற இன்பம் என்ற திருமூலர் பரம்பரையாயிற்றே.. உங்கள் ரசனை என்னுடன் ஒத்திருந்தது கண்டு மகிழ்ச்சி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு சிவா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கும் பத்தவைத்ததற்கும் நன்றி :)

திரு மகேஷ்,

நீங்க ஒரு குட்டி நெய்வேலியா இருப்பீங்க போலிருக்கே...

ஆமாம் பாடலாசிரியர் 'அருணாச்சல' கவிராயர். அவர் இயற்றிய பாடல்கள் பல கர்நாடகசங்கீத உலகில் பாடப்படுகிறது. நீங்கதான் சரியா (மட்டும்தான்) சொல்லி இருக்கீங்க..

நான் said...

ஈஸ்வரா உனது அடியாரை பழித்த இந்த ஸ்வாமியை என்ன செய்யலாம்?

சிவனே போற்றி

வெற்றி-[க்]-கதிரவன் said...

//குசும்பன் said...
//, “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. //

அவ்வ்வ்வ் அவ்வளோ வயசா ஆயிட்டு உங்களுக்கு:) நீங்க யூத்து:)
//

aamaam 101 vayasuthaan aacchi