Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, September 7, 2009

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

டிஸ்கோ லோகுவின் கடைக்கு வந்தான் மெண்டல் பாஸ்கர்.

“என்னடா காலையிலேயே வந்துட்டே...” இது டிஸ்கோ லோகு.

இருங்கள்...இவனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? டிஸ்கோ லோகு. என்றவுடன் தொப்பியில் ஒரு கையும் கால்சட்டையின் ஜிப்பில் ஒரு கையும் வைத்து மூன் வாக் போவான் என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு அதிகப்பிரசங்கி...! நகரின் மையத்தில் மணவறை அலங்காரம், சீரியல் லைட்டிங் செய்யும் கடைவைத்திருப்பவன். அதனால் இவன் பெயர் 'டிஸ்கோ' லோகு.

மெண்டல் பாஸ்கர் இவனின் உற்ற சகா. மெண்டல் பாஸ்கர் என்றவுடன் ஒரு அரை லூஸை நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களுக்கு நூறு மார்க். அவன் அப்படித்தான். திடீரென உணர்ச்சிவசப்படுவான் ஏன் எதுக்கு என அவனுக்கே தெரியாது.

இருவருக்கும் முழுநேரத்தொழில் பக்தியை பரப்புவது. உபதொழில் டிஸ்கோ டெக்கரேஷன்.

காலையில் டீ குடித்துவிட்டு பைக்கில் நகரை உலா வருவார்கள். காரணம் என்ன தெரியுமா? எல்லாம் ஆன்மீக தேடல்தான். நகரில் புதிதாக யாராவது ஆன்மீகவாதி வருவதாக போஸ்டர் பேனர் இருந்தால் அதை பார்த்து குறித்துகொள்ளுவார்கள். பிறகு அவரிடம் சென்று ஆசி பெறுவார்கள். அல்லது யோக பயிற்சி கற்றுக்கொள்வார்கள். தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும்


ஆன்மீகவாதியின் மகிமைகளை விளக்குவார்கள். ஆன்மீகவாதியின் படத்தை வைத்து பூஜித்து தினமும் பக்தி மணம் கமழ பஜன் செய்வார்கள். இது எல்லாம் அடுத்த ஆன்மீகவாதி பற்றிய போஸ்டர் ஒட்டும்வரை நடக்கும்.

புதிய ஆன்மீகவாதியை பின்பற்ற துவங்கியதும் பழைய ஆட்களை சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்வது இவர்களின் வாடிக்கை. இல்லை என்றால் இவர்களின் நண்பர்கள் புதியவரை பின்பற்றமாட்டார்களே?

தனது இருதயம் கோளாறு , ஒரு ஆன்மீகவாதி சொஸ்தபடுத்தியதாகவும் லோகு அடிக்கடி வெளியே சொல்லுவான். உண்மையின் அவனுக்கு ஒரு கேடும் இல்லை. இப்படி சொன்னால் தானே தான் வழிபடும் ஆன்மீகவாதியை பிறர் மதிப்பார்கள்?

மெண்டல் பாஸ்கர் இதற்கு ஒரு படிமேல். ஒரு ஆன்மீகவாதியை பார்க்க பேருந்து ஏறினானாம், டிரைவர் சீட்டில் அந்த ஆன்மீகவாதியே உட்கார்ந்து 'வாடா என் மகனே' என அழைத்திருக்கிறார். உடனே அவன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, உங்களை காண கிளம்பினேன் நீங்களே இங்க இருக்கீங்களே என கூறி பேருந்திலிருந்து இறங்கி திரும்பி ஊருக்கு வந்துவிட்டான். வரும்பொழுது மறக்காமல் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆசிரமத்திற்கு போன் செய்து ஆன்மீக குரு அங்கேயும் இருக்கிறாரா என கேட்டுகொண்டான். இரண்டு இடத்தில் காட்சி கொடுத்தால் தானே அதிசயம்?

இப்படியே இருவரும் செய்வதால் டிஸ்கோ லோகுவும், மெண்டல் பாஸ்கரும் நாட்டாமையின் தீர்ப்பு இல்லாமலே ஊரில் ஒதுக்கிவைக்கபட்டனர். ஆனால் இருவரும் தாங்கள் ஆன்மீக முன்னேற்றத்தால் மக்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதாக எண்ணிக்கொண்டார்கள்.

ஆன்மீக பெருவெள்ளத்தில் இப்படி அவர்கள் மூழ்கி திளைக்கும் ஒரு காலை நேரத்தில் தான் மெண்டல் பாஸ்கர் , லோகுவின் கடைக்குவந்தான்...

“ஒன்னும் இல்லைடா மச்சான், இன்னைக்கு காலையில நம்ம வீட்டு பக்கம் ஒரு பேனர் பார்த்தேன். ஒரு ஸ்வாமிஜீ நம்ம ஊருக்கு வரார். அவரை சந்திச்சாலே வாழ்க்கையில் பல அதிசயம் நடக்குதாம். கேட்ட வரத்தை கொடுப்பாராம்...”

“போடா லூஸு... இதை எல்லாம் நம்புவாங்களா?”.. என்றான் டிஸ்கோ லோகு.

லோகு இப்படித்தான் முதலில் நம்பமாட்டான், குதர்க்கமாக பேசுவான். நம்பிவிட்டான் என்றால், அதை அவனே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள மாட்டான். அவன் பின்பற்றும் சாமியார் ஒருவரை இன்னும் பரோலில் சந்தித்துவருகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“லோகு நம்புடா, இப்படி அவநம்பிக்கையா இருந்து நல்ல சான்ஸ்சை மிஸ் பண்ணிடாத.”

”டேய் பாஸ்கி, கேட்டது எல்லாம் கிடைச்சா மனுஷனுக்கு ஆணவம் வந்துடும்னு நீ படிச்சது இல்லையா?”

”அதெல்லாம் ரொம்ப பழைய தத்துவம்டா... இது புதுசு கண்ணா புதுசு. பாரதியாரே வரம் கேட்டுருக்கார் தெரியுமா?”

”அப்படியா? என்னடா வரம் கேட்டார்” என்றான் டிஸ்கோ லோகு.

பாரதியார் பாடல்கள் புத்தகத்தை எடுத்து உரக்க படிக்கதுவங்கினான் மெண்டல் பஸ்கர்.


நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலி என்னியல்பு அறியாயோ?

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

“டேய் பாஸ்கி ...நிறுத்து..... ” இடைமறித்தான் லோகு.

“இது ஒரு சினிமாவில வரும் வசனம். கமல் பேசுவார். யாரை ஏமாத்த பார்க்கற?”

“கஷ்டம்டா லோகு, இது பாரதியார் பாடல். இதில் இருக்கிறதை தாண்டா அவர் பேசினார்...”

”சரி மேல படி....”


நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!

பழைய சரித்திர படத்தில் வரும் வசனத்தை போல ஏற்ற இறக்கத்துடன் படித்து முடித்தான் மெண்டல் பாஸ்கர்.

“கேட்டியாடா லோகு பாரதியார் என்ன எல்லாம் கேட்டர்னு...? நாமும் அந்த ஸ்வாமிஜீ கிட்ட கேட்பமா?”

“பாரதியார் கேட்டது இருக்கட்டும். காளி தேவி அவருக்கு இதெல்லாம் கொடுத்தாளா?”

“லோகு நீ வர வர நாத்திகன் மாதிரி பேசர...”

“பாஸ்கி காளிகிட்ட இவ்வளவு அவர் கெஞ்சி, மிரட்டி கேட்டே கிடைக்கல, இந்த ஸ்வாமி கிட்ட கேட்ட கிடைக்குமா?”

“இவர் சாதாரண ஸ்வாமிஜீ இல்லை”

“பின்ன? குருவா?”

“இல்லை”

“இறைவனின் தூதரா?”

“இல்லை”

“பின்ன யாரு. சொல்லித்தொலை”

“அவரே கடவுள் தாண்டா”

“..........................................”
டிஸ்கோ லோகு ஒன்றும் பேசாமல் மெண்டல் பாஸ்கரை பார்த்தான்.


”பாரதியார் ரொம்ப காலம் முன்னாடி வாழ்ந்துட்டார். இப்போ வாழ்ந்திருந்தா ஸ்வாமிஜீயின் நிகழ்ச்சிக்கு வந்து இந்த பாட்டை பாடிருந்தா அவருக்கு எல்லாம் கிடைச்சுருக்கும்”

“அப்படிங்கற?.. சரி நாம போலாம்.”

--------------------------------------------------------------
டுத்த நாள் நகரின் ஒதுக்குபுறமாக இருந்த அந்த பொருட்காட்சி அரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டிஸ்கோ லோகு தனது செல்வாக்கை பயன்படுத்தி முன்வரிசையில் சென்று அமர்ந்தான். மெண்டல் பாஸ்கருக்கு உற்சாகம் தாங்கவில்லை.வரிசையாக ஸ்வாமிஜீயிடம் சென்று அனைவரும் வரம் வாங்கிகொண்டிருந்தார்கள். மெண்டல் பாஸ்கரின் முறை வந்தது. பரபரப்புடன் சென்று அவரை கட்டி அணைத்துகொண்டான். கண்ணீர்விட்டு அழுதான். அவன் கிளப்பிய ஓலம் அங்கே பாடிய பஜனையால் அமுக்கபட்டது. அவனை தேற்றிய ஸ்வாமிஜீ உனக்கு என்ன வேண்டும் என கேட்டார்.

‘நீங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்க வேண்டும்” என்றான் மெண்டல் பாஸ்கர்.

ஸ்வாமிஜி அவனுக்கு அவரின் பெரிய படத்தை கொடுத்தார். ”இதை வைத்துக்கொள். நான் உன்னுடன் எப்பொழுதும் இருப்பேன்” என்றார்.மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தான் பாஸ்கர்.

கவனிக்கவும்...வெறும் பாஸ்கர்.

ஸ்வாமிஜீயின் படமும், இவனின் அடைமொழியும் பரிமாற்றம் அடைந்திருந்தது....!

அடுத்து டிஸ்கோ லோகுவின் முறை....

அவரின் முன் முழந்தாளிட்டு நின்றான் டிஸ்கோ லோகு....

சுற்றியும் பார்த்தான்... ஸ்வாமிஜீயின் சிஷ்யர்கள் அவரின் அருகில் அதிகமாக இருந்தார்கள். டிஸ்கோ லோகுவின் முகத்தை பார்த்த ஸ்வாமி அவனின் உள்ள கிடக்கையை புரிந்து கொண்டு அனைவரையும் விலகி நிற்க சொன்னார்.

டிஸ்கோ லோகு தனது வரத்தை கேட்க துவங்கினான்.....

“ஸ்வாமி நீங்க போன வருஷம் வந்த போதும் சரி, இப்போ வந்திருக்கும் பொழுதும் சரி.... உங்க மேடை அலங்காரம் எல்லாம் நான் தான் செஞ்சேன்.... ஆனா உங்க ஆளுக எனக்கு பேமெண்ட் கொடுக்கல... நீங்க தான் ஸ்வாமி எனக்கு அது கிடைக்க வரம் கொடுக்கனும்”

ஸ்வாமிஜீ அவனை பார்த்தார்.....தனது சட்டை பாக்கெட்டில் இருந்து விசிடிங் கார்ட் எடுத்து அவரிடம் கொடுத்தான் டிஸ்கோ லோகு.

ஸ்வாமிஜீயும் அவர் அருகில் இருந்த நகரின் பெரிய மனிதரை அழைத்து அதை கொடுத்தார். பெரிய மனிதர் டிஸ்கோ லோகுவை பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமி தனது கைகளில் வரம் அருளினார்.

கடவுளின் வரத்தால்.....டிஸ்கோ லோகு தன்யன் ஆனான்

நீங்களும் முயற்சி செய்யுங்கள்....
உங்கள் வாழ்க்கையும் வரங்களால் நிரப்பப்படலாம்.

கேளுங்கள் கொடுக்கப்படும்...
தட்டுங்கள் திறக்கபடும்...!

---------------------------------------------------------
டிஸ்கி 1 : படத்தில் இருப்பவர் மாடல் மட்டுமே. அவருக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. :))

டிஸ்கி 2: இந்த புனைவு யாரையும் குறிப்பது அல்ல.
..!

22 கருத்துக்கள்:

Raju said...

நன்றாக உள்ளது ஸ்வாமி ஓம்கார். சில கேள்விகளுக்கு விளக்கம் புரிகிறது!

:-)

senthil said...

:-) :-)

senthil said...

:-) :-) :-)

கோபால் said...

ஆரிய கூத்து ஆடினாலும் தாண்டவ கோனெ காசு காரியத்தில் கண் வெய்யடா :)

மணிகண்டன் said...

மென்ட்டல் பாஸ்கர் கூட்டம் முடிஞ்சி வெளில வந்து எல்லார்கிட்டயும் கடவுளை கண்டேன்னு சொன்னாராம். அதை எழுத விட்டுட்டீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Mahesh said...

அட... புனைவா... .நாங்கூட.... :))))))))))))))))

Swami said...

samikku romba kurumbu!mental bhas
ungali kizhikizhiyendru kizhikka porar!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜூ,

திரு செந்தில்,

திரு கோபால்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மணிகண்டன்,

நீங்க கதை முடிஞ்ச பிறகும் கற்பனை செய்யறீங்க :)

திரு ராதா கிருஷ்ணன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு மகேஷ்,

தம்பிகளா கோத்து விட்டுடாதீங்க...
:)

திரு சாமிநாதன்,

உங்களுக்கு மெண்டல் பாஸ்கரை தெரியுமா? :)?
இப்ப அவர் வெறும் பாஸ்கராமே?
என் கற்பனை கதாபாத்திரம் உங்களை சிந்திக்க வைச்சுருக்கு.

உங்கள் வருகைக்கு நன்றி.

*இயற்கை ராஜி* said...

:-)

Swami said...

Swamiji,
when will you come to chennai? Please inform us.

SRI DHARAN said...

வணக்கம் சுவாமிஜி!
சரி எல்லோரையும் இப்படி ஒதுக்கி வைத்துக்கொண்டே போனால் யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம் ?

Rajagopal.S.M said...

ரசித்தேன்.... சூடான இடுகையில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள்.... ரெண்டாவது டிஸ்கிய நான் நம்பவில்லை... அப்படி ஒரு ஆள எனக்கு தெரியும்... ஆனா எங்க கருட புராணத்தின்படி எனக்கு தண்டனை கிடைசிறுமோனு ரெம்ப பயமாஇருக்கு.....
;-)))))))))))

Rajagopal.S.M said...

அப்படியே இந்த ரெண்டு பேரும்... விபூதி குடுக்கிற சித்தர பார்கிறே மாதிரி எழுதிஇருந்தா இன்னும் சுவாரசியமா இருந்திருக்கும் ......
///தம்பிகளா கோத்து விட்டுடாதீங்க.../////
இப்படிஎல்லாம் சொன்னா விட்ருவோமா.....
;-))))))

Rajagopal.S.M said...

நீங்களும் பிரபல பதிவர ஆஹிடீங்க....

:-)))

ஷண்முகப்ரியன் said...

:-)))

பரிசல்காரன் said...

ஸ்வாமி..

ரொம்ப இயல்பா இருக்கு.

கடைசில இருக்கற ரெண்டு டிஸ்கில, ஒண்ணு மட்டும்தான் உண்மைங்கறத மூணாவது டிஸ்கியா போட்டிருக்கலாம்..

:-)))

தேவன் said...

நல்லப்பதிவு ஐயா நன்றி.

நிகழ்காலத்தில்... said...

தமிழ்நாட்டில் எத்தனையோ தீர்க்க வேண்டிய பிரச்சினை, பொதுமக்கள் நலம் பேணுதல் இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி மேல்தான் கவனம் இருக்கும், நாம நல்லாட்சி மட்டும் நடக்கும்னு நம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..

ம்ம்ம்ம்.....!!!!

Anonymous said...

நல்ல சிந்திக்கவைக்கும் பதிவு!

வால்பையன் said...

மெண்டல் பாஸ்கர் தன் மனைவிக்கு குணமாகனும்னு வேண்டிக்க போறதா சொன்னாங்களே!

எதுக்கு அவர் மனைவியே ஒரு சாமி தானே, அதனால தான் பேமெண்ட் மட்டும் செட்டில் பண்ணிகிட்டார்!
இனி கொஞ்சம் நாளைக்கு மெண்டல் பாஸ்கர் தான் அந்த சாமியாருக்கு கொ.ப.செ,

ஆனா கொஞ்ச நாள் கழிச்சு புதுசா ஒரு சாமியார் கிடைச்சதும் அந்த பழைய சாமியார் என் பெயரை சொல்லி பயன்படுத்தி நண்பர்களிடம் காசு வாங்குகிறார்ன்னு ஊருகுள்ள பேச்சி அடிபடும் அப்ப பார்த்துக்கலாம்!