Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, September 7, 2009

ஸ்ரீ சக்ர புரி - சிறு விளக்கம்

பரமாத்மாவின் பிரதிபிம்பங்களுக்கு,

கடந்த ஒரு மாதகாலமாக ஸ்ரீ சக்ர புரி என்ற தொடரை படித்து ரசித்து கருத்துக்கள் பகிர்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஸ்ரீ சக்ர புரி என்ற இந்த தொடரை பற்றியும் இதற்கு பின்புலத்தில் வேலை செய்த விஷயங்களை பற்றியும் விளக்க விரும்புகிறேன்.

முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இத்தொடரை நான் எழுதவில்லை...!

எனது உணர்வு நிலையில் எழுதினால் என்னால் இவ்வாறு எழுத முடியாது என்பதே உண்மை. இந்த வலைதளத்தில் இருக்கும் பிற கட்டுரையின் வடிவத்திற்கும், எழுது நடைக்கும் ஸ்ரீ சக்ர புரி தொடரில் உள்ள வடிவத்திற்கும் உள்ள வித்தியாசம் படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

உணர்வு நிலையில் எழுதி இருந்தால் நான் பல பகுதிகளை எழுதி இருக்க மாட்டேன். முக்கியமாக என்னை பற்றிய விஷயங்களை...!

ஸ்ரீ சக்ர புரி தொடரை பொருத்த வரை நான் ஒரு எழுது கோலாகவே இருந்தேன். படித்து ரசித்த உங்களுக்கும் எழுதுகோலான எனக்கும் என்ன வித்தியாசம் என்றால்.. முதலில் படிக்கும் பாக்கியமும், அதை சிறு மாற்றம் செய்து பதிவேற்றம் செய்யும் வேலை ஆகியவை தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. உங்களை போலவே சுவாரசியமாகவும், அடுத்த பகுதிக்காகவும் நான் காத்திருந்தேன் என்பதே உண்மை.

அதில் இருக்கும் சில விஷயங்களை திருத்தம் செய்ய நான் 'புத்திசாலிதனத்தை' பயன்படுத்தியதால் சிறு குழப்பமும் விளைந்தது. அவை அனைத்தும் அதன் அருளால் மேம்பட்டது.

திருவண்ணாமலை என்னும் இடத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் நோக்கில் மட்டுமே அந்த தொடர் எழுதபடவில்லை என படித்த உங்களுக்கு புரிந்திருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியவாரே உணவு ஊட்டுவது போல நம்மை அறியாமல் நாடிகள், சாஸ்திரங்களும் தெரிந்து கொண்டோம் அல்லவா?

நல்ல விமர்சனங்களை போல என் மேல் அன்புடன் பலரும் விமர்சனம் செய்தார்கள். அவர்களின் விருப்பபடியும் எனது விருப்பதினாலும் இனிவரும் கட்டுரைகளில் எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என வேண்டுகிறேன்.


இவன்
உங்கள் அன்பன்
ஸ்வாமி ஓம்கார்

16 கருத்துக்கள்:

surusha said...

SWAMIJI,SREECHAKRAPURI IS VERY INTERESTING

yrskbalu said...

why you worried?

leave everything to god.

good and bad are world nature.
both will be exit till the world exit.

as a sadaka point of view- little disappiontment due to you are not shared fully of your experience

sowri said...

Swami, I hope you have considered many options before writing this. Its a dispointment that true seekers will miss. I felt you have cut short the series too abrubtly or I am too greedy to know more. All that can be done is ...bow before your wisdom.

பரிசல்காரன் said...

//அவர்களின் விருப்பபடியும் எனது விருப்பதினாலும் இனிவரும் கட்டுரைகளில் எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன்.//


:-(

பரிசல்காரன் said...

எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

அவ்வப்போது ஆன்மிகமும் எழுதவேண்டுமென்பதே எமது விருப்பம்!

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி surusha,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbabu,

உங்கள் கருத்து சரியே..

இருந்தாலும் சில வேளை எனது அனுபவம் பிறருக்கு எரிச்சலையோ, அல்லது தவறான வழிகட்டுதலாகவோ அமையலாம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

நான் எதுவும் குறைக்கவில்லை. எடிட் செய்தது கூட மிக சிறிய இடங்களில் தான்.

அதன் அருள் இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் பல விஷயங்களை எழுதலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்காரன்,

15 பகுதிகளுக்கும் மெளனமாக இருந்துவிட்டு விளக்க பதிவுக்கு ஒரு பின்னூட்டமா? :) ?

உங்கள் வருகைக்கு நன்றி.

Raju said...

ஸ்வாமி ஓம்கார், எழுதுவதற்கே ஒரு உந்துதல் சக்தி வேண்டுமல்லவா? ( இன்டரெஸ்ட் ).

நிச்சயமாக உங்கள் அனுபவங்களை நீங்கள் எழுத வேண்டும். ஆவலோடு காத்திருக்கிறோம்.

Orvalam said...

swamiji,
I will hope, you were done very good job. I think somebody have been disappointed to you. What my thought you must be continue to the "Shri shakra puri" as it is.

புன்னகை said...

மொழியின் சக்தியைக் கடந்த ஒரு ஏகாந்தப் பெருவெளியில் என்னைச் சஞ்சரிக்க வைத்தது அந்தத் தொடர் ,

கண்ணீருடன் நன்றி சொல்கிறேன் ,

வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

Anonymous said...

ஸ்ரீ சக்ர புரி தொடர் மிகவும் அருமையாக இருந்தது சுவாமி. இனி நீங்கள் இந்தியாவில் உள்ள கோவில்களில் ஆற்றல்கலை பற்றி எழுத வேண்டுகிறேன். முக்கியமாக நான் சொன்ன அந்த octogonal வடிவில் இருக்கும் குளம் இருக்கும் கோவில்!

Manohar said...

"எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன்"

சாமி, நீங்கள் கருவி என்றால் இந்த முடிவும் உங்களுடையது இல்லை அல்லவா?

கடவுளையே விமர்சிக்கும் அளவு உறங்கிக்கொண்டு இருப்பவர்களின் மேல் நீங்கள் பரிதாவப்படாமல் வேறு யாரால் முடியும்?

தொடர்ந்து செயல்படுங்கள்,

ஷண்முகப்ரியன் said...

நல்ல விமர்சனங்களை போல என் மேல் அன்புடன் பலரும் விமர்சனம் செய்தார்கள். அவர்களின் விருப்பபடியும் எனது விருப்பதினாலும் இனிவரும் கட்டுரைகளில் எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என வேண்டுகிறேன்.//

தங்களின் இந்த முடிவுக்கான காரணம் தெளிவாகப் புரியவில்லை,ஸ்வாமிஜி.

ஷண்முகப்ரியன் said...

நல்ல விமர்சனங்களை போல என் மேல் அன்புடன் பலரும் விமர்சனம் செய்தார்கள். அவர்களின் விருப்பபடியும் எனது விருப்பதினாலும் இனிவரும் கட்டுரைகளில் எனது ஆன்மீக அனுபவங்களை வெளிப்படையாக எழுதுவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என வேண்டுகிறேன்.//

தங்களின் இந்த முடிவுக்கான காரணம் தெளிவாகப் புரியவில்லை,ஸ்வாமிஜி.