Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, December 3, 2012

கும்பமேளா - 5


அன்று நிலையில்லா குறுகுறுப்பில் அமர்ந்திருந்தான் அப்பு. தன் வாழ்க்கை 
சரியான பாதையில் தான் செல்கிறதா? அல்லது  உத்திர காசியில் ஏதேனும் மாய தேவதையின் மாய குழப்பத்தால் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணைந்து கொண்டோமா என புரியவில்லை.

பத்து வருடம் காற்றை போல கடந்து சென்றது. அக்குகையில் குரு சொன்னதை போல ஆறு வருடம் கழித்து ஒரு குழந்தை பிறந்தது. சோமநாத் என பெயரிட்டு, சோமு என அனைவரும் அழைத்து வருகிறோம். ஆனால்  அக்குழந்தை குரு சொன்னது தானா என சந்தேகம் தீரவில்லை. நான்கு வயதான சோமு பிற குழந்தைகள் போல அடம் பிடித்து, மலம் கழித்து அழும் சாதாரணக் குழந்தையாகவே தெரிகிறது. இக்குழந்தை எப்படி அந்த குகையில் பார்த்த மஹா தவம் செய்யும் குருவாக இருக்க முடியும்?

இவன் பிறக்கும் போது எந்த ஒரு ஆன்மீக நிகழ்வும் நடக்கவில்லை.கோவிலுக்கு கூட்டி சென்று சாமி கும்பிடு என கூறினாலும் மறுத்து அடம் பிடிக்கும் இக்குழந்தை எப்படி ஆன்மீக குருவாக இருக்க முடியும்?   அப்பு இவ்வாறு சிந்தித்துக்கொண்டே சோமுவை கவனித்தான். இயல்பாக ரயில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். 

விரக்தியான மனநிலையில் அப்புவின் கண்களிலிருந்து நீர் துளியாக விழுந்தது. கண்களை மூடி மீதமிருக்கும் கண்ணீரையும் கசக்கிவிட்டு கைகளால் துடைத்து நிமிரும் பொழுது சோமு அப்புவின் முன் நின்றிருந்தான்.

அப்பூஊ......

மழலை மாறாத குரலில் அப்பா என அழைக்காமல் தன் பெயர் சொல்லி அழைக்கும் மகனை புரியாமல் பார்த்தான் அப்பு. 

“குடும்பத்தை கவனிக்கவும், பணம் சேர்க்கவும் உங்களோட நோக்கமா இருந்துச்சு.. உங்களுக்கு இந்த குழப்பம் வரும் வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருந்தேன். நான் தான் உங்களை குகையில் பார்த்ததும், இப்ப மகனாக பிறந்ததும் குழப்பம் தீர்ந்துச்சா? ”

அளவுக்கு மீறிய சந்தோஷத்துடன் அப்பு தன் மகனாகிய குருவை கட்டியணைத்தான்.

சில வினாடிக்கு பிறகு அப்புவின் கைகளை விடுவித்து முகத்தை பார்த்து சோமு கூறினான்...

“நேரம் அதிகமில்ல, நாம முக்கியமா செய்ய வேண்டிய காரியம் ஒன்னு இருக்கு அப்பு”

என்ன என்பதை போல அப்பு பார்த்தான். 

“அடுத்த மாதம் கும்பமேளா நடக்கிறது. அதற்கு நாம் போக வேண்டும்.” 

 “கும்பமேளாவுக்கு நாம் ஏன் போகனும்? என்ன இதில் விஷேஷம்?” கேட்டான் அப்பு.

 “உங்களுக்கு கும்பமேளாவை முழுமையாக விளக்குகிறேன். அப்புறம் நாம் ஏன் போகணும்னு சொல்றேன்” 

என்றான் நான்கு வயது சோமு...மன்னிக்கவும் 

என்றார் குருஜி சோமநாத் ...!

(மேளா தொடரும்)

5 கருத்துக்கள்:

Naveen said...

ஸ்வாமி சப்ஜெக்ட்குள்ள வரிங்க போல... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...

திவாண்ணா said...

வெறும் 4 லைன் பதிவு போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.!

Sivakumar said...

//வெறும் 4 லைன் பதிவு போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.!//
இதை நான் 'கண்டபடி' லைக்குகிறேன்.

Unknown said...

yen swamy muzusa mudikka mattingala

geethasmbsvm6 said...

சுவாமிநாதன் வந்தாச்சு.