Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, July 4, 2011

பழைய பஞ்சாங்கம் 04/07/2011

பிரசாத ஸித்தி ரஸ்து..!

இறைவனுக்கு உணவை படைத்துவிட்டு சாப்பிடுவதால் ஆற்றலுடன் அவ்வுணவு நம்முள் எவ்வாறு இயங்கும் என்பதை செய்முறையுடன் விளக்கிக் கொண்டிருந்தேன்.

வகுப்புக்கு இடையே தனக்கு சந்தேகம் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக சுப்பாண்டி கைகளை உயர்த்தினான். “சாமி எங்க குலதெய்வம் கருப்புராயன். வருடத்திற்கு ஒரு முறை குல தெய்வ வழிபாடு செய்வோம். அப்ப கிடா வெட்டி பொங்க வைப்போம். முன்னாடி நீங்க சொன்னதால நான் அசைவம் சாப்பிடாம இருந்தேன். இப்ப நீங்க சொல்றதை பார்த்தா சாமிக்கு படைச்சா அசைவமும் சாப்பிடலாம் போல இருக்கே” என்றான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி, கருப்புராயனுக்கு கிடா மட்டுமா படையல் செய்வாங்க ? பட்டை சாராயம் சுருட்டு இது எல்லாம் படையல் செய்வாங்க இல்லையா? கிடா மட்டும் பிரசாதம் கிடையாது. அதனால சாராயம் சுருட்டு இதையும் சாப்பிடுங்க. நீங்க மட்டும் பிரசாதம் எடுத்துக்காம உங்க மனைவி குழந்தைகளுக்கும் பிரசாதம் கொடுங்க. கருப்புராயனோட கிருபை முழுசா உங்களுக்கு கிடைக்கும். சரியா? கிடா சாப்பிட விரும்பம் இருந்தால் கருப்புராயன் மேல் பழி போடாமல் நீங்களே சாப்பிடுங்கள். சும்மா பிரசாதம் என்ற சால்ஜாப்பு வேண்டாம்” என்றேன்

சுப்பாண்டி இப்பொழுது குடியும் குடித்தனமுமாக இருப்பதாக கேள்வி..!
-----------------------
மூடர்களின் நம்பிக்கை

ஆட்சி மாற்றத்தால் பலருக்கு பல வகை பயம். எனக்கோ மூடநம்பிக்கையை பார்த்து பயம். நாத்திகம் பேசுபவர் இருக்கும் பொழுது ஆன்மீகம் தன் சுயத்தை இழக்காமல் மக்கள் அதை நோக்கி செலுத்தப்படுகிறார்கள். ஆனால் ஆத்திகம் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல் மூட நம்பிக்கைக்கு வழிவகுக்கும் என எண்ணுகிறேன்.

ஏழு வருடங்கள் முன்பு பிரத்தியங்கரா தேவியை மிளகாய் வத்தல் கொண்டு பூஜை செய்தால் வெற்றி தேடி வரும் என நம் கலாச்சாரத்தில் இல்லாத மிளகாய் வத்தலை வைத்து பூஜை செய்தார்கள். இதை பார்த்து மக்களும் பல்வேறு இடங்களில் அப்பூஜையை செய்தார்கள். பிறகு பச்சை புடவை வாங்கி கொடுத்தால் தோஷம் விலகும் என்ற புரளி. தற்சமயம் ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டால் இழந்த தொழில் மீண்டும் பொலிவு பெறும் என ஒரு தோற்றம் இருக்கிறது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் ஒரு நிலையில் மூடப்பழக்கம் தான் ஆட்சி செய்யும். நான் என்னைச் சொன்னேன்..! :))
-------------------
ஆ....ராசா.... புதையல்..!

தொலைக்காட்சியில் ஒருலட்சம் கோடி ரூபாய் கண்டெடுப்பு என்றதும் ஏதோ ராசா விஷயம் என நினைத்தால்...இது திருவனந்தபுரம் ராஜா விஷயம் என பிறகு தான் புரிந்தது. திரு அனந்த புரம் என்று ஆழைக்கப்படும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் நிலவரையில் ராஜா கால ஆபரணங்கள் மற்றும் கோவில் பொருட்கள் கண்டறியப்பட்டது. பல வருடங்களாக யாரும் கவனிக்கப்படாமல் தங்க ஆபரணங்களும், பாத்திரங்களும் கிடந்திருக்கிறது. இச்செய்தி எனக்கு வியப்பாக இல்லை. காரணம் ரூபாய் மதிப்புக்கு அப்பாற்பட்ட அற்புத புதையலாய் பத்மநாப சுவாமி அங்கே இருக்க அதன் அடியில் இருக்கும் சிறு தங்கங்ளை மக்கள் அளவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இரண்டு விஷயம். சுயநலமற்ற நிலையில் மன்னர்கள் கோவிலுக்கு எப்படி தானம் செய்தார்கள் என்பதும், நம் கோவில்கள் எத்தனை சிறப்பான நிலையில் இயங்கி வந்தது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். தன் கையில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் இறைவனுக்கு ராஜா கொடுத்தார் என்றால் செல்வத்தைவிட மிக உன்னதமானது ஒன்று அவருக்கு அங்கே கிடைத்திருக்க வேண்டுமல்லவா?

நாமும் அந்த தலைசிறந்த அற்புதத்தை தேடுவோம்.
----------------------
சிவ லிங்கம்

சிவ லிங்க தரிசனம் என்பது மிக உன்னதமானது என சைவ ஆகமங்கள் கூறுகின்றன. நான் சைவ சித்தாந்தி இல்லை என்றாலும் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கு செல்லும் பொழுது சிவலிங்க வடிவங்களை நான் கண்டு இன்புற்றதுண்டு. தக்‌ஷிண மேரு என்ற தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகமே லிங்க வடிவில் இருக்கிறது என முன்பு நான் எழுதி இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இவ்வாறு ஒரு இடத்தில் நான் கண்ட சிவலிங்கமே உங்களுக்காக கீழே படத்தில் கொடுத்துள்ளேன். இத்தலத்தை பற்றியும் இந்த சிவ லிங்கத்தின் பின்புலத்தையும் சரியாக கூறுபவர்களுக்கு எனது தினம் தினம் திருமந்திரம் புத்தகம் பரிசு..! முயற்சி செய்கிறீர்களா? விடை தனிப்பதிவாக...விரைவில் வரும்..

5 கருத்துக்கள்:

புதுகை.அப்துல்லா said...

// தற்சமயம் ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டால் இழந்த தொழில் மீண்டும் பொலிவு பெறும் என ஒரு தோற்றம் இருக்கிறது

//

நானும் இப்பல்லாம் பிளாக்கே எழுதுறதில்லை. எதுக்கும் சிறீரங்கம் ஒரு எட்டு போய்ட்டு வரவா?

அம்பாளடியாள் said...

வணக்கம் ஐயா அருமையான பகிர்வு.
எதையும் சரியாக விளங்கிக்கொள்வதனால் மட்டுமே
அதன் மகிமையை உணரமுடியும் என்பதை
அழகாக விளக்கியுள்ளீர்கள்.அத்துடன் சிவலிங்கத்தின்
பின்புலத்தை அறியும் அளவிற்கு எனக்கு அந்தத்தகமை இல்லை. விரைவில் இதற்குரிய விளக்கத்தையும்
தங்களிடம் இருந்து பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.மிக்க நன்றி ஐயா இப்பகிர்வுக்கு...........

Pattarai Pandi said...

சுவாமி, Sentiment 'a கரெக்டா சொல்லுங்க... ஸ்ரீரங்கம் போய்ட்டு வந்தால் பழைய தொழில் பொலிவு பெரும். பொலிவு பெற்ற உடன் மறுமுறை simple 'aaga ஒரு முறை போய் வரணும் :)

அப்போ இருந்த ராஜா ஆண்டு அனுபவிச்சு தான தர்மம் பண்ணினார்.. கோவிலுக்கு கொடுத்தார்... அவருக்கும் ஏதோ கிடைச்சது. இப்போ இருக்கும் ராசா ஆண்டார்.. அவர் மட்டும் அனுபவித்தார்.. யாருக்கும் ஏதும் சரியாய் கொடுக்கல.. அனுபவிக்றார் :)

சிவலிங்க வடிவில் இருப்பதால் இது ஏதோ தலத்தில் இருக்கும் சிவலிங்கமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
( எதுக்கும் பாத்து சுவாமி... மூட நம்பிக்கை, நகை, வாட்ச் பத்தி பேசினதுக்கு சிவலிங்கத்தை போட்டோ எடுத்த குற்றத்துக்கு ஆள் ஆகிற போறாங்க :) )

Unknown said...

நான் ஸ்ரீரங்கத்துல தான் இருக்கேன். வரும் போது சொல்லிட்டு வாங்க அப்துல்லா

palani said...

This is not sivalingam. This is a stone seen in bus stoppings in Singapore.