Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, May 26, 2011

தென்கைலாய திருப்பயணம் - 2011

அருள்பொருந்திய ஆன்மாக்களுக்கு,

ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.

இறையருளால் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலையில் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

வரும் ஜூன் மாதம் 10,11ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி) இரு நாட்கள் மலைப்பயணம் இருக்கும்.

தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.

இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!

இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.

எல்லோரும் கலந்து கொள்ளலாமா? - இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.

1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.

10ஆம் தேதி காலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (11ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.

பதினைந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 5ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.

ஆன்மீக அற்புதங்களை உணர நீங்கள் தயாரா?

8 கருத்துக்கள்:

ஸ்வாமி ஓம்கார் said...

பதிவில் விடுபட்டவை...

ஸ்வாமி எப்பொழுதும் கட்டண பயிற்சியே நடத்துகிறார் என கருத்து சொல்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இது இலவசம். முற்றிலும் இலவசம்.

எங்களின் அறக்கட்டளை நடத்தும் பல்வேறு சேவைகளை பற்றி தெரியாமல் கட்டணத்தை மட்டுமே பார்ப்பதால் உங்களுக்கு இவ்வாறு தோன்றி இருக்கலாம்.

இத்தகைய இலவச பயிற்சியில் இணைந்து உங்கள் ஆன்மீகத்தை வளர்த்திக் கொள்ளுங்கள்.

புதுகை.அப்துல்லா said...

திடீர்,குபீர் ஆன்மீகவாதிகளுக்கு அனுமதி உண்டா?

vettiblogger said...

Swamiji, Usually Women are not allowed to go to 7th hill of Velliangiri hill. Why is it so?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெள்ளியங்கிரி வாழ்த்துக்கள்!

//3) பெண்கள்

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை//

:(((((

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா,
திடீர் குபீர்கள் மலைபயணத்தில் மட்டுமல்ல ஆன்மீகபயணத்திலும் நீண்ட தூரம் செல்ல முடியாது :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெட்டிப்ளாகர்,
திரு கண்ணபிரான் ரவிசங்கர்,

ஆன்மீக பயணத்தில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் எனக்கு ஆண்-பெண் பேதம் இல்லை. என்னுடன் பழகும் ஆண்பெண்களும் என்னை ஆணாகவும், பெண்ணாகவுமே பார்ப்பார்கள்.

அனுமதிக்கான வரையறை காட்டு இலாக்காவினால் கூறப்படுவது. மலையின் அடிவாரத்தில் இத்தகையவர்களை தடைசெய்வார்கள். அதனால் முன்பே இதை கூறிவிட்டேன்.

ஏன் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு விளக்கம் தெரியவில்லை. வனத்துறையினரிடமே கேட்கவேண்டும்.

ரங்கன் said...

அடடா நான் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவனாக உள்ளேனே ! என்பதற்கு பதில் "அப்பாடா" என்றுதான் தோன்றுகிறது !! ஆன்மிகம் என்றாலே ஒரு வேலை என்று நினைப்பதால் வந்த வினை.

ஆண்மை குறையேல்.... said...

Hi,

I wanna join...Am in Chennai right now. So, Please lemme know clear picture.

My ID : jrmanic@gmail.com

Regards,
Mc