Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, February 18, 2010

காசி சுவாசி - பகுதி 11

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

-------------------------------------------------- திருமந்திரம் 1911

மனிதர்களுக்கு உள்ளே சக்தி நிலை இருக்கிறது. ஆனால் அதை அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியான விஷயம். ஒருவர் எவரஸ்ட் ஏறுகிறார் மற்றொருவர் சிறப்பாக இசை கோர்வை செய்கிறார் என எத்தனையோ திறன் இருந்தாலும் இயற்கை அனைவருக்கும் இந்த ஆற்றலை உள்ளே கட்டமைத்தே படைத்திருக்கிறது. படைக்கப்பட்ட திறன்களில் எதை ஒருவர் தீட்டுகிறார்களோ அதில் அவர்கள் வெளிப்படுகிறார். அது போல ஆன்மீக ஆற்றல் என்பது அனைத்துக்கும் அடிப்படையான சக்தி. அந்த சக்தியை அனைவரும் தூண்டுவதோ தீண்டுவதோ இல்லை.

ப்ராணன் என்ற இந்த சக்தியானது பலருக்கு செயல்படாமலேயே அவர்கள் இறப்பு நிலைக்கு சென்று பிறப்பு சுழற்சியில் சுற்றிவருவார்கள். ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான ப்ராண சக்தி கேந்திரமும் முற்றிலும் திறக்கப்பட்டு அவர்களின் உடலை விட்டு சென்றுகொண்டே இருக்கும். ப்ராணனை செயல்படுத்தாத சாதாரண மனிதர்கள், ஆன்மீகவாதிகளின் உடலில் இருக்கும் ப்ராணனை பெற்று மேம்படுகிறார்கள்.

ப்ராணன் ஆன்மீகவாதிகளிடம் இருந்து பெறப்படுவதால்தான், முழுமையான ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவரை சந்திக்கும் பொழுது வேறு சிந்தனை எதுவும் எழாமல் முற்றிலும் ஒரு ஆனந்தத்தை உணர முடிகிறது. அவரை விட்டு நீங்கினால் ஏதோ இழந்த நிலைக்கு மனம் செல்லுகிறது.

ப்ராண சக்தி உடல் நிலையில் செயல்படுவதில்லை. உண்மையில் ப்ராணன் ஆன்மாவிலிருந்து செயல்படுகிறது. அதனால் ஒருவர் தனது உடலை இழந்தாலும் ஆன்ம சொரூபமாக ப்ராணனை பிறருக்கு வழங்க முடியும். சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்பினால் உடலை விட்டு வெளியேறுகிறது.

அப்படி வெளியேறும் பொழுது சுற்றுச்சூழலை அது மிகவும் பாதிக்கும். ஆனால் ஆன்மீகவாதிகளின் இறப்பு என்ற செயல் நிகழும் பொழுது அவர்களின் ப்ராணன் வெளியேறாமல் உள்ளேயே அடங்கிவிடுகிறது.

எளிமையாக சொல்லுவதென்றால் ப்ராணனை வெளிச்செலுத்தாத மனிதன் இறப்பில் ப்ராணனை வெளிச்செலுத்துகிறான். வெளிச்செலுத்தும் யோகி ப்ராணனை இறப்பில் உள்ளே கட்டமைக்கிறார். யோகியின் உடலில் ப்ராணன் நிலைப்படுத்தப்படுவதால் அவரின் உடலை சமாதி என்ற செயல் மூலம் நிலையாக ஒரு இடத்தில் வைத்து பின்வரும் காலத்தில் அனைவருக்கும் அதிலிருந்து ப்ராணன் கிடைக்கச்செய்கிறார்கள். இதற்கு சமாதி கிரியை என்று பெயர். சாதாரண மனிதனுக்கு ப்ராணன் உடலில் இல்லாததால் அதை எரித்து உடலை பஞ்சபூதத்தில் ஐக்கியப்படுத்துகிறார்கள். பஞ்சபூதத்தில் உருவான உடலை பஞ்சபூதத்தில் இணைப்பது என்பதை ஒருவித குறியீடாக மதசடங்குகள் அமைந்திருக்கிறது.
இடைக்கடார் சமாதி - அருணாச்சலேஸ்வரர் கோவில்,திருவண்ணாமலை

ஆன்மீகவாதிகளின் சமாதியில் ப்ராணன் அளவிலாத சூழலில் வெளிப்படும். திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி ஆலயம், பழனி, திருப்பதி, சபரிமலை என
அனைத்து புகழ்பெற்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில் எல்லாம் ஒரு ஜீவசமாதி உண்டு. அதாவது சமாதி இன்றும் ஜீவனுடன் இருக்கிறது.

மயானத்தில் யோகிகளுக்கு சமாதி வைக்கப்படுவதில்லை. காரணம் வணங்கத்தக்க நிலையில் இருக்கும் சூழலில் மட்டுமே அவர்களுக்கான ஜீவசமாதி அமைக்கப்படும். அதே போல யோகிகளின் உடல் எரிக்கப்பட்டால் அதில் உள்ள ப்ராணன் வீணாகி அதனால் சமூக கேடுகள் நடைபெறும் என திருமூலர் கூறிகிறார்.

காசி நகரம் அனைத்து நகரம் மற்றும் நாகரீகத்தைவிட முற்றிலும் வேறுபட்டது அல்லவா? அந்த நகரமே மயானமாக இருக்கிறது. மஹா மயானம். அதனால் அங்கே யோகிகளுக்கு சமாதி வைப்பதில்லை. இவர்கள் யோகிகளின் உடலை கங்கையில் சேர்த்துவிடுகிறார்கள். கங்கையின் மையத்தில் சென்று உடல்களை கங்கையில் வேத மந்திரத்துடன் விட்டுவிடுவார்கள். அந்த உடல் சில மணி நேரத்தில் நீர்வாழ் உயிரினங்களுக்கு இறையாகும். அப்படியானால் யோகிகளின் ப்ராண சக்தி வீணாகிவிடுமே என்ற கேள்வி உங்களுக்கு எழும்.

காசி மாநகரில் ஒருவர் யோக நிலையில் இறந்தால் அவரின் ப்ராணன் உடலில் இணையாமல் காசி நகரில் முற்றிலும் கலந்துவிடுகிறது. காரணம் யோகிகள் காசியில் இருக்கும் வரை காசியே அவர்களின் உடல். ஆகவே காசி என்ற உடலில் ப்ராணன் அடங்கி நகரத்தையே சக்தி ஊட்டுவதால் அந்த உடல் கங்கையில் இணைக்கபடுகிறது. காரணம் கங்கை ப்ராண சக்தியின் நீர் உருவில் ஜீவ சொரூபமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ப்ராணன் உடல் ப்ராண பரவாகத்தில் சேர்க்கப்படுகிறது.

சில யோகிகள் தங்களின் உடல் முடிவுக்கு வரும் தன்மையை உணர்ந்து கங்கையில் இறங்கி மறைந்துவிடுவார்கள். இதுவும் காசியில் பல நூற்றாண்டுகளாக நடக்கும் விஷயம். அதனால் யோகியின் உடலும், மனித உடலும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது காசி வாசிகளுக்கு தெரிந்தே இருக்கிறது.

பல பகுதிகளாக காசியை கூறிவருகிறேன். ஆனால் காசியின் அற்புதங்களின் அற்புதமான அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை ?

இது எவ்வளவு மஹாபாதகச் செயல்?

வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்கு நடந்த மஹா அனுபவத்தையும் விவரிக்கிறேன்...


[சுவாசிப்பேன்]

26 கருத்துக்கள்:

G.MUNUSWAMY said...

Swamiji,
Thangalin Kasi Swasi pala paguthikala
varuvathai aavaludan padithu varugiren aanal paguthi 11 migavum nalla karuthugalai kondirukkirathu.
Example: Praanam
Nandri,
Meendum Annamitta Annapooraniyil
thangalai santhikkiren.
G.MUNUSWAMY,
Chennai Port Trust.

Karthikeyan Krishnan said...

அற்புதம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல ? நான் டெல்லியில் தான் இருக்கிறேன். உங்களை சந்திக்கலாமா?

KARMA said...

Me the first....!!!

Subbaraman said...

Mikka Nandri, Swamiji..

வடுவூர் குமார் said...

நீங்கள் சிங்கை போகும் போது அங்கு நான் இருக்கமுடியாமல் போய்விட்டதே என்று இருக்கிறது.பயணம் நல்லபடியாக அமையட்டும்.
காசி தொடர் பல அரிய விஷயங்களை தெரிந்துகொள்ள வைத்துள்ளது.மிக்க நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள்ளலாமா??

Umashankar (உமாசங்கர்) said...

hmm. Naanum meengal tinnavo endra oru paatiyai ninaithen; aanaal, amaitekaathen.

Nandri Swami Ji,

Umashankar.A

Siva Sottallu said...

அருமையான விளக்கம் ஸ்வாமி, மிக்க நன்றி.

//காசி மாநகரில் ஒருவர் யோக நிலையில் இறந்தால் அவரின் ப்ராணன் உடலில் இணையாமல் காசி நகரில் முற்றிலும் கலந்துவிடுகிறது. //

அப்போ அந்த யோகியின் உடல் மற்ற மனிதர்களைப்போல் ப்ராணன் அற்ற உடல் ஆகிவிடுமே ஸ்வாமி, அதை என் எரிக்கக்கூடாது?

Siva Sottallu said...

// சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்பினால் உடலை விட்டு வெளியேறுகிறது.

அப்படி வெளியேறும் பொழுது சுற்றுச்சூழலை அது மிகவும் பாதிக்கும். //

எந்த மாதிரியான பாதிப்புக்கள் என்பதை சற்று விளக்கமுடியுமா ஸ்வாமி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு முனுசாமி,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கரண்,
உங்களின் தொலைபேசி எண்ணை
தனிமடலில் கொடுங்கள் தொடர்பு கொள்ளுகிறேன்.

வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மா,

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,

நீங்கள் போட்ட பிள்ளையார் சுழி இது..
ஆலமரத்தின் விதையை போல.. சிறிய துவக்கம் பெரிய வளர்ச்சி.

நன்றி என்ற வார்த்தை மிகச்சிறியது.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள்ளலாமா??//

எதுனா எம்மேல கோவமா? :)

தனிமடலில் விளக்கம் கூறுகிறேன். நம் நாட்கள் பலருக்கு 'இணைவைத்தால்' பிடிக்காத சமாச்சாரம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு உமா சங்கர்,
உங்கள் வருகைக்கு நன்றி.

மதி said...

>>அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை>>

அதானே....


பதிவிற்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//அப்போ அந்த யோகியின் உடல் மற்ற மனிதர்களைப்போல் ப்ராணன் அற்ற உடல் ஆகிவிடுமே ஸ்வாமி, அதை என் எரிக்கக்கூடாது?//

உடலில் ப்ராணன் இல்லாத காரணத்தால் அவை கேடுகளை விளைவிக்காது. ஆகவே அவை பிற உயிர்களுக்கு உணவாக்கப்படுகிறது.

ப்ராணன் நிலைதடுமாறி இருந்தால் மட்டுமே அவற்றை எரிக்க வேண்டும்.

நம் ஊரில் பத்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இறந்தால் எரிக்கமாட்டார்கள். காரணம் குழந்தைகளுக்கு ப்ராணன் தடுமாற்றம் அடைந்திருக்காது. பருவம் அடைந்த உடலில் ப்ராணன் தடுமாற்றம் அடைகிறது.

//எந்த மாதிரியான பாதிப்புக்கள் என்பதை சற்று விளக்கமுடியுமா ஸ்வாமி?//

சற்று விளக்கமாக இந்த சிறிய பெட்டியில் கூறமுடியாது.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,

சில மாதங்களுக்கு முன் நீங்கள் கேட்டது நடக்க இருக்கிறது...

எனது சிங்கை பயணம்..

உங்கள் வருகைக்கு நன்றி

ATOMYOGI said...

***வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்கு நடந்த மஹா அனுபவத்தையும் விவரிக்கிறேன்...***

காத்திருக்கிறோம்...

துளசி கோபால் said...

ஸ்வாமி,

உங்களுக்கு 100 ஆயுசு!

நேற்று, நம் வீட்டிற்கு காசிக்குப்போய் பித்ருக்களுக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டு வந்த முதிய தம்பதிகள் (நியூஸியில் வசிக்கும் என் தோழியும் கணவரும்)வந்திருந்தனர்.

கடமையைச் செய்துவிட்டோம் என்ர த்ருப்தி அவர்முகத்தில் தெரிந்தது.

முன் 20 தலைமுறைக்கும் பின் இருபது தலைமுறைக்கும் சேர்த்து 'காரியங்கள்' முடிஞ்சதாம்.

நீங்கள் காசி எழுதுவதைச்சொல்லி அவர்களையும் வாசிக்கச் சொன்னேன்.

pranavastro.com said...

"ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான ப்ராண சக்தி கேந்திரமும் முற்றிலும் திறக்கப்பட்டு அவர்களின் உடலை விட்டு சென்றுகொண்டே இருக்கும்"

5 கேந்திரம் - நான் அறிந்து கொள்ளலாமா?
Mohankumar

Thirumal said...

காசியில் சுவாசத்தை நீக்கியும், காசி-வாசியாக இருக்கும் அற்புதமான யோகிகளின் தன்மையைப் பற்றி தெரிந்து கொண்டோம்.

[காசி^சு-வாசி என்ற சித்திரத்தின் பொருளோ?]

அன்புடன் விளக்கியதற்கு நன்றி.

ஒரு அடிப்படைக் கேள்வி ..
விசாலாட்சியும் அன்னபூரனிதாயாரும் ஒருவர்தானா ?
--------------
@மோகன்குமார்
ஐந்து கேந்திரங்கள் பற்றி அறிந்து கொள்ள சுவாமி கொடுத்திருக்கும் பிராணன் சுட்டியைக் கிளிக்கவும். :-))

மதி said...

>>சில மாதங்களுக்கு முன் நீங்கள் கேட்டது நடக்க இருக்கிறது...

எனது சிங்கை பயணம்..<<

ஹையா ஜாலி...

சிங்கை மட்டும்தான... மலையகத்துக்கு வர மாட்டிங்களா...!

பரவாவில்லை தேதி மற்றும் இடம் சொல்லுங்க...ஈசனின் அருளால் நிச்சயம் வருவேன்.

jayengginds said...

இறையருள் பெற்ற இறைஜானி சுவாமி ஓம்கார் அவர்களுக்கு.......

உங்களின் பதிவுகளை படித்து என் வாழ்கையின் பதிவுகளை பதித்துக்கொண்டு வாழும் இந்த பழனிமணியின் பணிவான வணக்கம்.

கோவிலில் உள்ள இறைவனை கை கூப்பி வணங்குவோம் ஆனால் கோவில் நுழைவாயிலாக இருக்கும் கோபுரத்தை அன்னாரது நிமிர்த்து பார்ப்பதை போல தங்களின் பதிவுகள்....,

இறை ஆற்றல் அறிய நுழை வாயிலாக இருக்கும் உங்களையும் அன்னாரது பார்க்கிறேன்.

ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாக அவனுள் ஒளிந்து கொண்டு இருக்கும் ஜீவ ஆற்றல் அறிய .....

எளிய முறைகள் கொண்டு இந்த மாயை வெல்ல முடிய விட்டாலும் உணர்த்து கொள்ள வழிகாட்டுவீர்களா ?

Unknown said...

//திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள்ளலாமா??//

எதுனா எம்மேல கோவமா? :)

தனிமடலில் விளக்கம் கூறுகிறேன். நம் நாட்கள் பலருக்கு 'இணைவைத்தால்' பிடிக்காத சமாச்சாரம்." நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் சுவாமி. ஆனால் தனி மடல் பற்றி தெரியவில்லை சற்று விளக்கவும்சுவாமி.

K DhanaseKar said...

இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்களா? மீன்களுக்கு உணவாகும் என்று அற்புதமான கருத்து சொன்னீர்கள்...ஆனால் மற்ற விளைவுகள்? கரை ஒதுங்கி நிற்கும் அந்த உடல்களின் அருகே இருக்கும் குடிசைவாழ் பகுதிகளை பார்த்தீர்களா காசியில்? அங்கே குழந்தைகள் விளையாடுவது எதில் தெரியுமா? இறைவனை வணங்கி மனிதர்களை மதிக்காமல் விடுவதால்தான் இறைவனே கேள்விக்குறியாகிறான்.