Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 24, 2009

ஜோதிட கவிதைகள்

ஆயுள்
----------
நெடுந்தூர பைக் பயணத்தில்
ரயில்வே கேட் குறுக்கிட்டது
அதன் அருகே இருந்த கைரேகை
பார்ப்பவனிடம் கைகளை காண்பித்தேன்.

உங்கள் ஆயுள் ரேகை வீக் என்றான்.
புன்னகைத்தவாரே கையுரையை அணிந்தேன்.

என்னை பார்த்து புன்னகைத்த
கைரேகைக்காரன்
ஆயுள் ரேகைக்கு க்ளவுஸ்
போடாதீங்க சார்.
தலைக்கு ஹெல்மெட்
போடுங்க என்றான்.


பரிகாரம்
------------
தொழில் சரியில்லை
பத்தாயிரத்திற்கு பரிகாரம்
செய்ய வேண்டுமாம்.
யாருக்கு என சொல்லவில்லை
ஜோதிடன்.

நியூமராலஜி
------------------
என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.

எதிர்காலம்
-----------------
குழந்தையால் உங்கள் எதிர்காலம்
பாதிக்கும் என்ற பலனை கேட்டதும்
வீட்டுக்கு வந்து குழந்தையை கொன்றேன்.
எனக்கு ஆயுள் தண்டணை.
ஜோதிடம் உண்மையோ?

நாத்திகமா ஆத்திகமா
--------------------------------
அரசியல்வாதியின் ஆயுளை சொல்ல
வந்த ஜோதிடரை - உன் ஆயுள் தெரியுமா
என மிரட்டிய காட்சியை கண்டு
மகிழ்ந்தான் நாத்திகன்.

ஜோதிடர் சொன்ன அதே நாளில் அரசியல்வாதி இறந்ததை
நினைத்து மகிழ்ந்தான் ஆத்திகன்.

மண வாழ்க்கை
-----------------------
நவ கிரகங்களும் உங்களுக்கு
சாதகமாக இருக்கு
உங்கள் மணவாழ்க்கையில்
பிரச்சனை வர வாய்ப்பில்லை
என்ற ஜோதிடருக்கு தெரியுமா
நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று
பார்த்துக்கொள்ளுவதில்லை என்று.



33 கருத்துக்கள்:

Subbiah Veerappan said...

/////ஆயுள் ரேகைக்கு க்ளவுஸ்
போடாதீங்க சார்.
தலைக்கு ஹெல்மெட்
போடுங்க என்றான்./////

சூபபர்!சூபபர்!சூபபர்!
நன்றி ஸ்வாமிஜி!

priyamudanprabu said...

////
என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.
///

சூப்பருங்க

பரிசல்காரன் said...

ஸ்வாமிஜி...

பலமுறை படித்தேன். புரியாததால் அல்ல.

மிகவும் அருமையாக இருப்பதால்!

கோவி.கண்ணன் said...

அனைத்தும் மிக நன்று !

நானும் ஒரு ஹைக்கூ....

விபத்தில் மரணமடைந்தவன்
கையில் எந்த பாதிப்புமின்றி தெளிவாக இருந்தது ஆயுள்ரேகை !

:)

மோகன் said...

///நியூமராலஜி
------------------
என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை/////
சூப்பரப்பு......கலக்கல் போங்க..

புருனோ Bruno said...

சூப்பர்

Vinitha said...

ரொம்ப நல்லா இருக்கு!

iniyavan said...

ரொம்ப நல்லா இருக்கு.

Unknown said...

நல்ல இருக்கு.

☼ வெயிலான் said...

எல்லா கவிதைகளும் நல்லாருக்கு. ஒன்றிரண்டு அருமை!

yrskbalu said...

better luck next time.

comments only coming forward

எம்.எம்.அப்துல்லா said...

பரிகாரம்
------------
தொழில் சரியில்லை
பத்தாயிரத்திற்கு பரிகாரம்
செய்ய வேண்டுமாம்.
யாருக்கு என சொல்லவில்லை
ஜோதிடன்.

//


சிரித்துக்கொண்டே இருக்கின்றேன் சாமி :)

கிறுக்கன் said...

அருமை சுவாமிஜி!!!
கருத் தேடி அலைந்த எனக்கு குருவாய் நல்லதொரு கரு தந்தீர்கள் மிக்க நன்றி.


நம்பிய நம்பிக்கை நமக்கு நம்பும்கை
நம்பாத நடவடிக்கை மூடநம்பிக்கை.

-
கிறுக்கன்

நிகழ்காலத்தில்... said...

அன்பு நண்பரே
சுவாரசிய வலைப்பதிவு விருது தங்களுக்கு அன்புடன் வழங்கியிருக்கிறேன்.
http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_23.html#comments

தகவல் மட்டுமே, அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள்., விருது என்னிடமே இருக்கட்டும்:))

Unknown said...

//ஆயுள் ரேகைக்கு க்ளவுஸ்
போடாதீங்க சார்.
தலைக்கு ஹெல்மெட்
போடுங்க என்றான்.//

ஸ்வாமிஜி கலக்கறீங்க!!

வெங்கடேஷ்

Mukhilvannan said...

கருத்துச் செறிவும் சொற்செட்டும் ஒருங்கே அமையப்பெற்ற சுவாரசியமான கவிதைகள். ஸ்வாமி, உங்கள் பொன்னடி போற்றி!

swartham sathsangam said...

சுவாமிஜி மிக நன்றாக உள்ளது. வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்

Venkatesh Kumaravel said...

//என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.//
;)

சில கவிதைகள் ரொம்ப பிடிச்சுது. சில கவிதைகள், "சரி, அதுக்கென்னன்னு ஆயிருச்சு."

Mahesh said...

ஜிஞ்சினக்காலஜியை விட்டுடீங்களே ஸ்வாமி ... :))))))))))))))

எல்லாமே அருமை !!!

அறிவிலி said...

அனைத்தும் அருமை. மிகவும் ரசித்தேன்.

*இயற்கை ராஜி* said...

sirichi sirichi vayiru valikuthu........:-)))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

தை
விதை
கவிதை..
அருமைங்க !!!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அருமை

நான் said...

ம்ம்ம் மிக அருமை ...ரசனை உள்ள (ஆ)சாமிசார் நீங்கள்....

Sanjai Gandhi said...

கவிதைகள் அனைத்தும் அருமை ஸ்வாமிஜி..

//என்னை பார்த்து புன்னகைத்த
கைரேகைக்காரன்
ஆயுள் ரேகைக்கு க்ளவுஸ்
போடாதீங்க சார்.
தலைக்கு ஹெல்மெட்
போடுங்க என்றான்.//

ஜூப்பரு.. :)

ஸ்வாமி ஓம்கார் said...

சிறிய முயற்சியாக இருந்தாலும் சரியான முயற்சிகளுக்கு பாராட்டு கூறுவதில் இணைய பதிவர்கள் ஒரு உதாரணம்.

பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்.


இந்த பதிவை பிரபலமாக்கிய பரிசல்காரன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

திரு நிகழ்காலம் அவர்கள் எனக்கு அளித்த (திருப்பி வைத்துகொண்ட) ;) விருதுக்கு எனது நன்றிகள்.

Chittoor Murugesan said...

வித்யாசமா எழுத முயற்சி செய்திருக்கிங்க.. நல்ல முயற்சிதான். ஆனால் ஒரு ஸ்டாண்ட் எடுத்துக்கிட்டு எழுதியிருக்கிங்க.. பாவம் ! ஜோதிடர்கள் தவறை கிண்டலடிக்கும் போக்கில் ரிஷிகள் மகரிஷிகள் வகுத்த ஜோதிட விஞ்ஞானத்தையே கிண்டலடித்துள்ளீர்கள் . ஒரு முறை எனது வலைப்பூவை படித்து பாருங்கள் . நிச்சயம் உங்கள் கவிதைகளுக்கு மறு பதிப்பு போட வேண்டி வரும்

http://www.anubavajothidam.blogspot.com

ஆ.ஞானசேகரன் said...

//ஆயுள் ரேகைக்கு க்ளவுஸ்
போடாதீங்க சார்.
தலைக்கு ஹெல்மெட்
போடுங்க என்றான்.///

நச்ச்..

ஆ.ஞானசேகரன் said...

//நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று
பார்த்துக்கொள்ளுவதில்லை என்று.//

ஆகா பிரச்சனை இல்லை..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சித்தூர் முருகேசன்,

நான் ஜோதிடத்திற்கு எதிரானவன் அல்ல,தவறு செய்யும் ஜோதிடர்களுக்கு எதிரானவன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு ஞானசேகரன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

வால்பையன் said...

//என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.
ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.//

சிரிப்புடன் சிந்திக்கவும் வைத்த கவிதை!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வால்பையன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

தமிழ் said...

அருமை