காசி திருப்பணம் 2021
மார்ச் 3முதல் 7 வரை.
20000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்)
ஆன்மீக பயணத்தில் காசி, ப்ரயாக் ராஜ் மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு சென்று ஆன்மீக உணர்வினை பெறுதல்.
ஐந்து நாட்கள் பயண காலம். காசியை மையமாக தங்கி ப்ரயாக் ராஜ் மற்றும் கயாவுக்கு ஒரு நாள் பயணமாக செல்லுதல்.
தரிசனம் செய்யும் இடங்கள். காசி விஸ்வநாதர், அன்னபூர்ணி, கால பைரவர் தரிசனம். கயா - விஷ்ணு பாதம், புத்தகயா. ப்ரயாக் ராஜ் - திரிவேணி சங்கமம், சீதாமாடி, வித்யாச்சல்.
தினமும் இரண்டு முறை கங்கையில் ஸ்நானம் மற்றும் ப்ரார்தனைகள்.
மார்ச் 3ஆம் தேதி காலை 7 மணி முதல் 7ஆம் தேதி மதியம் 12 மணி வரை ஆன்மீக பயணம் செயல்படும். இந்த காலத்தில் பயண செலவுகள், உணவு ஆகியவை நமது அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படும்.
மூன்று வேளை உணவு, இரண்டு வேளை தேனீர் மற்றும் குடிநீர் வழங்கப்படும்.
பூஜைகள் மற்றும் இதர செலவுகள் பயண கட்டணத்தில் அடங்காது.
தியானம் மற்றும் ஜபம் ஆகிய ஆன்மீக பயிற்சி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இது ஆன்மீக பயணம் ஆன்மீக அறக்கட்டளையால் நிகழ்த்துவது என்பதால் சுற்றிப்பார்க்க செல்லும் சுற்றுலா அல்ல என்பதை உணர்ந்து முன்பதிவு செய்யவும்.
முன்பதிவுக்கு பிறகு ஸ்வாமி ஒம்கார் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச்செல்லபடுவார்கள்.
முன்பதிவுக்கு கடைசி நாள் : 10 பிப்ரவரி 2021.
0 கருத்துக்கள்:
Post a Comment