Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 18, 2013

கும்பமேளா அனுபவங்கள் - பகுதி 2


கும்பமேளா தொடர் பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. உண்மையை சொன்னால் எனக்கும் தான். கும்பமேளா தொடர் எழுத துவங்கும் முன் பிற தொடர் போல எழுதாமல் சற்று வித்தியாசமாக எழுத நினைத்தேன். 

வித்தியாசமாக என்றால் என்ன என விளக்குகிறேன். கும்பமேளாவை பற்றி ஆழ்ந்து யோசனை செய்துவிட்டு சங்கல்பத்துடன் தியானம் செய்வேன். ஆழ்நிலை தியானத்தில் இருந்து  வெளிவரும் பொழுது விரியும் காட்சியை எழுத்தாக பதிவு செய்வது.இதற்கு தியான முறை எழுத்து (Meditative Writings)  என பெயர்.

தியான முறையில் எழுதுவதால் என் கற்பனைக்கோ அல்லது எனது அறிவை அதில் செலுத்துவதோ கிடையாது. தியான காட்சியை பதிவு செய்வதால் சில நேரம் நான் கற்பனை செய்து எழுதுவதைவிட கும்ப மேளா தொடர் அருமையாக இருந்தது.கும்பமேளா தொடரில் வந்த காட்சிகள் உண்மையா? அதில் இருக்கும் சோமநாத், ஆதிநாத் எல்லோரும் நிஜமா? என கேட்டால் எனக்கு தெரியாது என்றே சொல்லுவேன். நான் கண்டதை உங்களுக்கு எழுதவில்லை, நான் தியானத்தில் கண்டதையே எழுதினேன்.

பலர் என்னுடன் கும்பமேளாவில் பங்குபெற வந்தவர்கள் சோமநாதரையும், ஆதிநாதரையும் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் என்னிடமும் அவர்களின் முகவரியை விசாரித்தார்கள். நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என சிவவாக்கியர் என்பவர் சொன்னதை இவர்கள் மறந்துவிட்டனர். நமக்குள்ளே இருக்கும் நாதரை தானே தேடவேண்டும்? 

கும்பமேளா தொடரில் முக்கியமாக ஒரு விஷயம் விட்டுப்போனது. அது கும்பமேளா என்றால் என்ன என்ற கருத்துத்தான். இது ஒரு முரண்பாடான வேடிக்கை.

இத்தருணத்தை பயன்படுத்தி கும்பமேளா என்பதை விளக்கிவிடுகிறேன். கும்பமேளா என்பது மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறும். அலஹாபாத், நாசிக், உஜ்ஜயனி, ஹரித்வார் ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுவதால், ஒவ்வொரு நகரிலும் பன்னிரு வருடத்திற்கு ஒருமுறையே கும்பமேளா நடக்கும். அலஹாபாத் என்ற நகரில் நடக்கும் கும்பமேளா மஹாகும்பமேளா என அழைக்கப்படுகிறது. இந்த நகரில் கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகளின் இணைவு ஏற்படுவதால் முக்கியமான ஆன்மீக நகரமாகவும், கும்பமேளாவின் ஆரம்ப நகரமாகவும் கருதப்படுகிறது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா பூர்ண கும்பமேளா என அழைக்கப்படுகிறது. கிரக நிலையிலும், அன்மீக நிலையிலும் இத்தகைய கும்பமேளா 367 வருடங்களுக்கு ஒரு முறையே வரும் என கூறப்படுகிறது. என்ன தவம் செய்தேனோ பூர்ண கும்பமேளாவில் திளைத்திட என இன்றும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். 

முக்கியமாக பல விஷயங்களை அங்கே கண்டோம். ஒரு நாள் இடைவிடாத மழையால் நாங்கள் தங்கிய குடிலுக்குள் நீர் சூழ்ந்துவிட்டது. முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்க இருக்க இடம் இல்லாமல் பரிதவித்து கோபமும், ஆற்றமையுடன் வெளியே வந்து நின்றோம். ஆனால் எங்கள் அருகே இருந்த பிற குடிலில் வசிப்பவர்கள், சாப்பாடு தட்டில் கரண்டியை வைத்து தாளமிட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் புரியாமல் பார்க்க, “தினமும் கங்கைக்கு நாம் குளிக்க செல்லுவோம். ஆனால் இன்று கங்கையே எங்களை தேடி வந்துவிட்டாள்” என அவர்கள் சொல்லி கொண்டாடினார்கள். வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் கொண்டாட்டம் செய்யலாம் என்பதை அவர்களிடத்தில் கற்றுக்கொண்டோம். மேலும் எங்களின் கோப உணர்ச்சிக்காக வெட்கி தலைகுனிந்தோம்.

மேலும் பூர்ண கும்பமேளாவில் நடைபெற்ற சக்தி தரிசனம் மற்றும் பூர்ண யாகம் ஆகியவை மிக உன்னதமாக இருந்தது. அதில் பங்குபெற்ற சிலருக்கு நல்ல அனுபவம் கிடைக்கப்பெற்றது.



இப்படி அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவிதத்தில் என் கும்பமேளா அனுபவங்களின் வாயிலாக ஏற்பட்ட திருப்தி அடுத்த 366 வருடங்களுக்கு தாங்கும். பிறகு அடுத்த பூர்ண கும்பமேளாவில் எனது அனுபவங்களை பகிரும் வரை காத்திருங்கள். ஜஸ்ட் 366 வருடங்கள் தானே?

-ஓம் தத் சத்-

5 கருத்துக்கள்:

sarul said...

கும்பமேளா என்ன அடுத்த பதிவிற்கே காத்திருக்கப் பொறுமையில்லையே ,

தனிப்பட்ட கேழ்விக்கு ஈ மெயிலில் பதிலளிப்பீர்களா ?

நன்றி

Unknown said...

swamiji please share your experiences. are we not eligble to know your experiences.

திவாண்ணா said...

ஜஸ்ட் 366 வருடங்கள் தானே?//
அவ்வளோதானே? இப்பவே அங்கே போய் பாத்துட்டு வந்தா போச்சு!

arul said...

very nice

geethasmbsvm6 said...

366 வருடங்களையும் நாட்களாகக் கழிச்சுட மாட்டோமா. காத்திருக்கேன். :))))

//தனிப்பட்ட கேழ்விக்கு ஈ மெயிலில் பதிலளிப்பீர்களா ?

நன்றி//

@சாருல், சான்சே இல்லை. நான் நான்கைந்து மாதங்கள் முன்னர் அவரோட திருமந்திரப் புத்தகத்தில் இருந்து சில சந்தேகங்களைக் கேட்டு மடல் போட்டேன். இன்று வரை கவனிக்கவே இல்லை. :((((((( ஆனால் உங்களுக்கு எப்படியோ தெரியாது. :))))