Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 16, 2012

குழலினிது யாழினிது - பகுதி 4 +18


நம் உடலின் சமநிலை தவறுவதற்கு காரணம் நாம் தான் என கூறினேன் அல்லவா? அது எப்படி என காண்போம்.

ஊன் உடல் என்பது நம் நேரடியாக தொடர்புகொள்ளதக்க வகையில் இருக்கிறது. நம் உணவு மற்றும் உடை பழக்கம் ஆகியவை ஊன் உடம்பை நேரடியாக தாக்குகிறது.

பிறப்புறுப்பு மற்றும் கருப்பையின் செயல்பாடுகள் இயந்திர கருவிபோல செயல்படுவதில்லை. இவை செயல்பட மனம், பிராணன் மற்றும் அறிவு உடல் முக்கிய பங்கை வகிக்கிறது.

நவீன மருத்துவத்தில் ஒருவரின் உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு என்பதை கண்டறிகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஏன் அது ஏற்றத்தாழ்வு அடைந்தது? அச்சுரபிகளை ஏன் இயல்பாக செயல்பட வைக்க முடியாதா என்ற ஆய்வுக்கு செல்லாமல், செயற்கையாக வெளியிலிருந்து ஹார்மோன்கள் செலுத்தப்படுகிறது.

இதன் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படுதல், உடல் பருமன் அதிகரித்தல் என பல விளைவுகள். அதில் உச்சமாக மேலும் நம் உடல் சமநிலை தவறிவிடுகிறது. கருத்தரிப்பு மையங்களில் இவர்கள் ஹார்மோன் ஊசி செலுத்தும் முன் நம்மிடம் வாங்கும் கையெழுத்தில் பல அபாயங்கள் உண்டு என பலருக்கு தெரியாது. மருந்து தொழிற்சாலைகளின் வியாபாரமும் இதன் பின்புலத்தில் உண்டு.

ஹார்மோன்கள் நம் பிறக்கும் பொழுது இயற்கையாக இருந்தது. அவற்றை ஏன் செயற்கையாக உள் செலுத்த வேண்டும்? இயற்கையாக மீண்டும் உற்பத்தி செய்ய இயலாதா? என நாம் சிந்திப்பதில்லை.

உற்றார் உறவினர் கேட்கிறார்களே, குழந்தை இன்னும் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் கருத்தரிப்பு மையத்தில் என்ன சொல்லுகிறார்களோ அதை சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனதை கொடுக்கிறது.

1977க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குழந்தை இன்மை இயல்பாக இருக்கிறது என்றேன் அல்லவா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு பிறகு தான் பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தில் நஞ்சை கலந்தோம்.

மேலும் குறிப்பிட்ட தானியங்களே விளைவிக்க துவங்கினோம். ரசாயனம் கொண்ட ஒரே வகை தானியத்தை உண்டு வந்ததால் நம் சந்ததியினர் மலட்டு தன்மை நோக்கி சென்றனர்.

குழந்தையின்மையை 30 சதவிகிதம் முடிவு செய்வது உணவு பழக்கம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நம் ஊன் உடல் உணவால் ஆனது. அதை மேம்படுத்தவும் பிறப்புறுப்பின் செயல்கள் செறிவு பெறவும் உணவு பழக்கம் மிகவும் முக்கியம்.

அரிசி உணவு என்பது நம் கலாச்சார உணவு அல்ல. வருடத்திற்கு ஒரு முறை விழா காலத்தில் மட்டும் அரிசி சாப்பிட்ட நாம். இப்பொழுது தினமும் சாப்பிடுகிறோம். குறைந்த பட்சம் இருவேளை உணவில் அரிசி இருக்கிறது. விவசாயத்தில் அதிக நஞ்சு கொண்டு ஒருவாக்கப்படும் தானியம் அரிசி.

கம்பு, திணை, சோளம், பயிறு என பல்வேறு தானியம் கொண்ட உணவு முறையை இழந்துவிட்டோம். இவைகளை தினமும் உணவில் இணைத்தாலே நமக்கு ஹார்மோன் செயல்கள் மீண்டும் புத்துணர்வு பெறும். மேலும் குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவை எல்லாம் நம் ஊன் உடலை பாதிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். உணவை சீராக்கினால் உடலை சீராக்கலாம்.

தினமும் நஞ்சு கலந்த உணவு உண்டு பிறகு குழந்தை இல்லை என சொல்லுவது யாருடைய தவறு?

ஊன் உடல் பாதிப்புக்கு உணவு மட்டுமல்ல உடையும்,பழக்க வழக்கமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

(கரு உருவாகும்)

9 கருத்துக்கள்:

Sivakumar said...

ஸ்வாமி, ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது சரியா? தவறா?

arul said...

nalla pathivu

Sudhar said...

//கம்பு, திணை, சோளம், பயிறு// இதுவும் நஞ்சு இல்லாமல் விளைவிக்க படுகிறதா ? (அரிசி அளவு இல்லாவிட்டாலும்)

Sanjai said...

நன்றி ஸ்வாமி. பயனுள்ள மற்றும் பல புதிய தகவலும் கூட.

Thirumal said...

//அச்சுரபிகளை இயல்பாக செயல்பட வைக்க முடியாதா என்ற ஆய்வுக்கு செல்லாமல், செயற்கையாக வெளியிலிருந்து ஹார்மோன்கள் செலுத்தப்படுகிறது.//

நவீன மருத்துவத்தின் படுகேவலமான செயலாக இருக்கிறது. பணம்தான் ஒரே இலக்கு போல இவர்களுக்கு..


//ஊன் உடல் பாதிப்புக்கு உணவு மட்டுமல்ல உடையும்,பழக்க வழக்கமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. //

ஆர்வத்தைத் தூண்டுகிறது.
எம்மைத் திருத்திக் கொள்வதற்குக் காத்திருக்கிறோம்.

மதி said...

>>>உடையும்,பழக்க வழக்கமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது<<<

உடையும்....!!!??

கனவு பையன் said...

"AC"-ல் தம்பதியர் இருப்பது சரியா ?

விஜி said...

:))) மங்களம் உண்டாகட்டும்

sarojini said...

swami,therinthu kolla vendiya karuthukkalai sollukireer,
namaskaram.