Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, February 6, 2012

காசி திருப்பயண குறிப்புகள்
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாணவர்களுடன் காசி பயணம் மேற்கொண்டேன். ஏதோ ஒரு சக்தி என்னை வருடத்திற்கு ஒரு முறையேனும் காசிக்கு அழைத்து சென்றுவிடுகிறது. இம்முறை மாணவ ரூபத்தில் அச்சக்தி என்னை தூண்டி இவ்வருடமும் காசியை சுவாசிக்க செய்தது. ஆமாம்.. மாணவர்களின் காரணம் என சொல்லி காசிக்கு சென்றாகிவிட்டது. 2008 பிறகு காசியில் மாணவர்களுடன் செல்கிறீர்களே என்ன வித்தியாசம் உணர்தீர்கள் என கேட்டார்கள். காசி பல்லாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறது. மாணவர்களை தவிர அனைத்தும் அதே போல இருந்தது. தன்னை மாற்றிக்கொள்ளாமல் வருபவர்களை மாற்றுவது தானே காசியின் இயல்பு? 

காசி பயணத்தில் உணர்ந்தவைகளை சிறு தொகுப்பாக இங்கே தருகிறேன்.

 1. ஜனவரி மாதத்தில் குளிருடன் காசியை அனுபவிக்க திட்டமிட்டு சென்றதால் நாள் முழுவதும் மிதமான குளிருடன் காசி ரம்யமாக இருந்தது. அதே நேரம் குளிர் பழகாத மாணவர்களுக்கு மிகவும் சிரமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் குளிரை அனுபவித்திருந்தாலும் எனக்கு காசியின் குளிர் எலும்பு மஜ்ஜையை துளைத்தவண்ணம் இருந்தது. எனக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் மேலோங்கியது. சிலர் ஆரம்ப நாட்களில் குளிர் ஒன்றும் இல்லை என கூறி வீராப்பாக இருந்தவர்கள் இரண்டு நாட்களில் பக்கத்தில் நின்றாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு குல்லாய் போட்டு தங்களை மறைத்துக் கொண்டார்கள்.

 2. கங்கையும் அவளின் பிரவாகமும் பிரிய மனமில்லாமல் கண்டு களித்தோம். நீராடியது. மட்டுமல்லாமல் கங்கை நீரில் மூழ்கி ஜபம் செய்வது மற்றும் முன்னோர்களுக்கு ஆர்க்கியம் அளித்தது என கங்கையின் மடியில் தவழ்ந்தோம். கங்கை கரையில் உள்ள வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்து மண் குளியல் செய்து மகிழ்ந்தார்கள்.  

 3. காசி மட்டுமல்லாமல் கயா, திரிவேணி சங்கமம் மற்றும் வித்யாச்சல் என பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணம் செய்தோம்.

 4. திரிவேணி சங்கமத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தின் மேல் படகில் அமர்ந்தவாரு தன்வந்திரி யாகம் செய்தோம். உடலக உயிர்களின் ஆரோக்கியம் மற்றும் முக்திக்கு ப்ரார்த்தனைகளும் நடைபெற்றது.
 5. காசியில் மஹாமிருத்யன்ஞெய் யாகம் செய்தோம். இறப்பற்ற முக்தி நிலையை அடைய அனைவரும் பரார்த்தனை செய்தோம். யாகத்தின் பொழுது மிக உன்னத நிலையும் இறை அனுபூதியும் கிடைக்கப்பெற்றோம்.
 6. மாணவர்கள் கயாவில் பிண்ட தர்பணமும், காசியில் தை அமாவாசையன்று முன்னோர்களுக்கு ஆர்கியம் செலுத்தியும் வழிபாடு செய்தார்கள்.
 7. பயணத்தின் பொழுதும் ஓய்வெடுக்கும் பொழுதும் மாணவர்களுடன் சத்சங்கமும் கிண்டல்களுடனும் மகிழ்ச்சியாக கழிந்தது.
 8. குளிர் இரவில் கங்கை கரையில் நெருப்பு மூட்டி சத்சங்கம் செய்தோம். சத்சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் காலபைரவ ரூபங்கள் எங்களின் அருகே சூழ்ந்து சப்தமிட துவங்கியது.
 9. இரண்டு பைரவர்கள் நான் அமைர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து ஏதோ கூற விரும்பின.. சில நிமிடங்களில் நெருப்பு இருந்த தரை பெரும் சப்தத்துடன் வெடித்தது. இதனால் நெருப்பு கனல்கள் உயர பறந்து அனைவரின் மேலும் நெருப்பு மழையாக பொழிந்தது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தை அறிகுறியால் உணர்த்திய காலபைரவரே எங்களை காப்பாற்றினார் என உணர்ந்து கொண்டோம். கால பைரவனின் ஊரில் இந்த திருவிளையாடல் கூட நடக்கவில்லை என்றால் அவருக்கு என்ன மதிப்பு இருக்கும்?
 10.  மாணவர்கள் காசிக்கு வரும் பொழுது ஒரு பையுடன் வந்து திரும்ப செல்லும் பொழுது மூன்று பையுடன் சென்றார்கள். காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்பதால் எளிமையையும், சிக்கனத்தையும் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். :) இந்த புதிய பையில் அப்படி என்ன வைத்திருக்கிறீர்கள் என சில மாணவர்களை கேட்டதற்கு , காசியில் கிடைத்த புண்ணியத்தை இரண்டு பையில் நிரப்பி எடுத்து செல்வதாக கூறினார்கள். :)
   
 11. காசி பயணத்தால் மாணவர்களில் பலர் மிக மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் காணப்பட்டனர். அவர்களின் காசி அனுபவங்களை என்னிடம் எழுதி கொடுத்திருக்கிறார்கள். அதையும் விரைவில் இங்கே வெளியிடுகிறேன்.

6 கருத்துக்கள்:

yrskbalu said...

thanks . expecting others also

Sanjai said...

//காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்பதால் எளிமையையும், சிக்கனத்தையும் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.//
This is ultimate :)

Shakthiprabha said...

நன்றாக இருந்தது ஸ்வாமிஜி உங்கள் அனுபவம். உங்கள் மாணவர்கள் குடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. பாலூ,
திரு.சஞ்சய்,
சகோதரி சக்தி பிரபா,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

கிரி said...

பதிவிற்கு நன்றி.

காசி செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தங்களின் இந்தப்பதிவு அதை மேலும் அதிகம் ஆக்குகிறது.

மதி said...

மார்ச் மாதம் நானும் காசி செல்கிறேன், உங்கள் கட்டுரை என் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியது....ஒவ்வொரு நாளும் காத்துகொண்டுருக்கிறேன் காசியை சுவாசிக்க...

மிக்க நன்றி ஸ்வாமி......