Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, December 7, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 5

நம்மிடையே அனேகர் ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன் என தன்னை தானே ஏமாற்றிக்கொள்பவர்கள். போலி சாமியார்கள் என பத்திரிகைகளில் பலர் எழுதுகிறார் அல்லவா? ஆனால் போலி பக்தர்கள் பற்றி யாரும் எழுதுவதில்லை. காரணம் பெரும்பான் மையானவர்கள் இத்தகையவர்களே. இவர்களை பற்றி சில கருத்துக்களை கூறினால் இவர்களை நீங்கள் அடையாளம் காண உதவும்.

கொல்லிமலைக்கு போயிருக்கேன், காளகஸ்திக்கு போயிருக்கேன், கைலாஷ் பார்த்தாச்சு என்பார்கள். சரி இத்தனை கோவில் போனையே அதனால் உனக்கு என்ன ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டது என கேட்டால் அவ்வளவு தான், திருஞான சம்பந்தரும் இப்படித்தான் கோவில் கோவிலா போனாரு என திருஞான சம்பந்தரை அசிங்கப்படுத்துவார்கள்.

தாங்கள் ஆன்மீகவாதி தான் என்றும் தான் கடினமாக ஆன்மீக பயிற்சிகளை செய்வதாகவும் நினைத்துக்கொள்வார்கள். இன்னும் எளிமையாக சொன்னால், “ஸ்வாமி உங்களை விட நான் கடினமாக முயற்சிக்கிறேன் இன்னும் ஏன் எனக்கு ஞானம் வரலை?” என கேட்பார்கள். இதில் உள்ள குயுக்தி என்னவென்றால் எனக்கே வரலையே உனக்கு எல்லாம் எங்க ஞானம் வந்திருக்கும் என்பதே பொருள்.

சில நேரங்களில் அவர்களின் கடுமையான ஆன்மீக பயிற்சி பற்றி பேசுவார்கள். கடந்த பத்து நாட்களாக கடுமையாக விரதம் இருக்கிறேன் என்பார்கள். ஓ அப்படியா, எப்படிப்பட்ட விரதம் என்றால், காலையில் 4 செவ்வாழையும் ஒரு டம்ளர் பால் மட்டும் தான். மதியம் இரவு மட்டும் தான் சாப்பாடு என்பார்கள். இது தான் அந்த கடினமான விரதம். அப்ப விரதம் இருக்கிறதா சொன்னீங்களே அது எப்போனு கேட்டால் இவர்களுக்கு கெட்ட கோவம் வரும் :)

பிரதோஷ விரதம் இருக்கிறேன் பேர்வழி என காலை மதியம் சாப்பிட மாட்டார்கள். மாலை 6 மணிக்கு தரிசனம் முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குள் சென்றார்கள் என்றால் வேறுயாருக்கும் உணவு கிடைக்காது. இதன் பெயர் பிரதோஷ விரதமாம்.

இப்படி விரதம் என்பதே தெரியாமல் உண்மையான விரதத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவர்கள்..! இப்படிபட்ட ஆட்கள் தான் நம்மில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சபரிமலை விரதம் இருந்தால் எப்படி இருக்கும்?

ஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது பக்தி என்பதை கடந்து உங்களின் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் விரதமாகும். வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவ்விரதத்தை சரியான வழிமுறை அறிந்து பின்பற்றினால் நிச்சயம் உங்களின் வாழ்க்கை அமைப்பில் மாறுதல் இருக்கும்.

பலருக்கு இந்த விரத முறையின் அடிப்படை தெரியாமல் தாங்கள் வகுத்து கொண்டதே விரத முறை என இருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானது போல விரதத்தின் அடிப்படையை வளைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் விரதங்களின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் நீர்த்துப்போய்விடுகிறது.

சாஸ்தா விரதத்தை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.

விரதம் 48 நாட்கள் இருக்க வேண்டும். பலர் இதை 45 நாள் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல. 48 நாள் என்பதே ஒரு மண்டலம். மண்டலத்தின் துவக்கத்தில் மாலை அணிந்து, தினமும் அணியும் உடை களைந்து கருப்பு அல்லது நீல வண்ண உடை அணிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்தாவிற்கு விரதம் இருப்பது என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. உடை, உணவு, பழக்க முறை என மூன்று தளங்களில் விரதம் அனுசரிக்கப்பட வேண்டும்.

உடை அணிதல் :

கருப்பு மற்றும் நீல வண்ணம் தனிமையை குறிக்கும். ஒதுங்கி இருத்தல் அல்லது உலக விவகாரங்களில் இருந்து தனித்து இருத்தல் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் சனி என்ற கிரகம் சாஸ்தாவை குறிப்பதால் அக்கிரகத்தின் நிறமும், செயலும் சாஸ்தாவின் தன்மையை ஒத்து இருக்கிறது.

உடை தளர்வான உடையாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஜோடி வேட்டிகள் போதுமானது. ஒன்று இடுப்பிலும், மற்றது உடலிலும் போர்த்தி இருக்க வேண்டும். மற்றவை அடுத்த முறை பயன்படுத்த வைத்திருக்க வேண்டும். சட்டை, பனியன் போன்ற தைத்த உடைகள் அணியக்கூடாது. உடை விஷயம் விரதகாலத்திலும், சபரிமலைக்கு செல்லும் பொழுதும் பின்பற்ற வேண்டும்.

பலர் தாங்கள் பணியாற்றும் இடத்தில் உடை கட்டுப்பாடு உண்டு அதனால் சின்ன துண்டை மட்டும் கழுத்தை சுற்றி போட்டுக்கொள்கிறோம் என்கிறார்கள். இது தான் விரதத்தின் விதிகளை வளைப்பது என்கிறேன்.

உங்களுக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். உடை என்பது உங்களின் ஆன்மீக பயிற்சிக்கு தடையானால் ஆன்மீக பயிற்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உங்களின் சுயநலத்திற்கு அல்ல.

ராணுவம் துவங்கி மென்பொருள் துறை வரை பலர் சபரிமலைக்கு விரதம் இருக்கும் பொழுது உடை விஷயத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஆனால் ராணுவம் முதல் மென்பொருள் துறைவரை இருக்கும் பிற மத சகோதரர்கள் இப்படி இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். ஒரு சீக்கியரை உன் முடியை கத்தரித்துவிட்டு பணிக்கு வா என்றால் அவர் என்ன முடிவு எடுப்பார்? நம்மை போல முடியை மழித்துவிட்டு, அவர்கள் சொல்லும் உடையில் சென்று வேலை செய்வாரா என யோசிக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் சீக்கியர் அப்படி இருக்க போகிறார். இதை உங்களின் கம்பெனி அனுமதிக்கிறது என்றால் இரண்டு மாதம் மட்டும் உங்களை அனுமதிக்காதா? இது யாரின் தவறு?

விரதத்தை கடைபிடிக்க சுகந்திரம் இல்லாத நீங்கள் அப்படி ஏன் விரதம் இருக்க வேண்டும்? என் கணவரும் கச்சேரிக்கு போனார் என்ற கதையாக நானும் சபரிமலை விரதம் இருந்தேன் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது தானே?

உணவு முறை :

காலை 11 மணி மற்றும் மாலை 7 மணிக்கு என இரண்டு வேளைகள் உணவு உண்ண வேண்டும். உணவு எளிய உணவாகவும், குறைந்த அளவும் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உண்ணுவதற்கு முன்னும் குளித்து துவைத்த ஆடை உடுத்த வேண்டும்.

நாம் உண்ணும் உணவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்த உணவாக இருக்க வேண்டும்.

வாழை இலை அல்லது நமக்கு என ஒரு தட்டு வைத்து அதில் மட்டுமே உண்ண வேண்டும். சாப்பாடு மேஜை பயன்படுத்தாமல் நிலத்தில் பாய் அல்லது சிறிய துணி விரித்து அமர்ந்து உண்ண வேண்டும்.
விரத காலத்தில் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது அன்னதானமோ, பிட்ஷை எடுத்தோ உணவு உண்டு இருக்க வேண்டும். வீட்டில் மட்டும் உண்ணும் உணவு விரதத்திற்கு பயன்படாது.

காலை அல்லது இரவு ஏதேனும் ஒரு வேளை மட்டும் பழங்கள் அல்லது பச்சை காய்கறிகள் உண்ணுவது நல்லது. சாஸ்த்தாவிற்கு அவல்,வெல்லம் மற்றும் பழம் நைவத்தியம் செய்துவிட்டு அதை மட்டும் உண்ணலாம்.

உணவுமுறை விரதம் இருப்பது நம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, பிறருக்கு உணவு வழங்குவதிலும் இருக்கிறது. நம் விரத காலத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வதும், அன்னதானம் செய்பவர்களுக்கு கைங்கரியம் செய்வதும் நல்லது.

பழக்க வழக்கங்களில் விரதம் கடைபிடிப்பது என்பது என்ன என பார்ப்போம்..

(சரணம் தொடரும்)


20 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

பாஸ்ட் புட் அது இதுன்னு சாப்பாட்டுலேயே தினுசுகள் வந்துட்டு, விரதம் இருப்பதில் பாஸ்ட் விரதம் தப்பா சாமி :)

palani said...

நீங்கள் சொல்வதை
முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன் சுவாமி. ஆனால் வெளி நாட்டில் உள்ளவர்கள் என்ன செய்வது? இங்கு சில விதிமுறைகளை தவிர்கமுடியாட காரணங்களால் செய்ய முடிவதில்லை. அதனை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். அருள் மிகும் ஐயப்பன் மன்னிப்பாரா?
தூய பக்தியோடு சில விதிமுறைகளை தளர்த்தி ஆண்டவனை வழிபட முடியாதா? ஏக்கத்துடன் கேட்கிறேன்.

ரிஷபன்Meena said...

போலி பக்தர்களை பற்றி யாருமே கவலைப் படுவதில்லை என்பது உண்மைதான்.

நீங்கள் கூறியபடி விரதம் அனுஷ்டிக்காதவர்களை மிதவாத போலி பக்தர்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இந்த வகையினரால் அத்தனை கெடுதல் கிடையாது.

இதிலே தீவிர போலிபக்தர்கள் தான் டேஞ்சர். உட்கார்ந்தால் எழுந்தால் சாமி பெயரை சொல்வார்க்ள், பட்டைபட்டையாய் விபூதி அடித்து இருப்பார்கள் அல்லது அந்த மதச் சின்னத்தை தரித்திருப்பார்கள். இந்த மாதிரி பக்தியாய் இருப்பது போல் விளம்பரப் படுத்திக் கொள்ளும் பெரும்பாலனவர்களிடம் ஒழுக்கக் குறைவையும், ஏமாற்றும் குணத்தையும் நான் கண்டிருக்கிறேன்.

நிகழ்காலத்தில்... said...

இந்த இடுகையின் பலபகுதிகள் எனக்குன்னே எழுதுன மாதிரி இருக்கு...:)))))))))))))))

சபரிமலை தொடரின் இந்த பகுதி வார்த்தைக்கு வார்த்தை நிறைவாக இருக்கிறது...

sowri said...

Very nice and clear explanation Swami

jagadeesh said...

i agree.. nice explanation,,at right time..

smart said...

48 நாட்கள் வேட்டிகட்டி, அன்னதானமிட்டு இரண்டு நேரம் சாப்பிட்டி விரதம் இருக்க முடியாவிட்டால்[உணவு முறை பழக்க வழக்கம் கடைபிடிப்பதில் சிக்கலில்லை] விரதம் இருக்க வேண்டாம் என்கிறீர்கள். இந்த முறைகளில் தொழில் செய்பவர்களில் எத்தனை பேரால் முடியும்? அதுவும் அரசு அதிகாரிகள், கார்பரேட் அதிகாரிகளால் முடியாது. அதற்காக லீவு போட்டு விரதமிருந்தால் புவ்வாவிற்கு என்ன செய்ய? அப்படியும் மக்கள் இருந்தால் எப்படி அந்நிய நாடுகளுடன் போட்டிப்போட்டு இந்தியா முன்னேறமுடியும்?

இதனால்தான் சிலர் விரதங்களை முடிந்த அளவு கடைபிடிக்கிறார்கள். அதற்காக அவர்களை போலி பக்தர்கள் என்பது முறையாக தெரியவில்லை. அறியாமை என்று சொல்லாமே

Arul said...

சபரி மலை பற்றிய செய்திகள் பயனுள்ளவையாக உள்ளன.மிக்க நன்றி...

Mahesh said...

Nice post. But pragmatism is the order of the day. This is not not seen only in Sabarimalai viratham. You shoudl see people coming to Ayodhya Mandapam in Mambalam on Avanai Avittam day. They come just in time the poonals are distributed. Sit with their shirts / banians on and "wear" the poonal over it. And remove it before they get into their car. Why on the earth should they be doing it? For what? Who are they afraid of?

All said, those who deceive themselves are much harmless than who deceive others in the name of god. Agree??

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

நம்ம ஆட்களுக்கு எல்லாமே பாஸ்ட்டா வேனும். அதனால தான் பாஸ்ட்டா ஞானம் குடுக்கறவங்களும் பெரிகி இருக்காங்க.

உங்க வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பழனி,

நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் அது தடை இல்லை. இந்தியாவிற்கு இரண்டு மாதம் விடுமுறையில் வருகிறீர்கள் என்றால் அச்சமயம் விரதம் இருக்க முயற்சிக்கவும்.

முழுமையாக விரதம் இருக்க முடியாமல் வருடா வருடம் விரதம் இருப்பதை விட, ஒரு முறை விரதம் இருந்தாலும் திருப்தியாக இருப்பது என்பது நம் கையில் இருக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரிஷபன் மீனா,

//இந்த வகையினரால் அத்தனை கெடுதல் கிடையாது.//

கெடுதல் பிறருக்கு என்பதை காட்டிலும் தனக்கு தானே கெடுதல் செய்வதே மிகவும் கொடுமையானது.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலத்தில் சிவா,
திரு செளரி,
திரு ஜெகதீஷ்,
திரு அருள்,
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்மார்ட்,

மனமிருந்தால் மார்கமுண்டு.
நம் ஆணவமே எதுவும் முடியாது என்கிறது.

இஸ்லாமியர் வேலை நேரத்தில் தொழுகை செய்வதையும்,
பதிவில் சொன்னதை போல சீக்கியரையும் யாரும் தடை செய்வதில்லை.
உங்களின் பக்திக்கு நீங்களே தடையாகவும், வெட்கப்படுவதாகவும் இருந்தால்
வெளிஉலகம் கண்டிப்பாக உதவாது.

ஸ்மார்ட்டாக இருப்பதைவிட விரதத்தில்
ஸ்ட்ரிக்டாக இருங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்களின் கருத்து மூலம் பார்ப்பனிய துவேஷம் தெரிகிறது ;)

பார்ப்பனிய எதிரான குரூப்பாக இருப்பதால் அவர்கள் செய்வது உங்களுக்கு எல்லாமே தவறாக தெரிகிறது ;)

உலகம் மந்திரத்தால் சுழலும், மந்திரம் பிராமனனால் உயரும், ஆக உலகம் பிராமனனால் சுழலுகிறது என்பது நீங்கள் படித்ததில்லையா ;)

தற்காலத்தில் உலகம் சுழலுவதை கொண்டு அவர்கள் சரியாக காயத்திரி சொல்லுகிறார்கள் என முடிவுக்கு வரலாம். அதனால் வீண் பழி வேண்டாம் ;))

Mahesh said...

ofcourse you are right swami omkar.... being a brahmin by birth, I can say I have more insight into what modern era "brahmins" do :))))))))))

Anonymous said...

நீங்கள் சொல்றதை பார்த்தால், முக்கால் வாசி ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு போக முடியாது போல. ஆனால் அது தான் சரி. வளைந்து வளைந்தே மனித மனத்திற்கு கூனல் விழுந்துவிட்டது.

ஒரு முறை செய்தாலும் 100% சரியாக முயற்சி செய்ய வேண்டும்.

பிராமண கொசுத்தொல்லை தாங்க முடியல.

virutcham said...

விரதங்கள் பற்றிய கட்டுரை உபயோகமா இருக்கு. இதில் உடை கொஞ்சம் சிரமம் என்றே தோன்றுகிறது. சில IT அலுவலகங்களில் வெளிப்படையாகவே தடை இருக்கிறது. அதுவும் client விசிட் சமயங்களில் a big no சொல்லிவிடுவார்கள். யாராவது தீவிரமாக முயற்சி செய்து மாற்றம் செய்ய முயற்சிக்கலாம். அலுவலகத்துக்கு உள்ளே குளிர், வெளியே கொசு என்று சொளகர்யங்களுக்கு பழக்கப் பட்டு விட்ட உடம்பு சில விஷயங்களை ஏற்க மறுக்கும். தீவிர விரதம் என்று பாதியில் விட்டு விடுவதை விட சில வளைத்தள்கள் பரவா இல்லை என்றே தோன்றுகிறது. இது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பது தெரியும்.
இப்போ மக்கள் ஆன்மிகத் தேடல்களுக்கு கோவில்கள் போகிறார்கள் என்பதை விட கோரிக்கை வைக்க அல்லது நிறைவேற்றப்பட்ட கோரிக்கைக்கு நன்றி செலுத்தவே செல்கிறார்கள்.

சபரி மலைக்கு கட்டு கட்டறேன்னு loud speaker கத்த (அலற ) விடும் இந்தப் பழக்கம் எப்படி ஏன் வந்ததோ ? எனக்குப் புரியவில்லை.

Matangi said...

Swamiji, from your message and replies, all I can infer is that One should look within and be YourSelf, rather than blame others/situations etc. Basically we lack the understanding - we fail to see the point inspite of the lessons we learn everyday. Thank you for your explanations.

Hari said...

very good