Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, September 6, 2010

நமக்கு நமிதா பற்றி தெரியும், நிமித்தா பற்றி தெரியுமா?

நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் தேவையில்லாத விஷயங்களாகவே இருக்கிறது. ஒரு நாள் இரவில் தனிமையில் அமர்ந்து அன்று காலை முதல் எத்தனை விஷயங்கள் உருப்படியாக நம்முள் சென்றது என சிந்தித்து பார்த்தோம் என்றால் வேடிக்கையாக இருக்கும். மாநகராட்சி குப்பை லாரியில் கூட இவ்வளவு சரக்கு இருக்காது என்ற முடிவுக்கு வருவீர்கள்.

எப்படி ஒரு விஷயத்தை குப்பை அல்லது நன்மையானது என முடிவுக்கு வருவது என கேள்வி எழலாம். உங்களுக்குள் சென்ற ஒரு கருத்து உங்களின் வாழ்க்கையை 0.01% சதவிகிதமேனும் முன்னேற்றுமாயின் அது நன்மையை கொடுக்கும் வைரம். அதைவிடுத்து ஒன்றும் பயனில்லாத கருத்து என்றால் அது நமக்கு தேவையற்றது. விலை மதிக்க முடியாத மனித ஞாபக அடுக்கில் இருக்கும் மக்காத குப்பைக்கு சமம்.

நிற்க. தலைப்பில் இருக்கும் விஷயத்திற்கே நீங்கள் வரவில்லையே என நினைத்தால் நீங்கள் குப்பை லாரி குத்தகைதாரர் என அர்த்தம். வைரத்தை தேடுபவர் என்றால் மேற்கொண்டு கட்டுரையை தொடருங்கள்.

ஜோதிட சாஸ்திரம் ஆறு முக்கிய பகுதிகளால் ஆனது என விவரிக்கிறார் பராசர மஹரிஷி. அவை கணித, சமிதா, கோள, முஹூர்த்த, ப்ரசன்ன, நிமித்த என்பவையாகும். இந்த ஆறு பிரிவுகள் ஷடங்கம் (ஷட் + அங்கம்) என பெயர். வட மொழியில் ஷட் என்றால் ஆறு. ஷடங்கம் என்ற வார்த்தையே திரிந்து சடங்கு என ஆகியது.

ஜோதிட ஷட் அங்கங்களில் கணிதா மற்றும் கோளா என்பது ஜாதகம் கணிப்பதற்கும், சமிதா என்பது பலன் சொல்லுவதற்கும், முஹூர்த்தா என்பது நல்ல நேரம் முடிவு செய்வதற்கும் பயன்படுகிறது. ஆருடம் பார்க்கும் முறை ப்ரசன்ன என அழைக்கிறார்கள். இதில் கடைசியாக இருக்கும் பகுதி தான் நிமித்தா - நன்றாக படியுங்கள் நிமித்தா...நிமித்தா... :)

நிமித்தா என்பதை தமிழில் நிமித்தம் என கூறலாம். இதை மட்டும் தான் ‘ம்’ என முடிக்கும் படி கூறவேண்டுமா அல்லது அந்த பெயரிலும் ம் என சேர்க்கலாமா என என்னிடம் கேட்டால் நீங்கள் இன்னும் குப்பையை சேர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பேன். :)

ஜோதிடத்தின் பிற அங்கங்களை கற்றுக்கொள்ள நீங்கள் கொஞ்சம் அறிவை கசக்க வேண்டும். நிமித்தம் பற்றி அறிந்துகொள்ள அப்படி ஒன்றும் மெனக்கட வேண்டியது இல்லை. விழிப்புணர்வுடன் உங்களின் புலன்களை வைத்திருந்தால் போதுமானது.

நிமித்தம் என்றால் என்ன? ஜோதிடம் என்பது முக்காலத்தையும் கூறும் ஒரு சாஸ்திரம், அதன் ஒரு பகுதியான நிமித்தமும் இச்செயலையே செய்கிறது. உங்கள் வாழ்க்கை சம்பவங்களை பற்றி நீங்கள் நினைக்கும் பொழுது அந்த ஷணத்தில் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வு வாழ்க்கை சம்பவத்தை பற்றிய ஒரு குறிப்பை சூட்சுமமாக உணர்த்தும். இதை நிமித்தம் என்கிறோம்.

உதாரணமாக உங்கள் நண்பர் நாளை நான் ஒரு இண்டர்வியூவுக்கு செல்லுகிறேன் என கூறும் பொழுது மற்றொரு நண்பர் இனிப்புடன் வந்தார் என வைத்துக்கொள்வோம். இண்டர்வியூ என்ற கருத்து உரையாடப்படும் பொழுது அதே சமயம் ஒரு சுப நிகழ்வு நடைபெற்றால் அது எதிர்காலத்தில் நடக்கும் செயலின் முடிவை சூட்சுமமாக குறிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
முழுமையான ஜோதிட சாஸ்திரத்தை பார்க்கும் ஜோதிடரிடம் நாம் கேள்வி கேட்டவுடன் அந்த ஜோதிடர் சில வினாடிகள் சூழலை கவனிப்பார். அந்த சூழல் சூட்சமாக நம் கேள்வியின் சாதக பாதகத்தை கூறும்.

முற்காலத்தில் ஜோதிடர்கள் திறந்த வெளியிலும் மரத்தடியிலும் அமர்ந்திருந்த காரணம் இது தான். இது போக கேள்வி கேட்கும் நபர் அவர் உடலில் தொடும் பகுதி மற்றும் பேசும் வார்த்தைகள் இவை அனைத்தும் நிமித்தம் ஏற்படுத்தும் காரணமாக இருக்கும்.

நீங்கள் ஒரு பணியைச் செய்யத் துவங்கும் பொழுதும் உங்களை சுற்றி கவனியுங்கள். அங்கே இருக்கும் சூழல் உங்களின் பணியின் முடிவை தெளிவாக கூறும்.

இதை ஒரு உதாரணத்தால் விளக்குகிறேன். நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்கள். கிளம்பும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த உங்கள் குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக்கொள்கிறான். இது உங்களின் சுற்றுலா எப்படி இருக்கும் என்பதன் ஒரு சிறிய சாம்பிளாக நிமித்தம் உணர்த்துகிறது. அதுவே நீங்கள் கிளம்பும் பொழுது நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவிருந்த நற்செய்தி ஒன்று வருகிறது என்றால் உங்கள் சுற்றுலா சிறப்பாக இருக்கும் என்பதை காட்டுகிறது.

இப்படி பல உதாரணம் சொல்ல முடியும். நிமித்தத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம். நிமித்தம் என்பது மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். ஆனால் உண்மையில் அது மிகவும் அற்புதமானது.

நிமித்தம் ஜோதிடர்கள் மட்டும் பயன்படுத்தும் சமாச்சாரம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் மேம்படுத்த நிமித்தம் மிக அவசியம்.

சகுனமும் நிமித்தமும் ஒன்றா? நிமித்தம் உண்மையில் எப்படி வேலை செய்கிறது ? என் வாழ்வில் நிமித்தம் செய்த அற்புதங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(நித்தமும் தொடரும் நிமித்தம்)

டிஸ்கி : இக்கட்டுரைக்கு படங்கள் இணைத்தால் கவனம் திசை திரும்பும் என்பதால் படங்கள் இணைக்கவில்லை...!

15 கருத்துக்கள்:

மார்கண்டேயன் said...

இதையே, Body Language, Time Management, Conscious Management, Future Sense, etc., என்றால் ஏற்றுக்கொள்வார்கள், ஜோதிடம் என்று சொன்னால் வேறு மாதிரி போய் விடுகிறது.

Incredible Monkey said...

ஜோதிடம் ஜாதகம் நம்புவது இல்லை நான்.பதிவை படித்தேன்.நன்றாக இருந்தது.

Umashankar (உமாசங்கர்) said...

?!!!!!

Nandri Swami Ji.

Sanjai said...

பதிவு புதுமை மற்றும் அருமை ...

It looks good without an Image :)

கிரி said...

சுவாமி நீங்கள் சினிமா சம்பந்தப்பட்ட பெயர்களை விசயங்களை தலைப்புகளிலும் பதிவிலும் தவிர்த்து எழுதினால் பதிவின் மீதான மதிப்பு இன்னும் கூடும் என்பது என் கருத்து. பதிவின் கவனமும் திசை திரும்பாது.

Mahesh said...

Omen !!

good signs :)

Thirumal said...

சகுனமும் நிமித்தமும் ஒன்றா? நிமித்தம் உண்மையில் எப்படி வேலை செய்கிறது ? என் வாழ்வில் நிமித்தம் செய்த அற்புதங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.///

காத்திருக்கிறோம்....

தனி காட்டு ராஜா said...

உண்மை போல தோன்றுகிறது ....

வெங்கட் நாகராஜ் said...

நிமித்தம் - சகுனம் வேறுபாடு தெரிந்து கொள்ள ஆவலுடன், அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.

Anonymous said...

It makes me remember a hollywood movie "Final Destination".

Unknown said...

வணக்கம் சுவாமி பதிவு நன்றாக உள்ளது. உங்கள் பதிவை தினமும் பதிவிடுங்கள் அப்பொழுதுதான் நாங்கள் நன்றாக பயன்பெறலாம். நன்றி

MarmaYogi said...

பதிவு ரொம்ப நல்லா இருந்தது. ஆனால் ஒரு காலி அரையில் இருந்தால் என்ன நிகழ்வுகளை பார்க்க முடியும்.

மதி said...

உண்மையில் பதிவு மிகவும் அற்புதம்.

Ajanntha said...

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த விடையம் இன்று ஆரம்பிக்கின்றது ,,இப்படியே பட்சிபற்றியும் எழுதுவீர்களா

Anonymous said...

“…I’ve come to believe that there exists in the universe something I call “The Physics of The Quest” – a force of nature governed by laws as real as the laws gravity or momentum. And the rule of Quest Physics maybe goes like this: “If you are brave enough to leave behind everything familiar and comforting (which can be anything from your house to your bitter old resentments) and set out on a truth-seeking journey (either externally or internally), and if you are truly willing to regard everything that happens to you on that journey as a clue, and if you accept everyone you meet along the way as a teacher, and if you are prepared – most of all – to face (and forgive) some very difficult realities about yourself….then truth will not be withheld from you.” Or so I’ve come to believe.”

- Elizabeth Gilbert, Eat Pray Love.

The author is explaining what you are saying in her own way :-)