Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 11, 2010

வேதாந்த வகுப்பில் சுப்பாண்டி

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒருவர் வந்து வேதாந்த கருத்துக்களை கொண்டு தர்க்கம் செய்தார். நான் இயல்பாகவே தர்க்கங்களில் ஆர்வம் செலுத்தாததால் மெளனமாக இருந்தேன். இதை கண்ட சுப்பாண்டி மிகவும் மன வருத்தம் கொண்டான். நான் வேதாந்தம் தெரியாமல் தோற்றுவிட்டதாகவும், என்னை பின்பற்றும் அவனுக்கு அது மிகப்பெரிய அவமானமாகவும் கருதி வருந்தினான். இந்த வரலாற்று அவமானத்தை சரி செய்ய தானே வேதாந்தம் கற்பது என முடிவுக்கு வந்துவிட்டான்.

பிறகு ஒரு நாள் வந்து “குருஜீ நான் வேதாந்தம் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்றான். போகிறேன் என எங்கோ இருக்கும் இடத்தை குறிப்பிடுகிறான் என்பதால், “நான் வேண்டுமானால் கற்றுக்கொடுக்கவா?” என கேட்டேன். என் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தவாறே, “உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நான் ஏன் கத்துக்கப்போறேன்” என்றான். இதற்கு நான் ஒன்றும் கூறவில்லை. சரி சென்று வா என வாழ்த்தி அனுப்பினேன்.

ஓவர் டூ வேதாந்த வகுப்பு .......

வேதாந்த ஆசிரியர் ராஜூ சாஸ்திரியின் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி இன்று நாம் ஆன்மா என்பதை பற்றி பேசுவோம். ஆன்மா என்பதே உன் சொரூபம், நீ உடல் அல்ல, நீ மனம் அல்ல. ஆன்மாவே உண்மை”

“ஆன்மா-னா என்ன? அது எப்படிப்பட்டது?”

“எது தீயால் சுட முடியாதோ, எது நீரால் மூழ்கடிக்க முடியாதோ, எது காற்றை விட லேசானதோ, எது ஆகாயத்தை போல தூய்மையானதோ அதுவே ஆன்மா”

“அப்படிப்பாத்தா சூப்பர் ஸ்டார் தான் ஆன்மாவா? அவரைத்தான் வில்லன்களால எதுவுமே செய்ய முடியாது”

“ஸ்ப்ப்பா... அது இல்லை சுப்பாண்டி. சினிமா என்பது மாயை, பொய் பிம்பம். ஆன்மா என்பது உண்மையான வஸ்து”

”ஆன்மானே ஒரு சினிமா வந்துச்சே...அப்போ அது பொய்யா? கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க”

”சுப்பு.... கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ....
கண் எதனால் பார்க்கப்படுகிறதோ, கண் எதை பார்க்காதோ அது ஆன்மா.
காது எதனால் கேட்கிறதோ, காது எதை கேட்காதோ அது ஆன்மா.
வாய் எதனால் வேலை செய்கிறதோ வாயால் எதை உணர முடியாதோ அது ஆன்மா.”

“நம்ம கண்ணு காதுல உணர முடியாத குப்ப சமாச்சாரத்தை பத்தி நாம ஏன் பேசனும்? வேற எதாவது உருப்படியா சொல்லித்தாங்க சாஸ்திரி”

“என்னது குப்ப சமாச்சாரமா? ஆன்மா என்பதை புரிந்து கொண்டால் தான் வேதாந்தத்தை புரிந்து கொள்ள முடியும். உதாராணமா உன் உடல் நீ இல்லைனு சொன்னேன் இல்லையா? நீ போட்டிருக்கும் உடை மாதிரி இந்த உடலை ஆன்மா போட்டுருக்கு. இந்த உடலை நீ என சொல்லிக்க கூடாது. இந்த பேண்ட் டீ சர்ட் உன் உடலோட உறுப்பு இல்லை இல்லையா? அது போல உன் உடல் நீ அல்ல, பேண்ட் சர்ட் அழுக்காச்சுன்னா மாத்திக்கிற மாதிரி இந்த ஆன்மா உடல் வேலை செய்யலைனா மாத்திக்கும்.”

“ஓஹோ, அப்ப வேற வேற உடல் நமக்கு கிடைக்கும்? உடல் நிரந்திரம் இல்லை அப்படித்தானே”

“சபாஷ், இப்பத்தான் நீ புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்க..”

“நீங்க எப்பவும் வெள்ளை வேஷ்டி மேல் துண்டு போட்டுருக்கீங்க. என் குருஜீ எப்பவும் காவி கலர் போட்டிருக்காரு, அப்ப உங்க உடை மாறாதே? அப்ப உங்க உடல் தான் நீங்களா?”

“அ...அத்..து..அ...அப்படி இல்லை..தம்பி...உடை நிறம் ஒரே மாதிரி இருந்தாலும் ஒரே வேஷ்டியவா நான் கட்டிப்பேன்? அதுபோலத்தான் உடை நிரந்திரமல்ல. ஆன்மாவே நிஜம்”

“அப்ப உடை இல்லாம இருக்கிறவங்கதான் நிஜமா இருக்கறவங்களா? நீங்க சொல்லித்தர்ரது ஒரே அசிங்கமா இருக்கே”

"அது இல்லடா... ஆன்மா அஹங்காரம்னு உடை போட்டிருக்கு. அதனால மாயை அதில் சேர்ந்திருக்கும். அஹங்காரமும் மாயையும் இணைஞ்சுருக்கரதால ஆன்மாவை பார்க்க முடியாது. அஹங்காரமும் மாயையும் அழிஞ்சாத்தான் ஆன்மாவை முழுமையா உணர முடியும். “

“நம்ம வீட்டில கொசு கரப்பான் அழிச்சா வீடு சுத்தமாகிற மாதிரி சரியா?”

“சரியாச்சொன்னடா”

”அப்ப அஹங்காரம் மாயை அழிக்கும் பூச்சி மருந்து எங்க கிடைக்கும்?”

“டேய் அறிவு கெட்டவனே.. விளங்காமாறி...உன்னையெல்லாம் எவண்டா இங்க அனுப்பினது..

நீ வேதாந்தம் படிக்கலைனு யாரு அழுதா? வேனும்னே என்னை கலாய்க்கிறியா? போடாங் ?!?!!@!@!@*@!@*&*””

“சாஸ்திரி....முதல்ல சுப்பாண்டின்னீங்க, அப்பறம் சுப்பு, அப்பறம் தம்பி.. கடைசியா டேய்..இப்ப கெட்டவார்த்தையில திட்டீட்டீங்க... அப்படி என்ன நான் தப்பா கேள்வி கேட்டேன்? புரியலைனு தானே கேட்டேன்.. சரி சரி கோபப்படாதீங்க. ஏதோ ஆன்மா ஆன்மானு சொன்னீங்களே அப்படினா என்னானு சொல்லுங்க”

“என்னது திருப்பியும் முதல்ல இருந்தா........”

16 கருத்துக்கள்:

Mahesh said...

இடுகை எதால் எழுதப்படுகிறதோ, இடுகையால் எதைப் படிக்க முடியாதோ அது ஆன்மா :))))))))

எறும்பு said...

//Hundreds of Dangaria Kandha tribals today staged a peaceful rally against the proposed bauxite mine project of UK-based Vedanta Group at Sonelbhata on the Niyamgiri foothills in Kalahandi.

Agitating tribals dressed in traditional attire and armed with bows and arrows marched several kilometres shouting slogans “Vedanta Quit Niyamgiri” and “Vedanta Go Back”, illustrating the growing opposition to give up land for industry.

Jitu Jakasika, a Dangaria Kandha youth leading the anti-Vedanta movement, said: “If the mining project is allowed, it will spell disaster for the sacred Niyamgiri hills and its fragile eco-system. All the flora and fauna will be destroyed and all the hilly streams and rivers will dry up. “We will protect it at any cost.” //

சுவாமிஜி மேல நியூஸ்ல இருக்கிற வேதாந்தாக்கும் நீங்க சொல்ற வேதாந்தாக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

எதாவது கிளப்பி உங்களை மேலும் பிரபலாக்கலாம என்று காத்திருக்கும்

சுப்பாண்டி

Athisha said...

சுவாமி கலக்கீட்டிங்க! அருமை! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... ஆமா ஆன்மானா என்ன?

Sridhar said...

நகைசுவை நல்லா இருக்கு :) ஆனா சொல்லவந்த கருத்து என்னனு புரியல :(

Unknown said...

அருமை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

கலக்கல். உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

கலக்கல். உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

நல்லா தானே போயிக்கிட்டு இருந்துச்சி?
திடீர்ர்னு ஏன் என்மேல பாசம் :) ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அதிஷா,
//
சுவாமி கலக்கீட்டிங்க! அருமை! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... //

ஆமா ஆன்மானா என்ன?

எது டெம்ளட் பின்னூட்டம் போடுகிறதோ.. எது போடுகிறது என அறிவதில்லையோ அது ஆன்மா :)))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதர்...

உங்களுக்கு கருத்து புரியலையா? சுப்பாண்டி கிட்ட விளக்க சொல்றேன்.

திரு பிரபு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராமுடு said...

Swami,

Excellent.. Felt like I am not in this world for few minutes..

Sanjai said...

அன்புள்ள ஸ்வாமிக்கு,

எனக்கு சிப்பு சீப்பா வருது ... ஒரே சிரிப்பு தான்...

அருமையான பதிவு ...

அறிவில்லாதவன் said...

I got the answer for one of my question. Thanks Swamiji

virutcham said...

நகைச்சுவையில் கலக்கறீங்க. நல்லா சிரிச்சேன். ஆனாலும் சாஸ்திரி கோபப் படலாமோ?

விளங்கிக் கொள்ள முடிந்தது விளக்கிச் சொல்ல முடியாதது ஆன்மா. இப்படிச் சொல்லிட்டு இந்த விளக்கம் சரியானு கேட்க முடியாதே.

SRI DHARAN said...

வேதாந்தம் ஒரு ஹிம்சை
வேதாந்தம் ஒரு தொல்லை
வேதாந்தம் ஒரு தொந்திரவு
மொத்தத்தில் வேதாந்தம் எப்ப ஒழியும் என்று நாங்கள் காத்திருக்கிறோம்...

" அடேய் படுவா என் மூக்கு கண்ணாடி காணலடா கொஞ்சம் எடுத்து குடு "

"என் தாத்தா வேதாந்தம் கூப்டறார் நா வரேன் "

( எதோ எனக்குத் தெரிந்த வேதாந்தம் ) ஹி! ஹி!

Jawahar said...

பிரமாதம்.... உயர்ந்த விஷயங்களை இவ்வளவு நகைச்சுவையா சொல்ல முடிஞ்சா, எல்லாருமே ஞானி ஆயிடலாம்.

http://kgjawarlal.wordpress.com