Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, March 3, 2010

பரமஹம்ஸா....

உயர்வு தாழ்வு, வேற்றுமை-ஒற்றுமை, நல்லது-கெட்டது என ஆன்மீகத்தில் பிரிவுகள் இல்லை. ஆனால் உலகம் என்ற குளத்தில் உணர்வுகள் என்ற சகதியில் பல உயிர்கள் வாழுகிறது. அவற்றில் உன்னை பிரித்தரிய வேண்டாமா? புழுக்களை உண்ணும் மீன்கள், பிற மீன்களையே உண்ணும் மீன்கள், சப்தம் எழுப்பும் தவளைகள், தவளைகளை தின்னும் பாம்புகள், இறைக்காக காத்திருக்கும் கொக்குகள் என பல்லுயிர் பள்ளமாக இருக்கிறது இக்குளம்.

இத்தகைய உயிர்களுக்கு உன்னை ஒப்பிடலாமா?

இந்த குளத்தில் தாமரை உண்டு. அதில் சகதிகள் இருப்பதில்லை. அதனால் அது ஆன்மீக பொருளாக கருதுகிறார்கள். உற்றுப்பார்...

அந்த தாமரையிலும் அதன் தண்டுப்பகுதி சகதியில் ஊன்றியே மேல் எழுந்து நிற்கிறது. தாமரையிலும் சகதி உண்டு, குளத்தின் நீர் சில துளிகள் அதன் மேல் ஒட்டும் தன்மை உண்டு.


அதனால் தான் உன்னை அம்ஸம் என்கிறேன். அம்ஸ என்றால் அன்னம் என பெயர். அன்னத்தை பார்த்திருக்கிறாயா? வெளிர் வெண்மை நிறத்தில் கால்களிலும் மூக்கிலும் மட்டும் செந்நிறத்துடன் உலாவருமே அந்த அம்ஸம்.

அதன் மேல் ஒரு துளி கசடு இருக்காது. சகதிகள் அதன் மேல் ஒட்டாத வண்ணம் இறைவன் படைத்துள்ளான். இதனால் தானே தமிழில் கூட ஒரு விஷயத்தை அழகாக இருக்கிறது என்பதற்கு அம்ஸமாக இருக்கிறது என்கிறார்கள்?

நம் ஊரில் பல கட்டுக்கதைகள் உண்டு. அம்ஸம் பாலையும் நீரையும் பிரித்து குடிக்கும் என்பார்கள். அது கற்பனையாக இருந்தாலும் ஆன்ம-உண்மையில் எது கலக்கபட்டாலும் அதை பிரித்து அறிபவன் அம்ஸத்தின் அம்ஸம் என கூறலாம் தானே?

அப்பழுக்கற்ற விஷயத்தை அம்ஸம் எனலாம். ரசிகர்களில் மிகவும் உயர்வானவனை பரம ரசிகன் என்பார்கள். அதுபோல அம்ஸத்தின் இயல்பில் உச்சமான உள் தூய்மை அடைந்தவனை பரமஹம்ஸன் என்பார்கள் என்பது உனக்கு தெரியுமா?

ஆன்மீகவாழ்வில் மிக எளிமையாக வாழ்ந்து தன் சிஷ்யன் நாரேந்திரன் மூலம் உலகுக்கு தெரியவந்த ராமகிருஷ்ணர் கூட தன்னை பரமஹம்ஸன் என அழைப்பதை விரும்பவில்லை. அதனால் தான் இச்சொல் அவரின் இயற்பெயருக்கு பின்னால் இருக்கிறது.

உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எந்த அம்ஸமும் தன்னை அம்ஸம் என கூறிக்கொண்டதில்லை. எந்த அம்ஸத்தின் தலைவரும் தன்னை பரமஹம்ஸம் என பிரகடனப்படுத்தியதில்லை.

நம்மிடைய வாழ்ந்த பல
பரமஹம்ஸர்கள் பிறப்பிலேயே பரமஹம்ஸர்களாக இருந்தார்கள். பல பரமஹம்ஸர்கள் பரமஹம்ஸர்கள் என தெரியாமலேயே இறைவனில் இணைது இருக்கிறார்கள். பரமஹம்ஸமாக இருந்துகொண்டு சகதியில் இருக்கக்கூடாதா பலர் கேட்கலாம்.


சகதியில் உழன்றதால் தானே மீனும்,தவளையும், பாம்புகளும் தாமரையும் நீருக்கு அடியில் வாழ்கிறது?

பரமஹம்ஸமான நீ, நீருக்கு மேல் அல்லவா வாழும் இயல்பு கொண்டவன்?

பரிசுத்தத்தின் உச்சமான பரமஹம்ஸமாக இருக்க தேவையில்லை, குறைந்தபட்சம் தாமரையாக இருக்கப்பழகு. குளத்தில் இருக்கும் புழுவாகிவிடாதே..


20 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

பரமஹிம்ஸா

:)

Thirumal said...

பரமஹம்ஷர் என்பதற்கான விளக்கம் வெகு அழகு..

*இயற்கை ராஜி* said...

:-)

சுரேகா.. said...

சரியான நேரத்தில் , சரியான பதிவு ஸ்வாமி!

:)

SRI DHARAN said...

தேவ நாதன் டிக்கெட் வாங்கி கொடுத்தான், இவர் கப்பலேற்றிவிட்டார்......

ரொம்ப கஷ்ட்டம்.... நொந்து போயிட்டேன்......

வடுவூர் குமார் said...

அம்ஸ‌மாக‌ இருக்கு!!

Siva Sottallu said...

யாருக்காக??? இது யாருக்காக???

"பரமஹம்ச" விளக்கம் புரிந்துகொண்டேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நாராயணா நாராயணா !!!

Anonymous said...

பரம்ஹம்சா என்பதை தமிழில் சொல்லுங்கள். புரியும்.

Siva Sottallu said...

சற்று முன் தான் செய்தி அறிந்து ஒளிக்காட்சி பார்த்தேன்....

என்ன கொடும சுவாமி இது???

Sanjai Gandhi said...

ரொம்ப சாஃப்டா இருக்கே ஸ்வாமி :))

Anonymous said...

அப்துல்லா அண்ணன் சொன்னது போல் - பரமஹிம்சா !

Swami said...

romba nagareegamana pathivu.

Unknown said...

இந்த ஆண்டில் என்னை பாதித்த விசயங்களில் மிகவும் மோசமான ஒன்று இந்துகளின் புனித தன்மையை முற்றிலும் கெடுத்துவிட்டான். அங்கே இருக்கும் சீடர்கள் தான் பாவம்.

மதி said...

.........!!!??

sowri said...

ஒன்னுமே புரியல சுவாமி.Neither i am devotee nor a follower... but feel saddened. Is this a karma or kama..???

pranavastro.com said...

மலர்களில பல நிறம் கண்டேன்
மாதவன் கருணை அதில் கண்டேன்
பச்சை நிறம் அவன் திருமேனி
பவழ நிறம் அவன் செவீதல்கள் ..............

MohanKumar

Unknown said...

ஒளிக்காட்சியில்தான் எல்லாத்தையும் ஓப்பனா காட்டிட்டாளே!
இன்னும் என்ன ஓய் பூடகமான பதிவு

SUMAN said...

அருமையான விளக்கமும் காலத்திற்கேற்ற பதிவும்
“நம் ஊரில் பல கட்டுக்கதைகள் உண்டு. அம்ஸம் பாலையும் நீரையும் பிரித்து குடிக்கும் என்பார்கள் ”
இது கட்டுக்கதை அல்ல சுவாமி

நம்முடைய முன்னோர் கூறியது என்னவெனில் பாலை யும் நீரையும் பிரிக்கும் அன்னம் என்றார்கள் இங்கு அன்னம் என்பது சோறு
(அரிசிச் சாதம்)

தங்களுடைய தொடரும் சிறப்பு

swartham sathsangam said...

ஆன்மீகவாழ்வில் மிக எளிமையாக வாழ்ந்து தன் சிஷ்யன் நாரேந்திரன் மூலம் உலகுக்கு தெரியவந்த ராமகிருஷ்ணர் கூட தன்னை பரமஹம்ஸன் என அழைப்பதை விரும்பவில்லை. அதனால் தான் இச்சொல் அவரின் இயற்பெயருக்கு பின்னால் இருக்கிறது.

அருமையான கருத்துக்கள்சுவாமி .

இன்று தங்கள் பெயர்க்கு முன்னால் சத்குரு, பகவான், பரமஹம்ச என்ற பட்டங்களை எல்லாம் மிக சாதரணமாக போட்டுக் கொள்கிறார்கள்.