Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, February 17, 2009

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள்

உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார் உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது இரவு ஏது பகல்? மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும், மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கிறார்கள்.

ஆன்மீகவாதிகள் என்றவுடன் பாரத தேசத்தில் மட்டுமே இருப்பதாகவும், உலகில் வேறுபகுதியில் கடவுள் ஆன்மீகவாதிகளை வளரவிட மாட்டார் எனவும் பலர் எண்ணுகிறார்கள். வேத காலம் என ஒன்று இருந்தது. அக்காலத்தில் உலகமே ஒரு நாடாக இருந்தது. எல்லை பிரச்சனையில் பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடும் நமக்கு இதை சிந்திப்பது சிரமம் தான். வேத மந்திரம் “பாரத கண்டே” எனும் சொல் நமது உலகமே ஒரே கண்டமாக இருந்தது என உணர்த்துகிறது.

காலத்தால் கலாச்சார மாற்றம் அடைந்து பெரிய சேலையாக இருந்த பாரதம் பல சிறு துண்டங்களாக மாற்றம் அடைந்து கைக்குட்டையானது.
உலகின் பிறபகுதிகள் கலாச்சார மாற்றம் அடைந்தாலும், பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மீகவாதிகள் பெருக காரணம் சூழல் தான். தாங்கள் செய்யும் ஆன்மீக சாதனைகள் (பயிற்சிகள்) இடையூறு வராதவண்ணம் சூழல் இங்கு இருக்கிறது. ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும்.

திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஓர் மந்திரத்தை சொல்லி கடவுளை வேண்டுவதுண்டு. “கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை”- என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டுமாம். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். பாவம் அவர்களுக்கு தெரியாதே, நாம் துரித உணவகத்தில் உண்டு, கேளிக்கை செய்து, இனத்தை பெருக்கி மாண்டுவிடுவோம் என்பது...!

ஆன்மீகவாதிகள் என்றவுடன் நம் மக்களுக்கு சில எண்ணங்கள் உண்டு. கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள் தங்கள் நினைத்தது போல தான் பிறர்வாழ்கிறார்கள் என எண்ணுவார்கள். உண்மையில் ஆன்மீகவாதிகளின் நிலை ரகசியாமாக காக்கப்படுவதில்லை. மக்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் ரகசியமாகி விட்டது.கடலுக்கு அடியில் முத்து எடுக்க சென்றவன், தான் கடலின் ஆழத்தில் கண்டவற்றை கரையில் இருப்பவனுக்கு சொல்ல முடிவதில்லை. அது போல ஆன்மீக நாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மீகவாதிகளை பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.

ஆன்மீகம் என்பது மதம்,கலாச்சாரம், சடங்குகள், மொழி போன்றவற்றை கடந்தது. ஆன்மீகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்தி குழப்பி கொள்கிறார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகள் மற்றும் தன்மைகள் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வித்தியாசம் தெரிவதில்லை.

சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”

தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.

தமிழகத்தில் சித்தர்கள் என சிலரை சொல்லுவதுண்டு. தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு சென்று சித்தர் பற்றி பேசினால், சித்தார் எனும் இசைகருவியை தான் காண்பிப்பார்கள். காரணம் சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களை தான் நாம் சித்தர்கள் என தமிழ் “படுத்தி” இருக்கிறோம். இது போதாது என்று அவர்கள் பதினெட்டு எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என கட்டயாம் வேறு படுத்துகிறோம். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல. தங்களை உடலாலும், உயிராலும் மேன்மை அடைய ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எனலாம்.

நாம் எப்படி காவி காட்டிய அனைவரையும் சாமியார் என்கிறோமோ அது போல வட நாட்டில் அவர்களை “பாபா” என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை அல்லது உயிர் கொடுத்தவர் என அர்த்தம்.

அங்கு அனைவரும் பாபா தான். மேல்தட்டு மக்கள் மஹராஜ் என அழைப்பார்கள். ரிஷிகள் அவர்களுக்கு அரசனை போன்றவர்கள்.[இந்த சொல்லாடலை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் இதை பற்றி பேசுவோம்.]

அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். தமிழில் வடமொழி சொற்கள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவனை பார்த்து “கேவலமானவன் நீ” என சொன்னால் அவர் என்ன நினைப்பார்?
வடமொழியில் “கேவல” எனும் சொல் தனித்துவமான - மேல்நிலையான என பொருள்படும். [உ.ம். கேவல சைதன்யம்- உண்னதமான துய்மை நிலை]. இப்பொழுது எதற்கு இந்த சமஸ்கிருத வகுப்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

தினசரிகளில் கொடூரமான விபத்தை பற்றி எழுதும் பொழுது “கோரமான விபத்து” என எழுதுவார்கள் அல்லவா? கோரம் என்றால் “பார்க்க முடியாத அளவுக்கு”,“மனம் பாதிப்படையும் தன்மை உள்ள” என பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்பதம் தான் அ-கோரம்.

ரம்மியமான, பார்த்தால் ரசிக்க தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். அகோரமான முகம் என தமிழில் இந்த சொல்லையும் தவறாகவே பயன்படுத்துகிறோம்.

அகோரமான நிலையில் இருப்பவர்கள் தான் அகோரிகள். வடநாட்டில் அனைவராலும் அகோரிகள் என அழைக்கப்படுபவர்கள் யோகிகளே. நாக சன்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள் தான். ஹிந்தியில் நங்கா என்றால் நிர்வாணம் என அர்த்தம். நங்கா பாபா எனும் சொல் வழக்கு பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும் மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.இனிவரும் பகுதியில் இவர்களை யோகிகள் என அழைப்போம். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.

யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் யோகிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும்.
ரிஷிகேசத்தில் இருந்த ஒரு யோகியின் புகைப்படம். இந்த படம் எடுக்கும் பொழுது அவருக்கு 85 வயது...!

தத்வவாலே பாபா

ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலய வனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் , பின்னாலும் இருக்கும் யோகிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப மேளாவில் கஞ்சா எல்லா இடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டுவருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.

இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

கும்பமேளாவில் யோகிகளின் அணிவகுப்பு ஒரு சில காட்சிகள்.நன்றி யூடியூப்

ஏன் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? இதனால் இவர்களுக்கு என்ன பிரயோஜனம்?


அடுத்த பதிவில்..

(தொடரும்)

40 கருத்துக்கள்:

வெட்டிப்பயல் said...

அருமையா போகுது... அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...

பாண்டித்துரை said...

நல்ல பதிவு ஸ்வாமி

அருண் said...

சூப்பர் ஸ்வாமிஜி,அடுத்த பகுதிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்.

கோவி.கண்ணன் said...

//உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார் உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். //


அது....! பலருக்கு கேட்கிறமாதிரி சொல்லி இருக்கிங்க.

கோவி.கண்ணன் said...

இந்த சாமிகள் ஆன்ம பலத்தை காட்டுவது போலவே ஆண்மை பலத்தையும் காட்ட அடிக்கடி செங்கற்களை தூக்கி காட்டுவாங்களாமே. :)

வடுவூர் குமார் said...

என்னது செங்கல்லா!!!!!!

வடுவூர் குமார் said...

நன்றி யூடூபுக்கு கிழே உள்ள தான் எனக்கும் தோன்றியது.
இதே நிலையில் திருவண்ணாமலையில் கூட சிலர் இருப்பதாக என் நண்பர் சொல்லியுள்ளார்.

krish said...

Very interesting and useful information. Thanks.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெட்டிப்பயல், திரு அருண், திரு பாண்டித்துரை,

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

அவர்கள் என்ன என்ன காட்டுவார்கள் என அடுத்த பதிவில் பாருங்கள்.

உங்கள் பாஷையில் சொல்லவேண்டுமானால்... செங்கல் எல்லாம் ஜுஜுபி :)))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார், திரு க்ரிஷ்

உங்கள் வருகைக்கு நன்றி

Unknown said...

நல்ல பதிவு

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

குசும்பன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பதிவு!
பல புதிய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன் நன்றி

ஷண்முகப்ரியன் said...

வணக்கம் ஸ்வாமிஜி,நான் எதிர் பார்த்ததைப் போலவே தங்கள் 'அகோரிகள்'பற்றிய பதிவு விறுவிறுப்பாகவும்,விவரமாகவும் இருந்தது.பின் வரும் பதிவுகள் இன்னும் ஆழமாகவும்,அர்த்தங்களுடனும் இருக்கும் என யூகிகக்கிறேன்.எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கிறேன்.

வினோத் கெளதம் said...

//வணக்கம் ஸ்வாமிஜி,நான் எதிர் பார்த்ததைப் போலவே தங்கள் 'அகோரிகள்'பற்றிய பதிவு விறுவிறுப்பாகவும்,விவரமாகவும் இருந்தது.பின் வரும் பதிவுகள் இன்னும் ஆழமாகவும்,அர்த்தங்களுடனும் இருக்கும் என யூகிகக்கிறேன்.எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கிறேன்.//

மிக சரி.

பிரேம்குமார் அசோகன் said...

அகோரிக்கான விளக்கம் அருமை...

தாங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, நான் கடவுள் திரைப்படத்தில் கதாநாயகனின் அகோரி பாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறேன். சரியா?

Expatguru said...

நல்ல பதிவு சுவாமிஜி. கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்குங்கள். அகோரிகளை பற்றிய பல தகவல்கள் உள்ளன.

http://troolyunbelievable.blogspot.com/2008/02/aghori-sadhus.html

malar said...

நிறைய விசயங்கள் விளங்கியது .நல்ல பதிவு

ambi said...

ஒரு நீரோடை போல ஆரம்பித்து, மெல்ல வேகமெடுத்து, ஆறாய் நகர்வதை போல உங்க விளக்கங்கள் அருமையா இருக்கு. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.

எம்.எம்.அப்துல்லா said...

சூஃபிகளும் அகோரிகள்தான். ஆர்வமோடு காத்திருக்கேன் சாமி....அடுத்த பாகத்துக்கு.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சதீஷ்குமார், திரு ஷ்ண்முகப்ரியன், திரு குசும்பன், வினோத் கெளத்தம்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரேம்,

நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. எனது பதிவுடன் அந்த திரைப்படத்தை ஒப்பிட்டு பார்த்து கூறுங்கள்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு எக்ஸ்பட்குரு, திரு மலர், திரு அம்பி, உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா,

எதனால் அப்படி சொல்லுகிறீர்கள் என தெரியவில்லை.
என்னை பொருத்த வரை சூஃபிகள் யோகிகள் அல்ல. அவர்கள் ஞானிகள்.

தமிழ் நாட்டுக்கு வந்த சூஃபி இராமத்தேவரை உங்களுக்கு தெரியுமா?

MK said...

//தாங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, நான் கடவுள் திரைப்படத்தில் கதாநாயகனின் அகோரி பாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறேன். சரியா?// இதேபோல‌ ந‌ந்தா ப‌ட‌த்திலும்.. அக‌திக‌ள் அனைவ‌ருமே "தாய‌க‌ம் திரும்பியோர்" என்ப‌தான ஒரு த‌வ‌றான த‌க‌வ‌லைத் த‌ந்திருந்தார்.. இய‌க்குன‌ர்..!

அகோரியாக‌ தத்ரூப‌மாக‌ ந‌டித்திருக்கிறார் என்று உச்ச‌ ந‌டிக‌ர் பாராட்டு ப‌த்திர‌ம் வாசித்த‌து கூட‌ அவ‌ர‌து அரைவேக்காட்டுத்த‌ன‌த்தைக் காட்டுவ‌தாக‌வே உள்ள‌து.. (அப்ப‌டினா .. பாபா ... சினிமா சினிமா .. தான் போல‌)

தெளிவான‌ ப‌திவு.. ந‌ன்றி ம‌ற்றும் வாழ்த்துக்க‌ள்..!

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

திரு ஓம்கார் ஐயா,நன்றாக எழுதிக் கொண்டு செல்கிறீர்கள்.
ஆனால் மறைமுகமாக சமத்கிருதத்திலமைந்த சொற்களுக்கான விளக்கத்தில்,சில தமிழ்ச் சொற்களை எள்ளும் போக்கு இருப்பதைப் பார்க்க வருத்தம் ஏற்பட்டது.('படுத்திய' சித்தர்)
இந்த இடத்தில் சித்தர் என்ற சொல்லுக்கான சிறிய பார்வையை அளிக்க விழைகிறேன்.

எவனொருவன் சித்தத்தை கட்டுப்படுத்தி சித்தம்-எண்ணம்-மனம்-புத்தி- ஆகியவற்றை முழுதுமாக கட்டுப்படுத்துகிறானோ,எவனொருவன் அதை கட்டுப்படுத்தப்பட்ட-அதாவது channelised- சித்தம் செல்லும் வழிப்படி தன் உடலைச் செலுத்தும் திறனையும் தன் ஆன்ம பலத்தின் மூலம் பெறுகிறானோ அவனே சித்தன்.பாலா சித்தரிக்கும் பிதாமகன் விக்ரம் அல்ல சித்தன்!

ஆகையினாலேயே அவ்வாறு கட்டமைக்கப்பட்ட சித்தம் சொல்லும் எதையும் அவர்களின் உடலால் செய்ய முடிந்தது;காட்டாக சித்தம் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்ல விரும்பிய போது இரு இடங்களிலும் உடலைக் கொண்டு செல்ல முடிந்தது;இரு இடங்களிலும் இருப்பவர்களுடன் அளவளாவ முடிந்தது.

எனவே சித்தர் என்ற சொல் தமிழ்ப்'படுத்தியதால்' எழவில்லை.அது தமிழில் ஆழ்ந்த விளக்கத்தைக் கொண்டது.

சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களையும் அதனால்தான் பித்தன் இன்னொரு அழகான சொல்லால் அழைத்தது தமிழ்.

மற்றபடி இந்தப் தொடர்பதிவின் அடக்கம் பற்றிய எனது பார்வைகளை அனைத்தையும் படித்துவிட்டு அளிக்கிறேன்...தொடர்க.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு MK,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

வெங்க்கி said...

Dear Swamiji, It is really great to know the true picture of baba's living in Kasi, Himalayas and holy palces.. I feel like reading a great epic.. please continue to write articles like this.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அறிவன்,

உங்கள் கருத்தை மொழி பெயர்ப்பு நிலையில் ஒத்துகொள்ளலாமே தவிர உண்மை இல்லை.

தமிழை நான் எக்காலத்திலும் எள்ளளவும் எள்ளவில்லை. காரணம் நான் கண்ட மொழிகளிலே என சொன்னவனை விரும்புபவன் நான்.

உண்மையில் இது விவாததிற்கு உரிய கருத்து.
சித்தம் என்பது தமிழ் வார்த்தை கிடையாது என்பதை இங்கே சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
”Chiththa” எனும் வார்த்தையின் தமிழ் வழக்கு சித்தம்.

சித்தத்தை மட்டும் அவர்கள் கடந்தார்கள் என முடிவு செய்து அவர்களுக்கு நாமே ”சித்தர்கள்” பெயர் சூட்டுவது எவ்வளவு வேடிக்கை?

பிரம்மச்சரியத்தை போதித்தவர்களான இந்த யோகிகளின் பெயரில் ஆண்மைக்கான மருந்து விற்பதும், இவர்களை சித்தர்கள் என அழைப்பதும் ஒன்றுதான்.

நான் படுத்தியதை தான் சொன்னேன் தவிர தமிழை குறைகூறவில்லை என உணருங்கள்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கீ-வென்,

உங்கள் வருகைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

//திரு அப்துல்லா,

எதனால் அப்படி சொல்லுகிறீர்கள் என தெரியவில்லை.
//


//

வட இந்தியாவில் சூஃபி முறையில் சில பிரிவினரின் ஆன்மயோக பயிற்சிகளும் அகோரிகளின் பயிற்சிகளில் சிலவற்றை ஒத்து இருப்பதை நான் படித்து இருக்கிறேன். அகோரிகள் என்றாலே நரமாமிசம் உண்பர்வர்கள் என்ற பொது கருத்தை உங்கள் பதிவு மாற்றும் என நினைக்கிறேன்.


//
என்னை பொருத்த வரை சூஃபிகள் யோகிகள் அல்ல. அவர்கள் ஞானிகள்.
//

இல்லை பிரம்மச்சாரியம் கடைபிடித்த யோகசாதகரான நாகூர் ஆண்டகையைப் போன்ற யோகிகளும் அவர்களில் உண்டு.

//

தமிழ் நாட்டுக்கு வந்த சூஃபி இராமத்தேவரை உங்களுக்கு தெரியுமா?
//

யாரு? யாக்கோபு சித்தரைச் சொல்லுகிறீர்களா??

பட்டாம்பூச்சி said...

வித்தியாசமான பதிவு.
புதிய தகவல்கள்.நன்றி.
அடுத்த பதிவை சீக்கிரம் வெளியிடுங்கள் :-).

கிரி said...

சாமி சிறப்பான பதிவு..

உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா,

அகோரிகளின் தனிப்பட்ட பயிற்சிமுறையில் ஒன்று தான் குண்டலினி என்பது. தற்சமயம் அதை சிலர் தெருச்சரக்காக வியாபாரம் செய்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் தற்காலத்தில் பலருக்கு தவறாக போதிக்கப்படுகிறது என்பது வருத்தம் தான்.

ஆம். பிரம்மச்சரியம் மட்டுமல்ல அஷ்டாங்க யோக முறைகளை ஆதிகுருவிடம் கற்று தங்களை மேம்படுத்தியவர்கள் இந்த யோகிகள்.

இராமத்தேவர் என்ற யாக்கோபு-வை தான் சொல்கிறேன். மேலும் அவரின் பாடல்கள் சில இடைசொருகலுடன் இருக்கிறது. உன்மையான சூஃபி தன்மை சில பாடல்களில் மட்டுமே வெளிப்படுகிறது.

அப்துல்லா அண்ணே.. சென்னை வரும்பொழுது ஒரு நாள் சூஃபியை பற்றி அனுபவிப்போம். நேரம் கிடைத்தால்..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி,திரு பட்டாம்பூச்சி,

உங்கள் வருகைக்கு நன்றி

குமரன் (Kumaran) said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களே.

இந்தத் தொடரின் முதல் பகுதியைப் படித்ததில் மிக மகிழ்ந்து அடியேனுடைய வணக்கங்களைத் தெரிவிக்க வந்தேன்.

***

மதுரையில் சுவாமி சந்நிதிச் சுற்றில் இருக்கும் அகோர வீரபத்திரரின் திருக்கோலத்தைப் பார்க்கும் போது சிறு வயதிலிருந்தே 'அடடா இந்தச் சொல்லின் பொருளை மாற்றிவிட்டார்களே' என்று எண்ணுவதுண்டு. பத்ரகாளி என்ற சொல்லின் பொருளும் அப்படியே மாறிவிட்டது. பத்ர என்றால் மங்கலம் என்று பொருள்.

முருகன் ஜெயராமன் said...

பிரமாதம்,தொடருங்கள்.

Killivalavan said...

அடுத்த பதிவு?

Chidambaram Venkatesa Deekshithar said...

The great subject defenation and argument swamiji carryon