Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, January 30, 2009

கோவிகண்ணனின் அட்டகாசங்கள்

வலைபதிவுலகில் கடந்த ஆறு மாதங்களாக தட்டிக்கொண்டிருக்கிறேன். ( எழுதிக்கொண்டு என எப்படி சொல்லுவது? ) அதற்கு சில பல காரணங்கள்.

ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஓர் ஊடகமாக பயன்படுத்த எண்ணம். பல்வேறு பரிணாமங்களில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன் அதற்கு காரணம் இருந்தது. எழுதும் எண்ணம் இருந்தாலும் போதிய நேரம் இல்லை என்பதும், சில புத்தகங்களையும் மாத பத்திரிகையையும் எழுதி வந்ததால் ஏற்பட்ட நெருக்கடியும் காரணமாக இருந்தது.

பதஞ்சலி யோக சூத்திரம், திருமந்திரம், ஜோதிட ஆய்வு என பல ஆன்மீக, வேத கருத்துக்களை புத்தக வடிவில் எழுதி வந்தேன். ஒரு நாள் யோக சூத்திரம் பற்றி ஒரு கருத்தை சுட்டியாக எனது மாணவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். திரு ஜெயமோகன் அவர்கள் பதஞ்சலியோக சூத்திரத்தை பற்றி எழுதிய பதிவு அது.

அதை படித்து விட்டு கிளர்ந்து எழுந்த நான், பல வரிகள் கொண்ட கடிதத்தை அனுப்பினேன். :)) வழக்கம் போல ஜெயமோகன் அவர்கள் அதை சாத்வீகமாக அனுகினார். :)

இந்த காலகட்டத்தில் தான் எனக்கு வலையுலகம் பரிச்சயமானது.. குரு கீதை என ஓர் வலைதளத்தை ஆரம்பித்து ’தட்டி’ தடுமாறி சில கதைகளை பதிவேற்றினேன். குரு சிஷ்யன் பற்றிய கதைகள் 108 எழுத வேண்டும் எனது எண்ணம். அந்த தளத்தில் வந்த கதைகளை படித்துவிட்டு காரசாரமாக பின்னூட்டம் இடுவதன் மூலமும் தனி மின்னஞ்சல் அனுப்பியும்
தொடர்பு கொண்டவர் தான் கோவி கண்ணன்.

கோவி.கண்ணன் என்ற பதிவர் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். (..தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள முயல வேண்டாம் என நல்லெண்ணத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். :)) )

அவரை பற்றி சில வரிகள்...

காலாகாலமாக சொல்லிவந்த விஷயங்களை காலம் எனும் தலைப்பில் பதிவு செய்து வருபவர்.
நாத்திகருக்காக பெரியார் படமும், ஆத்திகருக்காக வள்ளலார் படமும் போட்டு இரு தரப்பு வாசகர்களையும் கவர்ந்தவர் ( என்ன ஒரு அரசியல்த்தனம் ;). .)

கூகுள் பற்றியாகட்டும், ஆன்மீகம் பற்றியாகட்டும் எதுவாக இருந்தாலும் பொளந்து...கட்டுவார் ...
( இது என்ன ”பொளந்து...கட்டுவார் ...” என கேட்பவர்களுக்கு விளக்கம்: பதிவில் இவர் விஷயத்தை பொளந்து விடுவார்.. படிக்கும் வாசகர்கள் பின்னூட்டத்தில் கட்டுவார்கள் பாருங்கள் அப்படியொரு கட்டு :)) )

கோவியாரின் வலைதளத்தில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பரிமாறிகொள்ளும் பொழுது
அவரின் தூண்டுதலால் உருவானது தான் இந்த தளம். ஜோதிட சாஸ்திரத்தை பற்றி தெளிவு கொடுக்கும் ஓர் வலைபக்கம் உருவாக அவருக்கும் பங்கு உண்டு. ( இந்த வலை தளத்தின் மேல் காண்டுடன் இருப்பார்கள் கவனிக்க.. கோவியாருக்கும் பங்கு உண்டு)

ஆக இப்படி எனது வலையுலக பயணம் செயல்பட காரணமாக இருந்தார் கோவியார்.
சினிமா.. சினிமா எனும் தொடர் பதிவை பதிவர்கள் எழுதி வர அதில் என்னை அழைத்தார் எழுத..

என்னை தொடர செய்ய அவருக்கு எப்படி எண்ணம் வந்தது என எனக்கு தெரியவில்லை... ஆனால் அவரின் அழைப்பை சிறப்பாக செயல்படுத்தினேன் என்றே நினைக்கிறேன். சினிமா சினிமா என்ற எனது பதிவை படித்தவர்கள் பல குழப்பத்திற்கு ஆளானார்கள். ஸ்வாமி இப்படி எழுதலாம என்றும்... பிரபல பதிவர் வேறு பெயரில் எழுதுகிறார் என்றும் விமர்சமம் வர துவங்கியது. இந்த பதிவுக்கு பிறகு நகைச்சுவை பதிவு எழுதினால் வரவேற்பு இருப்பதை உணர்ந்தேன்...

இவ்வாறு எனது பல வலையுலக பயணத்திற்கு தூண்டுகோலாகவும், கிரியா யூக்கியாகவும், மேம்படுத்துபவராகவும், மோட்டிவேட்டராகவும் ( அட எல்லா எழவும் ஒன்னுதானு நீங்க சொல்லுவது கேட்கிறது - என்ன செய்ய கோவியார் அதற்கு தனி பேமெண்ட் தருவதாக சொன்னார்) இருந்தவர் கோவியார்.

இத்தகைய மாபெரும் பணியை செய்த கோவியார் கோவை வருவதாக சொன்னார். என்னை சந்திப்பதாகவும் கூறினார். மகிழ்ச்சியில் திளைத்தேன்... ஆனந்த கூத்தாடினே.. ( பாரட்டு பதிவு எழுதும் போது இதெல்லாம் சேத்துக்கனும் ;) ).

சொன்னது போல என்னை ச்ந்திக்க வரும் நேரத்தை தொலைபேசினார்...
”சிங்”கை கோவி கண்ணன் என்பதால் பஞ்சாபி போல தலையில் தலைப்பாகை வைத்திருப்பாரோ...
கண்ணன் என்பதால் தலையில் மயிலிற்கு வைத்திருப்பாரோ என எண்ணினேன்..

அவர் வந்த பிறகு தான் தெரிந்தது அவர் தலையில் ஒன்றும் இல்லை என்பது. ;)

வெளிநாட்டில் அதிக காலம் இருந்ததால் என்னவோ சொன்ன நேரத்தில் சரியாக வந்தார். தனது இந்திய அடையாளத்தை இழந்துவிட்டார் என்பதற்கு இதுவே சாட்சி... ;)மேலும் இந்தியர்கள் புதிய நபர்களை அறிமுகப்படுத்தி , பயணம் செய்து சந்திப்பதை விரும்பமாட்டார்கள். வெளிநாட்டிலிருந்து வந்ததும் கையில் மினரல்வாட்டர் பாட்டிலுடன் உறவினர் வீட்டுக்கு சென்று அளந்து விடுவார்கள்...

இது போன்ற செய்கை அற்றவராக கோவிகண்ணன் இருந்தார். ( முக்கியமாக மினரல்வாட்டர் பாட்டில் கையில் இல்லை .. ;) பையில் இருந்திருக்கலாம்..!)

2000 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஆசிரமத்தையும்...
ஸ்வாமி ஜீ பிசியாக இருக்கிறார் காத்திருங்கள் என கூறி குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையில் உற்கார வைப்பார்கள்...ஸ்வாமி சிஷ்யர்கள் புடைசூழ வருவார் என எதிர்பார்த்திருப்பார் என நினைக்கிறேன்.

ஆனால் நடந்தது வேறு :)

அவரின் கற்பனையில் இருந்த ”நான்” இயல்பில் வேறு மாதிரி இருந்திருப்பேன் என நினைக்கிறேன். அல்லது சுவாரசியமாக இருந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். வந்த சில மணி நேரத்தில் பிற பதிவர்களை சந்திக்க வேண்டும் என கிளம்பினார்..

நாங்கள் என்ன பேசினோம் என கேட்பவர்களுக்கு... இரு நாட்டு அதிபர்கள் என்ன பேசினார்கள் என வெளியிடுவார்களா? அதுபோலதான் நாங்கள் பேசியதும்..

ஒரே வித்தியாசம்... நங்கள் “NOT" அதிபர்கள்.

இனிக்க இனிக்க பேசினார்... குழந்தை சிரிப்பது போல அழகாக சிரித்தார்.. ( இது எல்லாம் உண்மைதாங்க.. அவர் எழுத சொல்லலை..)

திருப்பூர் சென்று பரிசல்காரன், வெயிலான் போன்றவர்களை சந்திக்கப் போவதாக சொல்லி விடைபெற்றார்... (பாவம் என அவர்களை நினைத்து தனியாக ப்ரார்த்தனை செய்தேன் ;) ).

நான் நேரில் சந்தித்த முதல் வலைபதிவர் இவர்தான். நான் வலைபதிவுக்கு வரும் முன்னரே கோவை வலைபதிவர்கள் கூட்டம் நடந்து முடிந்துவிட்டதால் பிற பதிவர்களை சந்திக்க முடியவில்லை..

என்ன கோவை பதிவர்களே சந்திப்போமா? ஆவலாக உள்ளேன்... (என்னையும் ஆட்டத்தில் சேத்துக்குங்கப்பா...;) )

விடைபெரும் பொழுது சில புத்தகத்தையும் சாக்கலெட்டையும் வழங்கினார்.

சாக்கலெட்டை விட அவரின் சந்திப்பு இனிமையாகவே இருந்தது...

28 கருத்துக்கள்:

நாமக்கல் சிபி said...

நல்ல சந்திப்பு!

நானும் கோவையில்தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன்!

நானும் வாத்தியாருமாக ஒரு அரை மணி நேரச் சந்திப்பு அது!

இரண்டு வருடங்கள் ஆகி விட்டது!

நாமக்கல் சிபி said...

எனக்கும் கூட உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது!

காலம் கனியட்டும்!

பரிசல்காரன் said...

ஸ்வாமிஜி.. நிஜமாகவே கோவி சொல்வதற்கு முன் உங்களை கற்பனைக் கதாபாத்திரமாகத்தான் வைத்திருந்தேன். அவர் உங்களைப் பற்றிச் சொல்லியதும் உங்கள் மதிப்பு மென்மேலும் கூடியது. கோவையில் இருக்கின்றீர்கள் என்பது எங்களுக்கு அவர் சொல்லித்தான் தெரிந்தது.. :-( இல்லையென்றால் என்றோ சந்தித்திருப்போம்.


சரி.. இனியென்ன தடை. சந்திப்போம்!

(இந்தப் பதிவுக்கு நீங்கள் நகைச்சுவை என்று லேபிள் கொடுத்திருப்பது சிரிக்க வைத்தது! அதுதான் நகைச்சுவையோ!)

Anonymous said...

உங்களைச் சந்தித்ததும் என்னைத்தான் சந்திக்க வந்தார். உங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அவர் சாமியோ இல்லையோ நல்ல ஆ!சாமி எனச் சொன்னார். உங்களைச் சந்திக்கச் சொன்னார். பயமாக இருந்ததால் (கடவுள் பயம்ங்க) வெயிலான் அல்லது பரிசலுக்காகக் காத்திருக்கிறேன். விரைவில் சந்திப்போம்.

துளசி கோபால் said...

நல்ல பதிவு ஸ்வாமிஜி.

நானும் அவரைச் சிங்கையில் சந்தித்தேன். குடும்பத்துடன் வந்திருந்தார். இனியவர் & இனிய குடும்பம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நாமக்கல் சிபி,

உண்மைதான்.. அவர் இனியவர். கோவையில் கண்டிப்பாக சந்திப்போம்..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்காரரே..

முதலில் என்னை (என்னை எல்லாம் கூட ;) ) தொடர்வதற்கு நன்றிகள்...

கண்டிப்பாக சந்திப்போம். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

//(இந்தப் பதிவுக்கு நீங்கள் நகைச்சுவை என்று லேபிள் கொடுத்திருப்பது சிரிக்க வைத்தது! அதுதான் நகைச்சுவையோ!)///

இதை மனதில் குறித்து வைத்து இருக்கிறேன்.. கோவைக்கு வரும்பொழுது நல்ல கவனிப்பு உண்டு :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடகரை வேலன்,

உங்களின் தூரத்து ரசிகன் நான். புரியவில்லையா? உங்க சிறுகதைகளை படித்து விட்டு மனதில் பாராட்டுபவன்.

உங்கள் புகைப்படத்தை கூட இப்பொழுது தான் திரு தாமிராவின் வலைபகுதியில் பார்த்தேன்.

வாருங்கள் நான் சாமியும் இல்லை ஆசாமியும் இல்லை...எளியவன்...

ஸ்வாமி ஓம்கார் said...

திருமதி துளசி கோபால்,

உண்மைதான்.. நான் இரு இனிய தன்மையை தான் உணர்ந்தேன். கோவியார் தனியாகவே வந்திருந்தார்.. :)

ஸ்வாமி ஓம்கார் said...

கோவியாருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பெரியது போலும்...

பதிவு போட்டதும் 100க்கு மேம்பட்டவர்கள் படிக்கிறார்கள்..

வருங்கால முதல்வர் கோவியார் வாழ்க... ;)

நாமக்கல் சிபி said...

//வருங்கால முதல்வர் கோவியார் வாழ்க... ;)//

நிங்க சிபாரிசு செஞ்சா கல்வித்துறை அல்லது போக்குவரத்துத்துறை எனக்குக் கிடைக்கும். ஹிஹி,,,!

Unknown said...

ஸ்வாமிஜி,

பதிவு நல்ல சுவராஸ்யமா இருக்கு. எழுத்து நடை நல்ல விறுவிறு. ஒரு “சுள்” இருக்கு.பாதி பேர் மொக்கைப் பதிவுப் போட்டுக் கொல்கிறார்க்ள்.

தொடருங்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவியாரின் வலைதளத்தில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பரிமாறிகொள்ளும் பொழுது
அவரின் தூண்டுதலால் உருவானது தான் இந்த தளம். ஜோதிட சாஸ்திரத்தை பற்றி தெளிவு கொடுக்கும் ஓர் வலைபக்கம் உருவாக அவருக்கும் பங்கு உண்டு. ( இந்த வலை தளத்தின் மேல் காண்டுடன் இருப்பார்கள் கவனிக்க.. கோவியாருக்கும் பங்கு உண்டு)//சுவாமி!
கோவியாரை இப்படி அனாமத்தா பிடிச்சு விடலாமா?
அருள் பாவித்து அனுப்பி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!
சிங்கை வந்த பிறகு பார்க்கலாம் ஏதும் மாற்றம் தெரிகிறதா என்று!

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிகம் சாக்லேட் சாப்பிடாதிங்க.... பல் பூச்சி பிடித்துவிடும்.... அவற்றை அப்படியே வைத்திருங்கள். நான் வரும்போது வாங்கிக்கிறேன்.

krish said...

It is very hilarious to read your "Kove Kannan's Attahasam". I am motivated to see his blog. I started reading blogs when I was searching for some information about Astrology. I stumbled upon Subbaiah Vathiar's blog. Thank you all.

கோவி.கண்ணன் said...

//அவரின் கற்பனையில் இருந்த ”நான்” இயல்பில் வேறு மாதிரி இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.//

கற்பனை எதுவும் செய்யலை ஸ்வாமி, நீங்கள் தான் ஏற்கனவே புகைப்படமெல்லாம் போட்டு தோற்றத்தை தெளிவு படுத்திவிட்டீர்களே. வூட்டாண்டா சாமி அறை இருந்தாலும் கோவிலுக்கு போறதில்லையா ? அப்படித்தான் சந்திக்க வந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். :)

//அல்லது சுவாரசியமாக இருந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். வந்த சில மணி நேரத்தில் பிற பதிவர்களை சந்திக்க வேண்டும் என கிளம்பினார்..
//

சுவாரிசியம் இல்லையா ? யார் சொன்னது. 2 மணி நேரத்தில திரும்பி வரவில்லை என்றால் கோவியானந்தாவாக திரும்பிவிடப் போகிறேன் என்று நண்பர்கள் நினைத்துவிடுவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தனர் :)

***

நகைச்சுவை பட்டாசுகள் பத்தியெங்கிலும் வெடிக்க வைத்து இருக்கிறீர்கள். அதுக்குமேல் சுவாரிசியமற்றவர் என்று எவேரேனும் சொல்லுவார்களா ?

அப்பாவி தமிழன் said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

Anonymous said...

கோவியார் திருப்பூர் வந்ததிலிருந்து சென்றது வரை ஏன் ஓம்கார் புராணம் பாடினார் என்று இப்போது தான் தெரிகிறது.

விரைவில் சந்திக்கலாம்.

Sanjai Gandhi said...

//கோவியாரின் வலைதளத்தில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பரிமாறிகொள்ளும் பொழுது
அவரின் தூண்டுதலால் உருவானது தான் இந்த தளம். ஜோதிட சாஸ்திரத்தை பற்றி தெளிவு கொடுக்கும் ஓர் வலைபக்கம் உருவாக அவருக்கும் பங்கு உண்டு.//

வாத்தியாருக்கு வடைபாயாசத்துடன்( எவ்ளோ நாள் தான் வெத்தலை பாக்கோட அனுப்பறது?) அனுப்பி வைக்கப் படும்.. :)

Sanjai Gandhi said...

ஸ்வாமிஜி அடியேனை நினைவிருக்கிறதா? “இந்த சந்திப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்” என தங்கள் வாயாலேயே சொல்ல வைத்த அடக்க ஒடுக்கமான பையன் :))

Sanjai Gandhi said...

கோவியார் பதிவை இப்போ தான் பார்த்தேன்.. அவர் என்னை சந்திக்காமல் சென்ற கோவத்தில் இனி அவர் பதிவில் பின்னூட்டம் இடுவதில்லை என்று இருப்பதால் அங்கு எதும் சொல்லவில்லை.. உண்மையில் உங்களை சந்தித்தது ரொம்ப சந்தோஷம். வீட்டில் இருந்தவர் நாங்கள் வந்திருக்கிறோம் என்று அறிந்து அவ்வளவு தூரத்தில் இருந்து வந்ததும் இல்லாமல் சற்றும் முகம் சுளிக்காமல் அவ்வளவு நேரம் மிக இயல்பாய் ஒரு கல்லூரித் தோழன் போல ஜாலியாய் எங்களுடன் பேசிக் கொடிருந்தது எங்களை ரொம்பவே கவர்ந்தது. மீண்டும் சந்திப்போம்..( உஷார் ஆய்டாதிங்க :) :))

குசும்பன் said...

//இனிக்க இனிக்க பேசினார்... குழந்தை சிரிப்பது போல அழகாக சிரித்தார்.. ( இது எல்லாம் உண்மைதாங்க.. அவர் எழுத சொல்லலை..)//

சுவாமி ஜீ இது உங்களுக்கே அடுக்குமா! :((

(கோவி அண்ணாச்சி சுவாமியை இப்படி எழுதவைத்ததன் ரகசியம் என்னவோ! சொல்லுங்கள்!)

குசும்பன் said...

//Namakkal Shibi said...
எனக்கும் கூட உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது!//

நான் இந்தியா வந்து இருந்த பொழுது சிபியிடம் பேசிக்கிட்டு இருந்த பொழுது என்னிடமும் சொன்னார், அப்பொழுது நான் நம்ம மக்கள் தான் இதுபோல் வேறு பெயரில் வலைப்பூ ஆரம்பித்து காதில் பூவைப்பார்கள் என்றேன், அவர் இல்லை இல்லை என்று சொன்னதும், பின் கோவி உங்களை பற்றி எழுதியதும் உங்களை பற்றி நல்ல படியாக உணரவைத்தது.

ஸ்வாமி ஓம்கார் said...

சஞ்சய்,

உங்களை மறக்க முடியுமா ? என்ன ஒரு சிரிப்பு, கிண்டல்.. குறைந்த நேரமானாலும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் தொழிலை இந்த வலைப்பக்கத்திலும் ஆரம்பித்து விட்டீர்களா ;) நன்றி..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குசும்பன்..

உங்களாவது நாமக்கல் சிபியிடம் சொன்னீர்கள். பலர் நேரடியாக மின்னஞ்சால் அனுப்பி என்னை கலாய்த்தார்கள் :).

நன்றி. உங்கள் ஆதரவு தொடரட்டும்

Sanjai Gandhi said...

// ஸ்வாமி ஓம்கார் said...

சஞ்சய்,

உங்களை மறக்க முடியுமா ? என்ன ஒரு சிரிப்பு, கிண்டல்.. குறைந்த நேரமானாலும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் தொழிலை இந்த வலைப்பக்கத்திலும் ஆரம்பித்து விட்டீர்களா ;) நன்றி..//

நன்றி ஸ்வாமி.. நன்றி..

மறந்துடுவியளோன்னு நெனைச்சேன்.. மறந்துட மாட்டியளே... கிகிகி.. :))

எம்.எம்.அப்துல்லா said...

கோவி அண்ணே ரொம்ப அருமையான மனுஷன் சாமி. சிங்கையில் அவரைப் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு :)

priyamudanprabu said...

( இது என்ன ”பொளந்து...கட்டுவார் ...” என கேட்பவர்களுக்கு விளக்கம்: பதிவில் இவர் விஷயத்தை பொளந்து விடுவார்.. படிக்கும் வாசகர்கள் பின்னூட்டத்தில் கட்டுவார்கள் பாருங்கள் அப்படியொரு கட்டு :)) )

///

அடடா!!!
கலக்குறீங்க
காவி உடையை பார்த்ததும் வேறு என்னவோ நினைத்தேன்
நல்லா கட்டுறீங்க