Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, November 25, 2008

சாம்பு மாமாவின் சந்தேகங்கள்

சாம்பு மற்றும் வெங்கி என்ற இரு கதாபத்திரங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இருவர் பேசும் உரையாடல் மூலமாக நமக்கு பல கருத்துக்கள் தெரியவரும். இவர்களை பற்றிய ஓர் அறிமுகம்..

சாம்பு மாமா என எல்லோராலும்
அழைக்கப்படும் சாமிநாத அய்யர் ஓர் ஜோதிட "வித்து"வான். ஜோதிடம் தெரியும் என்ற நினைப்பில் பரிகாரம் போன்ற வழிகளில் மக்களை ஏமாற்றும் வகையில் ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர். இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் பல ஜோதிட அமைப்புகள் ஜோதிட சாம்ராட், ஜோதிட வாச்சஸ்பதி என பல பட்டங்கள் கொடுத்திருக்கிறது என்பது வேடிக்கை. அவர் கேட்கும் பல கேள்விகள் முட்டாள் தனமாக இருந்தாலும் பல உண்மைகளை உங்களுக்கு வெளிச்சமிட்டு காட்டும்.


வெங்கி என்று அழைக்கப்படும் வெங்கட்ராமணன் இளவயதில் ஜோதிடத்தை ஆழமாகக் கற்று தெளிந்த நிலையில் இருக்கிறான். சாம்பு செய்யும் வேலைகள் அவனுக்கு பிடிக்காவிட்டாலும், சம்புவுக்கும் அவன் குடும்பத்திற்கும் நெருக்கமானவன். சாம்புவின் கேள்விகளுக்கு விவேமான பதில் சொல்லிவதில் வெங்கியை யாரும் மிஞ்ச முடியாது.
------------------------------------------------------------------------------

சாம்பு மாமாவின் சந்தேகங்கள்

(திரையரங்கு வாசலில்...)

சாம்பு: என்னடா அம்பி, டிக்கெட் கிடைக்கலையா?
வெங்கி: என் கூட சினிமா பார்க்க வந்திருக்கீங்க , நிச்சயம் கிடைக்கும்.

(டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்..சாம்புவின் பொறுமை குறைய )

சாம்பு: டென்ஷன் குறைய சினிமாக்கு வந்தா...டிக்கெட் கிடைக்காம டென்ஷன் அதிகமாயிடும் ..நா வரேண்டா அம்பி.

வெங்கி: மாமா..பொறுமையா இருங்க. .கண்டிப்ப நாம இன்னைக்கு சினிமா பார்ப்போம்.

சாம்பு: ஏன்...? இந்த தியேட்டர் ஓனர் உனக்கு தெரிஞ்சவரா?

வெங்கி: (புன்னகையுடன்) அவரை விட எனக்கு தெரிஞ்சது ஒன்பது கிரகங்கள் தான். அதை வைத்து பார்த்தால் நாம கண்டிப்பா இன்னைக்கு சினிமா பார்ப்போம்.

சாம்பு: ஐயோ! நானே டிக்கெட் கிடைகலேனு இருக்கும் போது தான் உனக்கு 9 கிரகமும் ஜோசியமும்.

வெங்கி: மாமா.. ஆளுங்கிரகங்கள் வைத்து பார்த்தால் 5,11 உடன் சுக்கிரன் தொடர்பு இருக்கு...ஆக நாம் சினிமா பார்ப்போம்.

சாம்பு: ஆரம்பிச்சுடியா உன் ஆளும்கிரகத்தை.. 5,11 சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் பொழுதுபோக்குன்னு நான் ஒத்துக்கறேன், ஆன அது சினிமாவா இருக்கணும்னு அவசியம் இல்லயே... பார்க், பீச்-னு வேற இருக்க கூடாதா?

வெங்கி: 5,11 சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் பொழுதுபோக்குன்னு நீங்களே சொல்லிட்டிங்க.....மேலும் நாம சினிமா தியேட்டரில் தானே இருக்கோம்? பார்க் , பீச்சில் இல்லியே?

சாம்பு: ரொம்ப புத்திசாலியா பதில் சொல்றதா நினைப்போ? கிரகம் சொல்லுமா? பார்க், பீச் எந்த கிரகத்தை வைத்து சொல்லுவே?

வெங்கி: 5,11 நினைகாட்டும் சுக்கிரனுடன்- புதன்
தொடர்பு பார்க், சந்திரன் தொடர்பு பீச்,
செவ்வ்வாய் தொடர்பு விளையாட்டு மைதானம். சூரியன் தொடர்பு அரசு
பொருட்காட்சி, குரு தொடர்பு நூலகம் என சொல்லலாம்.

சாம்பு: அருமைடா அம்பி. அப்போ வெறும் சுக்கிரனின் தொடர்பு சினிமா, நாடகம் மட்டும் காட்டுது. ஆளும்கிரகத்தை வச்சு நாம பார்க்கப் போகிற சினிமாவின் கதை எப்படி இருக்கும்னு சொல்லுவியா?

வெங்கி: அது ரொம்ப சுலபம். ஓடும் லக்னத்திற்கு 5 ஆம் இடம் பாருங்க. சந்திரன்,சுக்கிரன் தொடர்பு இருந்தால் குடும்பம்-காதல் கதை, செவ்வாய் தொடர்பு அடிதடி மற்றும் கொலை , புதன் தொடர்பு நகைச்சுவை, சூரியன் தொடர்பு நாட்டுப்பற்றுள்ள படம், குரு தொடர்பு டாக்குமெண்டரி படம்.

சாம்பு: அப்போ சனி தொடர்பு இருந்தால் பழைய படத்தின் கதையை திருப்பி எடுப்பாங்களா?

வெங்கி: ஹ..ஹா.. ஹ உங்களோட ஒரே தமாஷ்தான்...சனி தொடர்பு இருந்தால் புராண கால கதை.
சாம்பு: ஓஹோ...அதுசரி இப்பொ ஆளும்கிரகம் என்ன சொல்லுது? இப்ப நாம என்ன மாதிரி கதை உள்ள படத்தை பார்க்க இருக்கோம் ?

வெங்கி : செவ்வாயும், சுக்கிரனும் தொடர்பு இருக்கு ஆக காதலும் , கொலை அடிதடி கதை உள்ள பாடம்தான்.

சாம்பு: அம்பி எனக்கு அடிதடி, கொலைன்னா பயம்டா... சினிமா பார்த்துட்டு நீதான் என்னை ஜாக்கிரதையா ஆத்துக்கு அழைச்சுண்டு போகணும்

(இருவரும் திரையரங்கினுள் செல்கிறார்கள்)


2 கருத்துக்கள்:

ATOMYOGI said...

வணக்கம் ஓம்கார் அவ‌ர்களே!
தங்களது பதிவினை படிக்க்கும் பொழுது சோதிடம் வாயிலாக பெருமபாலனவற்றை கணிக்க முடியும் என தெரிகிறது. ஆனால் நீங்கள் சொல்லும் சுக்கிரன் 5,11 உடன் தொடர்பு, குறி காட்டுதல், நிகழும் லக்கினம்....... புரியவில்லை... தாங்கள் பயன்படுத்துவது K.B முறையா? அப்படியெனில் அதன் அடிப்படையில்(BASIC LESSONS) இருந்து எங்களுக்கு கற்று தர வேண்டுகிறேன்!!!!!!!
நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி,

கூடிய விரைவில் கருத்து கணிப்புக்கு பிறகு முடிவு செய்கிறேன்

நன்றி.