Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, September 12, 2008

ஜோதிட கேள்வி பதில்

  • ஜோதிடத்தின் மூலம் மனிதன் மன பலம், தன்னம்பிக்கை பெற முடியுமா?

இதற்கு பதில் கூறும் முன், இந்த கேள்வி உங்களுக்கு ஏற்பட்டதன் காரணம் என்ன என பார்ப்போம். சிறு விதையை வைத்து மரத்தை முடிவு செய்யலாம் அல்லவா? தற்சமயத்தில் ஆன்மீகத்தை போதிப்பவர்கள் பலர் ஜோதிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். வேத உபஷத்துக்களை மேற்கோள்காட்டி பேசும் இவர்கள் வேதத்தின் கண்ணை மூடி தியானிக்க சொல்கிறார்களோ என நினைக்கிறேன். இவர்களின் பிரச்சாரத்தால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு பற்று அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. ஜோதிடம் வேண்டாம் என சொல்லும் இவர்கள் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தபட்ட பஞ்சாங்கம் மூலம் அமாவாசை , பௌர்ணமியை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே காரணம் மட்டுமே.

ஜோதிடம் மூலம் தெளிவான உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு ஆற்றும் சேவையை தொடர்ந்து செய்வீர்களா என்பது சந்தேகம். இதை உணர்ந்த அவர்கள் ஜோதிடத்தை நம்பி உங்களின் வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என பிரசாரம் செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை பேச்சாளர் என வைத்துக்கொள்வோம். உங்களை 5 வருடத்தில் 5 கோடி சம்பாதிக்கும் ஆற்றலை தருகிறேன் என உற்சாகமாக பேசும் சமயம் உங்களின் கற்பனை எல்லை விரிந்து இருக்கும். ஐந்து வருடம் முடிந்ததும் , கையில் 5 ரூபாயுடன் திண்டாடும் சமயம் தன்னம்பிக்கை பேச்சாளரை
நினைத்தீர்கள் என்றால் உலகிலேயே அதிக மன அழுத்தத்தை கொண்ட மனிதனாக மாறுவீர்கள்.

ஏன் என்றால் தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சாளரோ, ஆன்மீக வழிகாட்டியோ அனைவரையும் அந்த நிலைக்கு உயர்த்த முடியுமா? சிந்திக்க வேண்டும். உயராத மற்றவர்களின் நிலை வருத்ததிற்குரியதாகிவிடும். அதற்கு பதில் ஜோதிடரீதியாக உங்களின் எதிர்காலத்தை சிறந்த ஜோதிடர்கள் மூலம் தெரிந்து கொண்டால், நடைபெறாத காரியங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பை வைக்க தேவையில்லை . உங்கள் மனம் நீர்வீழ்ச்சியை போல கீழ்நோக்கி போகாமல் , காட்டாறு போல தானமாக போகலாம்.

  • செய்வினை கோளாறுகள் என்பது உண்மையா?
கடவுள் எனும் அளவிடமுடியாத சக்தி எல்லா நேரமும் உங்களை ஆட்டுவிக்கிறது என உணருங்கள். அவரை மீறி எதுவும் நடக்காது. இந்த நம்பிக்கை இருந்தால் எந்த கவலையும் இல்லை. கம்யூட்டரில் வைரஸ் வருவதால் ,அதை தடுக்க ஓர் ஏற்பாடு செய்கிறோம். வியாதி வரும் முன் தடுப்பூசி அளிப்பது போல. என்றும் கடவுளிடன் பக்தி கொண்டால் இதை போன்ற சின்ன விஷயத்திற்கு கவலை படவேண்டாமே. ஜோதிட சாஸ்திரத்தில் இதை ஆராயும் முறை உண்டு. தற்காலத்தில் மந்திர சாஸ்திரத்தை சிறப்பாக பயன்படுத்துபவர்கள் குறைவு. அதிலும் பிறர் வாழ்கைக்காக பயன் படுத்துபவர்கள் மிக குறைவு. ஆன்மீக ரீதியான தொடர்பு இல்லாதவருக்கே இந்த பயம்வரும். மாயை எனும் அறியாமையே இதற்கு காரணம்.

  • ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் காணிக்கையை எவ்வாறு முடிவு செய்வது?

உண்மையைச் சொன்னால் இதற்கு அளவுகளே கிடையாது. உங்கள் வாழ்க்கையை துல்லியமாக சொல்லும் ஒருவருக்கு குறைந்தளவு பணம் குடுத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்களே சிறுமையாக்கினீர்கள் என அர்த்தம். பழங்காலத்தில் ஜோதிடரிடத்தில் வருபவர்கள் ஜாதகம் பார்ப்பதற்கு முன்னரே வேஷ்டி,பழங்கள் மற்றும் காக்கை கொடுத்துவிடுவார்கள். காரணம் குரு, மருத்துவர் மற்றும் ஜோதிடர் மூவரும் வாழ்க்கையை ஆராய்பவர்கள். இவர்களுக்கு முன்னரே மரியாதை செலுத்துவது முறை. என்று ஜோதிடரின் மேல் உள்ள அவநம்பிக்கையால் ஜாதகம் பார்த்து முடித்ததும் பணம் கொடுக்க துவங்கினார்களோ அன்று முதல் ஜோதிடரும் பல தவறான வழிகாட்டுதலை செய்கிறார்கள். முன்னரே கொடுப்பதால் மனரீதியாக ஜோதிடர் திருப்தி அடைந்ததும் அவரிடம் ஜோதிட பலன் கேட்பது எளிது. இல்லை என்றால் நாம் அளிக்கும் பணத்தில் அவருக்கு கவனம் இருக்கும் ஜாதகத்தை கவனிக்க தவறலாம்.

  • சூரிய குடும்பத்தில் 10வது கோள் கண்டுபிடிக்கப்படுள்ளதாகவும் இது ஜோதிட ரீதியான பலன் கொடுக்கும் என்கிறார்களே உங்கள் கருத்து என்ன?

ரிஷிகளும், மாமுனிவர்களும் கண்டுபிடித்தது இந்த ஜோதிட சாஸ்திரம். அவர்களின் ஞானத்திற்கு முன் இந்த விஞ்ஞானம் எல்லம் பூஜ்ஜியமே. விஞ்ஞானிகள் சூரியமண்டலத்தை ஆராயும் முன்னரே இவர் இதை பகுத்தாராய்ந்தவர்கள். சூரியமண்டலத்தையும் தாண்டி 27 நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரித்தவர்கள். சூரிய மண்டலத்தை தாண்டி செல்லும் சமயம் பத்தாவது என்ன பதினைந்தாவது கிரகத்தையே அவர்கள் உணர்ந்திருக்க கூடும். ஆனால் இவை ஜோதிடத்திற்கு பயன்படுமானால் முன்பே இணைத்திருப்பார்கள். இந்த மெய்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஒப்பு நோக்கினால் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒன்றுமே இல்லை. ஜோதிட சாஸ்திரத்தில் வானில் எப்பொழுது வானவில் தெரியும் , எவ்வளவு நேரம் தெரியும் என கணக்கிட முடியும். ஆனால் விஞ்ஞானத்தில் அந்த வளர்ச்சி இல்லை. அதனால் விஞ்ஞானிகள் கண்டறிந்தது மெஞ்ஞானிகளுக்கு தெரிந்ததில் கால் பங்கு கூட இல்லை என்பதை உணருங்கள்.

  • கர்ம வினையை மாற்ற முடியுமா?

கர்ம வினையை ஏன் மாற்றவேண்டும்? உங்களுக்கு நல்ல கர்மவினை அமைந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதால் இந்த கேள்வி உதிக்கிறது. கடவுள் அமைத்த பாதையை மாற்ற துடிப்பது நமது அஹங்காரமே. கடவுளை சரணடைந்து உங்கள் தேவையை பூர்த்திசெய்யுங்கள். கடவுளுக்கு நிகரானவர்களின் சன்னிதானத்தில் மட்டுமே அது சாத்தியம். சிலர் கர்மத்தை கழிக்கிறோம் என கூறி வியாபாரம் செய்கிறார்கள். மனம் முழுவதும் அவனை நினைத்து உருகினால் அனைத்தும் சாத்தியம். சரணடைந்தவர்களுக்கு கர்மவினையை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

நீங்கள் உலக பிரபலமடைய்பவராக ஆவதாக உங்கள் கர்மவினை இருக்கிறது என கொள்வோம் , அது தெரிந்து கொள்ளாமல் கர்மவினையை மாற்றுகிறேன் பேர்வழி எனஒரு சாதாரண மனிதராக மாற வாய்ப்புள்ளது அல்லவா? முதலில் உங்கள் கர்மவினையை அறிய முற்படுங்கள் , அறிந்தால் மற்ற முயல மாட்டீர்கள். உங்கள் அறியாமையே மாற்ற வேண்டும் என போரடுகிறது - நிங்கள் அல்ல...!1 கருத்துக்கள்:

KARMA said...

மிக்க நன்றி ஓம்கார் ஸ்வாமி அவர்களே.

கர்மவினை பற்றிய ஒரு கேள்வி. கோவிகண்ணன் அவர்கள் கேட்டது.

"ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது ?"

எனது இந்த பிறவி இதற்கு முன் பிறவிகளினாலான கர்ம பலனினால் வந்தத்து, அப்படியானால் முதல் (very first birth) பிறப்பிற்கு காரணம் எது?