Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 29, 2012

ஸ்ரீசக்ர புரி ஆன்மீக பயணம் 2012


ஸ்ரீ சக்ர புரி என்ற திருவண்ணாமலைக்கு ப்ரணவ பீடம் சார்பாக ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 6,7 ஆம் தேதிகளில் ( வியாழன்,வெள்ளி ) இரண்டு நாட்கள் பயணம் இருக்கும்.

திருவண்ணாமலையில் ஆன்மீக அதிர்வுகொண்ட இடங்களை தரிசிப்பது அங்கே தியானிப்பது முக்கிய நோக்கமாக கொண்டு பயணம் செய்ய இருக்கிறோம்.

பயணக்கட்டணம் 4500/- ரூபாய். இதில் தங்கும் இடம், மூன்றுவேளை உணவு, நகரத்தின் உள் பயண செலவுகள் ஆகியவை அடங்கும்.

20 நபர்களுக்கு மட்டுமே இடம் உண்டு. இப்பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இது சுற்றுலா அல்ல, ஆன்மீகப்பயணம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தியானம் மற்றும் ஆன்மீக உணர்வு உணர முயற்சி செய்பவர்களுக்கானது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

விருப்பம் உள்ளவர்கள் swamiomkar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து முன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்தவர்களில் இருந்து 20 நபர்களை தேர்ந்தெடுத்து அழைத்து செல்லுவோம்.

Monday, August 13, 2012

குழல் இனிது யாழ் இனிது - பகுதி 7


ஆன்மீக விழிப்புணர்வு கொடுக்கும் அறக்கட்டளையான ப்ரணவ பீடம் எதற்காக குழந்தை பேறு கொடுக்கு பயிற்சியை நடத்த வேண்டும் என சிலர் கேட்கிறார்கள்.

இது வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சியோ அல்லது குழந்தை வரம் கொடுக்கும் நிகழ்ச்சியோ அல்ல. செயற்கை ரசாயன முறையை தவிர்த்து முழுமையான இயற்கை வழி முறைகளில் குழந்தை பேறு பெற்று அதன் மூலம் நம் உடலையும் சமூகத்தையும் மேம்பட்ட நிலையில் வைத்துக்கொள்ளுதல் என்பதே இதன் நோக்கம்.

குழந்தை பெறுதலால் சமூகம் எப்படி மேம்படும் என்ற கேள்வி எழலாம். செயற்கை முறையில் பிறக்கும் குழந்தை தன்னுடைய இயற்கை செயல்பாட்டில் இருக்காது. அதீத செயல் நிலை (ஹைப்பர் ஆக்‌ஷன்) மற்றும் கவனிக்கும் திறனில் சிறிது குறை இருக்க செய்யும். இது அறிவியல் ஆய்வில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் பல செயற்கை கரு குழந்தைகளை கவனித்த பின் கண்ட உண்மை இது. இவ்வாறு இருக்க இத்தகைய குழந்தைகள் சமூகத்தில் பெருகினால் நிலை எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

ஒருபுறம் புற்றீசல் போல செயற்கை கரு மையங்கள் உருவாகி வருகிறது. மறுபுறம் இயற்கைக்கு மாறான வாழ்க்கை சூழலால் குழந்தையின்மை பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டே ப்ரணவ பீடம் சார்ப்பில் "சந்தான யோகா" என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குழந்தை பிறப்பை வடமொழியில் ‘சந்தானம்’ என அழைக்க காரணம் என்ன தெரியுமா? நம் சந்ததியினரை இந்த சமூகத்திற்கு தானமாக கொடுப்பதால் தான். இதன் மூலம் உடல் மற்றும் மனம் முழுமையான ஆரோக்கியம் கொண்ட சமூகத்தை உருவாக்கலாம்.யோகம் என்றால் அடைதல் மற்றும் ஒன்றிணைதல் என அர்த்தம். குழந்தை செல்வத்தை அடைவதே சந்தான யோகம் என்கிறோம்.

சந்தான யோகா நிகழ்ச்சியில் நடைபெறும் முக்கிய செயல்களை இங்கே சுருக்கமாக அளிக்கிறேன்.

  • ஜோதிட ரீதியாக தம்பதியினரின் ஜாதக ஆய்வு செய்து குழந்தை பேறு பற்றி விளக்குதல்
  • ஆன்மீக ரீதியாக மற்றும் மந்திர / யந்திர சாஸ்திர ரீதியான உதவிகள் செய்தல்.
  • ஆரோக்கிய உணவு மற்றும் உடல் நல விழிப்புணர்வு பெறுதல்
  • நம் கலாச்சாரம் காட்டும் குழந்தை பாக்கிய வழிகள்
  • யோக மற்றும் தியான சிகிச்சைகள்


வரும் காலங்களில் ‘சந்தான யோகா’ வகுப்புகள் நடைபெற இருக்கிறது. உங்களின் விருப்பத்தை மின்னஞ்சல் செய்தால் மேலும் விளக்கம் பெறலாம்.

இவ்வளவு பகுதிகளாக எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தாமதமாக பகுதிகள் வெளியிட்டாலும் உங்களின் ஆதரவு தொடர்ந்தது. மிக்க நன்றி. சந்தானம் என்ற நல்ல குழந்தை செல்வத்தை பெற்று முழுமையான வாழ்க்கை வாழ இறையருளை வேண்டுகிறேன்.  

Saturday, July 7, 2012

குழலினிது யாழினிது - பகுதி 6


குழந்தை இன்மை என்பது நமக்கு புதிதாக வந்த பிரச்சனை இல்லை. பல காலமாக இருக்கிறது. ஆனால் தற்சமயம் அதன் விகிதம் அதிகரித்திருக்கிறது என்பதையே நான் இங்கே சுட்டிக்காட்டி வருகிறேன். நம் இதிகாசங்கள் மற்றும் புராணங்களை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பு, சோதனைக் குழாய் குழந்தைகள் என பல்வேறு சான்றுகள் இருக்கிறது.

தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளை பெற்றார் என்றும் காந்தாரி கெளரவர்களை பெற்ற வழிமுறையும் தற்கால செயற்கை கருத்தரிப்புக்கு நேரடியாக தொடர்புகொண்டது. குழந்தை பேறு அடைய நான்கு உடல்களும் முழுமை நிலையில் இருக்க வேண்டும் என்றேன். தம்பதியினருக்கு மொத்தம் எட்டு உடல்களும் முழுமை அடைய வேண்டுமாயின் அதற்கு தற்காலத்தில் ஒரே தீர்வு யோக பயிற்சியும் யோக நிலை சார்ந்த உணவு பழக்கமும் ஆகும்.

ஆனால் பலருக்கு யோக முறை பயிற்சியால் குழந்தை பிறப்பு ஏற்படுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. யோகா செய்தால் அனைவரும் காமத்தை விடுத்து துறவி ஆகிவிடுவார்கள் என்ற தப்பான கருத்து நிலவி வருகிறது.

யோகா என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். நம் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவது யோகம் என அழைக்கப்படுகிறது. இயல்பு மனிதனை விட யோக பயிற்சி செய்பவர்கள் தான் தன் செய்யும் பணியில் ஆழ்ந்து உணர்வுடன் செயல்பட முடியும்.

யோகம் செய்யக்கூடிய ஒருவர் தன் பணியாக எதை முன்னெடுக்கிறாரோ அதில் அவர் அற்புதமாக செயல் ஆற்றுவார். அப்படி இருக்க, யோக பயிற்சி செய்யும் ஒருவர் ஆன்மீகத்தை நாடினால் அதில் அவர் மேல்நிலைக்கு வருவார். குடும்ப வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால் அதில் அவர் மேல்நிலைக்கு வருவார். தன்னை எப்பணியில் இணைக்கிறோமோ அதில் முழு விழிப்புணர்வுடன் பிறருக்கு முன்னுதாரணமாக செயல்பட யோகா மிக உன்னதமான வழியாகும்.

இவ்வாறு விழிப்புணர்வற்று நம்மக்கு கிடைக்கும் உணவு பொருட்களையும், சீரற்ற வாழ்க்கை நிலையும் இருந்து வாழ்ந்தால் குழல் இனிது யாழ் இனிது என்றே சொல்ல வேண்டி வரும். மழலையின் சொல்லை கேட்க வாய்ப்பு இருக்காது.

தற்கால வாழ்க்கை சூழலில் இக்குறைபாடு பெருகிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஆன்மீகத்தில் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நிலைக்கு ஏற்ப குழந்தை செல்வம் என்ற இன்பம் கைவரப்பெற்றேலே அடுத்து முக்தி என்ற முழுமையான நிலைக்கு நாம் செல்ல முடியும்.

தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்காக செயல்படும் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை குழந்தையின்மைக்கு தீர்வாக செயல்பட திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தம்பதிகள் இணைந்து மூன்று நாள் முழுமையான யோக பயிற்சி மற்றும் வாழ்வியல் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டுள்ளோம். ஸ்வாமி ஓம்கார் அவர்களின் நேரடி பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் முழுமையான விழிப்புணர்வுடன் குழந்தை பிறப்பை அனுகி மேம்பட உதவியாக இருக்கும்.

இத்தகைய பயிற்சி தனிப்பட்ட பயிற்சியாகவும் தனிச்சூழலிலும் நடத்த இருக்கிறோம். அதனால் இதன் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் செயற்கை கரு சோதனைக்கு செலவு செய்வதை விட மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் மேலும் பக்க விளைவு 100 சதவிகிதம் இருக்காது. வாழ்நாள் முழுவதும் உங்களில் உடல், மனம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும்.

உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள் பிற தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த பயிற்சியை கொடுக்க ஏன் நாங்கள் முன்வந்தோம்?

(கரு உருவாகும்)