Monday, May 7, 2012
நெய்வேலியில் ப்ராண வித்யா
விளக்கம்
ஆன்மீக உண்மைகள்,
சந்திப்பு,
யோக பயிற்சி,
யோகம்
Friday, May 4, 2012
குழலினிது யாழினிது - பகுதி 2 +18
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது வழக்கு. அது போல நம் உடல் நன்றாக இருந்தால் தான் அதன் செயல்களும் சிறப்பாக இருக்கும். உடல் என்ற உடன் கண்ணாடி முன் சென்று நின்று நன்றாக தானே இருக்கிறேன் என்றும் எனக்கு நோய் நொடி எதுவும் இல்லை என்றும் சிந்திக்கக் கூடாது.
நம் சாஸ்திரம் நமக்கு ஐந்து உடல் இருப்பதாக கூறுகிறது. ஊண் உடல் (physical body), ப்ராண உடல் (energy body), மன உடல் (Mind body),விஞ்ஞான உடல் (Knowledge body), ஆன்ம உடல் (Soul body). இவை அனைத்தும் கோஷங்கள் என அழைக்கப்படுகிறது. இது ஐந்து எண்ணிக்கையில் இருப்பதால் பஞ்சகோஷம் என பெயர்.
ஐந்து உடலில் ஏதேனும் ஒரு உடல் சமநிலை தவறினாலும் நம் வாழ்க்கை தன்மை ஏற்றத்தாழ்வு உண்டாகும். பஞ்ச உடல்களில் ஆன்ம உடல் மட்டும் வெளிப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும். மீதி இருக்கும் நான்கு உடல்கள் வெளிச்சூழலுக்கு விரைவில் மாற்றமடையும்.
பஞ்ச உடலை ஆதாரமாக கொண்டு தான் நம் ஐந்து வித உணர்வு உறுப்புக்களும், ஐந்து செயல்களும் நடைபெறுகிறது. ஒரு மனிதனுக்கு இதில் ஏதேனும் ஒரு உடல் சமநிலை தவறினால் அந்த உடலுக்கு உண்டான உணர்வு உறுப்பின் தன்மையையும் செயலையும் இழப்பார்கள்.
தம்பதியினர் இருவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நபர் ஒன்றுக்கு நான்கு உடல் வீதம் எட்டு உடல்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே குழந்தை பிறப்பும் ஏனைய மேம்பாடுகளும் உண்டு.
நவீன மருத்துவம் மேற்கண்ட நான்கு உடல்களில் ஊண் உடல் என்கிற பிசிகல் பாடியை மட்டுமே ஆராய்கிறது. ஹார்மோன் இருந்தால் குழந்தை பிறக்கும், பிறப்புறுப்புகள் சரியாக இருந்தால் குழந்த பிறக்கும் என அவர்களின் கருத்துக்கள் ஊண் உடலுக்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்காலிகமாக ஊசி மூலம் ஹார்மோன் ஏற்றுவது என்பது உடலால் கிரகித்துக்கொள்ள முடியாது. எதிர்விளைவுகளை பிற்காலத்தில் உண்டு செய்யும். ஹார்மோன் ஊசிகளால் குழந்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல் நலம் தற்சமயம் நலிவடைந்து இருக்கும். ஊசி மூலம் பெற்றெடுத்த குழந்தையை கவனிக்க கூட அவர்களுக்கு சரியான உடல் நலம் இருக்காது.
ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அக்குழந்தையின் பெற்றோருக்கு எட்டு உடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். நம் சாஸ்திரம் ஊண் உடலை மட்டும் பார்ப்பதில்லை. இந்த எட்டு உடலையும் எப்படி மேம்படுத்துவது என்பதையும் விளக்குகிறது.
நம் கலாச்சாரம் செயற்கையாக எதையும் உள்ளே புகுத்துவதில்லை. இயற்கையாக உங்கள் உடலிலிருந்தே அனைத்தையும் மலரச்செய்கிறது...!
தற்காலத்தில் நவீன மருத்துவம் செயற்கை கருத்தரித்தலை ஊக்குவித்தாலும் அனைவருக்கும் குழந்தை பிறப்பை வழங்க முடிவதில்லை என்பதே நிதர்சனம். தம்பதியினர் இருவருக்கும் உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படுகிறது இருந்தும் குழந்தை இல்லை என்பவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
குழந்தை இன்மை என்பது எட்டு உடல்களின் ஆற்றலை சார்ந்தது என்பதை உணர்ந்து, ஊண் உடலுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல் அந்த எட்டு உடலை மேம்படுத்த வேண்டும். நம் சாஸ்திரம் எட்டு உடலையும் மேம்படுத்தும் சூட்சுமங்களை அளித்துள்ளது.
சதுர்கோஷ நியமம் என அழைக்கப்படும் அந்த சூட்சமங்களை பார்ப்போமா?
(கரு உருவாகும்..)
விளக்கம்
அனுபவம்,
இயற்கை வழி குழந்தை பிறப்பு,
குழந்தை பிறப்பு,
செயற்கை கரு
Wednesday, May 2, 2012
குழலினிது யாழினிது - +18
படைத்தல் என்ற ஒரு தொழில் உலகின் இயக்கத்திற்கு அடிப்படையானது. பூரணத்திலிருந்து தோன்றும் அனைத்தும் பூரணமாகவே இருக்கிறது என்றது உபநிஷ்த். அது போல இறை நிலை நம்மை உருவாக்கிய காரணத்தால் நமக்குள்ளும் உருவாக்கும் தன்மை இருக்கிறது.
மனிதனை தவிர பிற உயிர்கள் ஒன்றிணைவது அதை போன்றே மற்றொரு உயிரை தோற்றுவிக்க மட்டும் தான். ஆனால் மனிதன் இன்பம் கருதியும், குழந்தை பிறப்பு என இரு வேறு காரணத்தால் ஒன்றிணைகிறார்கள்.
இந்திய கலாச்சாரம் காமம் மற்றும் திருமணம் ஆகியவைகளை தனிமனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக கருதுகிறது. ஆனால் குழந்தை பிறப்பு சமுதாயம் சம்பந்தமான விஷயமாக கருதுகிறது.
இருவர் இன்பத்திற்காக இணையும் பொழுது சமூகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக இணைந்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் சமூகத்தில் ஏதேனும் தாக்கத்தை உண்டு செய்யும். அதனால் குழந்தை பிறப்பை இருவர் முடிவு செய்ய கூடாது என்கிறது.
சாஸ்திரம். குழந்தை பிறப்பை - கர்ப்ப தானம் என கூறி சமூக நிகழ்வாகவே கொண்டாடுகிறது. குழந்தை பிறப்பை மனிதனின் முழுபரிமாணமாகவும், உயர் செல்வமாகவும் நம் சமுதாயம் கருதியது.
அஷ்ட செல்வம் என கருதுவதில் தனம், தான்யம் போன்ற வரிசையில் சந்தானம் என்பதையும் வைத்தது நம் சாஸ்திரம்.
ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் குழந்தை பிறப்பு என்ற மிக முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. இவற்றை வரும் பகுதிகளில் விரிவாக பார்ப்போம்.
இத்தகைய முக்கியத்துவம் மிக்க குழந்தை பிறப்பு விகிதம் சமீபகாலத்தில் குறைந்து வருகிறது.
இயற்கையான முறையில் குழந்தை பேறு கொண்ட சமூகம் தற்சமயம் கருதரித்தல் மைய வாசலில் காவல் கிடக்கிறது.
உலகில் 1977 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்குத் தான் குழந்தை பிறப்பு நிகழும் தன்மை உண்டு. வாழ்வியல் தவறுகள் மற்றும் இயற்கையிலிருந்து வேறுபட்ட சூழலால் மலட்டு தன்மை அதிகரித்து வருகிறது.
மழலை சொல் கேட்காதவர் புல்லாங்குழல் மற்றும் யாழின் இசையை அருமை என கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர். நவீன் நாகரீகமும் வாழ்வியலும் இப்படியே சென்றால் குழலும் யாழும் மட்டுமே இனிக்கும், மழலை என்பதை கேட்க முடியாது..!
இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?
நம் சாஸ்திரத்தில் எளிய முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இருக்க, அதை விடுத்து நவீன மருத்துவத்தில் ஹார்மோன் சிகிச்சையாலும், பிற வழிமுறையாலும் தங்கள் உடலையும் வாழ்க்கை தரத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுத்துக்கொள்ளாமல் சிறந்த குழந்தையை பெற்று சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் தன்மையையே குழல் இனிது யாழினிது கட்டுரை விவரிக்கப்போகிறது.
(கரு உருவாகும்..)
விளக்கம்
அனுபவம்,
இயற்கை வழி குழந்தை பிறப்பு,
குழந்தை பிறப்பு,
செயற்கை கரு
Wednesday, April 18, 2012
ஈரோட்டில் பங்கு சந்தை ஜோதிட வகுப்பு
விளக்கம்
செய்தி,
பங்கு சந்தை,
பயிற்சி
Subscribe to:
Posts (Atom)






