தாவரங்கள் உருவாவது, வாழ்வது மற்றும் நமக்கு ப்ராண சக்தியை வழங்குவது என அனைத்தும் பிரபஞ்ச சக்தியினால் தான்.
ஒரே மாதிரியான மரக்கன்றுகளை ஒரே நில சூழ்நிலையில் நட்டால் அவற்றின் வளர்ச்சி ஒன்று போல இருக்காது. பூமியில் சில இடங்களில் வனம் இருப்பதற்கும் சில இடங்களில் வனம் அழிந்து அங்கே பேரழிவு ஏற்படுவதற்கும் பிரபஞ்ச சக்தியே காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.
நம் பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களில் இருந்து பிரபஞ்ச ஆற்றல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரியை படிக்கும் பொழுது உங்கள் மேல் விழும் பிரபஞ்ச ஆற்றலானது பல நூற்றாண்டுகளுக்கு முன் நட்சத்திர மண்டலத்திலிருந்து புறப்பட்டிருக்கும்.
பிரபஞ்ச ஆற்றல் பூமியை வந்து அடையும் வரை ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை தொட்டவுடன் தீபாவளி கம்பி மத்தாப்பை போல பல புள்ளிகளாக கிளைவிட்டு பரவுகிறது. இதனால் பூமியின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பிரபஞ்ச சக்தி பரவுகிறது.
பிரபஞ்ச ஆற்றல் எப்படி பரவும் என்பதற்கு சிறந்த உதாரணம் அறிய வேண்டுமானால் ஒரு நன்கு வளர்ந்த மரத்தை இலையுதிர்காலத்தில் தலைகீழாக பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபஞ்ச சக்தி பரவும். இந்த உதாரணம் மூலம் தெரிகிறதா மரத்தின் வடிவம் ஏன் இப்படி இருக்கிறது என்று...! கிளைகள் பிரபஞ்ச சக்தியால் வரும் வடிவமே.
ஒரு தாவரத்தை சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைத்தால் அவற்றால் உணவு உற்பத்தி செய்ய முடியாது என்கிறது தாவரவியல். ஜன்னலுக்கு அருகில் தாவரம் வைத்தால் அவை தலையை நீட்டி சூரிய ஒளியை நோக்கி செல்லுவதாக பள்ளி பாட புத்தகத்தில் நீங்கள் படித்திருக்கலாம். அத்தகைய விஞ்ஞானம் தற்சமயம் மாற்றம் அடைந்து வருகிறது. அவை தலை நீட்டுவது சூரிய ஒளிக்காக அல்ல. பிரபஞ்ச சக்திக்காக என எதிர்கால பாடபுத்தகங்கள் கூறும்.
தற்சமயம் அறிவியல் பிரபஞ்ச சக்தியை பற்றி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கண்டறிந்துள்ளது. பிரபஞ்ச ஆற்றலை அளக்கும் கருவியில் கூட மேல் நிலை கதிர்களே அளக்கபடுகிறது. மிகவும் நுண்ணிய கதிர்கள் அளக்க பல முயற்சிகள் நடக்கின்றன. விஞ்ஞானம் காஸ்மிக் கதிர் ஆய்வில் பின்தங்கி இருக்க ஒரு காரணம் உண்டு. மிகவும் எளிமையான ஒரு ஆய்வகம் அமைக்க குறைந்த பட்சம் இருநூறு கோடி ரூபாய் தேவைப்படும்.
மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒரு கேந்திரம். மரங்கள் இல்லாமல் மனிதன் பிரபஞ்ச ஆற்றலை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அவை மனித உடலுக்கு போதுமானதாக இருக்காது. சில ஆன்மீக பயிற்சியினால் மரங்களின் உதவி இல்லாமல் கூட பிரபஞ்ச சக்தி பெரும் சாத்தியம் உண்டு.
மரங்கள் பிரபஞ்ச சக்தியை உலகுக்கு வழங்கும் என்றால் ஏன் இத்தனை வகை மரங்கள்? ஒரே வகையான மரங்கள் போதும் அல்லவா? மரங்கள் பிரபஞ்ச சக்தியை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அவை வெளிவிடும் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு.
அகஸ்தியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் உங்களுக்கு இக்கருத்தை மேலும் விளக்கும்.
அகஸ்தியர் கொல்லிமலையில் இருந்த சமயம் ஒரு அபூர்வ மூலிகையை தவறுதலாக பறித்த காரணத்தால் கண்பார்வை இழந்தார்.
கண்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அகஸ்தியரை கண்ட அவரின் சிஷ்யர்கள் வேதனை அடைந்தனர். அகஸ்தியரின் கண்பார்வை மீண்டும் வர என்ன செய்ய வேண்டும் என அவரிடமே கேட்டனர்.
எனக்கு எந்த மூலிகையால் கண்கள் குருடானதோ அந்த மூலிகையை எனக்கு கொடுத்தால் என் கண்பார்வை வரும். எனக்கு சமமான சிஷ்யன் ஒருவன் உண்டு. அவனால் மட்டுமே அது சாத்தியம். பிறர் சென்று அந்த மூலிகையை பார்த்தலே அவர்களும் என்னை போல கண்பார்வை இழப்பார்கள் என்றார்.
சிஷ்யர்களும் தங்கள் குருநாதரின் கண்களை மீட்டுக்கொடுக்கும் அந்த சிஷ்யன் யார் என கேட்டனர். அவர் தேரையர் என்ற ஒரு சிஷ்யன் வடக்கில் வாழ்கிறான் அவனை கூட்டி வாருங்கள் என்றார். தங்களை விட அந்த தேரையர் எந்த வகையில் சிறந்தவர் என கேட்டனர் பிற சிஷ்யர்கள்.
நான் கூறினால் உங்களுக்கு புரியாது. அவன் சகல கலையிலும் வித்தகன். அவனை சந்திக்க இன்றே கிளம்புங்கள். பயணத்தின் வழியில் தங்குவதாக இருந்தால் புளிய மரத்தில் மட்டும் தங்குங்கள் என கட்டளையிட்டார். குருவின் கட்டளையை ஏற்று பயணத்தில் புளிய மரத்தில் மட்டும் ஓய்வு எடுத்தார்கள்.
தேரையரின் இருப்பிடம் செல்லுவதற்குள் அனைவரும் நோயுற்று மிகவும் உடல் நலம் குன்றி நிலைகுலைந்து போனார்கள். இவர்களின் நிலையை பார்த்த தேரையர் என்ன ஆயிற்று என கேட்டார். நல்ல உணவு மற்றும் தூய்மையை பின்பற்றினோம் இருந்தாலும் கொடிய நோய் தாக்கிவிட்டது என்றார்கள். அகஸ்தியர் புளிய மரத்தில் மட்டும் தங்க சொன்னார், குருவாக்கை கேட்டும் எங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என கலங்கினார்கள். தங்களுக்கு மருத்துவம் செய்ய கூறி வேண்டினார்கள்.
தேரையர் அவர்களின் வந்த காரியம் அறிந்து தான் அகஸ்தியரை காண வருவதாக கூறினார். மேலும் உங்களுக்கு வைத்தியம் தேவையில்லை என கூறி திரும்பி செல்லும் பொழுது அரச மரத்தை தவிர வேறு எங்கும் ஓய்வு எடுக்க வேண்டாம் என கூறினார்.
அதன்படியே பயணித்த சிஷ்யர்கள் அகஸ்தியரை காண வரும் முன் உடல் நலம் அடைந்தார்கள். சில நாட்களில் அகஸ்தியரிடம் வந்த தேரையர் ஒரு பலகையில் நன்றாக பாதரசம் பூசிக்கொண்டு அதை கண்ணாடி போல பயன்படுத்தி அந்த மூலிகையை பறித்தார். நேரடியாக பார்க்க கூடாது என்பதால் இவ்வாறு செய்தார்.
அகஸ்தியருக்கு கண் ஒளி கிடைத்தது. தேரையரை பற்றிய உள் ஒளி சிஷ்யர்களுக்கு கிடைத்தது.
மரங்கள் அனைத்தும் மனிதனுக்கு நன்மை செய்ய உருவாகவில்லை. சில மரங்கள் மனிதனின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பது உண்மை. சிலருக்கு மரத்தின் அடியில் தூங்கும் பொழுது ஒரு விதமான அழுத்தத்தை உணர்வார்கள். இதற்கு கிராமத்தில் அமுக்கான் என பெயர். உடலில் பிராண சக்தி இல்லாமல் ஒரு வினாடி நம் உடலும் ஆன்மாவும் செய்யும் போராட்டமே அந்த அமுக்குவதை போன்ற உணர்வு.
இரவில் புளி, முருங்கை மற்றும் வேப்ப மரத்தின் கீழ்படுத்தால் இவ்வாறு உணர்வார்கள். சிலருக்கு வீட்டின் உள்ளே ப்ராண சக்தி கிடைக்காத நிலையிலும் இது ஏற்பட்டுவிடும்.
நம் நெடுஞ்சாலை முழுவதும் புளிய மரம் அமைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் வீடுகள் மிகவும் பாதிப்படையும் என்பது உண்மை.
ஒரு மரம் நமக்கு நல்ல விதமான ப்ராணனை கொடுக்கிறதா அல்லது கேடு விளைவிக்கும் ப்ராணனை கொடுக்கிறதா என கூறுவது எளிது.
ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம்.
புளிய மரத்திற்கும் அரச மரத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதா? இதனால் புளியமரத்தில் பேய் இருக்கிறது என்றும் அரசமரத்தில் கடவுள் இருக்கிறார் என்றும் கூறினார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்தும் வைத்தனர். இதன் காரணம் அந்த மரங்களுக்கு இடையே உள்ள ப்ராண ஈர்ப்பை வலுபடுத்தத்தான். அதற்காக ப்ராண சக்தியை பற்றி தெரியாமல் இவைகளுக்கு திருமணம் செய்பவர்களை ஆதரிக்கிறேன் என அர்த்தம் இல்லை. தற்காலத்தில் வேதகாலம் என்ற பெருங்காயம் தீர்ந்து அதன் காலியான பெட்டி மட்டுமே மணக்கிறது.
மிகவும் பெரிய இலையுள்ள மரம் அதிகமான ப்ராணவை வெளிவிடும் அல்லவா? உங்களுக்கு தெரிந்த பெரிய இலை கொண்ட மரம் எது என சொல்லுங்கள் பார்ப்போம்.. உங்கள் வாழ்க்கையில் அது எப்படி இணைந்திருக்கிறது என புரியும்...

காஸ்மிக் கதிர்களை காண்களால் காண விஞ்ஞானம் உருவாக்கிய கருவி.

(.....வேதம் ஒலிக்கும்)