Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, July 28, 2009

என் பெயரை கண்டுபிடியுங்கள்..!

வேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தில் எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிலர் பின்னூட்டம் மூலமும் மின்னஞ்சல் மூலமும் என்னை தொடர்பு கொண்டு சுவையான மற்றும் பிறருக்கு பயன்படும் கேள்விகளை கேட்கிறார்கள்.

சில கேள்விகள் அவர்களின் வாழ்கையில் தனிபட்ட விஷயத்தை சார்ந்தது. சிலது என்னை உச்சகட்ட புகழ்ச்சியில் மூழ்கி எடுப்பது (எல்லாம் நேரந்தான் :) ) என பலவகையான கடிதங்கள் உண்டு. இவ்வாறு வரும் கடிதங்களில் சில சுவையானதும் நமக்கும் தெரிந்து கொள்ளவேண்டும் என விருப்பம் இருக்கும் நபர்களுக்காக இந்த பதிவு.

பிறந்ததில் இருந்து எனக்கு இரட்டை சுழி என்பதால் (சொல்லாமலே தெரியுமே) எந்த விஷயத்தையும் இரு கோணங்களில் அனுகுவேன். ஒன்று மிகவும் சீரியஸானது. இரண்டாவது நகைச்சுவையானது.

எனது சுழிகளில் சிந்திய சிந்தனைகளுக்கு ஏற்ப ஒரு நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கோ..!

சீரியஸ் சுழி :

ஸ்வாமி உங்களிடம் சில கேள்விகள்.

1. ஸ்வாமி உங்கள் இயர் பெயர் என்ன ?

பலருக்கு பலமுறை சொன்ன பதில் இருந்தாலும் சொல்லுகிறேன். எனது உடலுக்கு பெயர் உண்டு எனக்கு இல்லை. என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட பெயரில் என்னை அடையாளபடுத்திக் கொள்ள விருப்பம் இல்லை.


2. சாத்விக உணவு என்றால் என்ன? சிலவற்றை கூறவும்.

சாத்வீக உணவு என்றால் எளிதில் ஜீரணிக்கும், உடலை காக்கும் உணவுகள். உதாரணம் பச்சைகாய்கறிகள், பழங்கள், சமைக்கப்படாத இயற்கை உணவுகள். கோதுமை, கம்பு, சோளம் முதலியன சாத்வீக உணவுகள்.


3. உடம்பை குறைக்க எளிய வழி கூறவும்.
தினமும் ஹதயோக பயிற்சி செய்யவும். உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சியால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் வரலாம். உடல் இயக்கம் கொள்ளும் வேலையை தினமும் செய்யவும். அத்துடன் எளிய உணவு பயிற்சி அவசியம். உங்களுக்கான ஹதயோக ஆசன படங்கள் கீழே.

படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்.
இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும் :)



நகைச்சுவை சுழி :

1. ஸ்வாமி உங்கள் இயர் பெயர் என்ன?

கடைசி கேள்விக்கான பதில் படித்ததும் உங்களுக்கே தெரியும்.

2. சாத்விக உணவு என்றால் என்ன? சிலவற்றை கூறவும்.

மலைப்பாம்பு போல உணவு உற்கொண்டு நகரமுடியாமல் இருக்கிறீர்களா? அது சாத்வீக உணவு அல்ல. நாக்கு ருசிக்காக சாப்பிடாமல் உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுங்கள். சாப்பிடுவது என்பதை ஒரு தியானமாக செய்யுங்கள். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடக் கூடாது.

3. உடம்பை குறைக்க எளிய வழி கூறவும்.
உடலை குறைக்க முடியாது. வேண்டுமானால் உடல் எடையை குறைக்கலாம்.
மேற்சொன்ன தியானத்தை தினமும் செய்யாதீர்கள். உடல் எடை தானாக குறையும்.

நிற்க.

இப்படி பட்ட பதில்களை கேட்டதும் உங்கள் வாயில் என்னை பற்றி ஒரு வார்த்தை வந்திருக்குமே?

அதுதான் முதல் கேள்வியின் பதில்..!

24 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

என்னங்க ஸ்வாமி இதுல நான் கடவுள் படத்தில் அகோரியாக ஆர்யா செய்யும் ஆசனம் ஏன் இல்லை ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்..

//என்னங்க ஸ்வாமி இதுல நான் கடவுள் படத்தில் அகோரியாக ஆர்யா செய்யும் ஆசனம் ஏன் இல்லை ?//

இது சூடான ஆசனம் ஆரிய ஆசனம் இல்லை. :)

இது திராவிட ஆசனமா? :) ஆரிய ஆசனமானு கேட்டு பதிவெழுதாம விட்டதற்கு சந்தோஷம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இப்போ தெரிஞ்சிடுச்சு உங்க பேர் என்னன்னு

எம்.எம்.அப்துல்லா said...

//சிலது என்னை உச்சகட்ட புகழ்ச்சியில் மூழ்கி எடுப்பது (எல்லாம் நேரந்தான் :) ) //

இப்பதான் ஒரு பிரச்சனை முடிஞ்சிருக்கு. கம்முனு கிடங்க சாமி

:))))

☼ வெயிலான் said...

ஹத யோகாசனம்ல்லாம் படம் பாத்து கருத்து தான் சொல்ல முடியும் என்னால.... :)

படமெல்லாம் நல்லாருக்கு!

தமிழ்ப்பிரியா said...

ஸ்வாமி!!! கேள்விக்கு பதிலோடு, உங்க ரெட்டை சுழிக்கு proof காட்டி இருக்கீங்க . கலக்குங்க

*இயற்கை ராஜி* said...

இதையெல்லாம் படிச்சதும் அவ்வ்வ்வ் .ன்னு அழுகை வருது ஸ்வாமிஜி..அதுக்காக உங்க இயற்பெயர் "கண்ணீர் "ன்னு வச்சிகலாமா:-)))))

yrskbalu said...

what topics pending gi?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குறையொன்றும் இல்லை,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

பிரச்சனை வராது. ஏன்னா இங்கே அனானி ஆப்ஷன் இல்லை :) ஏதோ என்னால முடிஞ்சது :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரமேஷ்,

கவலைபடாதீங்கள். முயற்சி செய்தால் நீங்களும் தனுஷாகலாம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி தமிழ்ப்ரியா,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை...

எப்படி வேனும்னாலும் கூப்பிடுங்க தப்பே இல்லை.

பதிவு எழுதும் பொழுது கீழ்கண்ட வரிக்கு ஏதாவது கருத்து சொல்லிவீங்கனு நினைச்சேன்..

/சமைக்கப்படாத இயற்கை உணவுகள்.//

:))

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrsபாலு,

நீங்க கேட்கறது ஒன்னும் புரியல.
இருந்தாலும் உங்கள் வருகைக்கு நன்றி.

sakthi said...

இய‌ற்கை said...

இதையெல்லாம் படிச்சதும் அவ்வ்வ்வ் .ன்னு அழுகை வருது ஸ்வாமிஜி..அதுக்காக உங்க இயற்பெயர் "கண்ணீர் "ன்னு வச்சிகலாமா:-)))))

hahahahaha

sakthi said...

உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சியால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் வரலாம். உடல் இயக்கம் கொள்ளும் வேலையை தினமும் செய்யவும்.

என்ன சுவாமிஜி இப்படி சொல்லீட்டீர்

sakthi said...

நாக்கு ருசிக்காக சாப்பிடாமல் உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுங்கள். சாப்பிடுவது என்பதை ஒரு தியானமாக செய்யுங்கள். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடக் கூடாது.

ஆர். எஸ். புரத்தில இருந்திட்டு இப்படி சொல்றீங்க

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி சக்தி,

//உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சியால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் வரலாம். உடல் இயக்கம் கொள்ளும் வேலையை தினமும் செய்யவும்.

என்ன சுவாமிஜி இப்படி சொல்லீட்டீர்//

உடற்பயிற்சியால் சில பக்கவிளைவுகள் உண்டு. அதை பக்கம் பக்கமாக விளக்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் காலத்தில் நன்றாக இருந்தாலும் வயதான காலத்தில் பாதிப்புகள் உண்டு.

//நாக்கு ருசிக்காக சாப்பிடாமல் உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுங்கள். சாப்பிடுவது என்பதை ஒரு தியானமாக செய்யுங்கள். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடக் கூடாது.

ஆர். எஸ். புரத்தில இருந்திட்டு இப்படி சொல்றீங்க//

எனக்கு தெரிஞ்சு வாயில் போட்டா கரையும் கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா, மணக்க மணக்க அன்னபூர்ணா இட்லி சாம்பார் இது தானே ஆர் எஸ் புரத்தில் கிடைக்கும்?
அதை நான் ருசிக்காக சாப்பிட்டது இல்லை. :)

Unknown said...

வெளுத்துக்கட்டுங்க. வேட்டிய மட்டும் இல்ல நகைசுவையையும்தான்.

Anonymous said...

எனக்கு என்னவோ நீங்கதான் சுப்பாண்டி என்று சந்தேகமாக இருக்குது :) உங்கள் பெயர் சுப்பாண்டி தானே? Anniyan maathiri, Multiple Personalities swami!

நிகழ்காலத்தில்... said...

\\ Dinesh babu said...

எனக்கு என்னவோ நீங்கதான் சுப்பாண்டி என்று சந்தேகமாக இருக்குது :) உங்கள் பெயர் சுப்பாண்டி தானே? Anniyan maathiri, Multiple Personalities swami!\\

இரட்டைச்சுழி ஓம்கார்க்கு இல்லை,
தினேஷ்பாபுக்குத்தான்:))))

*இயற்கை ராஜி* said...

ஸ்வாமி ஓம்கார் said...
சகோதரி இயற்கை...

//எப்படி வேனும்னாலும் கூப்பிடுங்க தப்பே இல்லை.

பதிவு எழுதும் பொழுது கீழ்கண்ட வரிக்கு ஏதாவது கருத்து சொல்லிவீங்கனு நினைச்சேன்..

/சமைக்கப்படாத இயற்கை உணவுகள்.////


சொல்லலாம்ன்னுதான் ஸ்வாமிஜி நெனச்சேன்.... நீங்க இயற்கை உணவுகள் சாப்பிடறவர். எதுக்கு வம்புன்னு பயந்திட்டு விட்டுட்டேன்:-))))

ஷண்முகப்ரியன் said...

உடலை குறைக்க முடியாது. வேண்டுமானால் உடல் எடையை குறைக்கலாம்.//

வந்தேன்.படித்தேன்.சிரித்தேன்.
நன்றி ஸ்வாமிஜி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

வெகுநாட்களாகிவிட்டதே?

உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி