Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, July 28, 2009

எனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...


தலைப்பை படிச்சுட்டு சாமீ..... நீங்களுமா என கேட்பவர்களுக்கு.

எனக்கு உலகசினிமா பத்தியும் நம்மூர் சினிமா பத்தியும் அறிவு கம்மி. சினிமாவிஷயத்தில் நான் ஈரோட்டுக்காரர் மாதிரி.
ஆனால் எந்த ஒரு ஊடகத்திற்கும் நல்லது கேட்டதுனு இரண்டு கோணம் இருக்கும். ஊடகம் எப்பொழுதும் கத்தி மாதிரி யார் கையில் இருக்குங்கிறதை பொருத்து வேலை செய்யும்.

அந்த வகையில நான் ரசித்த சினிமாவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அதற்கு முன் ஒரு எச்சரிக்கை :

வாக்கிங் ஸ்டிக்குக்கு ஜீன்ஸ் டீசர்ட் போட்டு அது இருபத்து அஞ்சு பேரை அடிச்சுட்டு, கேமராவை பார்த்து நான் யாரு தெரியும்ல என கூறும் படங்களை பாத்துரசிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்க இதுவரைக்கும் வந்ததே பெருசு. என் அடுத்த பதிவை படிச்சுக்குங்க.

முதல் படம் : What the Bleep do we Know

இந்த படம் குவாண்டம் அறிவியல் கொள்கைகளை ஒரு கதையாக விளக்கும் படம். படத்திற்கு நடுவே சில விஞ்ஞானிகள் அறிஞர்களின் உரையும் உண்டு. படத்தின் தலைப்பே பல விஷயங்களை சொல்லிவிடும். ரியாலிட்டி (இருப்பு நிலை) மற்றும் கால பரிணாமம் ஆகியவற்றை கூறும் சிறந்த ஆக்கம். பல அறிவியல் தகவல்களை கொண்டது. 2004 ஆம் ஆண்டு வந்த படம். திரையாக்கம் மற்றும் ஒளியாக்கம் அருமை. பொழுதுபோக்குக்காக பார்க்கவேண்டும் என நினைத்தால் தலைவலி நிச்சயம். :) டாக்குமெண்டரி பாணி திரைப்படம் என்பதால் விவாதமாக எடுத்து பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள சுட்டி

இரண்டாவது படம் : THE LAST MIMZY

குழந்தைகளுக்காக குழ்ந்தைகள் உலகில் பெரியவர்களின் விஷயத்தை கொண்ட படம். அறிவியல் புனைகதைகள் என்றாலும் 90 நிமிடம் அசையமுடியவில்லை. இயக்குனர் இந்திய கலாச்சாரத்தை தெரிந்தவர் என நினைக்கிறேன். ஸ்ரீசக்ரம் மற்றும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயத்தை அறிவியல் புனைவில் சேர்த்திருக்கிறார். திபத்திய கலாச்சாரம் என திரைப்படத்தில் காட்டினாலும் அது இந்திய கலாச்சார அம்சமே.(இப்ப தெரிஞ்சுதா எனக்கு ஏன் இந்த படம் பிடிச்சுருக்குனு :) ).

குழந்தைகளை பெற்றோர் நடத்தவேண்டிய முறைகள், குழந்தைகள் உலகம் என படத்தில் அருமையான விவரிப்பு. இதில் வரும் சிறுவன் ஸ்ரீயந்திரத்தை வைத்து சில காட்சிகளை காண்பான். அவை யந்திர சாஸ்திரத்தில் உண்மையில் அப்படித்தான் இருக்கும். இதை தெரிந்து சேர்த்தார்களா தெரியாமல் சேர்த்தார்களா என புரியவில்லை.இவ்விஷயங்கள் ஆன்மீகத்தின் உயர்வில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. திரையில் அந்த சிறுமியின் முகமும் அவளின் நடிப்பு திறனும் விவரிக்க முடியாத அழகு.

மேற்கண்ட இரு திரைபடத்ததில் THE LAST MIMZY என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் சொல்ல வந்த அறிவியல் விஷயத்தை கதையாக சொன்ன விதம் அருமை.

கோவை பதிவர்கள் விரும்பினால் ஞாயிறு அன்று பதிவர் சந்திப்பு ஏற்படுத்தி இந்த திரைப்படத்தை திரையிடலாம். அதற்கான இடம் மற்றும் சூழலை ஏற்பாடு செய்கிறேன். திரைப்படம் பற்றி பிற பதிவர்கள் பேச, இதில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை பற்றி நான் விளக்குகிறேன். இதற்கு கோவை பதிவர்கள் தலைவர் சஞ்சையை நெஞ்சை தொட்டு கோரிக்கைவைக்கிறேன். (ஏதோ நம்மால முடிஞ்சது..! பார்த்து செய்யுங்க சஞ்சய்.) இதற்கு அவர் ஏற்பாடு செய்வாராக....

இதில் ஒரு நன்மை என்ன வென்றால் சென்னை பதிவர்களிடம் நாங்களும் ஒலகபடம் பார்ப்போம்னு சொல்லிகிடலாம்

இந்த இரண்டு படமும் ரொம்ப பழசு. முன்னமே பார்த்துட்டேன்னு சொல்லும் அறிவுலகவாதிகள் பின்னூட்டத்தில் திரைப்படத்தை பற்றி கருத்துக்கள் சொல்லலாம்.

நம்மூரில் THE LAST MIMZY போன்ற திரைப்படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். இத்தகைய திரைப்படம் எடுக்கப்பட்டால் முதல் காட்சியில் முதல் டிக்கெட் வாங்கி அந்த இயக்குனருக்கு என்றென்றும் உபகாரமாக இருப்பேன்.

35 கருத்துக்கள்:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

//பகிர்விற்கு நன்றி.//

ஆமாம்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

சாமி உலக படம் எல்லாம் காமிக்கிது !!!!

SP.VR. SUBBIAH said...

உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன சுவாமிஜி?

sakthi said...

பகிர்விற்கு நன்றி

நிகழ்காலத்தில்... said...

\\கோவை பதிவர்கள் விரும்பினால் ஞாயிறு அன்று பதிவர் சந்திப்பு ஏற்படுத்தி இந்த திரைப்படத்தை திரையிடலாம். அதற்கான இடம் மற்றும் சூழலை ஏற்பாடு செய்கிறேன். திரைப்படம் பற்றி பிற பதிவர்கள் பேச, இதில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை பற்றி நான் விளக்குகிறேன். இதற்கு கோவை பதிவர்கள் தலைவர் சஞ்சையை நெஞ்சை தொட்டு கோரிக்கைவைக்கிறேன். (ஏதோ நம்மால முடிஞ்சது..! பார்த்து செய்யுங்க சஞ்சய்.) இதற்கு அவர் ஏற்பாடு செய்வாராக....\\

இவ்வளவு ஆர்வம் தாங்கள் காட்டுவதால் நிச்சயம் விசயம் இருக்கும் என்பதால் நான் வரத்தயார்.

சுற்று வட்டாரத்தில் உள்ள பதிவுலக நண்பர்கள் வருகை குறித்து பின்னூட்டமிடுங்களேன்..!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வண்ணத்துபூச்சியா,

திரு நாமக்கல் சிபி,

திரு சூரியன்,

திரு குறையொன்றும் இல்லை,
//சாமி உலக படம் எல்லாம் காமிக்கிது !!!!//

சாமி இங்கிலீஸ் படம் எல்லாம் பார்க்குதுனு சொல்லாம இருந்தீங்களே.. :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா,

சரியான கேள்வி. எனது சில ஆய்வு பணிகளுக்கு இடையே தேவையான தகவலை திரட்ட இது போன்ற படங்களை பார்க்க நேரும். மற்ற படி பொழுதுபோக்குக்காக சில மணி நேரங்களை ஒதுக்கும் அளவுக்கு நான் வளரவில்லை. :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி சக்தி,
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

//இவ்வளவு ஆர்வம் தாங்கள் காட்டுவதால் நிச்சயம் விசயம் இருக்கும் என்பதால் நான் வரத்தயார்.

சுற்று வட்டாரத்தில் உள்ள பதிவுலக நண்பர்கள் வருகை குறித்து பின்னூட்டமிடுங்களேன்..!!//

நான் பதிவின் கடைசிவரியில் சொன்னது போல நீங்களும் முதல் டிக்கெட் வாங்கி எங்களுக்கு உதவியாக இருப்பீர்கள் போல :)

இரண்டாம் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பது எனக்கு உறுதியாக தெரியும். :)

உங்கள் வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

நீங்க மாதவன் நடிச்ச சுந்தர் சி இயக்கிய இரண்டு படத்தைப் பற்றிய விமர்சனம் எழுதுறிங்கன்னு நினச்சேன்.

நான் said...

தமிழ்லில் புரியிர மாதிரி டப்பிங் இருந்தா சொல்லுங்க...

பரிசல்காரன் said...

உங்கள் முயற்சிக்கு திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் ஆதரவு என்றும் உண்டென்று பேரவைத் தலைவர் வெயிலான் தெரிவிக்கச் சொன்னார்.

தமிழ்ப்பிரியா said...

திரைப்படத்தை பற்றியும் விவரித்ததால், ஸ்வாமி ஓம்கார் அவர்கள் "ஆல் இன் ஆல் ஓம்கார்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவாராக !!!!!

வால்பையன் said...

//சினிமாவிஷயத்தில் நான் ஈரோட்டுக்காரர் மாதிரி.//

ஈரோட்டுல நிறைய பேர் இருக்கோம்! அதுல நீங்க யார் மாதிரி!?

நிகழ்காலத்தில்... said...

’ஆல் இன் ஆல்’

பொருத்தமான பட்டம்தான் :)))

yrskbalu said...

what topics pending for writing ?

you covered and covering all topics .

now you touched cinema also.

you are in master of all subjects,

shortly - MAS

OMKAR SWAMIJI- MAS

yrskbalu said...

dear kovi kannan,

last 3 days your comment really good.

i enjoyed .

this is what i expecting from you,

but your comment sharp and sweet in omkar blog only

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

என் அளவுக்கு தமிழ் படம் எல்லாம் பார்க்கிறதே கிடையாது. :)

திரு கிறுக்கன்,
/தமிழ்லில் புரியிர மாதிரி டப்பிங் இருந்தா சொல்லுங்க...//

அந்த மிருகம் வந்துருச்சு ஓடுங்க ஓடுங்க-னு வசனம் இருக்குமே அந்தமாதிரி டப்பிங்கா? :)

அதுக்கு இதையே மூனுமுறை பார்த்தா புரிஞ்சுடும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

ரொம்ப நன்றி. கோவைமக்கள் விரைவில் ஏதாவது செய்வார்கள் என நம்புகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தமிழ்ப்ரியா,
திரு நிகழ்காலம்,
திரு yrskbalu,

எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க. என்னை உங்களுக்கு பிடிக்கலையா :)?
ஏதோ டைட்டில் கொடுத்து முடிக்கிற ப்ளான் தெரியுதே :)


இதற்கு முன்னே சில கட்டுரைகள் சினிமா பற்றி எழுதி இருக்கேன். முடிஞ்சா படியுங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வால்பையன்,

தெரியாத மாதிரி கேட்கறீங்களே...
போர்பந்தர்னா காந்தி
ஈரோடுனு-னா?

உங்கள் வருகைக்கு நன்றி

Suresh Kumar said...

நல்ல ஒரு பகிர்வு

Anonymous said...

I have seen the movie "What the bleep do we know?". It was really good and fantastically culminates science and spirituality. I also read a book "The Yoga of Time Travel" by Fred Alan Wolf who features in this movie and in it he explains how Time is not linear (like traditional science) and how Yogis with the power of their mind can actually do time travel. There are also lot of books by Amit Goswami which I am yet to read. He is a Quantum physicist who says that the Consciousness (or God) is the ground of all being, the ultimate truth. I am eagerly awaiting his movie - The Quantum Activist. You can check out his website - http://www.amitgoswami.org/

வால்பையன் said...

//திரு வால்பையன்,

தெரியாத மாதிரி கேட்கறீங்களே...
போர்பந்தர்னா காந்தி
ஈரோடுனு-னா?//

பூந்தியா!

சும்மா லுலுலாயிக்கு!

Subbaraman said...

Thanks for sharing. Watch this video on water..
http://video.google.com/videoplay?docid=-2933349021550318008&hl

மதி said...

பதிர்விர்க்கு நன்றி.

எப்படியாவது தேடிபுடிச்சி வாங்கி பாத்துறோம்ல...

Cable சங்கர் said...

ரைட்டு நீஙக்ளும் உலக படம் பாக்க போறீஙக்ளா..?

தினேஷ் said...

//திரு வால்பையன்,

தெரியாத மாதிரி கேட்கறீங்களே...
போர்பந்தர்னா காந்தி
ஈரோடுனு-னா?//

பூந்தியா!

சும்மா லுலுலாயிக்கு

வால்ஜி அதான் பூந்தியானு கேட்டுட்டியல்ல அப்புறம் என்ன லுலுலாயிக்குனு ஒரு கமெண்ட்..

சுவாமிஜி வாலுஜி ஈரோடுஜினா பூந்திஜியானு கேக்குறாப்புல?

எனக்கும் தெரியலேயே ..

Anonymous said...

சுவாமி, ஸ்ரீ சக்ரம் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்?

எம்.எம்.அப்துல்லா said...

//முன்னமே பார்த்துட்டேன்னு சொல்லும் அறிவுலகவாதிகள் பின்னூட்டத்தில் திரைப்படத்தை பற்றி கருத்துக்கள் சொல்லலாம்.

//

சாரி..கருத்து சொல்ல முடியாது. முன்னமே பார்த்துவிட்டதால் மறந்துவிட்டேன்.

ஹி..ஹி..ஹி..

supersubra said...

I have already commented in a blog about this movie

http://dharumi.blogspot.com/2009/04/309-6.html

I have the original DVD for showcasing. Kovai pathivar sangam please call me also when showcasing.

I recommend few more movies

http://www.whatifthemovie.tv/ProductDetails.asp?ProductCode=WhatIfTheMovieDVD


Samsara

http://www.youtube.com/watch?v=-V2LQsC_NVQ&feature=fvw

Baraka

supersubra said...

Info omitted in previous comment

Samsara

http://www.imdb.com/title/tt0196069/

Baraka

http://www.imdb.com/title/tt0103767/

senthil said...

திரைப்படத்தை பற்றியும் விவரித்ததால், ஸ்வாமி ஓம்கார் அவர்கள் "ஆல் இன் ஆல் ஓம்கார்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவாராக !!!!!

ஸ்வாமி இது நல்லா இருக்க நான் கொஞ்ச முளை கசக்கி ஒரு பெயர் வச்சகிட்ட தமிழ் பிரியா அத உங்ககிட்டதான் கொடுக்கிறான் சொல்லுது(தட்டச்சு பண்ணறங்க...) காப்பாத்துங்க....!!!!!!

senthil said...

திரைப்படத்தை பற்றியும் விவரித்ததால், ஸ்வாமி ஓம்கார் அவர்கள் "ஆல் இன் ஆல் ஓம்கார்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவாராக !!!!!

ஸ்வாமி இது நல்லா இருக்க நான் கொஞ்ச முளை கசக்கி ஒரு பெயர் வச்சகிட்ட தமிழ் பிரியா அத உங்ககிட்டதான் கொடுக்கிறான் சொல்லுது(தட்டச்சு பண்ணறங்க...) காப்பாத்துங்க....!!!!!!