Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, July 23, 2009

பழையபஞ்சாங்கம் 23-ஜூலை 2009

சூரிய கிரகண விளைவு

நம்புங்கள் நாராயணன் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தினமும் எனக்கு ஒரு மின்னஞ்சலாவது வந்துவிடும். சும்மா இருந்த எனக்கும் பீதியை கிளப்பிவிட்டார்கள் நம் மக்கள்.

தொலைக்காட்சியில் பேசும்பொழுது ஜோதிடத்தை பற்றி பேசாமல் வானவியலை பற்றி பேசி மக்களை குழப்பி தானும் குழம்பும் இவர்களை கருத்தில் எடுத்துக்கொள்ளுவதே வீண். வானவியலும் சரி ஜோதிடமும் சரி அவருக்கு பிடிபடவில்லை என்பதே உண்மை. உலக நிகழ்வுகளை கூறும் ஜோதிடம் முண்டேன் ஜோதிடம் என்பார்கள். அப்படி உலக நிகழ்வுகளை கூறும் ஜோதிடர்கள் எப்பொழுதும் தீய பலன்களையே கூறுவார்கள். காரணம் அப்பொழுது தானே பெயரும் புகழும் கிடைக்கும்.?

மீண்டும் கூறுகிறேன் பூமியின் எந்த பகுதியில் சூரிய கிரகணம் தெரிகிறதோ அந்த புள்ளியில் எதுவும் நிகழாது. அதன் எதிர் புள்ளியில் விபரீதம் நிகழும். அதனால் தான் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன், நம்புங்கள் நாராயணனை .... ஜோதிடரை அல்ல..!


இப்படி சுய விளம்பரத்திற்காக அவதூறு பரப்பும் ஆட்களை தடைசெய்யவோ தண்டிக்கவோ ஏதேனும் வழி உண்டா?


நமது சக பதிவர் நாமக்கல் சிபி இதை பற்றி எழுதிய நிதர்சன கவிதை உங்களுக்காக.. சுட்டி
-----------------------------------------------------
சுனாமி பார்க்காத பினாமி



சுனாமி வரும் என பீதியை கிளப்பியதால் இராமேஸ்வரம் சென்று நேரில் பார்க்கலாம் என சென்றேன். சுனாமியை நேரில் பார்க்க ஒரு திரில்லாக இருக்குமே அதனால் தான். கடைசியில் அது ஏமாற்றிவிட்டது. இராமேஸ்வரத்திற்கு சுனாமி பார்க்க செல்கிறேன் என்னோட வாங்கனு சொன்னேன் , என் பினாமிகள் கூட எஸ்கேப்..!

சூரியகிரகணத்தின் சமயம் முழுமையாக நீராடி ஜெபம் செய்தும், தியானத்தில் இருந்ததும் மிக அலாதியாக இருந்தது. ஆமாம் அங்கே கல்லு மிதக்குதே ராமர் பாலம் உண்மையா இருக்குமோ ?
Photo courtesy : : Swami Omkar :-)
---------------------------------------------
கழட்டி போடுங்கள்

திருநள்ளாறு நள தீர்த்தத்தில் மக்கள அசுத்தமாக நடந்து கொள்கிறார்கள் என நான் எழுதிவிட்டு ராமேஸ்வரம் சென்றால் இங்கே அதைவிட அதிகமாக ஆடி அமாவாசைக்கு மக்கள் உடையை கழற்றி வீசி இருக்கிறார்கள். அக்னிதீர்த்தத்தில் இறங்கினாலே பழம்துணி காலில் தட்டுப்படுகிறது. நல்ல சுகாதாரம். இதை தவிர்க்க நடந்து நடந்து பல மீட்டர் உள்ளே சென்றேன். இலங்கை வந்துவிடுமோ என ஒரு பயம் வேறு. கடைசியில் தூய்மையான இடத்தை அடைந்து குளித்தேன்.

குளித்து விட்டு வருகையில் ஒருவர் தலையை சுற்றி துணியை வீச முற்பட்டார். அவரின் கைகளை பிடித்து சராமாரியாக கண்டித்தேன். இப்படி வெறிகொண்ட ஒரு ஆன்மீகவாதியை அவர் பார்த்திருப்பாரா என தெரியவில்லை. எனக்கு கிரகணத்தினால் பைத்தியம் என எண்ணி தலைதெறிக்க ஓடிவிட்டார். தீர்த்தங்களில் நீராடும் பொழுது உங்கள் காமம், பொறாமை, துவேஷம் இவற்றை கழற்றி எறியுங்கள் உடைகளை அல்ல...!

---------------------------------------------
என்ன தவம் செய்தனை.....

வேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தை எழுத துவங்கி என்னத்தை கிழிச்ச? என கேட்பவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.

விலைமதிக்க முடியாத பரிசு திரு அப்துல்லா அவர்கள் எனக்கு அனுப்பி இருந்தார். தனது ஹஜ் பயணத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களில் இறுதி பேருரை நடந்த இடத்தில் ஜெபமாலை விற்றுகொண்டிருந்தார்களாம். அவ்விடத்தை கடக்கும் பொழுது என் நினைவுவில் வாங்கி இந்தியா வந்து அனுப்பி உள்ளார். அதன் ஒவ்வொரு மணியும் எலுமிச்சை பழத்தின் அளவு இருக்கும். நூறு மணிகள் கொண்டது. இராமஸ்வரத்தில் அதுவும் என்னுடன் புனிதநீர் ஆடியது.

அப்துல்லாவிற்கு கோடான கோடி நன்றிகள். அவருக்கு உங்கள் சார்ப்பில் ஒரு வேண்டுகோள். மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...!

சிலரின் மனதில் நான் நிற்கிறேன் என்பதற்கு இது ஒரு சாட்சி. வேறு என்ன வேண்டும்?

29 கருத்துக்கள்:

Mahesh said...

/கலட்டி போடுங்கள்/

கழட்டி...

Mahesh said...

உங்கள் மனதில் நான் ("நான்" அல்ல) இருக்கிறேன் என்று இப்பொது புரிந்து விட்டது :)))))))))))))))

sowri said...

வேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தை எழுத துவங்கி என்னத்தை கிழிச்ச? என கேட்பவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.
நல்ல கருத்துகளை தொடர்ந்து வெளிடுங்கள். தெளிவான விளக்கங்கள் நுட்பமான சேதிகள்.We need such explanation at this time.

SP.VR. SUBBIAH said...

/////தீர்த்தங்களில் நீராடும் பொழுது உங்கள் காமம், பொறாமை, துவேஷம் இவற்றை கழற்றி எறியுங்கள் உடைகளை அல்ல...!/////

சிறப்பாகச் சொல்லியிரிக்கிறீர்கள் ஸ்வாமிஜி!
நன்றி!

*இயற்கை ராஜி* said...

//சுனாமி பார்க்க செல்கிறேன் என்னோட வாங்கனு சொன்னேன் , என் பினாமிகள் கூட எஸ்கேப்..! //

swamiji touch:-)))

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப சரி ...... நன்றாக சாடியுள்ளீர்கள்

yrskbalu said...

சிலரின் மனதில் நான் நிற்கிறேன் என்பதற்கு இது ஒரு சாட்சி வேறு என்ன வேண்டும்?

i fully agree this

Rajagopal.S.M said...

//ஆடி அமாவாசைக்கு மக்கள் உடையை கழற்றி வீசி இருக்கிறார்கள்//

ஹரி ஓம்,
இதிலேயும் நம்ம ஆளுங்க கொஞ்சம் விவரம். உள்ளதிலேயே கிழிஞ்ச பழைய துணிய போட்டுட்டு வந்திருப்பாங்க,கழட்டி போட.உள்ளர்த்தம் புரியாமல் வெறும் சடங்குகளை செய்யும் இவர்கள் எப்பொழுது ஸாஹரதிலெ இருந்து கரையேருவாங்க சுவாமிஜி ????

நிகழ்காலத்தில்... said...

\\மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...!\\

என்ன செய்ய..

’அது’ செய்கின்ற வேலை அப்படி:)))

கோவி.கண்ணன் said...

/ஆமாம் அங்கே கல்லு மிதக்குதே ராமர் பாலம் உண்மையா இருக்குமோ ?//

ஸ்வாமி கடலில் பெரிய பெரிய கப்பலே மிதக்குதே...கல்லு மிதப்பதா வியப்பு ?

கோவி.கண்ணன் said...

//மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...!//

ஆஞ்சநேயரை ஜெபிப்பவர்களுமா ?

:)

நிகழ்காலத்தில்... said...

அவர அவரே சொல்லிக்கிறார்.,
அது புரிஞ்சுதா கோவியாரே:)))

நிகழ்காலத்தில்... said...

எப்பப் பாரு சம்பந்தமில்லாமே பதில் சொல்றது. குரு கோவியானந்தா அப்படிங்கிறது சரியாத்தான் இருக்கு

அவ்வ்வ்வ்வ்வ்:)))

Anonymous said...

//நம்புங்கள் நாராயணனை .... ஜோதிடரை அல்ல..!

இப்படி சுய விளம்பரத்திற்காக அவதூறு பரப்பும் ஆட்களை தடைசெய்யவோ தண்டிக்கவோ ஏதேனும் வழி உண்டா?//

சரியான நேரத்தில் சரியான தகவலை தந்ததற்கு நன்றி.ஒரு கோடி ஜோதிடர்களில் பத்து ஜோதிடர்கள் கூட சரியான தகவலை சொல்ல முடிவதுஇல்லை.ஜோதிடக்கலை நிச்சயம் உண்மை . ஆனால் ஜோதிடர்களில் 99% பொய்யர்கள் .
இவர்கள்
நடக்கும் என்பார்கள் ..... ஆனால் நடக்காது.
நடக்காது என்பார்கள் ..... ஆனால் நடந்துவிடும்.
கிடைக்கும் என்பார்கள் ...... ஆனால் கிடைகாது.
கிடைக்காது என்பார்கள் ...... ஆனால் கிடைத்துவிடும்.
சரியான காமெடியன் மாதிரி இருப்பார்கள் ஆனால் உண்மையிலே இவர்கள் மிக பெரிய வில்லன்கள்.

Anonymous said...

சூரிய கிரகானத்தை பற்றி அமெரிக்காவில் என் நண்பர்களுடன் ஒரு சின்ன உரையாடல் நடந்தது. அதில் ஒருவர் ட்சுனாமி வரும் என்கிறார்களே என்று எல்லாம் கூறினார். நானோ முற்றும் அறிந்தவன் ஆயிற்றே (அதாவது உங்கள் வலைப்பதிவை படிப்பது ஹி ஹி :) ), அதெல்லாம் ஒன்றும் இல்லை, வெறும் புருடா, பீலா, கப்சா என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தியானம் செய்தால் ஆன்மீக உயர்வு பெறலாம் என்று நீங்கள் சொன்னதை கூறினேன். "ஓஹோ, அப்படியா" என்று சொன்னார்கள். மக்களுக்கு எப்போது கேட்டது நடக்கும் என்று தெரிந்து கொள்ளவே ஆசை, அதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா! நல்லது நடந்தால் பயம் ஒன்றும் இல்லை அல்லவா, யாரும் உங்களின் பேச்சை கேட்கமாட்டார்கள். அதனால் தான் நம்புங்கள் நாராயணனை போன்றவர்கள் பொதுவாக கெட்டதை பற்றி சொல்கிறார்களோ என்னவோ! நிறய பேர்கள் படிப்பார்கள் அல்லவா!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,
திரு செளரி,
திரு.சுப்பையா,
திரு புருனோ,
சகோதரி இயற்கை,
திரு சுந்தரராமன்,
திரு பாலு,
திரு ராஜகோபால்,
திரு நிகழ்காலம்,
திரு கோவி.கண்ணன்,
திரு சன்யாசி,
திரு தினேஷ் பாபு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

//ஸ்வாமி கடலில் பெரிய பெரிய கப்பலே மிதக்குதே...கல்லு மிதப்பதா வியப்பு ?//

நிகழ்காலத்தில் இந்த கோவியாரை திருத்த முடியாது போலிருக்கே :)

நிகழ்காலத்தில்... said...

அதுதான் கோவியார்:)))

எம்.எம்.அப்துல்லா said...

//என் பினாமிகள் கூட எஸ்கேப்..!

//

சாமி உண்மையிலேயே நீங்க பெரிய ஸ்வாமிதான் போல

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//என் பினாமிகள் கூட எஸ்கேப்..!

//

சாமி உண்மையிலேயே நீங்க பெரிய ஸ்வாமிதான் போல

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...!

//

என்னை நான் நினைக்காத நேரமில்லை

:))))))

கிரி said...

//அவரின் கைகளை பிடித்து சராமாரியாக கண்டித்தேன். இப்படி வெறிகொண்ட ஒரு ஆன்மீகவாதியை அவர் பார்த்திருப்பாரா என தெரியவில்லை//

:-)))))

ஊர்சுற்றி said...

நல்ல நகைச்சுவையோடு இந்த இடுகையை எழுதியிருக்கிறீங்கள். :)

நன்று.

ஆனால், நீங்கள் சொல்லியதுபோல் - கிரகணம் நடந்த இடத்திற்கு எதிர்த்திசையில் பேரழிவுகள் ஏதும் நடந்ததாக செய்திகள் வரவில்லையே!

நம்புங்கள் நாராயணனும் ஜோதிடத்தை அடிப்படையாக வைத்தே தான் கணித்துக் கூறுவதாக சொல்கிறார், அப்படியென்றால் ஜோதிடத்திலேயே பல வகைகள் உள்ளனவா? நீங்கள் கூறியதுபோல் 'முண்டேன்' என்பவையெல்லாம்.

அப்படியே இருக்கட்டும். அப்படியானால் முண்டேன் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கணித்துக் கூறியது பொய்யா? இல்லை அந்த வகை ஜோதிடமோ பொய்யா?

ஊர்சுற்றி said...

தங்களது 'சூரிய கிரகணம்' என்ற இடுகையில்

//கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.//

இதற்கு என்ன ஆதாரம்? தாங்கள் வெளியிட முடியுமா?

சாதாரணமாக சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் மற்ற நாட்களைப் போலவே கிரகணம் அன்றும் சூரியனைப் பார்ப்பது விழிப் படலத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதே விஞ்ஞானிகள் கூறுவது(நாசா விஞ்ஞானிகள் உள்பட).

இதில் தீய கதிர்கள் எங்கிருந்து வந்தன?

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே.. உங்கள் வருகைக்கு நன்றி.

திரு கிரி,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஊர்சுற்றி,

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

//ஆனால், நீங்கள் சொல்லியதுபோல் - கிரகணம் நடந்த இடத்திற்கு எதிர்த்திசையில் பேரழிவுகள் ஏதும் நடந்ததாக செய்திகள் வரவில்லையே!
//

சூரிய கிரகணம் நடக்கும் அதே நாளில் பேரழிவு நடக்காது. அடுத்த சூரிய கிரகணம் வருவதற்குள் நடக்கும்.

பலவகையாக ஜோதிட முறை உண்டு. முண்டேன் ஜோதிடம் அவர் கணித்தாரா என தெரியவில்லை.

ஜோதிடர் பொய்யாகலாம். ஜோதிடம் பொய்ப்பதில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

சூரிய ஒளி போக வானில் நிறைய கதிர்வீச்சுக்கள் உண்டு. அவை கிரகண நேரத்தில் செயல்படுவதால் மனிதனுக்கு பாதிப்பு உண்டு.

இதை பற்றி வரும் காலத்தில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதுகிறேன்.

ஊர்சுற்றி said...

//சூரிய ஒளி போக வானில் நிறைய கதிர்வீச்சுக்கள் உண்டு. அவை கிரகண நேரத்தில் செயல்படுவதால் மனிதனுக்கு பாதிப்பு உண்டு.

இதை பற்றி வரும் காலத்தில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதுகிறேன்.//

முடிந்தவரை சீக்கிரம் எழுதவும். ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஊர்சுற்றி said...

அப்படியே, 'சூரிய கிரகணம்' இடுகையில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்களுக்கான(ஒரே கேள்வி - இரண்டு முறை) பதிலையும் எதிர் பார்க்கிறேன். :)

நீங்கள் இதுபோன்ற தகவல்கள் தரும்போது அது உண்மையானதுதானா என்பதை ஆராய வேண்டியது ஒரு வாசகனுக்குக் கட்டாயமாகிறது. அதையே நான் செய்து கொண்டிருக்கிறேன்.