Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, July 1, 2009

ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....

நமது வலைமனையை சார்ந்தவர்கள் முதலில் டைம்பாஸ்க்காக “ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி” என எழுத துவங்குகிறார்கள். அப்பறம் பாஸ் டைம் இல்லாமல் எழுதும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனபது மகிழ்ச்சியான செய்தி. இவ்வாறு முன்னேற்றம் அடைய என்ன காரணம் என திரு சுப்பையா அவர்கள் தன்னுடைய வலையில் எழுதி இருந்தார்.

வாசகர்களின் நோக்கம் அறிந்து அந்த நேரத்திற்கு தேவையாக தலைப்புகளில்
எழுதுவது அதை சுவாரசியமாக எழுதுவது என்பது காரணமாக இருக்கலாம். 'நேரத்திற்கு' தேவையான என கருத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். எதையும் நேரத்தில் செய்தால் அதிர்ஷ்டத்தின் பார்வை - அந்தாங்க லக்கி லுக் உங்களுக்கு கிடைக்கும்...!

திருவள்ளுவர் சொன்னது போல காலம் கருதி செயல்கள் செய்தால் ஞாலமும் உங்கள் கையில் வரும்.

“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் இரவும் சேர்ந்த காலம் என
பொருள். அச்சொல்லில் இருந்து வந்தது தான் ஹோரா என்னும் சொல். ஹோரா என்றால் முழு நாளில் ஒருபகுதி என்று பொருள். ஹோரா என்ற இச்சொல் பிற்காலத்தில் ஹவர் என ஆங்கிலத்தில் மாறியது. ஓரை என இதை தமிழ் படுத்தினாலும் ஹோரா என்ற மூல சொல்லில் அழைப்போம்.

(இல்லை என்றால் - “காலத்தில்” ஒருவர் ஓரை என்பது தமிழ் சொல் தான் என பிற்காலத்தில் இடுக்கை இடுவார். :) )

ஹோரை என்பது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நேரம் என கணிக்கப்படுகிறது. வாரத்தில் ஏழு கிழமைகள் ஏழு கிரகங்களின் தன்மையால் ஆளப்படுகிறது. நவக்கிரஹங்களில் உருவ நிலையில் இருப்பது ஏழு கிரகங்கள். ராகு கேது என்பது நிழல் கிரகம் அல்லது அருவ கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. அதனால் முழுமையான கால கணக்குகளுக்கு ஏழுகிரகங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஏழுகிரஹங்கள் வார நாட்களை ஆட்சி செய்வது போல ஒவ்வொரு நாளில் இருக்கும் உட்பகுதியையும் ஆட்சி செய்கிறது.

சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை (சுமார் 60 நாழிகை) ஒரு நாள் என கணிக்கப்படுவது நமது நாள் கணக்கு. சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு கிரகம் வீதம் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும். இதற்கு ஹோரா என பெயர்.

உதாரணமாக சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று சூரிய உதயம் காலை 6 மணி எனக்கொண்டால் 6 முதல் 7 வரை சூரிய ஹோரை ஆகும்.

ஒவ்வொரு நாளின் அதிபதியும் அந்த வார நாளில் முதல் ஹோரையை ஆட்சி செய்து துவக்குவார்கள். ஹோரை அமைப்பை மனதில் வைத்துகொள்ளுவது எளிது.

ஒவ்வொரு நாளுக்கும் அதிபதியை பின்னோக்கு - ஒன்று விட்டு பயன்படுத்தினால் போதும். உதாரணமாக திங்கள் கிழமை முதல் ஹோரை சந்திரன். அடுத்த ஹோரை திங்கள் கிழமையிலிருந்து பின்னோக்கு சென்றால் ஞாயிறு அதை விட்டு அடுத்த நாள் சனி.

எனவே சனி ஹோரை. சனி கிழமை பின்னோக்கி வெள்ளி - அதை விட்டு வியாழன். திங்கள் கிழமை மூன்றாம் ஹோரை குரு.

ஞாயிறு அன்று ஹோரையை பார்த்தோமானல் அதன் அதிபதிகள் கீழ்கண்ட நிலையில் இருப்பார்கள்.

அதிபதி : சூரியன் - சுக்கிரன் - புதன் - சந்திரன் - சனி - குரு - செவ்வாய்
கிழமை : ஞாயிறு - வெள்ளி - புதன் - திங்கள் - சனி - வியாழன் - செவ்வாய்

இப்படியாக 7 மணி நேரம் வீதம் 7 கிரகங்கள் மூன்றே கால் முறை ஒரு நாள் முழுவதும் ஆட்சி செய்யும்.

மனக்கணக்கிலேயே இதை கணிக்க முடியும். இதையும் மீறி எனக்கு மூளை குறைவு -ஞாபக சக்தி குறைவு என சொல்லுபவர்களுக்கு :)) சுப்பையா அவர்களின் பதிவில் இருக்கும் அட்டவணையை பார்க்கவும். சுட்டி

வெளி நாட்டில் வசிப்பவர்கள் சூரிய உதயத்தை தான் கணக்கில் கொள்ள வேண்டும். Day Light Saving கணக்கில் கொள்ள கூடாது.

பஞ்சபட்சி சாஸ்திரம் என சாஸ்திரத்தின் ஒரு பகுதிதான் ஹோரா எனும் காலமுறை. ஹோரையை பயன்படுத்தும் தன்மை வேண்டும் என்றால் முழுமையாக பஞ்சபட்சி சாஸ்திரம் தெரிந்திருந்தால் முடியும். இல்லை என்றால் அது ஒரு கால கணக்கு அவ்வளவே.

தற்சமயம் நாம் காலத்தை எண்களால் கணிக்கிறோம். ஒரு மணி , ரெண்டு மணி என...24 மணி நேரம். நீயூமராலஜியில் 5ஆம் எண் நல்லது, 8ஆம் எண் கெட்டது என்பார்கள். இக்கருத்தை நாம் பார்க்கும் கடிகார மணியில் இணைத்துக்கொண்டு 8மணி என்பது கெட்ட நேரம் என சொன்னால் அது எவ்வாறு முட்டாள்தனமோ அது போன்றது சனி ஹோரை கேட்டது குரு ஹோரை நல்லது என சொல்லுவதும்.

இன்று காலை 10 மணிக்கு உலக மக்களுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான செயல் நடந்திருக்குமா? அது போன்றது தான் ஹோரையை வைத்துகொண்டு சுப நேரங்களை பொத்தம் பொதுவாக தேர்ந்தெடுப்பதும்.

உங்கள் ஜாதகத்தில் சனி என்ற கிரகம் சிறப்பாக இருந்தால் சனி ஹோரை நல்ல காலம்தான். குரு மோசமாக இருந்தால் குரு ஹோரையில் நீங்கள் அனுபவிப்பது வெளியில் சொல்ல முடியாது. ஆகவே ஹோரை காலத்தை உங்கள் பிறப்பு ஜாதகத்துடன் தொடர்புப்படுத்தியே பயன்படுத்த வேண்டும் அப்பொழுது தான் சரியான பலன்கிட்டும். அப்படி இல்லாமல் மேம்போக்காக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் நீங்கள் பகுத்தறிவாளராக நேரிடும். :)

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் முதல் ஹோரை அந்த நாளின் அதிபதியால் ஆட்சி செய்யபடுகிறது அல்லவா அந்த நேரம் எல்லா நாளும் நல்ல நேரம் தான். [ சனிக்கிழமை முதல் ஹோரை சனி என்றாலும் நல்ல காலம் தான்].

ஜோதிடத்தில் எண்ணற்ற கால கணிதம் உண்டு. அதில் ஒருவகைதான் ஹோரா எனும் பகுப்பு. ஆதலால் இதை பயன்படுத்துவது என்றால் இதை மட்டுமே பயன்படுத்தவேண்டும். உதாரணமாக ராகு காலம் , எமகண்டம் காலத்தையும் ஹோராவையும் இணைத்து பயன்படுத்துகிறேன் என்றால் உங்களை காலதேவந்தான் காப்பாற்ற வேண்டும். காரணம் சில நல்ல ஹோரா நேரத்தில் பாதி அளவு ராகு காலத்தில் வரும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

இவ்வாறு காலத்தை கருதி செயல்படுங்கள் இல்லை என்றால் டவுசர் கிழியும் தாவு தீரும்... :)

பி.கு : இக்கட்டுரையை எழுத தூண்டிய திரு சுப்பையா அவர்களுக்கு நன்றிகள் பல.


20 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் இரவும் சேர்ந்த காலம் என பொருள். அச்சொல்லில் இருந்து வந்தது தான் ஹோரா என்னும் சொல். ஹோரா என்றால் முழு நாளில் ஒருபகுதி என்று பொருள். ஹோரா என்ற இச்சொல் பிற்காலத்தில் ஹவர் என ஆங்கிலத்தில் மாறியது. ஓரை என இதை தமிழ் படுத்தினாலும் ஹோரா என்ற மூல சொல்லில் அழைப்போம்.

(இல்லை என்றால் - “காலத்தில்” ஒருவர் ஓரை என்பது தமிழ் சொல் தான் என பிற்காலத்தில் இடுக்கை இடுவார். :) )//

:)

ஸ்வாமி (பழைய) வடமொழி ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளையான இந்தோ ஐரோப்பியன் குழுவைச் சேர்ந்தது, சேர்த்தும் விட்டார்கள், பல ஆங்கிலச் சொற்களுக்கு ஒத்தசையில் வடமொழிச் சொற்கள் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. மூலங்கள் ஒன்றாக இருப்பதால் அவற்றின் ஒலி அமைப்பும் ஒன்றாகத்தான் இருக்கும்,

திராவிட மொழிகளுக்குள்ளும் ஒலி ஒப்புமை உள்ள சொற்கள் மிகுதியாக உண்டும்.

*இயற்கை ராஜி* said...

ம்ம்.ம்...என்ன‌ என்ன‌மோ சொல்றீங்க‌.. ந‌மக்குதான் வெள‌ங்க‌ மாட்டேங்குது:-)

Anonymous said...

கழுதைக்கும் கனவு வரும்.அந்த கனவிலும் கடவுள் வருவார்.அந்த கடவுள் கழுதையின் சாயலாகத்தான் இருப்பார்.எனவே உங்களின் அறிவு மற்றும் அனுபவம் இவைகளின்
அடிப்படையில் உங்களின் பதிவு உள்ளது.அதே போல மற்றவர்களின் அறிவு மற்றும் அனுபவம் இவைகளின் அடிப்படையில் அவர்களின் பதிவு உள்ளது.
உங்களின் மூலமும் அவரின் மூலமும் சில மற்றும் பல காரியங்களை நான் அறிந்து கொண்டேன்.உங்களுக்கு ஆன்மிக அனுபவம் மற்றும் உலக அனுபவம் உள்ளது.ஆனால் மற்றவருக்கு உலக அனுபவம் மாத்திரமே உள்ளது என இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்தி விட்டீர்கள்.

மதி said...

இப்போ கொஞ்சம் புரியுது...ஓ பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் ஒரு பகுதியா ஹோரை....

>>>ஹோரையை பயன்படுத்தும் தன்மை வேண்டும் என்றால் முழுமையாக பஞ்சபட்சி சாஸ்திரம் தெரிந்திருந்தால் முடியும். இல்லை என்றால் அது ஒரு கால கணக்கு அவ்வளவே<<<<

முடிந்தால் பட்சி சாஸ்திரத்தை பற்றி ஒரு பதிவு இடுங்களேன் அல்லது பட்சி சாஸ்திரம் பற்றி புத்தகம் ஏதேனும் இருந்தால் அதன் தகவல் கொடுங்களேன், படித்து பயன் பெருவோம் அல்லவா.

Unknown said...

புரிந்தது ஸ்வாமிகளே. யாருக்கு எந்த ஹோரா நல்லது/கெட்டது என்பதை அவரவர் பரிசோதித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதுவரை இதைப்பற்றியெள்ளாம் அதிகம் கவலைப்பட்டது கிடையாது. இன்று முதல் பரிசோதித்துப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். திருஞான சம்பந்தர் சொன்னது போல் நாளும் கோளும் தங்களைப் போன்ற இறைவன் அடியார்களுக்கு என்ன செய்து விடப் போகிறது. என்னைப் போன்ற சம்சாரிகள் ஆழ்ந்து கவணிக்க வேண்டிய விஷயம்.

Mahesh said...

//டவுசர் கிழியும் தாவு தீரும்.//

ஸ்வாமி நீங்களுமா???? :))))))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

உங்கள் மொழியாராய்ச்சி அருமையானது. ஆனால் மேற்கத்தியக்காரர்களின் மனோநிலையில் மொழி ஆய்வை பார்க்காமல் தனித்துவமாக முயலுங்கள்.

அவர்கள் நாகரீகமே தேம்ஸ் நதிக்கரையில் தோன்றியதாக சொல்லுபவர்கள்.

சூடான மொழி.. ஆரிய மொழி என்ற பகுப்பை :)) ஒதுக்கி விட்டு நடுநிலையாக அனுகுங்கள்.

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை...
///
ம்ம்.ம்...என்ன‌ என்ன‌மோ சொல்றீங்க‌.. ந‌மக்குதான் வெள‌ங்க‌ மாட்டேங்குது:-)///

உங்கள் வருகைக்கு “தாங்க்ஸ்”

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சன்யாசி,

//கழுதைக்கும் கனவு வரும்.அந்த கனவிலும் கடவுள் வருவார்.அந்த கடவுள் கழுதையின் சாயலாகத்தான் இருப்பார்.எனவே உங்களின் அறிவு மற்றும் அனுபவம் இவைகளின்
அடிப்படையில் உங்களின் பதிவு உள்ளது.//

என் புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு சிறந்த உதாரணம் கிடைத்திருக்கிறது. :)

ஆம் கடவுள் என் சாயலில் இருக்கிறார் :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,
(சேர்த்துவிட்டால் பெண்ணாகிவிடுவீர்கள்). :)

பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது சாதாரண சாஸ்திரம் அல்ல. அதை வாகுப்பில் மாணவருக்கு போதிக்கவே இறைவனிடத்தில் அனுமதி பெற்றே செய்கிறோம்.

அப்படி அனுமதி வாங்க தவறியவர்களும், தவறான வழியில் பயன்படுத்துபவர்களும் சித்தபிரம்மை பிடித்து அலைவதை கண்டிருக்கிறேன்.

அதனருள் இருந்தால் விளக்குகிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆனந்து,

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

நாந்தான்... நானே தான்..

வருகைக்கு நன்றி.

Anonymous said...

சுவாமிகள் எல்லாம் மச்சி என்று பேசினால், எங்களைப்போல் சாதரண மனிதர்கள் எப்படி பேசுவது :) மிகவும் அருமையான விளக்கம் ஹோரைகள் பற்றி. நல்ல வேலை, எதை உபயோகம் செய்ய மனப்பாடம் செய்ய வேண்டுமா என்று நினைத்தேன், சுலபமாக கண்டுபிடிக்க கணக்கை சொல்லி கொடுத்தீர்கள். எதையும், சூத்திரம் மூலம் கணிக்கலாம் என்றால் எனக்கு மிகவும் பிடுக்கும். மிக்க நன்றி :)

மதி said...

ஸ்வாமி,

>>பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது சாதாரண சாஸ்திரம் அல்ல. அதை வாகுப்பில் மாணவருக்கு போதிக்கவே இறைவனிடத்தில் அனுமதி பெற்றே செய்கிறோம்.<<

இதை 100 சதவிகிதம் ஒத்து கொள்கிறேன், அன்னை ஆதிபரச்சக்தியின் அருள் இல்லாமல் இக்கலை எவருக்கும் சாத்தியப்படாது.


>>திரு மதி,
(சேர்த்துவிட்டால் பெண்ணாகிவிடுவீர்கள்). :)<<

தங்கள் விருப்பம் அதுவென்றால் :):):):)

என்னை 'திரு' இல்லாமலேயே அழைக்கலாம்.

Anonymous said...

//என் புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு சிறந்த உதாரணம் கிடைத்திருக்கிறது.
ஆம் கடவுள் என் சாயலில் இருக்கிறார்.//

தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
இறைவன் அறிய நான் யார் மனதையும் புண் படுத்துவதில்லை.அதிலும் உங்களை போன்ற ஆன்மிகவாதிகளை நான்
மிகவும் மதிக்கின்றேன்.உண்மையாகவே உங்கள் புகைப்படத்தை பார்த்து இந்த உதாரணம் சொல்லவில்லை .
மீண்டும் ஒரு முறை உங்கள் மனது புண்படும்படி உதாரணம் இருக்கின்றபடியால்
என்னை மன்னியுங்கள்.
இன்றையில் இருந்து உங்கள் பதிவை படிப்பதோடு சரி ... என்னை போன்று அரை குறை ஆள்கள் எல்லாம் கருத்துகள் சொல்ல கூடாது என்று அறிந்து கொண்டேன்.

கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன்,

உங்கள் மொழியாராய்ச்சி அருமையானது. ஆனால் மேற்கத்தியக்காரர்களின் மனோநிலையில் மொழி ஆய்வை பார்க்காமல் தனித்துவமாக முயலுங்கள்.

அவர்கள் நாகரீகமே தேம்ஸ் நதிக்கரையில் தோன்றியதாக சொல்லுபவர்கள்.

சூடான மொழி.. ஆரிய மொழி என்ற பகுப்பை :)) ஒதுக்கி விட்டு நடுநிலையாக அனுகுங்கள்.

வருகைக்கு நன்றி.
//

:)

ஸ்வாமி, 'ஆரிய' பவன்களை உங்களால் பெயர் மாற்ற வைக்க முடியும் என்றால் 'ஆரிய' மொழி என்று எதுவும் இல்லை என்று நானும் நம்புகிறேன். அவர்களே இருக்கு என்று சொல்லும் போது (நாம) எப்படி மறுக்க முடியும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சன்யாசி,

//தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
இறைவன் அறிய நான் யார் மனதையும் புண் படுத்துவதில்லை.அதிலும் உங்களை போன்ற ஆன்மிகவாதிகளை நான்
மிகவும் மதிக்கின்றேன்.உண்மையாகவே உங்கள் புகைப்படத்தை பார்த்து இந்த உதாரணம் சொல்லவில்லை .
மீண்டும் ஒரு முறை உங்கள் மனது புண்படும்படி உதாரணம் இருக்கின்றபடியால்
என்னை மன்னியுங்கள்.
இன்றையில் இருந்து உங்கள் பதிவை படிப்பதோடு சரி ... என்னை போன்று அரை குறை ஆள்கள் எல்லாம் கருத்துகள் சொல்ல கூடாது என்று அறிந்து கொண்டேன்.//

நான் வேடிக்கையாக சொன்ன விஷயம் தான். வருத்தப்படவில்லை.

நீங்கள் கவலைப்படுவதற்கோ மன்னிப்பு கேட்பதற்கோ ஒன்றும் இல்லை. 'கழுதை' என்ற ஜீவனை குறைவாக மதிப்பிட்டதை சுட்டிகாட்டினேன். இந்த உலகில் அசையும் அசையா வஸ்துக்கள் அனைத்தும் இறைவனின் தோற்றங்களே.

ஓவியர் உருவாக்கிய ஓவியத்தை குறைவாக விமர்சித்தால் அந்த ஓவியரையே விமர்சித்தமைக்கு சமம். நான் சொல்லுவது புரிகிறதா?

மனிதனாக இருப்பதை காட்டிலும், பிறரின் பாரம் சுமக்கும் கழுதையாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இதில் தவறு என்ன இருக்கிறது?

Mukhilvannan said...

ஸ்வாமி, தங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது.
ஆண்டவனை காலாதீதன் என்கிறோம்.
காலசக்கரம் உருண்டோடு என்கிறோம். இந்திக்காரர்கள் காலசக்தி என்று அடிக்கடி சொல்லுகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விந்தை-கண்டுபிடிப்பு என்றாலும் சரி-கால அளவை நிர்ணயித்தவர்கள்தான். நேற்று, இன்று, நாளை என்பதெல்லாம் அடுத்தநொடியில் தான் உயிருடன் இருப்போமா என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் கண்டுபிடித்து நமக்குத் தந்த சொத்து. பாரம்பாரியத்தைப் போற்றுவோம்.
பணிவுடன்
எஸ். கிருஷ்ணமூர்த்தி

Anonymous said...

உங்கள் கடைசி நான்கு வார்த்தைகள் ஒரு சுற்றே சுற்றி வரும் போல. தாக்கி அடைந்தவன் என்ற பெரும் பாக்கியத்தில் இதை பதிவு செய்கின்றேன். சொம்பில் உள்ள தண்ணீரில் விரல் வழியே மட்டும் தான் நிங்கள் எடுத்து வௌியே கொடுத்துக்கொண்டுருக்கிறீர்கள்?


ஜோதிஜி


தேவியர் இல்லம். திருப்பூர்.

http://texlords.wordpress.com

texlords@aol.in

virutcham said...

பாலக்கட்டுத் தமிழில் அஹோராத்ரம் என்பதை அடிக்கடி பயன்படுத்துவார்கள். எனக்கு ஓரளவு அர்த்தம் புரிந்து இருந்தாலும் இப்போ தெளிவா புரியுது.

இந்த ஒரைகளை இன்னும் நான் முழுதாக உள்வாங்கவில்லை. சந்தேகம் இருந்தால் கேட்டால் சொல்வீங்களா மச்சி . இப்போ சந்தேகம் கேட்கும் அளவு கூட மண்டையில் ஏறலை