Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, July 4, 2009

ஜென்

ஜென் எனும் வார்த்தை பல பரிமாணங்களை ஏற்படுத்தவல்லது. ஆனால் ஜென் என்றால் கார் என்ற அளவில் மட்டுமே நம் மக்களுக்கு தெரியும். ஜென் கதைகளும், கவிதைகளும் இலக்கிய இலக்கணத்தை கட்டவிழ்த்தே செயல்படும். கதைகளுக்கு உண்டான கட்டமைப்பு இல்லாவிடினும்நமக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கும். படித்து முடித்ததும் பலமணி நேரம் நம் உள்ளே பிசையும். பலகாலங்களாக ஜென் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை ஒரு துளி உங்களுடன் பகிர்ந்தேன். இது அனைவருக்கும் நடக்கும் என சொல்ல முடியாது. இதற்கு மேலும் நடக்கலாம்.

ஜென் கதைகள் இருவரியில் இருக்கும், சில நேரம் பல வரிகள் கூட இருக்கும். நான் முன்பு சொன்னது போல ஜென்னின் நோக்கம் நம்மில் ரசாயனத்தை உண்டாக்குவதுதான். உதாரணமாக நான் ரசித்த ஜென் கதையை இங்கே தருகிறேன்.
----------------------------------------------------------
ஞானம் முன்னும் - பின்னும்

ஒருவன் ஞானம் தேடி காடுமலைகளில் அலைந்தான்.
அவன் குருவை தேடி செல்லும் பொழுது அருவிகள் மற்றும் மரங்களை கண்டான்.
குருவின் பணியில் ஈடுபட்டு ஞானம் அடைந்து வீடு திரும்பினான்.
மீண்டும் காட்டுவழியில் செல்லும் பொழுது அருவி மற்றும் மரங்களை கண்டான்.
அவை அருவி மற்றும் மரங்களாகவே தெரிந்தது.
-----------------------------------------------------------

இது போன்று ஏனைய கதைகள் மற்றும் கவிதைகள். ஜென் என்பது ஒரு மதம் என பலரும் தவறாக அனுகுகிறார்கள்(zen buddhism). பாரதகலாச்சாரம் எப்படி மதமாக்கபட்டதோ அதுபோல ஜென்னும்
மதமாக்கப்பட்டது.குரு சிஷ்யன், ஞானம் என்ற உயர் சிந்தாந்த கோட்பாட்டை தெளிவுபடுத்தும் ஒரு
நிலை ஜென். ஜென்னை விளக்க விளக்க அதை அசிங்கப்படுத்துகிறோம் என அர்த்தம். அது புரிதல் ஏற்படவேண்டியது. விளக்க வேண்டியது அல்ல. இத்துடன் நான் அசிங்கப்படுத்தியதை நிறுத்திக் கொள்கிறேன்.

எனது முயற்சியில் சில ஜென் கவிதைகளை தருகிறேன். நன்றாக இருக்கிறது என சொன்னால் இம்சை தொடரும்.

நானும் குருவும்
----------------------------
நானும் குருவும் இருந்தோம்.
குரு இருந்தார்
பிறகு ஒன்றும் இல்லை.










மனத் தவளை
-------------------------
இங்கும் அங்கும் குதித்தது
கத்தியது.
சர்ப்பத்தின் வாயில் மாட்டியதும்
கால்களை அசைத்தது.
அதுவரைக்கும் தான் தெரியும்.

ஞானம்
-------------
மரத்தில் கடைசி இலை
உதிரும் பொழுது
கூட நினைக்கவில்லை
ஞானம் அடைவேன் என்று.

12 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றிங்க

Mahesh said...

மனத்தவளை... கனத்த வலை !!

அருமை !!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஞானசேகரன்,

உங்கள வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

நிலமை தெரியாமல் அருமை என சொல்லிவிட்டீர்கள்.

இனிவரும் காலத்தில் ஜென்கவிதை இம்சை ஆரம்பம்... :)

உங்கள் வருகைக்கு நன்றி.

Mahesh said...

//நிலமை தெரியாமல் அருமை என சொல்லிவிட்டீர்கள்.
//

ஜென் ஒரு இம்சை என்றால் அதுவும் ஞானத்துக்கான ஒரு வழியே... (எப்பூடி?... நாங்கள்லாம் ஆரு?)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//நன்றாக இருக்கிறது என சொன்னால் இம்சை தொடரும்.//
நன்றாக இருக்கிறது தொடருங்கள் ஸ்வாமி.
அன்புடன்,
பாஸ்கர் . T

Dammam Bala (தமாம் பாலா) said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு வணக்கம். ஆசான் சுப்பையா அவ்ர்கள் வலைபதிவுகள் மூலம் உங்களைப்பற்றி அறிந்தேன்.

இன்று உங்கள் வலைப்பக்கங்களில் உலவும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களது நற்பணி.

ஜென் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

என்றும் அன்புடன்
தமாம் பாலா
www.bala-win-paarvai.blogspot.com

thiru said...

நான் "ஓஷோ" வின் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவர் வாயிலாக ஜென் தத்துவத்தைப் பற்றி அறிந்திருக்கிறேன். ஓஷோ - பற்றி பலருக்கும் பலவிதமான (பெரும்பாலும் தப்பான) அபிப்ராயங்கள் இருந்தபோதிலும், அவரது நிதர்சனமான கருத்துக்கள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.அதே போல் உங்களின் பதிவுகளில் உள்ள நிதர்சனத்தையும் பெரிதும் மதிக்கிறேன்.(ஒருவேளை உங்களுக்கும் ஓஷோ மீது தப்பான அபிப்பிராயம் இருக்குமானால், தங்கள் கருத்துக்களை ஓஷோவின் கருத்துக்களோடு ஒப்பீடு செய்தமைக்கு மன்னிக்கவும். நான் சொல்ல விரும்புவது, தாங்கள் வாழ்க்கைக்கு ஒவ்வாத விஷயங்களை புறம் தள்ளும் போக்கு மிகச் சிறப்பு)

மதம்,சடங்கு,மதவாதி, ஆன்மிகம், ஆன்மீகவாதி - இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சரி தொடர்புடைய/சமமான வார்த்தைகளைப் போல் தோன்றினாலும், இவற்றில் உள்ள வேறுபாடுகளைக் களைய ஜென் மிகச்சிறந்த வழி. மேலும், தங்களைப் போன்ற குரு ஒருவர் ஜென் வழியில் எடுத்தியம்புவது, அடர்ந்த கானகத்தின் நடுவில் வழிகாட்டி மரம் இருப்பது போல் உள்ளது.

ஜென்னில் உள்ள பல விஷயங்களை கதை மற்றும் கவிதை வாயிலாக தங்கள் பாணியில் விளக்குவதைப் படிக்க பெரும் ஆர்வத்தோடு உள்ளேன்.

இது ஒரு மிகச்சிறந்த ஆரம்பமாக உள்ளது. நன்றி ! !

திரு.

அது ஒரு கனாக் காலம் said...

ஓன்று மட்டும் புரிகிறது.... ஞானம் அடைவது / கிடைப்பது மிக கடினம், ... உங்களை போல் ஒரு குரு கிடைத்தால் , அது மிக சுலபம் ,,,, இன்னும் நிறைய படிக்க காத்திருக்கிறோம்

கோவி.கண்ணன் said...

ஜென் கவிதைகள் நன்று !

RAHAWAJ said...

ஜப்பானில் குரு ஒருவர் சொற்ப்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் திடீர் என்று நில அதிர்வு எல்லோரும் அந்த மண்டபத்தை விட்டு வெளியே ஓடினர்,ஆனால் அந்த குரு மட்டும் இடத்தை விட்டு அசையவில்லை,பிறகு எல்லோரும் திரும்ப வந்து குருவிடம் கேட்டார்கள்,அவர் நானும்தான் ஓடினேன் நீங்கள் வேறு இடத்திற்க்கு ஓடினீர்கள் நான் அதை விட பாதுகாப்பான இடத்திற்கு போனேன்,அந்த இடம் என்னுள் தான் இருக்கு என்றாராம்

மணிகண்டன் said...

எனக்கு எந்த கவிதையும் புரிஞ்சது கிடையாது. அதுனால ஜென் ஒன்னும் செய்யாது. தொடருங்கள் உங்கள் சேவையை.