Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, July 11, 2009

சூரிய கிரகணம்

கிரஹணம் நமது கலாச்சாரத்தில் மிக முக்கிய இடத்தை பெறும் ஒரு இயற்கை நிகழ்வு. பெளர்ணமி மற்றும் அமாவாசைகளில் நிலவின் மாற்றத்தை கண்டு உணர்ந்த மனிதன் தனது இயற்க்கை அறிவில் அதிக முன்னேற்றம் அடைந்தது கிரகண கோட்ப்பாடு மூலமாகத்தான்.

உலக மக்கள் கிரகணம் ஒரு பேரழிவு நிகழ்வு என பயந்து வந்த காலத்தில் நமது பாரத தேசத்தில் இருக்கும் அறிஞ்சர்கள் கிரஹணங்களை ஆய்வு செய்து மனித மேம்பாட்டுக்கு பயன்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். கிரகணத்தை சிறப்பாக ஆய்வு செய்ததால் தான் நமது சாஸ்திரங்களில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்ற விஞ்ஞான கோட்பாட்டை கூற முடிந்தது. சாஸ்திர அறிவியல் கோட்பாட்டை பின்பற்றி ஆரியபட்டர் மற்றும் பாஸ்கராச்சாரியர் முதலியெ பேரறிஞ்சர்கள் அறிவியலில் இன்றுவரை யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தனர் .

கிரகணம் என்றால் என்ன என தெரிந்து கொள்வது அவசியம். ‘கிரஹண்’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு ஒளி இழந்த தன்மை என பொருள். மனிதன் அறியாமையாலும், சோகத்தாலும் ஒளியிழந்து காணப்படுவதை கூட கிரஹணத்தின் அடைப்படையில் “கிரஹணி” என வடமொழியில் கூறப்படுகிறது.

பல நூற்றாண்டுக்கு முன்னால் உள்ள பஞ்சாங்க கணிதத்தில் கிரஹனங்களை எப்படி கண்டறிவது அதற்காக கணிதம் எப்படி அமைப்பது என நம்மிடையா குறிப்புகள் உண்டு. இன்று பல்லாயிரம் கோடி செலவழித்து செய்யும் விஷயத்தை அன்று ஒரு சாதாரண மனிதன் இங்கே மரத்தடியில் செய்துகொண்டிருந்தான் என நினைக்கும் பொழுது நமது கலாச்சாரத்திற்கும் முன்னோர்களுக்கும் தலைவணங்காமல் இருக்க முடியவில்லை.

சூரிய மண்டலத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம். சூரிய சந்திரர்கள் எது ஒளியை பூமியிலிருந்து பார்க்க முடியாதோ அது கிரஹணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சூரியன் மறைக்கப்பட்டு சூரிய ஒளி தெரியவில்லை என்றால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் ஒளி பெறாமல் இருளாக இருந்தால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறோம்.

இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்

செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.
இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.

தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கின்ங்கள் கூட கிரஹணத்தான்று தன் இருப்பிட்த்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?.

கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.

வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழுசூரியகிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.

கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.

மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.

ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.

இந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி இந்தியாவில் முழு கிரஹணம் ஏற்படுகிறது. காலை 5.29 முதல் 7.15 வரை கிரஹண நேரம்.

கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.

  • கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
  • கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
  • ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
  • தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
  • சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
  • சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
  • கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
  • கிரஹணம் பூச நட்சத்திரத்தில் அமைவதால் கடகராசி, மகராசியில் பிறந்தவர்களும் , அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அதிக ஆன்மீக முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள் கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்வதோ அல்லது வீட்டில் இருந்து ஜபம் செய்வதோ மேன்மை கொடுக்கும்.

கிரஹணம் மும்பையில் துவங்கி ஜப்பான் நாட்டை தாண்டி கடலில் முடிவடைகிறது. முழுமையான சூரிய கிரஹணத்தை மும்மை மற்றும் வட நாட்டு பகுதிகளில் காணலாம். நமக்கு சில பகுதிகள் மட்டும் மறைக்கப்பட்டு தெரியும்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.

உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். இந்த வருடம் சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது. இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?


32 கருத்துக்கள்:

ATOMYOGI said...

நல்லதொரு பதிவு!

அது ஒரு கனாக் காலம் said...

thanks ... very informative.

*இயற்கை ராஜி* said...

mm..vara vara enakku puriyaraa maathiri neraiya eluthareenga swamiji:-)))))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மாயாவி,
வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திரராமன்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

//mm..vara vara enakku puriyaraa maathiri neraiya eluthareenga swamiji:-)))))))//

சகோதரி இயற்கை.. :)

இயற்கையே புரிஞ்சுபோச்சுனா அப்பறம் வேற என்ன வேனும் :)

சத்ரியன் said...

சூரிய கிரஹணம் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஓம்கார். நன்றி.

நிகழ்காலத்தில்... said...

\\இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?\\

இதையே தங்களின் முழு வெளிப்பாடாக எண்ணி பெருமிதம் அடைகிறேன்.,

வாழ்த்துக்கள்

Chittoor Murugesan said...

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பார்கள். மனித உடல் ரொம்பவே சென்ஸிடிவ். இப்போது அது சற்றே தடித்திருகிறது.(டின் ஃபுட்,ஜங்க் ஃபுட் இத்யாதியால்) எங்கோ நடக்கிற கிரகணம் இங்கே நம் உடலிலும் நடக்கும் . அதன் விளைவு என்ன என்பதை ஏன் மருத்துவர்கள் சிடிஸ்கான் இத்யாதிகள் மூலம் முயற்சிக்க கூடாது. தர்பையை அங்கும் இங்கும் போட்டு வைப்பதை விட மென்று தின்றால் பெட்டர் என்பது என் எண்ணம்

Mahesh said...

சில பேருக்கு புத்தி கிரகணம் ஆகுதே... அது ஏன் ஸ்வாமி?

அது சரி(18185106603874041862) said...

//
இந்த வருடம் சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது. இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம்.
//

இந்த நல்ல எண்ணத்திற்காக உங்களுக்கு என்னால் முடிந்தது ஒரு ஓட்டு...

VijayaRaghavan said...

கர்ப்பினிகளுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா?

Anonymous said...

சுவாமி, அமெரிக்காவில் இருப்பவர்கள் எந்த நேரத்தில் கிரகானம் என்று வைத்து கொள்வது? எந்த நேரத்தில் த்யநிதல் நல்லது என்பதை கூற வேண்டிகொள்கிறேன்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சத்ரியன்,
திரு நிகழ்காலம்,
திரு சித்தூர் முருகேசன்,
திரு மகேஷ்,
[அனைவரும் தாங்களின் சூரியனை மறந்துவிடுவதால் கிரகணத்தில் சிக்கிகொள்கிறார்கள்]

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அதுசரி,

//இந்த நல்ல எண்ணத்திற்காக உங்களுக்கு என்னால் முடிந்தது ஒரு ஓட்டு...//

அதுசரி.

நன்றிகள் பல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு JS,

கர்பிணிகளுக்கு நிச்சியம் பாதிப்பு உண்டு.
வெளிப்படையான பாதிப்பு அல்ல. தாய் மற்றும் சேய் மனநல பாதிப்பு வரலாம்.

கிரகண வேளையில் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

//
சுவாமி, அமெரிக்காவில் இருப்பவர்கள் எந்த நேரத்தில் கிரகானம் என்று வைத்து கொள்வது? எந்த நேரத்தில் த்யநிதல் நல்லது என்பதை கூற வேண்டிகொள்கிறேன்! //

இந்திய நேரம் பற்றி குழம்ப வேண்டம்.

கிரீன்விச் டைம் அல்லது யுனிவர்சல் டைம் என சொல்லகூடிய நேரம் ஆனது 00:00Hrs முதல் 5.00 வரை கிரகண நேரம்.

இதிலிருந்து நீங்கள் கேட்கும் அமெரிக்க பகுதிக்கு கணக்கிடுங்கள்.

உங்கள் தியானம் சிறக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமையான பதிவு.

மெளலி (மதுரையம்பதி) said...

நானே இது பற்றி ஒரு பதிவு போட நினைத்தேன்..நீங்கள் விலாவாரியாகப் போட்டிருக்கிறீர்கள். நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,
திரு மதுரையாம்பதி,
திரு ராமலக்‌ஷ்மி,

உங்கள் வருகைக்கு நன்றி

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.//

வணக்கம் ஸ்வாமி .

ஒரு சந்தேகம் . வழக்கம் போல கிரகண நேரத்தில் விளக்கு ஏற்றி ஜெபம் செய்யலாமா
? அல்லது ?
எனென்றால் கிரகண நேரத்தில் கோவில்களை எல்லாம் மூடி விடுகிறார்களே /?

தயவு செய்து விளக்கவும் .

anbu... said...

Excellent Explanation and Details.Keep Up your Good Job.
anbu.coimbatore

ஊர்சுற்றி said...

நம்புங்கள் நாராயணன்னு ஒருத்தர், சுனாமி வரும் பேரழிவு நடக்கும் பரிகாரம் பண்ணுங்க - இப்படியெல்லாம் சொல்லிகிட்டு இருக்காரு.

ஆனா உங்களோட "கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை" லிஸ்ட்ல இந்த மாதிரி எதுவும் இல்லீங்களே!

அவரு என்னடான்னா 'பூச' நட்சத்திரத்தில பிறந்தவங்க சனியோட ஆட்சியில இருக்கிறதால பரிகாரம் பண்ணணும்ங்கறாரு.

நீங்க ஒருசில ராசியில பிறந்தவங்க ஆன்மீக மேன்மை அடைவாங்க அப்படிங்கிறீங்க.

அவரு என்னடான்னா கிரகணம் வர்ற இடத்திலயே பேரழிவு அல்லது அதுமாதிரி ஏதாவது நடக்கும்ங்கறாரு...

நீங்க என்னடான்னா பூமி எதிர்த்திசையிலதான் வரும்ங்கிறீங்க. இதுல எந்த ஜோசியம் உண்மைங்க?! அவரு சொல்றதா இல்ல நீங்க சொல்றதா?

ஊர்சுற்றி said...

அப்புறம் ஒரு முக்கியமான கேள்விங்க...

கிரகண நேரத்தில குழந்தைகள் பிறந்தால் - ஜாதகம் கணிக்கிறதுல ஏதாவது வித்தியாசமா பண்ணுவீங்களா?

ஸ்வாமி ஓம்கார் said...

//ஒரு சந்தேகம் . வழக்கம் போல கிரகண நேரத்தில் விளக்கு ஏற்றி ஜெபம் செய்யலாமா
? அல்லது ?
எனென்றால் கிரகண நேரத்தில் கோவில்களை எல்லாம் மூடி விடுகிறார்களே /?//


விளக்கேற்றிவிட்டே செய்ய வேண்டும். கோவில் தியான கூடம் தவிர பிற இடங்களில் விளக்கு இல்லாமல் ஜபம் செய்ய கூடாது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அன்பு,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

//நம்புங்கள் நாராயணன்னு ஒருத்தர், சுனாமி வரும் பேரழிவு நடக்கும் பரிகாரம் பண்ணுங்க - இப்படியெல்லாம் சொல்லிகிட்டு இருக்காரு.

இதுல எந்த ஜோசியம் உண்மைங்க?! அவரு சொல்றதா இல்ல நீங்க சொல்றதா?//

நம்புங்கள் நாராயணனை ....

ஜோதிடரை அல்ல....

உங்கள் வருகைக்கு நன்றி ஊர்சுற்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஊர்சுற்றி,
//
கிரகண நேரத்தில குழந்தைகள் பிறந்தால் - ஜாதகம் கணிக்கிறதுல ஏதாவது வித்தியாசமா பண்ணுவீங்களா?//

எந்த வித்தியாசமும் கிடையாது.
ஜாதகத்தில் சந்திரன் சூரியனுக்கு அருகில் ராகு-கேது இருக்கும் இதை தவிர வேறு ஒன்றும் வித்தியாசமாக தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு ஓம்கார் அவர்களே.
எல்லோரும் இந்தக் கிரஹணத்தை வைத்துப் பயங்கர செய்திகள் வெளியிடும்போது நீங்கள் ஆண்டவனைப் பிரார்த்திக்கச் சொல்கிறீர்கள்.
மிகத்தெளிவாக இறை சக்தியை நன்பும்போது எது வந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவம் கிடைக்கும் அல்லவா.
அருமையான தகவல்களுக்கு நன்றி.

krish said...

Swami
D.K. has arranged for a feast during Eclipe.

S.Muruganandam said...

//கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்//

அருமையாக கிரகணத்தை விளக்கியுள்ளீர்கள் நன்றி சுவாமி