Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 3, 2009

உலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரிசும்

உலகின் எந்த மூலையில் ஒரு கேவலமான சம்பவம் நடந்தாலும் அதில் எனக்கு சங்கடம் நேரும். காரணம் என்னில் இருந்து இந்த உலகை வேறாக என்னால் பார்க்க முடியவில்லை. போரினாலும் இனபடுகொலையிலும் மக்கள் இறந்து போவதை பார்க்கும் பொழுது அதை உங்கள் “கர்மா” என்று தாண்டி செல்ல முடியாவில்லை.அதே நேரம் கேவலமான நோபல்பரிசுக்கோ, இந்தியாவின் பத்ம ஸ்ரீ பட்டத்திற்கோ ஆசைபட்டு தமிழினத்தை காப்பாற்றுகிறேன் என என்னால் பிறரை ஏமாற்றவும் முடியாது.

வலையுலகமே அதைபற்றி கொதித்தபோது நான் அமைதியாக இருந்ததன் காரணம் என்னால் முடிந்த விஷயத்தையே செய்ய விரும்புகிறேன். எனது உடலின் ஒரு பகுதி காயமாகி விட்டது என்றவுடன் அதை வலையுலகில் எழுதி , “எனக்கு தலையில் காயம் அநீதியை பாரீர்” என எழுதுவது எவ்வாறு முட்டாள் தனமோ அதற்கு சமமானது நான் படுகொலைகளை பற்றி எழுதுவது.

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் ஒரு நாட்டின் எல்லையை
கொண்டோ, மொழியின் எல்லையை கொண்டோ அடக்கிவிட முடியாது. பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு அனுவும் ஆன்மீகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களின் ஒரு பகுதியே. அந்த ஒரு அனுவில் அசைவும் இவர்களை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது.

பிற உயிருக்கு கூட அல்ல பிற பொருளுக்கு ஏற்படும் துன்பம் உங்களின் துன்பம் ஆகிவுடும். பிறரின் இன்பம் உங்கள் இன்பம் ஆகிவிடும்.ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் முதலில் நீங்கள் அனுபவிக்க போகும் நிலை இதுதான்.

ஒரு வேடிக்கை கதை உண்டு. ஒருவன் யாருக்கும் தெரியாமல் கடவுளின் கோட்டைக்குள் புகுந்துவிட்டான். அது பல்லாயிரக்கணக்கான மாடிகள் கொண்டது. அதில் லிப்ட் வசதியும் இருந்தது. யார் கண்ணிலும் படாமல் லிப்டினுள் நிழைந்து கடவுளின் அறை என்ற பொத்தானை அழுத்தினான். சிலமணித்துளி பயணத்திற்கு பிறகு அது ஒரு தளத்தில் நின்றது. திறந்தவுடன் எதிரில் இருக்கும் அறையில் நுழைந்தான். அங்கே ஒரு மேஜையில் சில கோப்புகளை பார்த்தவாறு கடவுள் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு மேஜை விளக்கு இருந்தது. சரியான மின்சாரம் இல்லாத சூழல் போல அது விட்டு விட்டு எரிந்தது.

“வா மனிதா. உன்னுடைய வாழ்க்கை கோப்பைத்தான் படித்துக்கொண்டிருந்தேன். நீ இங்கே வருவாய் என இதில் இருக்கிறது என்றார். இவனுக்கோ ஒரே ஆச்சரியம். கடவுள் இவனிடம் சகஜமாக பேசுவதை எண்ணி மகிழ்ந்தான். “இறைவா உங்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றவாறே தொடர்ந்தான்.. இந்த கோட்டை எப்படி கட்டப்பட்டது? இதில் இருக்கும் வசதிகள் எப்படி செயல்ப்படுகிறது” என்றான்.

“மனிதா... உலகில் இருக்கும் ஜீவராசிகள் தங்களை பற்றி எண்ணும் தவறான எண்ணங்களை மனக்கோட்டை என்போம். அக்கோட்டைகளை திரட்டி இங்கே வாழ்விடமாக்கினேன். மக்கள் இன்ப-துன்பம் அடையும் பொழுது ஒரு ஆற்றல் பரவும். அதில் இருந்து மின்சாரம் எடுத்தே இக்கோட்டையில் வசதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

“அப்படியா? இன்பதுன்பம் என்பது சரியான அளவில் இருக்காதே எப்படி அதில் மின்சாரம் எடுக்க முடியும்? ” என்றான் மனிதன். புன்சிரிப்புடன் தொடர்ந்தார் கடவுள்...“உன் சந்தேகம் சரியானது தான். மனிதனின் துன்பங்களில் இருந்து எடுக்கும் மின்சாரம் லிப்டிலும், இன்பத்திலிருந்து எடுக்கும் மின்சாரம் எனது மேஜை விளக்கிலும் பயன்படுகிறது..!”

நமது உலகில் சமாதனம் ஏற்படுத்துகிறோம் பேர்வழி என நிறையபேர் கிளம்பி இருக்கிறார்கள். முக்கியமாக மதம் சார்ந்தவர்கள் மனிதனை வளையக்க பயன்படுத்தும் ஆயுதம் இதுதான். கஷ்டத்தில் உழலும் மனிதனுக்கு உலகசமாதம் ஏற்படுத்துகிறோம்.

உலகில் தானே நீயும் இருக்கிறார் எனவே உனக்கும் அதில் சமாதானம் ஏற்படும் என சொல்லுவார்கள்.

“இந்து மதம்” என்ற பெயரில் உலக சமாதானத்திற்கு அதிருத்ர
மஹாயஞ்சம் செய்தவர்களை கேட்கிறேன்.. சதுர்யுகத்தில் யுத்தம் இல்லாத யுகம் எது? கிருதாயுகத்தில் நரசிம்மவதம்,திரிதாயுகத்தில் ராவண வதம், துவாபர யுகத்தில் பாரத போர் என எத்தனையோ யுத்தங்கள் தர்மத்திற்காக நிகழ்த்தபட்டுள்ளதே? அக்காலத்தில் அவதார புருஷர்களுக்கு அதிருத்ர மஹாயஞ்சம் செய்யத்தெரியாதா?

இக்கருத்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அப்பாவிமக்களை உயிர்பலி இடும் பிற மதங்களுக்கும் பொருந்தும்.

அப்படியானால் உலக சமாதானம் என்ற ஒன்றே இல்லையா?

சமாதானம் என்பது தனிமனிதனுக்கொள் நடக்க வேண்டும். உலகில் அல்ல.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுள்ளே சமாதனத்தை தேடினால் உலகம் சமாதானம் அடையும். அதற்கு ஒரே வழி தான்னை போல பிற உயிர்களையும் மதிக்க வேண்டும். பிற உயிர்களில் ஏற்படும் சலனம் தன்னுள் ஏற்பட்டதாக கொள்ளவேண்டும்.

ஒரு ஆன்மீக ஆசரமத்தில் அழைப்பின் பேரில் சென்று அதன் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு தான தர்மம் பற்றி திரும்பியது.

சுனாமியில் பலகோடி ரூபாய்க்கு வீடும், உடையும் கொடுத்ததை பற்றி பேசினார் அவர்.எனது கருத்தில் இரத்த தானம் சிறந்தது என்றேன். உடனே அங்கும் இங்கும் பார்த்துவிட்டு இரத்ததானம் தவறானது என்றார். காரணம் கேட்டதற்கு ஒருவருக்கு இரத்தம் அல்லது உடல் உறுப்பை தானம் செய்தால் அதில் நம் கர்மாவும் இணைந்துவிடுமாம். போன ஜென்ம கர்மாவின் காரணமாகவே இந்த உடல். அதனால் உடல் பகுதிகளை தானமாகினால் அவர்கள் செய்யும் கர்மா நாம் செய்ததாக ஆகிவிடும் என்றார்.

இந்த ஆன்மீக சுயநலமிகளிடன் என்ன பேசுவது? தான் நரகம் அடைந்தாலும் மக்கள் சொர்க்கம் செல்லட்டும் என கோபுரத்தில் ஏறி கூவிய ராமனுஜரின் செயலில் ஒரு சதவிகிதம் கூட இல்லயே?

எனது இருசக்கர வாகனம் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் தான் மைலேஜ் கொடுக்கிறது. உங்கள் வாகனம் 60கிலோமீட்டர் கொடுக்கிறது என்றால் என் வாகனத்தில் இருக்கும் பெட்ரோலை உங்கள் வாகனத்தில் செலுத்தினால் உங்கள் வாகனத்திற்கும் 30 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்குமா?

இவர்களை யார் நல்வழிப்படுத்துவது? மது, புகைப்பழக்கம் இருப்பவர்களை விட ஆசிரம வாழ்க்கையில் இருக்கும் இவர்களும் இவர்களின் சீடர்களும் இரத்த தனம் செய்தால் எவ்வளவு தூய்மையான இரத்தம் கிடைக்கும்.?

வீடு உடை யார்வேண்டுமானாலும் கொடுக்கலாம், இரத்தம் செயற்கையாக உருவாக்க முடியுமா? பலவருடங்களாக ஆராய்ச்சி செய்தாலும் விஞ்ஞானிகள் தோல்வியையே பார்க்கிறார்கள்.
இந்தியாவில் இது போன்ற அனைத்து ஆன்மீக அமைப்புகளும் முனைந்தால் இரத்தம் தட்டுப்பாடு இருக்காது. வீண் விளம்பரங்களுக்கு போராடும் இவர்கள் என்று திருந்துவார்கள்.? உலக சமாதனம் எனும் விஷயத்தை ஒரு விளம்பர யுக்தியாக இருப்பதை காணும் பொழுது வேதனை அதிகரிக்கிறது.

அகிம்சை என்ற வார்த்தையும், ஜீவகாருண்யம் என்ற வார்த்தையை பார்த்தால் எனது இரத்தம் கொதிக்கும்.

இம்சையிலிருந்து விடுதலை வாங்கவே அகிம்சை. ஜீவனுக்கு கருணை காட்டுங்கள் என்பது ஜீவகாருண்யம். விடுதலை அளிக்கவும், கருணை காட்டவும் நீங்கள் யார்? நீங்கள் பிற உயிரை விட மேம்பட்டவர்களா? பிறருக்கு விடுதலை அளிக்கிறேன் என்ற வாக்கியம் நீங்கள் சொல்லவில்லை உங்கள் ஆணவமே சொல்லுகிறது.

தனிமனிதனாக ஒவ்வொருவரும் தினமும் நமது ப்ரார்த்தனையில்
அனைத்து உயிரும் முழுமையான ஆனந்தத்தை அடைய
ப்ரார்த்திப்போம்

இயற்கையின் இயல்பு என்பது இரு துருவங்களில் செயல்படும். அதனால் இரவு,பகல், இன்பம் துன்பம் என இரு தளம் இல்லாமல் இருக்க முடியாது. முழு சமாதானம் என ஏற்பட சாத்தியம் இல்லை என்றாலும் சமாதானம்த்தின் விகிதத்தை 99% அதிகரித்து 1% துயரம் என்ற நிலைக்கு கொண்டு சென்றால் நன்மையே.

இன்றைய நாளிதழில் இரு செய்தியை பார்த்தேன். ஒன்று சின்ன சேலத்தில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு மற்றது மணப்பாறையில் 1500 எருமை மாடுகளை.

நன்றி : தினமலர்

பாரத கலாச்சாரத்தில் இருக்கும் சடங்குகள் நம்மிடம் இருக்கும் துர்குணங்களை களைய உருவாக்கப்படது. சிதறு தேங்காய் உடைப்பது என்பது நமது ஆணவத்தை ஒரு ஷ்ணத்தில் சிதறி இல்லாமல் செய்ய வேண்டும் என்பதன் குறியீடு. அது எப்படி ஆணவமும் தேங்காயும் ஒன்றாக முடியும் என கேட்கலாம்.

கணிதத்தில் x = 1 என்றவுடன் எப்படி x என்பது
ஒன்றாக மாறிவிடுமோ அதுபோலத்தான். நமது ஆணவம் மனசங்கல்ப்பத்தை சார்ந்தது. அது நினைக்கும் பொருளை உடனே உருவகப்படுத்தும். அதனால் சிதறுதேங்காய் ஒரு சடங்காகியது. தேங்காய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் உயிர்சக்திக்கு இணையான சக்தியாக இருப்பதால் அதை மனிதனாக உருவகித்து பலியிடும் சடங்கு உண்டு. ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு மனிதன் தலையில் அதை அடிப்பது முட்டாள் தனம்.

அதே போல துர் குணங்களை நீங்குபவள் துர்கா. துர்குணம் என்பது பொறாமை, துவேஷம், சோம்பேறித்தனம் ஆகியவை மனிதனை தகர்க்கும் குணங்கள். அதை குறியீடாக சொல்லவே அவளின் காலடியில் இருக்கும் எருமை.

இதை புரிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பலி கொடுக்கிறோம் என்ற முட்டாள் தனத்தை நிறைவேற்றுகிறார்கள்.

மந்தகாசுரனை வதம் செய்யத்தான் துர்கா இருக்கிறாளே? இவர்கள் சும்மா இருக்க வேண்டியது தானே?

ஆன்மீகவாதிகள் என்பவர்களுக்கு இது இனப்படுகொலையாக தெரிவதில்லை. காரணம் எருமை சமாதனத்திற்கான விருது கொடுக்காதே?

நர பலிகொடுக்கும் கபாலிகர்களின் முன் தன்னை பலிகொடுக்க சொன்ன சங்கரரை தினமும் துதிக்கும் மஹான்களே முதலில் உங்கள் 'காலடி'யில் இருக்கும் சிறு எறும்புகளை காப்பாற்றுங்கள். அப்புறம் பிற நாடுகளில் இருக்கும் மக்களுக்கு மேன்மை கொடுக்கலாம்.

இறைவனின் கருணை அவர்களுக்கு கிடைக்கட்டும்...

எருமை இனமே சோம்பேறியாக இருக்க கூடாது என்பதை நான் உணர எனக்கு குருவாக இருந்தீர்கள். உங்கள் ஆன்மா மேன்மை அடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

இவண்

உலக அமைதி வேண்டி
அறியாமையை நீக்க
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

16 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

:)
அறச்சீற்றம் (சமூகத்தின் மீது ஏற்படும் ஞாயமான சீனம்) சாமியார்களுக்கும் ஏற்படும் என்று புரிகிறது.

sowri said...

Very touchy and noble posting.

*இயற்கை ராஜி* said...

arumai ....enakku puriyuthu intha post...

நிகழ்காலத்தில்... said...

//சமாதானம் என்பது தனிமனிதனுக்கொள் நடக்க வேண்டும். உலகில் அல்ல.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுள்ளே சமாதனத்தை தேடினால் உலகம் சமாதானம் அடையும். அதற்கு ஒரே வழி தன்னை போல பிற உயிர்களையும் மதிக்க வேண்டும். பிற உயிர்களில் ஏற்படும் சலனம் தன்னுள் ஏற்பட்டதாக கொள்ளவேண்டும்.//

சரியான கருத்துகள், மக்களிடம் இது
பரவி,உணரப்பட வேண்டும்.

Mahesh said...

அருமையான பதிவு.... கோபத்தை விட மக்களின் அறியாமையின் மீதான வருத்தம் ஓங்கி ஒலிக்கிறது :(

essusara said...

//ஆன்மீகத்தில் இருப்பவர்கள் ஒரு நாட்டின் எல்லையை கொண்டோ, மொழியின் எல்லையை கொண்டோ அடக்கிவிட முடியாது. பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு அனுவும் ஆன்மீகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களின் ஒரு பகுதியே. அந்த ஒரு அனுவில் அசைவும் இவர்களை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது.//

sathiyamana varigal swami. poli samiyargalin pinney odum appvigal intha variyai oondri padika vendum.

anmigam endraley kadai sarakavitta nilayil ungalin intha pathivu satru aaruthal alikirathu.

oru unmayana anmigavathiyin ithayathil irunthu varum sathiyamana varthaigalaga ithai naan parkireyn

Unknown said...

மிக நல்ல பதிவு...

வாழ்த்துக்கள்

yrskbalu said...

gi,

we are realising.

but most common people not understanding. they strict on their
own belief.

we can do prayer to god to change those people

Sanjai Gandhi said...

அருமை ஸ்வாமி.. தலைவணங்குகிறேன்( நானும் ).

காலையில் அந்த செய்தியை படித்ததிலிருந்தே என் கோபம் அடங்கவில்லை.. பல கடுமையான வார்த்தைகளைக் கொண்டு எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்போதெல்லாம் அதில் விருப்பம் இல்லை.. அதனால் தான் இந்த இனப் படுகொலையை சில வரிகளில் கண்டித்துவிட்டேன்.

காட்டுமிராண்டிகள் யார் இப்போ? எருமைகளா இந்த மூடர்களா?

Adhitya said...

வணக்கம் சுவாமிஜி

தங்கள் பதிவு அருமை. உங்கள் பதிவை கூகுளில் பார்க்க நேர்ந்தது. உலகையே நீங்களாக பாவித்துக் கொள்ளும் மனோபாவம்... பரந்த மனப்பான்மை... உங்களுடைய ஆதங்கப் பங்களிப்பை பதிவில் பகிர்ந்து கொண்டது போல... நிகழ்வின் வலியை உணர்த்தியது போல... இனப்படுகொலையைப் பற்றி நீங்கள் கூறியிருந்தால் உங்கள் அன்பான இதயம் வலிபட்ட நெஞ்சங்களுக்கு இன்னும் நன்றாகப் புரிந்திருக்கும்... ஆதரவாகவும் இருந்திருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
திரு செளரி,
சகோதரி இயற்கை,
திரு நிகழ்காலத்தில்,
திரு மகேஷ்,
திரு சஞ்சய்,
திரு பேரரசன்,
திரு yrsபாலு,
திரு essusara,
திரு மங்கலம்,

மறுமொழி கூறும் வார்த்தைகள் என்னிடம் இல்லை.
அனைவருக்கும் நன்றி.

krish said...

If this is happening in this century in India, this shows that it will take a long time for us to emancipate as a spiritual county as we claim to be. Your words express our opinion also.

Unknown said...

அருமை.

VIKNESHWARAN ADAKKALAM said...

எருமை சாமி கும்பிட்டால் மனிதனை பலி கொடுக்கும்.. :))

குசும்பன் said...

பதிவை பற்றி சொல்லவேண்டியதை கோவி.கண்ணன் சரியாக சொல்லி இருக்கிறார்.

Unknown said...

நான் என்ன படித்தேன் என்பதை மறந்து. விட்டேன் ஆயிரம் அர்த்தங்கள் கோடி உபதேசம்...