ஓம் ஓம் ஓம் .... இப்படி சொன்னால் மனசு அமைதி ஆகும்னு யோகா மாஸ்டர் சொன்னார்.. மனசு அமைதியாகனும்னா நான் யாருனு கேட்கனும்னு என் யோகா மாஸ்டரோட மாஸ்டர் சொன்னாராம்.
ரமணர் கூட இப்படித்தான் சொன்னார் அதற்காக நாம ரமணராக முடியுமா? ரமணாஸ்ரமம் ரொம்ப அமைதியா இருக்கும். அங்க இருக்கிற மயில் அருமையா கத்தும். எங்க தமிழ் வாத்தியார் கூட சொல்லுவார் மயில் கத்தும்னு சொல்லாதடா மயில் அகவும்னு சொல்லும்பார். திருவண்ணாமலையில எங்கையுமே மயில் அதிகமா இருக்காது.
ரமணாஸ்ரமத்தில தான் இருக்கும். கிரிவலம் வரும்போது பாத்திருக்கேன். இப்போ திருவண்ணாமலை நல்லா சுத்தமா அமைதியா இருக்கு. இதே பதினஞ்சு வருசம் கழிச்சு இப்படியே இருக்குமானு தெரியாது. இந்திர லிங்கம் பக்கதில வீடுகள் இல்லாம இருந்துச்சு. இப்போ நிறைய வந்திருச்சு. சுதாவும் ரெண்டு வருசமா வீடுகட்டனும்னு சொல்லறா இருக்கிற காசுல கம்பெனியே நடத்த முடியல இதுல வீடுவேற. அவளுக்கு எங்க என் கஷ்டம் தெரியுது.
கடனுக்கு வட்டி கட்டியே எனக்கு டிப்ரெஷன் ஆகுது. இந்திர லிங்கம்னு சொன்னதும் ஞாபகம் வருது இந்திர விழானு ஒரு படம் நமீதா நடிச்சுருக்கா... பார்க்கனும். நமீதா இருக்கானு சொன்னா சுதா வரமாட்டா. ஸ்ரீகாந்தை சொல்லி கூட்டிகிட்டு போகவேண்டியது தான். இப்படித்தான் கல்யாணம் ஆன புதுசுல ஒரு படம் போயி பாதியில எழுந்து வரச்சொல்லி தகராறு பண்ணீட்டா.. அவளுக்கு குழந்தை மனசு. ஒரு நாள் காலையில திடீருனு என்னை கட்டிபிடிச்சுக்கிட்டு கொஞ்சினா... அவளுக்கு ஈவினிங் வரும்போது ஸ்வீட் வாங்கிட்டு வரனும்.
கதிர் ஈவினிங் வந்து பேமெண்ட் தறேன்னு சொல்லி இருக்கான். அவனை பார்த்தப்பிறகு தான் அடையார் ஆனந்தபவன் போகனும். சுதாவுக்கு பாசந்தி பிடிக்கும். அது நிலா மாதிரி இருக்கும். இப்படித்தான் ரசகுல்லாவை பாசந்தினு நினைச்சு வாங்கிவந்துட்டேன். நான் என்ன நார்த் இண்டியனா இதைபத்தி சொல்ல. அடுத்தவருஷம் யோகாமாஸ்டர் கைலாஷ் கூட்டிகிட்டு போறேனு சொன்னார்.
ஓம் ஓம் ஓம்...
இப்படியாக எனது இன்றைய தியானம் கழிந்தது...

21 கருத்துக்கள்:
ஸ்வாமிஜி
இந்த கருவில் ஏற்கனவே வந்துவிட்டது. ஆனாலும் நீஙக்ள் நமீதா பற்றியெல்லாம் எழுதியிருப்பதால் இது ஸ்பெஷல்தான்!
பி.கு: கதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் லேபிள் பிரமாதம்!
Swmi,
This is Dyanam. Witnessing.
தியானம் பத்தி உங்ககிட்ட பேசணும்னு நெனச்சிகிட்டு இருந்தேன்..இப்படி ஒரு போஸ்டப் போட்டுடீங்களே ஸ்வாமிஜி....:-(
திரு பரிசல்,
பிரபல பதிவர்கள் சின்ன பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதில்லை அப்படீங்கிற குற்றச்சாட்டை கட்டுடைத்த பரிசலுக்கு வாழ்த்துக்கள் :)
//நீஙக்ள் நமீதா பற்றியெல்லாம் எழுதியிருப்பதால் இது ஸ்பெஷல்தான்!//
நள சரித்திரம் எழுதினா யாரு வந்து படிப்பாங்க. அத்தான்... :(
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.
திரு கிருஷ்,
ஆம் சரியாக புரிந்து கொண்டீர்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி இயற்கை,
என் மாணவர் ஒருவர் தியானத்தில் தடை ஏற்படுகிறது என்றார். எப்படி என கேட்டேன். விளக்கினார். அதை புனைந்து பதிவாக்கிவிட்டேன்.
நிறைய பேருக்கு ஆரம்ப நிலையில் இது ஏற்படும்.
இதை கடந்தால் அடுத்து ஆனந்தமே...
பி.கு. அந்த மாணவர் கட்டாயம் இதை படிப்பார். அப்பிறம் தியானத்தில் என் பதிவு தான் தெரியும் :)
உலகோடு ஒட்டி வாழ்னு சொல்றாங்க சரிதான். ஓம்கார் ஸ்வாமியும் நமீதாவுக்கு மாறிட்டார் !
எல்லாரும் பாத்துக்கோங்க ஸ்வாமியும் ஒரு பெரிய ரவுடி.... :)))))
//இதை கடந்தால் அடுத்து ஆனந்தமே...// அப்பறம் ஆனந்த பவன்? ரசகுல்லா? பாசந்தி???
jokes apart... அலைபாயும் மனசை துல்லியமா எழுதியிருக்கீங்க.. அருமை.
//திரு பரிசல்,
பிரபல பதிவர்கள் சின்ன பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதில்லை அப்படீங்கிற குற்றச்சாட்டை கட்டுடைத்த பரிசலுக்கு வாழ்த்துக்கள் ://
ஸ்வாமிஜி... நீங்களுமா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனதின் இருப்பை மனம் உணர முற்பட்டாலே, முன்னேற்றம்தான்.
என்னவோ பின்னூட்டம் போடணும்னு நினைச்சேன்.ஆனால் நினைவை நமீதாவே ஆக்கிரமித்து இருப்பதால் அப்புறமா வர்றேன்
:)
//நிகழ்காலத்தில்... said...
மனதின் இருப்பை மனம் உணர முற்பட்டாலே, முன்னேற்றம்தான்.
//
இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது
இப்பத்தான் http://govikannan.blogspot.com/2009/07/blog-post_19.html இதைப் படித்த பாதிப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.,
ஆளை விடுங்க ஸ்வாமி கோவியானந்தா அவர்களே:))
ஹரி ஓம் சுவாமிஜி, நிதர்சனமான பதிவு. அப்படியே மனச பத்தி, ஒரு புக்ல படிச்சது கீழே.
Why is the mind always turbulent?
The fire is hot, not cold. If it were cold, it would not be fire. We would say that it has died out. Water is liquid, not solid. If it solidifies, it is ice, not water. The wind blows because it is its nature to blow. The nature of fire is heat, and the nature of the mind is to be turbulent. If you force the mind, if you try to beat it into quietness, you will be admitted to a mental hospital. When people go crazy, display abnormal or imbalanced behaviour, it is because they tried to quieten the unquiet mind.
The mind is restless, what is new about that? I need to go to the toilet every day, what is new about that? I need to sleep every day, what is new about that? I feel hungry every day, what is new about that? The mind will be restless. If you want it to be peaceful, then find the other thing inside called atman, the self. Beyond the mind is another thing, the self. When the mind moves, the self moves; the restlessness of the mind creates restlessness in the self in the same way as the flag of Hanuman moves with the movement of the wind. It is not the nature of the flag to move; the nature of the flag is to be absolutely still. The wind moves it. The atman is within you. The only way to quieten the mind is through devotion to God and selfless work.
திரு கோவி.கண்ணன்,
திரு நிகழ்காலம்,
உங்களுக்கு புரியுதோ இல்லையோ எனக்கு புரியல :)
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு மகேஷ் ,
என்னையும் ஜீப்பில் ஏத்தியதுக்கு நன்றி :) வெளியே சொல்லிக்கிலாம்ல :)
உங்கள் வருகைக்கு நன்றி
அப்துல்லா அண்ணே..
//என்னவோ பின்னூட்டம் போடணும்னு நினைச்சேன்.ஆனால் நினைவை நமீதாவே ஆக்கிரமித்து இருப்பதால் அப்புறமா வர்றேன்//
ஆக்கிரமிப்பு அதிகமாகிப்போச்சுனா போக்குவரத்து பாதிக்கப்படும் :)
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ராஜ கோபால்,
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
நீங்கள் கொடுத்த தகவல் அருமை. முடிந்தால் இதை கூறியவர்கள் என்ன புத்தகம் என கூறவும். காரணம் அது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.
நன்றாக எழுதியுள்ளீர்கள் சுவாமி. ஓம்!
ஹரி ஓம் சுவாமிஜி,
அதை கூறியவர் சுவாமி சத்யாநந்த சரஸ்வதி. உலகின் முதல் யோகா யுனிவேர்சிடியை நிறுவியவர்(Bihar school of yoga). சுவாமி சிவாநந்த சரஸ்வதியின் சீடர். அவருடைய மற்ற சத்சங்கை படிக்க
http://www.rikhiapeeth.net/
Swami and Rajagopal
I could download yoga nidra mp3 from this blog. Thanks.
Post a Comment