ஒலி என்பது ஆற்றலின் ஒரு வகை. மாண்டூக்கிய உபநிஷத் ஒலியால் பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் உள்ளும் ஒலி நிறைந்திருக்கிறது. சங்கை எடுத்து காதில் வைத்து பார்த்தால் ஒருவித ஒலி கேட்கும். கடல் அலைகளில் ஒலி உண்டு. நமது ஸ்வாசத்திற்கும் ஒலி உண்டு.
அதனால் தான் இறைவனை 'நாதப்பிரம்மம்' என்கிறார்கள். மத சடங்குகள் செய்யும் பொழுது எல்லா மதத்திலும் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் தன்மை செய்கிறார்கள்.
ஜூன் 6ஆம் தேதி நடந்த குருபூர்ணிமா அன்று பல நாம ஜெபங்கள் மற்றும் பஜன் நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட நாம ஜபத்தை மட்டும் இங்கு உங்களுக்கு கொடுக்கிறேன்.
அதனால் தான் இறைவனை 'நாதப்பிரம்மம்' என்கிறார்கள். மத சடங்குகள் செய்யும் பொழுது எல்லா மதத்திலும் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் தன்மை செய்கிறார்கள்.
ஜூன் 6ஆம் தேதி நடந்த குருபூர்ணிமா அன்று பல நாம ஜெபங்கள் மற்றும் பஜன் நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட நாம ஜபத்தை மட்டும் இங்கு உங்களுக்கு கொடுக்கிறேன்.
Shiva Shiva Om.mp3 |
இந்த மந்திரம் உடலின் ஆதாரங்களையும் நாடிகளையும் தட்டிஎழுப்பி உங்களை இயக்கநிலைக்கு மாற்றும். இயல்பாக கண்களை மூடி கேளுங்கள். ஒரு விதமான அலை அசைவு உங்களுக்குள் இருக்கும். இதை கேட்டு ஒரு நாள் முடிவடைவதற்குள் உங்களை அறியாமல் ஒருமுறை உங்கள் மனதில் இந்த மந்திரம் வந்து செல்லும்.
கடவுளை காட்டிலும் கடவுளின் நாமம் பெரிது என்றார்கள். காரணம் கடவுளுடன் நம்மை இணைப்பது கடவுளின் நாமம்.
6 கருத்துக்கள்:
ஓம் .......................
சிவ .......................
சிவ ....................... ஓம் .......................
சுவாமி அவர்களுக்கு.,
எனது உடல் எடை அதிகமாக உள்ளபடியால் நான் வாரம் ஒரு முறை உபவாசம் இருக்க முடிவெடுத்து உள்ளேன். ஆகையால் எந்த நாளில் உபவாசம் இருந்தால் நல்லது என நீங்கள் கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்.
திரு சன்யாசி,
உங்கள் வருகைக்கு நன்றி.
//எனது உடல் எடை அதிகமாக உள்ளபடியால் நான் வாரம் ஒரு முறை உபவாசம் இருக்க முடிவெடுத்து உள்ளேன். ஆகையால் எந்த நாளில் உபவாசம் இருந்தால் நல்லது என நீங்கள் கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்.//
ஏகாதசி விரதம் சிறந்தது.
திதியில் ஏகாதசியாக இருக்கிறேன் -பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்.
ஏகாதசி அன்று எப்படி படிபடியாக விரதம் ஏற்படுத்துவது என்பதற்கான விளக்கம் இந்த இணைய தொடர்பில் இருக்கிறது
http://vediceye.blogspot.com/2008/09/blog-post_09.html
ஒரு சின்ன கருத்து..
உணவு உற்கொள்ள நாள் பார்க்காத நாம், விரதம் இருக்க நாள் பார்க்கலாமா? நன்றே செய் அதை இன்றே செய்..!
ஓம் சிவ ஓம் சிவ
பீங்ங்ங்ங்... நம்மூர் கொடுமையப்பா!!
எல்லா ஒலிப்பானையும் ஒழித்துக்கட்டனும்.
முடியலை ஸ்வாமி முடியலை.
திரு வடுவூர் குமார்,
அது மைக் மற்றும் ஸ்பீக்கரால் ரெக்கார்ட் செய்யப்பட்டதல்ல. :)
உங்கள் புரபைல் படம் என்.டி ராமராவ் போல இருக்கு.
உங்கள் வருகைக்கு நன்றி
அய்யா வணக்கம் ஓம் சிவ சிவ ஒலி கோப்பை தரவு இறக்கம் செய்ய முடியவில்லை... தயவு செய்து சரிபார்க்கவும்...
Post a Comment