மதிப்பு
--------
நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.
தேனீருக்கு தான் மதிப்பு
கோப்பைக்கு அல்ல.
வில்லு
-----------
கிளி தெரியவில்லை.
கிளியின் கண் மட்டும் தெரிந்தது.
விஜயன் ஜென் ஆனான்.
குரு
-----
குரு பாதுகை ஓசை கேட்டதும்
நான் விழித்தேன்.
குரு நடப்பதை நிறுத்தியதும்
அவரின் பாதுகை என்னிடத்தில்
இருக்கிறது.
காமம்
--------
மீன் குளத்தில் நிறைந்து இருக்கிறது.
அங்கும் இங்கும் அலைகிறது.
நிற்கும் போதும் செவுள் அசைகிறது.
வறட்சி வந்ததும்
குளமும் இல்லை.
மீனும் இல்லை.
சடங்கு
--------
பல காலம் புத்தரை வணங்கினேன்.
புத்தர் சிலையால் என் தலையில் அடித்தார் குரு.
புத்தர் சிலையானார்...!
Subscribe to:
Post Comments (Atom)
17 கருத்துக்கள்:
அட... எனக்கே புரியற மாதிரி இருக்கே...
Precious. But can you please explain "guru" bit more swami?
திரு மகேஷ்,
இலக்கியமா எழுதலையோ ;) ?
தலைப்பு கொடுக்காம இருந்தா ஒன்னும் புரியாது :). ஜென் கவிதைகள் தலைப்பு இருக்காது. நான் புரிதலுக்காக கொடுத்தேன். இது இந்திய ஜென் என வைத்துக்கொள்வோம்.
திரு செளரி,
//Precious. But can you please explain "guru" bit more swami?//
குருவை விளக்க முடியாது. உணரத்தான் முடியும்.
குரு கீதை தளத்தில் முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி.
//வறட்சி வந்ததும்
குளமும் இல்லை.
மீனும் இல்லை //
இந்த பாடலில் சொற்பிழை இருக்கின்றதே...வறட்சி வந்தால் தண்ணீர்தானே இல்லாமல் போகும்?குளம் எப்படி இல்லாமல் போகும்னு யோசனை வந்தது. அப்புறம்தான் நம்ப கரைவேட்டிகள் பெரிய,பெரிய ஏரிகளையே பிளாட் போட்டு வித்தது ஞாபகம் வந்துச்சு.
:)
//இந்த பாடலில் சொற்பிழை இருக்கின்றதே//
சொற்பிழையா எனது பாடலிலா..
நக்கீரா....
என்னை நன்றாகப் பார்..
:)
அப்துல்லா அண்ணே உங்க வருகைக்கு நன்றி.
கவிதைகள் அருமை.
//நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.//
இதை சுப்பாண்டியிடம் கூறிவிடாதீர்கள், உங்களக்கு நேரம் மட்டும் சொல்லி, கடிகாரத்தை தன கையில் மாட்டிக்கொண்டு பொய் விடுவார்!
ஒரு சின்ன விஷயம். மதுரைவீரனும் நானே, தினேஷ் பாபுவும் நானே. குழப்பத்திற்கு மன்னிக்கவும்!
ஐயா! தங்களின் ஜோதிட பாடங்களை கற்றுக்கொள்ள ஆசை. ஆனால் நீங்கள் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களே! மீண்டும் தொடருங்கள் என மிகுந்த அன்புடன் வேண்டுகிறேன்.
எனக்கு உங்களிடம் நேரில் ஜோதிடம் கற்க மிக அதிக ஆவல் ஏற்படுகிறது. எனக்கு மிதுன லக்கினம். பத்தில் (மீனம்) குரு, சுக்கிரன், புதன், மற்றும் ராகு உள்ளனர். நாலில் கேது. சனி 6ல், செவ்வாய் 12ல், சந்திரன் 9ல் (கும்பம்) இருக்கிறார்கள்.
பிறந்த தேதி 23.04.1987 காலை 11.20. இடம் விருதுநகர்.
எனக்கு ஜோதிட கலை கற்க கொடுப்பினை இருக்கிறதாவெனெ கூறுங்கள். கோவையில் தங்களிடம் நேரில் ஜோதிடம் கற்க ஆசை. நான் திருப்பூரில் வசிக்கிறேன்.
//வறட்சி வந்தால் தண்ணீர்தானே இல்லாமல் போகும்?குளம் எப்படி இல்லாமல் போகும்னு யோசனை வந்தது. //
அப்துல்லா,
தண்ணீர் இருந்தால்தான் அது குளம்.
தண்ணீர் இல்லை என்றால் அது பள்ளம்,குழி :-)))
பெரிய பள்ளமாகிய நிலப்பரப்பில் நீர் நிரம்பி இருந்தால் மட்டுமே அது குளம்.
***
ஓம்கார்,
ஜென்னுக்கு தலைப்பு மட்டும் அல்ல ஜென் என்ற பெயரையே எடுத்துவிடலாம். அத்தகைய தன்மையுடையது அது.
ஊருக்கு வழி எது என்பவனுக்கு .."அதோ ஒரு கோவில் தெரியுதுல்ல " என்று சொல்வது அல்லது "அந்த சினிமாக்கொட்டகை இருக்குல்ல.." என்று ஆரம்பித்து வழி சொல்வதுபோல ஒரு அடையாளம்தான் ஜென் என்ற சொல். ஜென் என்பதையே எடுத்துவிடாலம். பாதகம் கிடையாது.
திரு மதுரைவீரன் தினேஷ் பாபு,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு S,
ஜோதிடம் கற்றுகொள்ள ஜாதகத்தில் அமைப்பு தேவை இல்லை.
ஜோதிடத்தை தொழிலாக செய்யவே ஜாதக அமைப்பு வேண்டும்.
ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம் ஆகும்.
நேரில் படிக்க விருப்பம் இருந்தால் 25 ஜூலைக்கு மேல் தொலைபேசியில் பேசவும்.
ஆகஸ்ட் 1 முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்.
திரு கல்வெட்டு,
உங்கள் வருகைக்கு நன்றி
//வறட்சி வந்ததும்
குளமும் இல்லை.
மீனும் இல்லை.//
இவை காமத்தை மட்டுமா குறிக்கிறது..
அழகான கவித்துவம் மிகுந்த வரிகள். நன்றி.
Hi BOSS
Read ACHARYA RAJNEESH EXPLANATION for zen BUDDHISM.
PLAGIARISM FROM IT...
your speech is very realistic.i feel as my friend is speaking with me.
//சடங்கு
--------
பல காலம் புத்தரை வணங்கினேன்.
புத்தர் சிலையால் என் தலையில் அடித்தார் குரு.
புத்தர் சிலையானார்...!//
satori (சடோரி) என்பார்கள் ஜென் புத்திசத்தில்... நன்றி.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
(Please bless my blog, have a visit)
கலக்கல் !!!!!!!!
Post a Comment