நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்.
பசு என்று தான் சொல்லுகிறேன் கவனியுங்கள். மாடு என சொல்லவில்லை. மாடு என்பது இனம், பசு என்பது அதில் ஓர் வகை. உலகின் எந்த நாகரீகத்தையும் கவனித்தால் அதில் பசு என்பது முக்கியமான விஷயமாகும். பசுவில்லாத மனிதகுலம் தோன்றாது. காரணம் பசு என்பது தாய்க்கு சமம் என்பார்கள். இது பால் கொடுப்பதாலோ அல்லது பாசத்துடன் இருப்பதாலோ அல்ல. பசு என்பது தோற்றத்தின் அடிப்படை.
பசு ஒரு வீட்டு விலங்கு என்று படித்திருப்போம். உண்மையில் பசு என்பது வீட்டு விலங்கோ காட்டு விலங்கோ அல்ல. பசு யாரையும் சாராமல் வாழும் ஒரு உயிர். ஒரு நாய் அல்லது வேறு ஒரு உயிரை நீங்கள் செல்லப்பிராணியாக வளர்த்து பின்பு அதை வீட்டை விட்டு விரட்டினால் அது சில நாட்களில் உயிர் விடும். காரணம் அதற்கு உணவு சேகரிக்க தெரியாது. ஆனால் பசு மட்டும் தன் வாழ்க்கையை செம்மையாகவே வைத்திருக்கும். பெரிய வித்தியாசம் இருக்காது.
உலக கலாச்சாரம் என நவீன ஆய்வாளர்கள் கூறும் எகிப்து, ஹரப்பா மற்றும் மாயன் ஆகியவற்றின் குகை ஓவியங்களிலும் , சிதைந்த சுவடுகளிலும் பசுவின் ஓவியங்களை காண முடியும். மனிதன் பசுவின் பாலை குடிப்பதால் மட்டுமே அதன் மேல் கவரப்பட்டு சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைய முடியுமா என்பது சிந்திக்க வேண்டும்.
பசு என்பது நம் ஊரில் பார்ப்பது மட்டும் பசு கிடையாது. பசுவில் பல்வகை உண்டு. ஆனாலும் பசுவினால் ஏற்படும் பயன்கள் ஒன்றுபோலவே இருக்கும். சிந்து சமய நாகரீகம் மற்றும் கிரேக்கம் ஆகியவற்றில் பசுவின் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இன்றும் கூட ஐரோப்பிய பசுக்கள் உலக அளவில் பெயர் பெற்றவை.
பாரத தேசத்தில் மட்டும் அல்ல பல தேசங்களில் மக்கள் வழிபட்ட ஆதாரங்கள் பசுவுக்கு
வேதகால வாழ்க்கையின் மற்றொரு அங்கம் பசு. நான் முன்பு தாவரங்களை பற்றி விளக்கினேன் அல்லவா? அது உங்களுக்கு புரிந்திருந்தால் பசுவை பற்றி புரிந்து கொள்வது எளிது. இதோ அதை எளிமையான சமன்பாட்டில் கூறுகிறேன்.
ஒரு பசு = 100 மரம்
பசு நம் உலகிற்கு என்ன தருகிறது என நான் கூறுவதற்கு முன்னால், பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது- என உங்களால் கூற முடியுமா?

(....வேதம் ஒலிக்கும்)
17 கருத்துக்கள்:
உங்கள் பதிவிற்கு நன்றி ஸ்வாமி
பசுவை வளர்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.
பசுவதை செய்யும் அநியாய தேசத்தில் வாழ்கிறேன். என்னசெய்யமுடியும் நம்மால் , கண்ணீர்விடுவதைத்தவிர.
உங்கள் பணி தொடரட்டும்.
என் ஓட்டு எருமைக்கே !
அதுவும் பால் வெள்ளையாகத்தான் அதிகமாகவும், கறக்கிறது
:)
மிக்க நன்றி ஸ்வாமி.
"ஒரு பசு = 100 மரங்கள் " இதை படிக்கும் பொழுது வியப்படைந்தேன் ஸ்வாமி (மரத்திற்கே எவ்வளவு சக்தி என்று உணர்ந்து).
// பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது //
அனைவரும் அறிந்தது,
ஓன்று "பால்", அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் ஏராளம்.
அதில் சில, தயிர், மோர், வெண்ணை, மற்றும் என்றும் அழியா நெய். இதன் மூலம் ஆன்மீகத்தை ஸ்வாமி சச்சிதானந்த விளக்கியதை உங்கள் குரு கீதையில் படித்த ஞாபகம் ஸ்வாமி.
ஸ்வாமி, ஜோதிட பரிகாரங்களில், கோதானம் செய்யக்கூரும் காரணத்தையும் அதன் பயனை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?
சுவாமி, பால் மட்டும் அன்றி பசுவின் சாணம் உரமாகவும், வரட்டி ஆனா பின் எரிவாயு (Bio fuel) வாகவும் பயன் படும்.
Comments by Chitoor S. Murugesan is fit to be deleted. I may not agree fully with your writings, but spewing venom by readers like this will discourage me from writing things like what you write. I bow to your courage and commitment, Swamiji
Mr. Murugesan - what Swami is talking is about concepts - not castes - if you have read the whole of his blog articles you will definitely come to know about that.
\\ஒரு பசு = 100 மரம்\\
நீங்கள் பசுவாகவும், மரமாகவும் இருந்து எழுதுகிறீர்கள்
நானோ மனிதனாக இருந்து படிக்கிறேன்
ஓரளவுக்குதான் புரிகிறது சாமி..
........புரியாத பொன்னுச்சாமி
சாமி சின்ன சந்தேகம்..
முந்திரிக்கு ஏன் கொட்டை முந்திகிட்டு வெளியே இருக்குது
கற்பக மரம் போல வேண்டியதெல்லாம் தரும் காமதேனு பசுவாக இருப்பது தான் பசு தரும்.
ஸ்வாமி, பசுவின் சாணத்தை எரித்து தயாரிக்கப்படும் திருநீறு , ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பயந்தருகின்றது என்று நினைக்கின்றேன்.
திருநீறு இட்டுக்கொள்ளும் இடங்களும், அதன் பயன்களையும் ஒரு தனி இடுகையாக கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் ஸ்வாமி.
புதிய கருத்துக்கள்.நீங்கள் சொல்ல வருவதை முழுமையாகக் கேட்ட பின்னரே உங்கள்து தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
சரணங்கள்,ஸ்வாமிஜி.
நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். "பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்".
எப்பொழ்தும் பசுவிடம் எனக்கு ஒரு இர்ப்பு உண்டு. ஆணால் ஒரு பசு = 100 மரம் என்பது ஊன்மையில் வியப்பு. புரிந்து கொள்ள மன்னிகவும் உணர்ந்துகொள்ள காத்துக்கொண்டுக்கிறென்.
இவன்,
உமாசங்கர்.ஆ
No one is forced to read these blogs. If your understandings of these blogs are limited. Hope and pray that at least in this birth you will realize these spiritual messages. Until then please don't disturb the services by swamji.
நல்உள்ளங்களின் செயலுக்கு ஏற்ப மட்டுறுத்தல் தூண்டப்பட்டுள்ளது.
நன்றி.
ஸ்வாமி வேதம் தொடர்ச்சியாக ஒலிப்பதாக சொல்கிறிர்கள். அதன் ஆரம்பம் எது முடிவு எது (ஒரு பாடல் தொடங்கி முடிவது போல்) அப்படி உண்டு என்றால் திரும்ப திரும்ப ஒலிக்கின்றதா?. மிருகங்கள் இரவில் செயல் படும். பறவைகள் செயல்படாது என நினைக்கின்றேன்.
சுவாமி, பல நாட்களாக உங்களுடைய இடுகைகளுக்கு ரசிகனாக ரசித்து கொண்டு இருக்கிறேன். என் சிற்றறிவிற்கு ஏதாவது தவறாக கேள்விகளை கேட்டுவிடுவேனோ என்ற பயத்தில் அமைதியாக இவ்வளவு நாட்கள் படித்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு பதிவும் பொக்கிஷமாக இருக்கிறது. எவ்வளவோ கேட்கவேண்டும் போல இருக்கிறது. எவ்வளவோ தெரிந்து கொள்ளாதது இருக்கிறது. நீங்கள் சொல்கிற ஒவ்வொன்றும் சரியான ரீதியில் மனதில் பதிய வேண்டும் என்ற பயமும் அதிகரித்திருக்கிறது.
இன்னும் மரத்தினையே புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது நூறு மரத்தினை பற்றி எப்படி புரிந்து கொள்ள போகிறேனோ தெரியவில்லை. இருந்தாலும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இப்படியே போனால், கூடிய சீக்கிரம் உங்களின் சிஷ்யன் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறன். எதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.
பசு நேரடியாகக் கொடுப்பது பால் மற்றும் சாணம். இதனை மூலமாகக் கொண்டு எண்ணற்ற பொருட்களைச் செய்து கொள்கிறோம்.
”வந்தேண்டா பால்காரன்..” பாடல் ஞாபகம் வருகிறது.
பசுவின் மறை-பயன்களை அறிய ஆவலுடன் இருக்கிறோம்.
If permitted, I can copy Vishnu varadhan's Comment. It just reflect mine too.
Post a Comment