திருவண்ணாமலையும் வலையுலகமும்
கடந்த 10ஆம் தேதி மாணவர்களுடன் ஸ்ரீசக்ர புரிக்கு பயணம் மேற்கொண்டேன். மூன்று நாள் திகட்ட திகட்ட ஆன்மீக உணர்வு உண்டு மகிழ்ந்தோம். சுப்பாண்டி இப்பயணத்தில் இணைந்து சிறப்பித்தார். அத்துடன் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு வலயுலக பிரபலம் இதில் கலந்து எங்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார். அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
கிரிவலம் வரும் பொழுது அங்கே மொட்டையன் சாமி என்ற அவதூதரை மாணவர்களுக்கு காட்டினேன். அழுக்கான தேகம், கையில் மூக்குப்பொடி, வாய்க்கு வந்ததை பேசி பிறரை திட்டுவது என வித்தியாசமானவர் மொட்டையன் சாமி. அவர் ஒரு டீக்கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
கிரிவலம் வரும் பொழுது அங்கே மொட்டையன் சாமி என்ற அவதூதரை மாணவர்களுக்கு காட்டினேன். அழுக்கான தேகம், கையில் மூக்குப்பொடி, வாய்க்கு வந்ததை பேசி பிறரை திட்டுவது என வித்தியாசமானவர் மொட்டையன் சாமி. அவர் ஒரு டீக்கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
எல்லா மாணவர்களும் வியப்புடன் அவரை பார்த்துக் கொண்டிருக்க சுப்பாண்டியும் நம் பிரபல பதிவரும் அவரை பார்த்து அதிசயிக்காமல் சாதாரணமாக அமர்ந்திருந்தனர். எனக்கோ ஆச்சரியம். அவர்களிடம் தனிதனியே கேட்டேன்.
பிரபல பதிவர் சொன்னார், “வாய்க்கு வந்ததை பேசும் எத்தனையோ பதிவர்களே இது போல இருக்காங்க. நீங்க என்னடான இதை அதிசயங்கிறீங்க” என்றார்.
அதே கேள்வியை சுப்பாண்டியிடம் கேட்டேன், “உங்க ஸ்பீச்சை கேட்டு கேட்டு பழகி யார் பேசரதை கேட்டாலும் நீங்க பேசறமாதிரியே இருக்கு ஸ்வாமி” என்றான் உள் குத்துடன்.
நான் இருவரின் கருத்தையும் இணைத்து பார்க்க விரும்பவில்லை...!
-----------------------------
நேமா(அ)ல(ர்)ஜி ஒரு நேமாலஜி வெறியரிடம் சிக்கிவிட்டேன். என்னிடம் தன் பிரதாபங்களை காட்ட அவரின் கருத்துக்களை என் மேல் வாரி தெளித்துக்கொண்டிருந்தார். எனக்கு நேமாலஜி மேல் நம்பிக்கை உண்டா என்றோ அதை பற்றிய கருத்தோ கேட்காமல் சராமாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.
தீபா என பெயர் வைக்க கூடாதாம். அதில் தீ என்ற வார்த்தை இருக்காம். குரு பிரசாத் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் SAD என நடுவில் வருமாம். அதனால் அவர்களின் வாழ்க்கை சோகமாகிவிடுமாம். என் பெயரில் பின்னால் கார் என்ற ஒலி வருகிறதாம் அதனால் என்னால் சுயமாக இயங்க முடியாதாம். யாரோ ஒருவர் தான் என்னை இயக்குவாரம். முடியல...
அவரிடம் முகத்தை சீரியசாக்கிக் கொண்டு ஒரு கதை சொன்னேன்...
நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தினரிடம் ஒரு வெளிநாட்டுக்காரர்கள் சிக்கிவிட்டார்கள். அதில் ஒருவர் பெயர் சேவு, இன்னொருவர் பெயர் காவு. இருவரையும் கட்டி தலையில் தூக்கிவைச்சு கொண்டு போனாங்க. நம்மை சாப்பிட போறாங்கனு தெரிஞ்சு இருவரும் கதறினார்கள்.
சேவு ஆங்கிலத்தில், “மனிதர்களை எல்லாம் சாப்பிடலாம இது உங்களுக்கே நல்ல இருக்கா?” என கேட்டான். அந்த கூட்டதிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு ஆங்கிலத்தில் உங்க ரெண்டு பேரு பெயரையும் சொல்லுங்க என்றான். சேவுக்கு ஒரே ஆச்சரியம் கூட்டத்தில் ஒருவன் ஆங்கிலம் பேசுறான். இவன் கிட்ட எதையாவது சொல்லி தப்பிச்சிடலாம்னு நினைச்சான்.
அதற்குள் நம்ம நேமாலஜிட் குறுக்கிட்டு பார்த்தீங்களா நேமாலஜி வர்க் ஆயிருக்கு, அவன் பெயர் சேவு (save) என்றார்.
கதையை தொடர்ந்தேன். சேவு அந்த நரமாமிச ஆசாமியிடம் எதற்கு பெயரை கேட்கறீங்க என்றான். அந்த ஆசாமி சொன்னான், ”எங்க மெனு கார்டில் எழுதி வைக்கனும்”. சேவு என்ற நேமாலஜி வேலை செய்ததோ இல்லையோ.. கூட இருந்தவன் பெயர் வேலை செய்தது :)
------------------------------
வலையுலக ஜனநாயகம் வர வர என் வலைப்பக்கத்தில் ஜனநாயகம் இல்லை என ஒரு பதிவர் தனிமடல் அனுப்பி இருந்தார். மாடுரேஷன் போடுகிறேனாம். சிலரை கண்டிக்கிறேனாம். பிறரின் கருத்தை ஏற்க மாட்டேன் என்கிறேனாம். ஒரே ஜனநாயக விதிமீறலாக இருக்கிறது என்றார்.
அவரின் ஆவலை மனதில் கொண்டு ஒரு ஜனநாயக விஷயத்தையாவது ஆவன செய்யலாம் என இருக்கிறேன். இந்த வலைபக்கத்தில் ஒரு விஷயத்தை எழுதவேண்டும் என நினைத்து உட்கார்ந்தால் ஏகப்பட்ட விஷயங்கள் என் முன்னால் நிற்கிறது. எதை எழுதவேண்டும் என தெரியவில்லை. (விஷயம் இல்லையா என கேட்பவர்கள் தனியாக சாட்டில் வரவும் :) ).
அனைத்து கருத்துக்களும் எனக்கு முக்கியமாக படுவதால், வலைப்பூவை படிப்பவர்களான உங்களிடத்திலேயே எந்த தலைப்பில் பதிவெழுதுவது என தேர்ந்தெடுக்க சொல்லலாம் என இருக்கேன்.
(ஏகப்பட்ட ஆணி இருக்கு அதில் எதை பிடுங்க? நீ பிடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான். போன்ற வசனங்கள் மாடுரேஷன் போடப்படும். ஆணியே பிடுங்க வேண்டாம் என சொல்லும் வசனங்கள் பார்த்தவுடன் டெலிட் செய்யப்படும் :) )
பக்கவாட்டில் இருக்கும் தேர்தலில்(poll) கலந்து கொண்டு பிடித்த தலைப்பை தேர்ந்தெடுங்கள். ஒன்றுக்கு மேம்பட்டது பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் வரிசைப்படுத்துங்கள்.
---------------------------------
கவிதை சில நாளுக்கு முன் என் கூகுள் ஸ்டேட்டஸில் எழுதிய கவிதை வரிகள்.
பசு என்றேன் இந்து ப்ராமணன் என்றார்கள்
ஆடு என்றேன் ஆண்டவரே என்றார்கள்.
ஒட்டகம் என்றேன் அவனா நீ என்றனர்.
தயவு செய்து...மிருகத்தை வைத்தல்ல
மனிதனை வைத்தே மனிதத்தை எடைபோடுங்கள்.
16 கருத்துக்கள்:
//என் பெயரில் பின்னால் கார் என்ற ஒலி வருகிறதாம் அதனால் என்னால் சுயமாக இயங்க முடியாதாம். யாரோ ஒருவர் தான் என்னை இயக்குவாரம். முடியல...
//
கார் சாமியா.......அவ் அப்ப பணக்கார் ஸ்வாமி !
:)
\\யாரோ ஒருவர் தான் என்னை இயக்குவாரம். \\
மாபெரும் தத்துவத்தையே சொல்லி இருக்கிறார்.:))
மனதின் விளையாட்டுதானே இதுவும்,
சரி சிவா, லீலா பெயருக்கு என்ன பலன் எனக் கேட்டிருக்கலாமே..:))
//அப்ப பணக்கார் ஸ்வாமி !//
ஆஹா... அப்ப உங்கள்ளை சந்திச்சே ஆகணும் :)))))))))
திரு கண்ணன்,
உங்க பெயரில் non என வருவதால்தான் நீங்க கடவுள் மறுப்பு செய்வதாக அவர் சொன்னார் ;)
அதற்கா என் மேல் 'கோவி'க்காதீங்க.
திரு சிவா,
//சரி சிவா, லீலா பெயருக்கு என்ன பலன் எனக் கேட்டிருக்கலாமே..:))//
நானாவது சும்மா கதையுடன் விட்டேன்.
அவர்கள் அரைக்கிலோ எடுத்திருப்பார்கள் :)
வாங்க மகேஷ் சந்திப்போம்..
அவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்துகிறேன்...
உங்க பெயரில் பணம் நிறைய இருக்குனு சொல்லுவார் :)
காரணம் தெரியும் தானே :)
ஸ்வாமி அப்போ என் பேருக்கு முன்னால கார்ன்னு வருதே...
நான் யாரையாவது இயக்குவேனோ??
என் பெயர்...Beautiful !!!!!?????
திருத்தலப் பயணம் - பெயரியல் - பொதுக்கருத்து - எல்லாம் உள்ளடக்கிய அருமையான இடுகை
வழக்கம் போல் எல்லோரையும் வாழ்த்துவது போல் - நல்வாழ்த்துகள்
யார் அந்த பிரபலம்? நீங்களே தானா?
டிசம்பர் ஒன்று அன்று கிரிவலம் செல்லலாம் என்று இருக்கிறேன்!
சரி ராசி கற்கள் பற்றி உங்கள் பதிவை படித்தேன். நன்றி. வேண்டாம் என் முடிவு எடுத்தேன். கையில் ஒரு தங்க மோதிரம் - நான் என் முதல் சம்பளம் கொண்டு சென்று கொடுத்த பொது - அம்மா ஆசையாய் வாங்கி கொடுத்தது மட்டும் அணிகிறேன்.
வேறு மதத்தவரும் இந்த ராசி கல் மோதிரம் குறித்து அபிலாசை வைத்துள்ளனர்!
Swami this is my poll choices
1) வேதகால மருத்துவம்
2) புதிய கோணத்தில் திருமந்திர விளக்கம்
3) முத்திரைகள் என்ன செய்யும்?
4) காசி நகரம் ஓர் அற்புதம்
5)மஹா கும்ப மேளா
..
..
..
1008)எதுவும் எழுதாமல் இருந்தால் நல்லது.
திரு கார்த்திக்,
திரு சுந்திர ராமன்,
நானே அவர் பேச்சை கேட்டு நொந்து இருக்க்கேன்..
நீங்க வேற நேமாலஜி கேட்டுகிட்டு :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு சீனா,
திரு ராஜூ,
திரு சிலோன்ஸ்டார்,
உங்கள் வருகைக்கு நன்றி.
அய்யா
திருமந்திரம் பற்றிய புதிய கோண விளக்கம் எழுதும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.
(பழைய கோணம் புரிந்ததா எனக் கேட்கவேண்டாம்)
//பசு என்றேன் இந்து ப்ராமணன் என்றார்கள்
ஆடு என்றேன் ஆண்டவரே என்றார்கள்.
ஒட்டகம் என்றேன் அவனா நீ என்றனர்.
தயவு செய்து...மிருகத்தை வைத்தல்ல
மனிதனை வைத்தே மனிதத்தை எடைபோடுங்கள்.//
nice
But want say something in my experience person with same name mostly(note mostly not all) have similar character.
( I am not believe any "logy")
படுசுவாரஸியம்..கவிதை அருமை !!!
உங்கள் பழைய இடுகைகளையும் வாசித்து விட்டுத் தான் வந்தேன்.கோவி கண்ணன் பற்றிய உங்கள் பழைய இடுகை ஒன்றை வாசித்து ரசித்து சிரித்தேன்.
அப்துல்லா உங்களைப் பற்றி நிறைய ஏற்கெனவே நிறைய சொல்லியிருக்கிறார்.உங்கள் வலைக்கு வர இப்போது தான் வழி கிடைத்தது.தொடர்ந்து வருகிறேன்.
நன்றி !!!!
Post a Comment