Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, November 13, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 11

ப்ரபஞ்ச சக்தி பல தாவரங்கள் வழியாகவும், பசுவின் வழியாகவும் மனிதர்களுக்கு ஊடுருவுகிறது என்பதே நான் முன்பு சொன்ன கருத்து. இவை இரண்டும் இல்லாத சூழலில் மனிதனின் மனம், உடல் மற்றும் ஆன்மா நிலைதடுமாறிய நிலையிலேயே இருப்பான். தாவரம் இல்லாத சூழலில் வாழமுடியாத காரணத்தால் அவன் வாழும் சூழலில் இருக்கும் சில தாவரங்கள் மனிதனுக்கு தேவையான குறைந்தபட்ச ஆற்றலை கொடுத்துக் கொண்டிருக்கும். யானைபசிக்கு சோளப்பொறி போல மனிதனுக்கு தேவையான ஆற்றலில் இவை சில துளிகளே. இயற்கையாக விளைந்த தாவரங்கள் இருக்கும் சூழலில் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு பூரணமான ப்ராணன் நிலைகொள்வதால் மனம், உடல் மற்றும் ஆன்மாவில் ஏற்றம் பெறுகிறான்.

நம் மக்களுக்குள் எப்பொழுதும் ஒரு பகுத்தறிவாளி ஒளிந்திருப்பார். எல்லாவற்றிற்கும் சான்று கேட்கும் அந்த விஞ்ஞானி மேற்கண்ட வரிகளுக்கும் கேட்கலாம். விஞ்ஞான கருவிகளைக்காட்டிலும் நம் வாழ்க்கை சம்பவங்கள் துல்லியமானது.

அவற்றை சான்றாக பார்ப்போம். நீங்கள் சுற்றுலா செல்லுகிறீர்கள் என கொள்வோம். நீர் விளையாட்டுக்கள் உள்ள இடம், எழில் மிகு கட்டிடங்கள் உள்ள இடம் ஆகியவற்றிற்கு செல்லுவதற்கும், வனங்களில் சுற்றுலா செல்லுவதற்கும் சில வித்தியாசம் உண்டு அல்லவா?

வனப்பிரதேசத்தில் சில நாட்கள் உலாவி வந்தால் மனதில் இனம் புரியத நிறைவு வருகிறது அல்லவா? நீர் கேளிக்கை பூங்காக்களில் ( water theam park) எத்தனையோ விளையாட்டால் வராதா ஒரு நிறைவு ஏன் வனத்தில் வருகிறது?

காரணம் வனங்களில் இயற்கையாக அமைந்த ப்ராண ஆற்றல்கள்தான். ப்ராண சக்தி முழுமையாக இயங்குவதால்தான் வனங்களில் உயிர்களில் உருவாக்கமும் வளர்ச்சியும் தடைபடாமல் இருக்கிறது. மனிதன் ப்ராணனால் பூரணத்துவம் அடைகிறான் என்பதை இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

திருப்பூரில் இருக்கும் அன்பர்கள் கோவை வந்தால் ஒருவித புத்தணர்ச்சி அடைவார்கள். இதன் காரணம் திருப்பூரைவிட கோவையில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகம். இக்கருத்தை படிக்கும் திருப்பூர் ’வாசி’கள் கருத்து கூறினால் தன்னியனாவேன்.

இயற்கையாக வனங்கள் ப்ராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து எளிமையாக மாற்றம் செய்கிறது. ஆனால் செயற்கையாக உருவாக்கும் மரங்கள் முழுமையாக செயல்படுவது இல்லை. வனத்தில் உலாவருவதற்கும் பூங்காவில் உலாவருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு அல்லவா?

செயற்கையாக நாமும் வனங்களை உருவாக்கலாம். நம் வீட்டிலும் நமக்கு தெரிந்த இடங்களிலும் இவற்றை செய்ய முடியும். அதற்கு நம்மிடையே ப்ராண சக்தியை முழுமையாக கொடுக்கும் மரங்கள் எவை தெரிந்திருக்க வேண்டும்.

ப்ரபஞ்ச சக்தியை முழுமையாக உள்வாங்கி ப்ராணனாக மரங்கள் மாற்றி அளிக்கும் சக்தி கேந்திரம் அல்லவா?

அத்தகைய ப்ரபஞ்ச ஆற்றல் எங்கிருந்து வருகிறது? காஸ்மிக் கதிர்கள் என்பது நம் ப்ரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வருகிறது.

நட்சத்திரம் மண்டலம் என்பது 27 வகையான நட்சத்திர கூட்டங்கள். பிரபஞ்சத்தில் வெறும் 27 நட்சத்திரம் மட்டும் அல்ல. நட்சத்திரங்கள் கோடிக்கனக்கான அளவில் இருந்தாலும் அவற்ற 27 வகையாக வரிசைப்படுத்தலாம். ( ஒன்பது கிரகங்கள் அதன் மூன்று குணங்கள் : 9X3= 27)

நட்சத்திர ரீதியாக சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்ட விருட்சங்களில் பட்டியல் இந்த சுட்டியில் உண்டு.

நட்சத்திர விருட்சங்களை இயற்கை வேளாண்மை முறையில் வளர்த்தால் மட்டுமே செயல்படும். அவ்வாறு வளர்க்க பஞ்சகவியம் மற்றும் ப்ராண சக்தியை ஊட்டும் செயலுக்கும் பசு மாடுகள் அவசியம்.

1980க்கு முன் நம் நாட்டில் விவசாயிகள் அனைவரும் பசுவை பயன்படுத்திவந்தனர். அதனால் விவசாயம் செழிப்பாக இல்லாவிட்டாலும் தேவையான அளவு கிடைத்துவந்தது. பசுவையும் காளையையும் ஒழித்து, டிராக்டர், பூச்சிகொல்லி ரசாயனம் என துவங்கியதும் இன்று தேவையான உணவு பொருட்கள் கிடைக்காத தட்டுப்பாட்டில் இருக்கிறோம்.

இங்கே முக்கியமான ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இரும்பு என்ற உலோகம் ஒரு கடத்தி மற்றும் ப்ராணனை நம் உடலை விட்டு வெளியேற்றும் ஒரு தாது. வரலாற்று அறிஞர்களில் காலகணக்குபடி இரும்பு,செம்பு, தங்கம் என உலோகத்தை வைத்து மனிதனின் சமூக காலத்தை கண்டறிகிறார்கள். இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை கவனித்தீர்களா? உழுவதற்கு ஏர் மரத்திலும், விதைகலயங்கள் மண் மற்றும் மூங்கில் கூடையாகவும் பயன்படுத்தினார்கள். மூங்கில் கூடையிலும் சாணம் மொழுகப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க...!

நம் உடலில் மின்சக்தி உண்டு என்பது தெரியும். விதை மற்றும் மண்ணில் உள்ள மின்சக்தியும் அயனியாக்கமும் நம் கைகளில் அவற்றை தொடுவதன் மூலம் பாதிப்படையும். விளைச்சல் குறையும். உலோகங்கள் கடத்தி என்பதால் விவசாயத்திற்கு அதிகமாக கடத்திகளை பயன்படுத்துவதில்லை.

தற்காலத்தில் டிராக்டர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்து கலயங்களும் இரும்பில் இருக்கிறது.

ஜோதிடத்தில் இரும்பை சனி என்ற கிரகம் குறிக்கும். அதனால் தான் சொல்லுகிறேன் தற்கால விவசாயத்திற்கு ‘இரும்பு’ பிடித்துவிட்டது.

ஆஸ்திரேலிய விவசாயிகள் மர சக்கரம் மற்றும் மர கலப்பை கொண்ட டிராக்டரை பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். பசுவையும் காளையும் வைத்து மர கலப்பையில் விவசாயம் செய்தவன் முட்டாளா? நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

நான் அப்பார்மெண்டில் வசிக்கிறேன் மரமும், பசுவும் என்னால் வளர்க்க முடியுமா?
நகரத்தில் பசு வளர்க்கும் வசதி உண்டா?
பசுவினால் உலகம் வெப்பமடைதல் ஆகிறதாமே?
பசுவினால் கேடு ஏற்பட்டு உலகம் அழியும் அபாயம் உண்டா?
பசுமாட்டை உபயோகம் முடிந்ததும் இறைச்சிக்காக வெட்டுகிறார்களே?

போன்ற கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் விளக்கம் பார்ப்போம்.


(....வேதம் ஒலிக்கும்)

டிஸ்கி : கடந்த சில தினங்கள் ஸ்ரீசக்ர புரியில் இருந்ததால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. எங்கள் ஸ்ரீசக்ர புரி பயணம் சிறப்பாக அமைந்தது. அதில் ஒரு பிரபல பதிவர் எங்களுடன் கலந்துகொண்டு எங்கள் பயணத்தை சிறப்பித்தது குறிப்பிடதக்கது. அதைபற்றிய கட்டுரை சுப்பாண்டி வாயிலாக விரைவில் வெளிவரும். :)

38 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

ஜோதிடத்தில் இரும்பை சனி என்ற கிரகம் குறிக்கும். அதனால் தான் சொல்லுகிறேன் தற்கால விவசாயத்திற்கு ‘இரும்பு’ பிடித்துவிட்டது.//

காலை வண்க்கங்களும்,சரணங்களும்
ஸ்வாமிஜி.
ராக ஆலாபனை போலக் குறிப்பிட்ட கருத்துக்களே திரும்பித் திரும்பி சஞ்சாரம் செய்தாலும் கேட்கக் கேட்க மிக சுகமாக இருக்கிறது.

Thirumal said...

பலா மரத்தினடியில், மனமெங்கும் சொல்லவொண்ணா அமைதி நிலவியதைப் பின்பு உணர்ந்திருக்கிறேன்.

Umashankar (உமாசங்கர்) said...

வனக்கம் சுவாமி ஜி,

பலா விருட்சங்களில் வரும் பலாவை உன்பதிணலும் ப்ராணன் கூடும்ம சுவாமி ஜி?

இவன்,
உமாசங்கர்.ஆ

Self Realization said...

swamji....Nature brings good to mankind...eventhough man brings bad to nature....Nature is the mother of all inventions..Your postings are simply superb and helpful for us to realize.

when mind of man is with certain frequency with nature..he mixes with that and he got everything..such as future..he is able to read the aakash documents..can u explain about this swamji...about reading of aakash documents..

sowri said...

I was wondering why there was no update? I got my Prana back after this post. Thanks

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருமால்,
உண்மைதான். பலா மரம் ஒருவிதமான சக்திநிலையில் இருக்கும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு உமாசங்கர்,

//பலா விருட்சங்களில் வரும் பலாவை உன்பதிணலும் ப்ராணன் கூடும்ம சுவாமி ஜி?//

ப்ராணன் கூடுகிறதோ இல்லையோ, உடல் எடையும், இரத்ததில் சக்கரையில் அளவும் கூடும் :)

மரம் உயிர் உடன் இருக்கும் பொழுது கொடுப்பதைவிட அதன் பூ,பழம் மற்றும் விதை மூலம் குறைவாகவே கொடுக்கிறது.

அனேக ஆசிய மருத்துவ முறைகள் தாவர மருந்தை நம்பி இருக்கிறது . அதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு self realization,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

//I was wondering why there was no update? I got my Prana back after this post. Thanks//

மரம் சி.டியை படிக்குமா? அது போல இந்த வலைபதிவு உங்களுக்கு ப்ராணனை கொடுக்கிறதா.. ? நல்ல கதை போங்க...

உங்கள் வருகைக்கு நன்றி.

T K Arumugam said...

சுவாமி ஓம்கார் அவர்களுக்கு வணக்கம்

நான் ஒரு திருப்பூர் வாசி. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கோயமுத்தூர் வந்தாலே தனி குஷி தான். கோவையில் முக்கிய சில்லறை வணிக கடைகளில் முக்கால்வாசி பேர் திருப்பூர் காரர்கள் தான். ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு கோவை வருவது வழக்கம். கோவை அப்படி ஒரு ஊர்

நன்றி

வாழ்த்துக்கள்

கல்வெட்டு said...

// இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை கவனித்தீர்களா? உழுவதற்கு ஏர் மரத்திலும்,//

1.ஏர் பார்த்திருக்கீங்களா ஓம்கார்?
2.பரம்படிக்கும் கட்டையில் எங்கே இரும்பு இருக்கும் தெரியுமா?
3.மண்வெட்டி பார்திருக்கிறீர்களா?
4.கதிர் அருக்கும் அரிவாள் பார்த்திருக்கிறீர்களா?
5.கதிர் அருத்தபின் சூட்டடி (போர் அடித்தல்)க்கு பயன்படுதும் மாடுகளின் கால் குழம்பை கவனித்திருக்கிறீர்களா?

// விதைகலயங்கள் மண் மற்றும் மூங்கில் கூடையாகவும் பயன்படுத்தினார்கள். மூங்கில் கூடையிலும் சாணம் மொழுகப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க...!//

மூங்கில் கூடையில் உள்ள வகைகளையும் எந்த எந்த பயன்பாட்டிற்கு சாணி மொழுகப்படுகிறது என்று தெரியுமா?


//நம் உடலில் மின்சக்தி உண்டு என்பது தெரியும். விதை மற்றும் மண்ணில் உள்ள மின்சக்தியும் அயனியாக்கமும் நம் கைகளில் அவற்றை தொடுவதன் மூலம் பாதிப்படையும். விளைச்சல் குறையும். உலோகங்கள் கடத்தி என்பதால் விவசாயத்திற்கு அதிகமாக கடத்திகளை பயன்படுத்துவதில்லை.//

இரும்பு என்பது என்ன தெரியுமா ஓம்கார்?(உங்கள் மனதில் இரும்பால் ஆன கருவிகள் மட்டும் (கத்தி,கடப்பாரை,ட்ராக்ரட் வகையறா மனிதில் வருகிறதா)
விளைநிலத்தில் உள்ள இருக்க வேண்டிய கட்டாய தாது வகைகள் தெரியுமா?
******

அறிவியல் ஜல்லிகள்தான் அடிக்கிறீர்கள் என்று பார்த்தால் விவசாய அடிப்படை தெரியாமல் ஜல்லி அடிக்கிறீர்கள். வரிக்கு வரி பதில் எழுதலாம். நீங்கள் நான் சொல்லும் கருத்துக்களை வெளியிடுவது இல்லை. எப்படியோ போங்கள். இணையத்திலும் சாமியார்களின் அலும்பு தாங்க முடியவில்லை. :-((((

Unknown said...

குருஜி நான் சதுரக்ரிய் பல முறை சென்று உள்ளேன் . அங்கு உள்ள ஸ்தலத்தை சுற்றி பலா மரங்கள் நிறைய உள்ளன , நான் யோசித்திருக்கிறேன் , ஒரு ஸ்தலத்தை சுற்றி பல மரங்களாக உள்ளடேத் என்று , பட் இன்று அது தங்கள் மூலமாக நிறைவடைந்து விட்டது நன்றி

கார்மேகராஜா said...

ஐயா!

நானும் திருப்பூர் வாசிதான்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கோவை செல்வது என்றாலே ஒரே குஷிதான்! காரணம்பேட்டை தாண்டும்போதே கோவையின் குளிர்ச்சியை உண்ரலாம் அல்லது திருப்பூரிலிருந்து தப்பிக்கலாம்!

ஆனால் உண்மையில் கோவையைவிட என் சொந்த ஊரே அருமை! எந்த ஊர் என்று கேட்கிறீர்களா? சதுரகிரி மலை அடிவாரம் ( வத்திராயிருப்பு - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்).

சதுரகிரி மலையேறும் (நடை மட்டுமே) அனுபவமே தனி! நேரம் கிடைத்தால் ஒரு முறை கண்டிப்பாக சென்று பார்க்கவும்.


மற்றுமொரு கருத்து! கலப்பை முழுவதும் மரத்தால் இருக்காது! அதன் ஆணி இரும்பால்தான் செய்யப்பட்டிருக்கும். ஆணி தான் நிலத்தை உழும் என்பது உபரித்தகவல்.
மற்றபடி பதிவு அருமை!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆறுமுகம்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ரங்கன் said...

என் கிராமத்தில் 1960 வரையில் மரகலப்பை மற்றும் மரத்தால் ஆன கருவிகளைக் கொண்டுதான் விவசாயம் செய்து கொண்டிருந்தனர். பின்னர் எல்லாம் இரும்பு மயமானது.
ஓர் விவசாயி மண் vettii கூட மரத்தால் செய்து வைத்திருந்தார். தற்போது tractor மயம். (நானும் ஒரு டிராக்டர் கம்பெனியில்தான் வேலை செய்கிறேன்)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கல்வெட்டு,

என் வலையில் எழுதும் கருத்தை முற்றிலும் படித்துவிட்டு கருத்து சொல்லுவது நல்லது. முன் முடிவுடன் மட்டையடி அடித்தால் எனக்கு கருத்துக்கள் கூறும் ஆர்வம் வராது.
----------------------------
மனித உடலில் இருக்கும் மின்சக்தி, விதை, உயிர் பொருட்கள் வழியே பூமியில் பயணித்தால் அந்த உயிர் பொருளில் இருக்கும் அயனியாக்கம் என்ற செயல் பாதிக்கும் - இது அறிவியல்.
----------------------------

விவசாயிகள் விதைக்கும் பொழுதும், விதையையும், உழும் பொழுது நிலத்தையும் நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள். அதனால் தான் மனிதன் - மரம் - இரும்பு என்ற இணைவு.

இது நான் சொல்ல வந்த கருத்தின் உள்ளார்த்தம். சிந்திக்க நினைத்தால் எளிமையாக சிந்திக்கலாம்.

பதிவில் கூட அயனியாக்கம் பற்றி எழுதி இருக்கிறேன்.
உங்கள் மொழியில் ‘ஓம்கார் எழுதினால் அபத்த’ என்ற கண்ணோட்டத்துடன் வந்தால் இந்த பின்ன்னூட்டமும் உங்களுக்கு அபத்தமாகவே தெரியும்.

இப்பொழுது உங்கள் கேள்வியை படித்துபாருங்கள். மண் வெட்டியின் மரத்தை மனிதன் பிடிக்கிறானா இல்லை இரும்பை பிடிபானா என தெரியும்.
எல்லா காலத்திலும் இரும்பு பயன்படுத்த தடை அல்ல. விதை கலமும், உழும் நிலமும் இரும்புக்கான இடம் அல்ல.

/நீங்கள் நான் சொல்லும் கருத்துக்களை வெளியிடுவது இல்லை. எப்படியோ போங்கள்.//

நீங்கள் மட்டும் அல்ல யார் சொல்லும் கருத்தையும் நான் தடைசெய்வதில்லை. ஆனால் கருத்து பதிவை நோக்கி வருவதில்லை...!

வேதகாலம் - பசு என்றவுடன் அவர்களாகவே இரண்டையும் இணைத்து ஏதேதோ உளறுகிறார்கள்.
இது பைத்தியக்காரர்களின் இடமல்ல.
சிந்திக்க உதவும் இடம்.

உங்கள் கருத்து பதிவு சார்ந்து உள்ளது இதோ வெளியிட்டு விளக்கம் கூறுகிறேன்.

ஓம்கார் நீங்கள் யார் என கேட்டால், விவசாயம் செய்திருக்கிறீர்களா? நீங்கள் என்ன ஜாதி - மதம் என்றால் இது பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்பது உங்கள் சிந்தனைதிறனுக்கு தெரியும்..
அத்தகைய கருத்துக்கு நான் பதில் கூறியும் வெளியிட்டும் நேர விரயம் செய்ய விரும்ப வில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்மேகராஜா,

//
சதுரகிரி மலையேறும் (நடை மட்டுமே) அனுபவமே தனி! நேரம் கிடைத்தால் ஒரு முறை கண்டிப்பாக சென்று பார்க்கவும்.//
நான் மஹாலிங்கத்தை பார்க்காத மஹாபாவியாக இருப்பேனா? :)

கலப்பை விளக்கம் திரு கல்வெட்டின் பின்னூட்டத்தில் உண்டு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கல்வெட்டு said...

//விவசாயிகள் விதைக்கும் பொழுதும், விதையையும், உழும் பொழுது நிலத்தையும் நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள். அதனால் தான் மனிதன் - மரம் - இரும்பு என்ற இணைவு.//


எந்தக்கால / எந்த நாட்டு ஏரைப்பற்றிப் பேசுகிறீர்கள்?

ஏர் முனையில் நீளமான கூரிய இரும்பு பட்டை இருக்கும் . அது மரத்தோடு இணைக்கப்பட்டு மண்ணைக்கீற உதவும். கத்தியை சாணை பிடிப்பதுபோல இதையும் அவ்வப்போது பட்டை தீட்ட வேண்டும்.

பரம்படிக்கும் கட்டையிலும் இரும்பு இருக்கும். பாத்தி கட்ட , வரப்பு வெட்ட மற்றும் விவசாயிகளின் முக்கியமான டூல் மண்வெட்டி. அது என்ன ருத்திராட்ச கொட்டையில் செய்ததா? கதிர் அருக்கும் அரிவாள் நெய்யில் செய்ததா? இப்படி பல கருவிகள் விவசாய்த்தில் நேரடி மண் / பயிர் தொடர்பு கொண்டவை.

விதை நெல் விதைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் இரும்பாலானா , பித்தளையில் சட்டம் போட்டு அழகுபடுத்தப்பட்ட மரக்காயை விரும்பி பயன்படுத்துவார்கள். மரக்காய் பார்த்தது உண்டா ஓம்கார் ?

கல்வெட்டு said...

//உங்கள் மொழியில் ‘ஓம்கார் எழுதினால் அபத்த’ என்ற கண்ணோட்டத்துடன் வந்தால் இந்த பின்ன்னூட்டமும் உங்களுக்கு அபத்தமாகவே தெரியும். //

நிச்சயம் இல்லை ஓம்கார்.
ஆன்மீகம் பற்றி எழுதுங்கள்
ஜோசியம் எழுதுங்கள்
தகடு எழுதுங்கள்...

கவலை இல்லை..
ஆனால் அறிவியலை அவியலாக்கி உங்கள கருத்தை நியாயப்படுத்தும் போது அபத்தமாக உள்ளது.

ஸ்வாமி ஓம்கார் said...
This comment has been removed by the author.
ஸ்வாமி ஓம்கார் said...

திரு கல்வெட்டு,

////விவசாயிகள் விதைக்கும் பொழுதும், விதையையும், உழும் பொழுது நிலத்தையும் நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள். அதனால் தான் மனிதன் - மரம் - இரும்பு என்ற இணைவு.////

இந்த வரிகள் உங்களுக்கு புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாதது போல பின்னூட்டுகிறீர்களா என தெரியவில்லை.

நிதானத்துடன் படியுங்கள். உங்களுக்கு விளங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

//கவலை இல்லை..
ஆனால் அறிவியலை அவியலாக்கி உங்கள கருத்தை நியாயப்படுத்தும் போது அபத்தமாக உள்ளது.//

அறிவியல் ரீதியாக எதையும் சோதிக்காமல் இங்கே வெளியிட வில்லை. காஸ்மிக் கதிர்கள் முதல் கலப்பைவரை சோதிக்காமல் இங்கே வெளியிடுவதால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.

//அது என்ன ருத்திராட்ச கொட்டையில் செய்ததா? கதிர் அருக்கும் அரிவாள் நெய்யில் செய்ததா? //

உங்களுக்கு நாகரீகமான மொழிகள் தெரியுமா?

பிறரிடம் கருத்துக்கள் எப்படி எடுத்து கூறவும் கேட்கவும் வேண்டும் என தெரியுமா?

ருத்திராட்சம் நாங்கள் புனிதமாக மதிக்கும் ஒரு பொருள். பிறர் புனிதமாக மதிக்கும் பொருளை அவமதிக்க்ககூடாது என்ற அடிப்படை மனித பண்புகூட உங்களிடம் இல்லாதது கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்.

மண்வெட்டியில் மரத்தை அடப்பாகவும், கதிர் அறுக்கும் அரிவாளின் கைப்பிடி ஏன் இரும்பால் இல்லாமல் மரத்தால் இருக்கு என தெரியுமா?

இது உங்களுக்கு நீங்களே கேட்கவேண்டிய கேள்வி.

உங்களுக்கு என் பதிவில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள், புரியவில்லை என்றால் கேளுங்கள்.

தேவையற்ற தர்க்கம், அநாகரீகமான சொற்கள் பிரயோகிக்கப்பட்டால் என்னால் உங்களை போன்ற அதீத புத்திசாலிகளுக்கு பதில்சொல்லி நேரத்தை விரயம் செய்ய முடியவில்லை.

அதற்கு பதில் கூகுளில் நான் சொன்ன கருத்துக்க்களை தேடுங்கள், தென்அமெரிக்கவிலோ, அஸ்திரிரேலியாவிலோ சில விஞ்ஞானிகள் கூறி இருப்பார்கள். அவர்களையும் திட்டுங்கள்.

பஞ்சாங்கம் கொண்டு வெளிநாட்டினர் விவசாயம் செய்கிறார்கள் தெரியுமா? இதை அறிவியல் அறிஞ்சர்கள் ஆதரித்தும், உலகலாவிய அளவில் வரவேற்பும் பெற்று இருக்கிறது.

உங்களுக்கு பஞ்சாங்கம் கட்டுபெட்டிதனம். அவர்களுக்கு அறிவியல். உங்கள் நிலையை அவர்கள் பார்த்தால் என்ன விமர்சனம் செய்வார்கள் என தெரியாது. நினைத்தாலே சிரிப்பு வருகிறது :)

இந்த சுட்டியை பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Biodynamic_agriculture

அல்லது Biodynamic agriculture என கூகுளில் தேடிப்பாருங்கள்.

உங்களுக்கு கோட்டு போட்ட வெளிநாட்டுகாரன் சொல்லவேண்டும். கோமணம் கட்டிய என்னை போன்ற ஆண்டிகள் சொன்னால் நாகரீகம் தெரியாத வார்த்தைகளால் வீசுவீர்கள்.

உங்கள் பகுத்தறிவுக்கு எனது வணக்கங்கள்.

புன்னகை said...

ஸ்வாமி வணக்கம்
உங்கள் கருத்து ஒவ்வொன்றையும் பாலை நிலத்தில் பெய்யும் மழை போல் தாகத்துடன் ஏற்றுக்கொள்ள என்போன்றபலர் காத்துக்கிடக்கின்றோம்.
இந்த நேரத்தில் உங்கள் கருத்துக்களை விமர்சனம் செய்பவர்களினால் ஏற்படும் இடையூறு வருத்தமளிக்கிறது.

கல்வெட்டு said...

//விவசாயிகள் விதைக்கும் பொழுதும், விதையையும், உழும் பொழுது நிலத்தையும் நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள். //

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கும் இன்னும் புரியவில்லை.

‍‍‍‍விதைக்கும் பொழுதும் விதையையும்
உழும் பொழுது நிலத்தையும்
நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள்.

இதுதான் நீங்கள் சொல்வது.

1.விதை இரும்பால் ஆன கலனில் இருக்காது என்கிறீர்களா?

2.இரும்பால் ஆன கலத்தில் விதை இருக்கலாம் ஆனால் விவசாயி அந்த விதையை இரும்பைக்கொண்டு நேரடியாக தொடமாட்டான் என்கிறீர்களா?

3.நிலத்தை நேரடியாக இரும்புபடும் வண்ணம் உழக்கூடாது என்கிறீர்களா?

4.இரும்பால் ஆன முனை நிலத்தை நேரடியாகத் தொட்டு உழுதாலும் விவசாயி அந்த ஏரை இரும்பைக்கொண்டு தொடமாட்டான் என்கிறீர்களா?

என்ன கொடுமை ஓம்கார்? நிசமாகப்புரியவில்லை.

***

இரும்பு எனக்குப் புனிதமானது என்று வைத்துக் கொள்ளுங்கள். இரும்பை நீங்கள் சனிகிரகத்துடன் (??) ஒப்பிட்டுப்பேசலாம் என்றால் . உத்திராட்சம் சனி எனக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். :-))))

********

//ருத்திராட்சம் நாங்கள் புனிதமாக மதிக்கும் ஒரு பொருள். பிறர் புனிதமாக மதிக்கும் பொருளை அவமதிக்க்ககூடாது என்ற அடிப்படை மனித பண்புகூட உங்களிடம் இல்லாதது கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்.//

இரும்பை சனியுடன் ஒப்பிட்டு வித்தை காட்டும் மனித பண்பு உங்களிடம் இருப்பது கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன். :-)))

**
தவலுக்கு...
கோவணம் கட்டி நேரடி விவசாயம் செய்தவன் நான். இன்றும் கோவணம் கட்டி மண்ணில் இறங்குபவன்.

வெளிநாட்டில் நேரடியாக விவசாயிகளுடன் இன்றைய / நேற்றைய அவர்களின் விவசாய முறைகளை அவர்களின் மண்ணில் அவர்களுடன் செய்முறை விளக்கத்துடன் பார்த்த ஈராமான கைகள் எனது.

நிகழ்காலத்தில்... said...

ஓம்கார்\\விவசாயிகள் விதைக்கும் பொழுதும், விதையையும், உழும் பொழுது நிலத்தையும் நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள். அதனால் தான் மனிதன் - மரம் - இரும்பு என்ற இணைவு.\\

நீங்க சொல்றது உழும்போது..

கல்வெட்டு\\ஏர் முனையில் நீளமான கூரிய இரும்பு பட்டை இருக்கும் . அது மரத்தோடு இணைக்கப்பட்டு மண்ணைக்கீற உதவும். கத்தியை சாணை பிடிப்பதுபோல இதையும் அவ்வப்போது பட்டை தீட்ட வேண்டும்.\\

நீங்க சொல்றது கலப்பைய சர்வீஸ் பண்றபோது....

ஓம்கார்\\மண் வெட்டியின் மரத்தை மனிதன் பிடிக்கிறானா இல்லை இரும்பை பிடிபானா என தெரியும்.\\

நீங்க சொல்றது பயன்படுத்தும்போது...

கல்வெட்டு\\பரம்படிக்கும் கட்டையிலும் இரும்பு இருக்கும். பாத்தி கட்ட , வரப்பு வெட்ட மற்றும் விவசாயிகளின் முக்கியமான டூல் மண்வெட்டி\\

ஓம்காரின் பின்னூட்டம் படிக்க நேரவித்தியாசம் அனுமதித்திருக்காது என்றே நினைக்கிறேன், படித்திருந்தால் தாங்கள் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

ஓம்கார் இனிய நண்பராக பாருங்கள்,
எழுதுவதை படியுங்கள், பிடித்திருந்தால் பின்பற்றுங்கள்,

இல்லையென்றால் தாரளமாக கதை:)) என ஒதுக்கி விடுங்கள், அவர் என்னைப் போன்றவர்களுக்காக எழுதுகிறார்.

விரும்பிப் படிக்கிறோம், ஆனால் கண்மூடித்தனமாக எதையும் ஓம்கார் சொன்னார் என்பதற்காக மட்டுமே பின்பற்றுவதில்லை:))

தாங்கள் கேள்விகளாக கேளுங்கள், நான் உங்கள் பக்கம்,

மட்டம்தட்டுவது, தாக்குதல் பாணி என்ன பலனைத்தரும்,?

நட்பு கெடும், பதிவுலகம் நாறும், எதிர்கால சந்ததி சிரிக்கும்,

என் மனதில் பட்டதை தயக்கமின்றி கல்வெட்டு-தங்களிடம் பகிர்ந்து கொண்டேன்

வாழ்த்துக்கள், நட்புடன்
நிகழ்காலத்தில் சிவா..

நிகழ்காலத்தில்... said...

திரு கல்வெட்டு,

தங்களின் பதிவில் தொழில்நுட்ப குறிப்பு ஒன்றை பகிர்ந்து கொள்ளலாம் என முயற்சித்தேன்.

அனுமதி பெற்ற குழுவினருக்கு மட்டும் பின்னூட்ட வசதி உண்டு என வந்தது.

இதை தாங்கள் விரும்பி அமைத்திருந்தால் நன்றி, வாழ்த்துக்கள்.

ஒருவேளை தெரியாமல் இருந்தால் சரி செய்யுங்கள்.

அல்லது இ-மெயில் வசதியை ஏற்படுத்துங்கள்,

ஓம்காருக்கு- நான் திரு.கல்வெட்டுடன் தொடர்பு கொள்ள இந்த பதிவை மரம்போல் பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்கு நன்றி

ceylonstar said...

பூசம் நட்சத்திரகாரர் அரசு மரத்தடி கீழ் உட்கார்ந்தாள் ப்ப்ரணம் அதிகமா?

கல்வெட்டு said...

நிகழ்காலத்தில்,
எனது பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி.
பின்னூட்ட பிரச்சனை டெம்பிளேட் செட்டிங்கில் தவறாக நிகழ்ந்த மாற்றம் சரி செய்யப்பட்டுவிட்டது.

**
//இல்லையென்றால் தாரளமாக கதை:)) என ஒதுக்கி விடுங்கள், அவர் என்னைப் போன்றவர்களுக்காக எழுதுகிறார்.//

பொதுவில் வைக்கும் போது தவறான தகவல்கள் சரிபார்க்கப்படவேண்டும் எனத்தான் கேள்விகள் கேட்பது. நான் கேட்பது தவறு என்றால் நீங்களும் ஒதுங்கிவிடலாம். :‍-))) விண்கலம் ஏவப்பட்டது அதற்கு ஓம்கார் சகுனம் /பலன் சொன்ன பதிவிலும் கேள்வி கேட்டேன். அப்போதும் பக்தர்கள் இப்படித்தான் கூறினார்கள்.

seethag said...

திரு .கல்வெட்டு அவர்களுக்கு,

ஸ்வாமி ஓம்கார் அவர்களது பதிவை நீஙள் படிக்க வேண்டும் எந்று உங்களை யாரும் கட்டாயப்படுத்திநார்களா?

"இணையத்திலும் சாமியார்களின் அலும்பு தாங்க முடியவில்லை. :-(((("

இணயம் என்பது எல்லாருக்கும் பொதுவானது தாநே?இதில் ஓம்கார் ஸ்வாமி எழுதக்கூடாது என்ரு ஒன்ரும் இல்லையே?மேலும் அவருடய பதிவையோ அவரையோ ஆதரிப்பதர்காக எல்லாரையும் பக்ததர்கள் என்று அழைக்க என்ன காரணம்?இப்படிதான் பிற பதிவுகளில் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் வெளிப்படுத்துவீர்களா?

இன்றைக்கு இணயம் எல்லாவித கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் என்றான போது 'பக்த கோடிகளின்' அறிவியல் ஞானத்தையும் அவர்களுக்கு தக்கவிதத்த்இல் பகுத்து அறிய முடியும்.

it would have been appropriate had you not been so patronising mr.kalvettu.

Jawahar said...

ரிச் இன் ஆக்ஸிஜன் ஆக இருக்கும் சூழ்நிலைகள் எப்படி புத்துணர்ச்சி அளிக்கின்றன என்கிற தகவல் உபயோகமானது. பிராண சக்தி, பிராணாயாமம் இதெல்லாம் அதோடு தொடர்புடையவை என்பதை இன்னும் ஆழமாக, எழுதுங்கள். பிராணாயாமத்தால் என்னென்ன நல்ல பழங்கள் கிடைக்கும் என்று எழுதுங்கள்.

http://kgjawarlal.wordpress.com

Sabarinathan Arthanari said...

நண்பர்களே,

ஓம்கார் சில கருத்துக்களை சொல்ல வருகிறார். நமக்குரிய சந்தேகங்களை கேட்போம். அதில் தவறில்லை.மோசமான பலவகையான பதிவுகளை நம் கண் முன்னே பார்க்கும் போது, உலகம் செழிப்புடன் வாழ தானே ஓம்கார் பதிவிடுகிறார். அவருடைய நோக்கத்திற்காகவேனும் நாம் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் சில வலைப்பூக்களில் ஓம்காரை குறித்த தனி மனித தாக்குதல்கள் காண நேர்ந்தது. இதில் என்ன நேர்மை இருக்கிறது ? வாக்குவாதங்கள் கருத்துக்களை குறித்ததாக இருக்க வேண்டும்.

இதில் கருத்து தவறு என்றே வைத்து கொண்டாலும் அன்னப்பறவைக்கு இருக்கும் பகுத்தறிவு இல்லாவிட்டால் நாம் என்ன வகையான மனிதர்கள் ?

சிந்திப்போம் செயல்படுவோம்.
நன்றி.

Thirumal said...

அன்பிற்கினிய கல்வெட்டு,

தங்கள் கருத்துக்கள் பொதுவில் காண்பிக்கப் படுவதால், வார்த்தையில் கண்ணியம் இருக்கட்டும்.
நீங்கள் முன்வைக்கும் பல கேள்விகளுக்குப் பதில் பதிவிலேயே உள்ளது. மற்ற கேள்விகள் அர்த்தமற்றதாகப் படுகிறது.
வேறொன்றும் சொல்வதற்கில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

நண்பர்களுக்கு...

பின்னூட்ட பெட்டி எப்பொழுதும் விவாதபெட்டியாக்குவது எனக்கு பிடிக்காது.

உங்களுக்கு பதிவு பிடித்தால் பின்னூட்டம் இடுங்கள்.

பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டத்தில் இந்த பகுதி பிடிக்கவில்லை. இதில் இன்ன விஷயம் இருக்கிறது என கூறுங்கள்.

அதைவிடுத்து என்னை பற்றியும், நான் கூறிய பதில்களை புரிந்துகொள்ளாத மாதிரி மீண்டும் மீண்டும் கேள்விகேட்பது உங்கள் ’அறிவையும் பண்பையும்’ பிறருக்கு வெளிப்படுத்தும்.

எல்லா மொழியிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை “தர்க்கம்”. என்னுடம் தர்க்கம் செய்பவர்கள் எனக்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பேன்.

நான் உங்களை விட எளியவன்.
அதனால் என்னிடம் சமமாக தர்க்கம் செய்ய ஒன்றும் இல்லை.

வரட்டுவாதத்தாலும், பண்பற்ற பேச்சாலும் எதை சம்பாரிக்க போகிறீர்கள் என தெரியவில்லை.

உங்களின் இத்தகைய செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

கல்வெட்டு said...

***


எந்தவிதமான அறிவியல் முயற்சிகள் இல்லாமல் ஒரு சமுதாயம் தவறாக வழிநடத்தப்படுகிறது. புதிய முயற்சிகள் இல்லாவிட்டாலும் ஏற்கனவே உள்ள அறிவியல் விசயங்களை தன் வசதிக்கு ஏற்ப வளைப்பது எனக்கு அயர்ச்சியைத் தருகிறது.

வெள்ளைக்காரன் பஞ்சாங்கம் பார்கிறான் என்று
யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதே வெள்ளைக்காரன் அறிவியலுக்கு என்ன செய்துள்ளான் என்றும் பார்க்க வேண்டும்.

மூட நம்பிக்கைகளை வளர்ப்பது என்பது எதிர்க்கப்படவேண்டிய விச்யம்.

அறிவியல் அல்லது விவசாயம் சம்பந்தமாக நீங்கள் தகவல்கள் சொல்லும்போது, "என்ன நடந்தால் என்ன" என்று தேமே என்று இருக்க முடியும். ஞானி என்ற பத்தி எழுத்தாளர் குழந்தைகளுக்கு பாலியல் பாடம் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு தொடர் ஆரம்பித்தார் அப்போதும் நான் இதுபோல் பதிவுலகில் கண்டித்தேன்.

**

இப்படித்தான் ஒருகூட்டம் சமஸ்கிரகம் கம்ப்யூட்டருக்கு ஏற்றமொழி என்று ஜல்லி அடித்தது. ஏன்யா சம்ஸ்கிரகத்தில் ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம் அல்லது குறைந்தபட்சம் சின்ன வழிகாட்டும் நெறிமுறைகள்( ஸ்பசிவேகசன்) கூட முயற்சிக்காமல் இப்படி ஜல்லி அடிப்பது தவறு என்றும் சொல்லியுள்ளேன். பல இடங்களில். நிறையச் சொல்லலாம். அதேபோலத்தான் நீங்கள் விதைத்துவரும் கருத்துக்களும்.

**

தான் வாழும் இடம் தன்னைச்சுற்றியுள்ள மக்களுக்காக செய்யவேண்டிய வேலைகளைவிட்டுவிட்டு உங்களைப்போன்றோர் கார்ப்போரேட் ஆன்மீகம் நடத்தும்போது எனக்குள் வரும் துயரத்தின் வெளிப்பாடே எனது பின்னூட்டம்.

மரம் சிடி படிக்கும் , இரும்பு சனி என்று சொல்லும் உங்களை எனது பின்னூட்டங்களும் , உரையாடல் வாதம் தர்க்கங்களும் ஏதும் செய்யப்பொவது இல்லை. ஏன் என்றால் அது உங்கள் நம்பிக்கை.

நீங்கள் சொல்வது உண்மையானம் நீங்கள் வேளாண்பல்கலைக்கழங்களை அணுகி ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.

**

அனைவருக்கும் , தேவதாசி முறை புனிதம் என்று ஒரு அறிஞரிடம் "அப்ப உன் சமுதாய/சாதிப் பெண்களை அந்தப்புனிதத்தைச் செய்யச்சொல்" என்று சொன்னபோதுதான் அவருக்கு அவர் தவறு புரிந்தது.

"மரம் சிடி படிக்கும்" , "விவசாயிக்கு சனி பிடிக்கும்" என்று சொல்லும் போது " விவசாயம் செய்தீர்களா" உங்களுக்கு உண்மை தெரியுமா? என்று நேரடியாகக் கேட்பதில் தவறு இல்லை. காமகேடிகளைக்கூட சமுதாயம் ஒரு காலத்தில் விமர்சிக்கவே பயந்தது.

**
ரோட்டில் ஒருவன் அடிபட்டுக்கிடந்தாலும் , "உனக்கென்ன உன் வேலையைப்பார் " என்று செல்லும் பொதுப்புத்தியை வளர்த்துக்கொள்ளும்ம் பட்சத்தில் இது போன்ற விசயங்களை சுலபமாக "பிடிக்கவில்லையா கடந்துபோ" என்று விலகிச் செல்லமுடியும்.

அது மிகவும் சுலபமானது.

**

தெரிந்தே நீங்கள் செய்யும் இந்த அறிவியல் குழறுபடிகளுக்கு நான் வேதனைப்படுகிறேன்.

யூரோவில் காசு வாங்கி நீங்கள் நடத்தும் வகுப்புகள் பக்கா கார்பரேட் ஆன்மீகம்.அதில் தவறு இல்லை அது தொழில் , ஆனால் அதைக் கொண்டு நீங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்கிறீர்கள் என்று உங்களை நீங்களே ஒரு நிதர்சன வெளியில் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே நீஙகள் மரம் வளர்ப்பு , விவசாயித்திற்கான உதவி, நீர் நிலைகளைப் பாதுகாக்க முயற்சி, கல்வி ..... என்று ஆக்கபூர்வமாக முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நான் உங்களுடன் இருப்பேன்.

நன்றி!!

நிகழ்காலத்தில்... said...

திரு. கல்வெட்டு

இது ஓம்காரின் பதிவு, அவரது கருத்துக்களுக்கு எதிர் கருத்தை உங்கள் பதிவில் புது இடுகையாகப் போடுங்கள்.

அது உங்கள் உரிமை,

ஆனால் இந்த பதிவில் தங்களின் எதிர்கருத்தை பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேள்வி கேட்காமல், ஓம்கார் வருத்தப்படுவது தெரிந்தும் தொடர்ந்து தாக்குதல் பாணியில் கருத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

நான் எந்த கருத்தோடு முழுமையாக முரண்பட்டாலும் அதை என் பதிவில் தனி இடுகையாக போடுவேனே தவிர சம்பந்தப்பட்டவரது பதிவில் தர்க்கம் செய்ய மாட்டேன்.

ஓம்காரின் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றால் அதை தாங்கள் உரிய ஆதாரத்தோடு படிப்பவர்கள் பின்னூட்டத்தில் ஏற்றுக்கொண்டு தங்களை பாராட்டும் வகையில் உங்கள் கல்வெட்டு பதிவில் வெளியிடுங்கள்.

உங்களை பின்பற்றுபவர்கள், படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்,

எதிர்கால சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் உதவி இதுவே,

இது என் அன்பு வேண்டுகோள்..

வாழ்த்துக்கள் கல்வெட்டு :))

அமர பாரதி said...

கல்வெட்டு அவர்களே,

தாங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் உங்கள் வார்த்தைப் பிரயோகத்தால் உரையாடலை திசை மாற்றி அழைத்துச் சென்று விட்டார் ஸ்வாமி.

இது ஸ்வாமி பதிவில் சொன்னது.

//இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை கவனித்தீர்களா?//

இதி உங்களுக்கான மறுமொழியில் சொன்னது.

//விவசாயிகள் விதைக்கும் பொழுதும், விதையையும், உழும் பொழுது நிலத்தையும் நேரடியாக இரும்பால் தொட மாட்டார்கள். அதனால் தான் மனிதன் - மரம் - இரும்பு என்ற இணைவு//

கல்வெட்டின் கேள்வி திசை திருப்பட்டு இருக்கிறது

ஸ்வாமிகள் சொல்லும் நாகரீகமான மொழிகள் வருமாறு.

//நிதானத்துடன் படியுங்கள். உங்களுக்கு விளங்க ஆண்டவனை வேண்டுகிறேன்//

//உங்கள் பகுத்தறிவுக்கு எனது வணக்கங்கள்.//

//வரட்டுவாதத்தாலும், பண்பற்ற பேச்சாலும் எதை சம்பாரிக்க போகிறீர்கள் என தெரியவில்லை//


சீதாவுக்கு,

//ஸ்வாமி ஓம்கார் அவர்களது பதிவை நீஙள் படிக்க வேண்டும் எந்று உங்களை யாரும் கட்டாயப்படுத்திநார்களா?// உங்களை யாராவது கல்வெட்டின் பின்னூட்டத்தைப் படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தினார்களா?

Jawahar said...

//நான் எந்த கருத்தோடு முழுமையாக முரண்பட்டாலும் அதை என் பதிவில் தனி இடுகையாக போடுவேனே தவிர சம்பந்தப்பட்டவரது பதிவில் தர்க்கம் செய்ய மாட்டேன்.//

நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன். ஒருவரின் பதிவில் எதிரான கருத்துக்களையே கூறக் கூடாது என்று நினைக்க வேண்டியதில்லை. எதிர்க் கருத்துக்களை எவ்வளவு நாகரிகமாக, எவ்வளவு அறிவுப் பூர்வமாக, எவ்வளவு நாடு நிலைமையோடு கூறுகிறோம் என்பதுதான் முக்கியம்.

உண்மையில் இது போன்ற விவாதங்கள் வலையாசிரியர் கூற நினைக்கும் கருத்துக்களை இன்னும் தெளிவாக இன்னும் அழுத்தமாக தெரிவிக்க உபயோகமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

சரியா?

http://kgjawarlal.wordpress.com

Indian said...

A simple request.

//1.விதை இரும்பால் ஆன கலனில் இருக்காது என்கிறீர்களா?

2.இரும்பால் ஆன கலத்தில் விதை இருக்கலாம் ஆனால் விவசாயி அந்த விதையை இரும்பைக்கொண்டு நேரடியாக தொடமாட்டான் என்கிறீர்களா?

3.நிலத்தை நேரடியாக இரும்புபடும் வண்ணம் உழக்கூடாது என்கிறீர்களா?

4.இரும்பால் ஆன முனை நிலத்தை நேரடியாகத் தொட்டு உழுதாலும் விவசாயி அந்த ஏரை இரும்பைக்கொண்டு தொடமாட்டான் என்கிறீர்களா?
//

Can some one give a yes/no answer to the above 4 queries?