Thursday, November 26, 2009
உடலற்றவன்
கண்ணிலாத இருவர்
பார்த்துக் கொண்டிருந்த
டீவியை அணைத்தேன்.
பேச முடியாத இருவர்
கை ஜாடையில் பேசிய
ரகசியத்தை ரசித்தேன்.
காது கேட்காதவர்கள் பலர்
பாடிய பாடல்களை விமர்சித்தேன்.
கையில்லாதவர்கள் செதுக்க
இருந்த சிலையின் வடிவை
சீரழித்தேன்.
கால் இல்லாதவர்கள் மைதானத்தில்
உதைக்க இருந்த பந்தை வலைக்குள்
உதைத்தேன்.
ஊனமுற்றவர்களிடம் போராடி வெறுமையில்
முழுமையான உடல் இருப்பவனை
தேடும்பொழுது தான் தெரிந்தது...
எனக்கு உடலே இல்லை என...
Subscribe to:
Post Comments (Atom)
18 கருத்துக்கள்:
கலவையான பல சிந்தனைகளை தோற்றுவிக்கிறது கவிதை.
பன்முகம் ?!?!?!?!?!?! ( அந்த பண்ணு இல்லங்க )
ஆஹா கவுத்துப்புட்டீங்களே ஸ்வாமி
ஒண்ணுமே புரியல்லையே
இப்படிக்கு
சுப்பாண்டி
try best in next time
ஜென் என்ன சொல்றார்னா......
அதான்... புரிஞ்சுதா? ஒக்கே.
என்ன சாமி சரிதானே?
முள்ளு மொனையில மூணு கொளம் வெட்டி... பாட்டு ஞாபகம் வருது...
முள்ளு மொனையில மூணு கொளம் வெட்டி... பாட்டு ஞாபகம் வருது...
அதே அதே.... இரண்டு குளம் பாழு ஒண்ணுல தண்ணியே இல்லை
:)
திரு கே.எஸ்,
இலக்கியம்னா புரியக்கூடாதாம் :)
கவிதை எழுதியவரை கடைசியா கண்டுபிடிச்சுட்டீங்க :)
திரு yrskbalu,
நன்றி. முயற்சிக்கிறேன்.
திரு செய்யது,
பன்முகம் சொல்லிட்டீங்க :) அப்போ முகமற்றவன்னு சொல்லி இன்னொரு கவிதை எழுதவேண்டியது தான் :)
திரு மகேஷ்,
நீங்க சொன்னதைத்தான் ஜென்னின் வேத புத்தகத்தில் எழுதி இருக்காங்க.
அதைத்தான் அவங்க அடையவும் செய்கிறார்கள்.
திரு கோவி.கண்ணன்,
//முள்ளு மொனையில மூணு கொளம் வெட்டி... பாட்டு ஞாபகம் வருது...
அதே அதே.... இரண்டு குளம் பாழு ஒண்ணுல தண்ணியே இல்லை
:)//
அதில் ஒன்னு வெட்டவே இல்லை மத்ததுல தண்ணியே இல்லை :)
அந்த இருபது வரி இலக்கியம் என்னிடம் உண்டு :)
நீங்க இது எல்லாம் பண்ணி அடி வாங்காத போதே தெரியும் எனக்கு உங்களுக்கு உடல் இருக்காதுன்னு... :)
திரு கார்த்திக் விஷ்வநாதன்,
உண்மை. ஏற்கனவே வாங்கிய விழுப்புண்ணே இன்னும் காயவில்லை :)
இன்னாசாமி..நமக்கு போட்டியா கிளம்புற மாதிரி தெரியுது.
:))
அப்துல்லா அண்ணே...
//இன்னாசாமி..நமக்கு போட்டியா கிளம்புற மாதிரி தெரியுது.
:))//
உங்களுக்கு போட்டியாவா.... நோ சான்ஸ்... இலக்கியம் எனக்கு தெரியாது.. லேக்கியம்தான் தெரியும்னு முன்னமே சொல்லி இருக்கேன்..
உமர்கயாம் பக்கத்தில் நாம எல்லாம் வெறும் காயம் அன்றோ :)
நல்ல கவிதை
கடைசி வரிகள்ள
முழுமை படுது..
அனுபவம் கவிதை சரி - ஆன்மீகம் என்ற லேபிளும் வருகிறதே
அதுதான் புரியவில்லை
அற்புதமான கவிதை. ஆழ்ந்த அர்த்தம்.
Post a Comment